புதன், 26 மார்ச், 2025

வடநாட்டு கொள்ளையர்களுக்கு உள்ளூர் சங்கிகள் ஆதரவா? ஆபத்து அருகில் ?

 Raja Rajendran Tamilnadu :   ஓர் அதிகாலையில் அடுத்தடுத்து எட்டு தங்கச் சங்கிலி அறுப்புகள் நடைபெறும், அதுவும் அது முதிய பெண்களிடம் நடக்கும் என்பது எவ்வளவு பேரவலம் ?
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை எந்த வழியிலேனும் எவனை வைத்தேனும் கெடுத்துவிட வேண்டும்,
தினமொரு சேதி பொதுமக்களிடையே இதுபோல் பரவி, திமுக ஆட்சி மீது ஓர் அச்சவுணர்வை நிரந்தரமாகத் தோன்றச் செய்துவிட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு வெறியுடன் சதி புரிந்தாலொழிய இது சாத்தியமாகாது !
நேற்று காலையில் நடந்த இந்தச் சம்பவங்கள் பெரிய அளவில் கவனம் பெறாததற்கு கயவர்கள் உடனடியாக பிடிபட்டதுதான் காரணம்.
விமானங்கள் கிளம்பும் முன் ட்ரேஸ் பண்ணியதால் பிடிபட்டனர், இல்லாவிடில் ?


அப்போது இந்த நகைபறிப்பு சம்பவங்கள் இந்தியளவில் வைரல் ஆக்கப்பட்டிருக்கும்.  இன்று தங்கம் விற்கும் விலைக்கு பெண்களிடையே சட்ட ஒழுங்கு பற்றிய  முணுமுணுப்பு பலமாக எழுந்திருக்கும்.  
அதைத்தான் இத்தகைய கயவர்களை இங்கு இறக்குமதி செய்த சதிகாரர்களின் பேராசை.  இவர்களுடைய நெட்வொர்க் அபாரமானது.  இவர்கள் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிடத்தில் இவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காட பல வழக்கறிஞர்கள் தயாராக நின்றதைப் பார்த்து காவல்துறையே நடுங்கிப் போயிருக்கிறது, அதை நொறுக்க வேண்டுமானால் இருக்கவே இருக்கு ஒரே வழி.
Encounter
உடனே வடக்கர்கள் எல்லாம் இப்ப இப்பதாம்பா இங்கிட்டு கொள்ளையடிக்க கூட்டம் கூட்டமா வாராய்ங்க என்று பூமர்ஸ் போல புலம்ப வேண்டாம்.  
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் புறநகர்களில் தனித்திருக்கும் வீடுகளை குறிபார்த்து கொள்ளையிடும் வடக்கர்கள் கூட்டம் ஓர் ஆளுங்கட்சி எம் எல் ஏவையே கொன்று போட்டு கொள்ளையிட்டது.  ஜாங்கிட் அவர்களைப் போராடிக் கைது செய்த கதைதான் தீரன் அதிகாரம் ஒன்று, அது 2005.
வேளச்சேரி வங்கிகளில் அடுத்தடுத்து பட்டப்பகலில் முகமூடிக் கொள்ளைகள் நடைபெற்றன.  கொள்ளையர்கள் புறநகரில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி இதைப் பெரிதாக நடத்தவிருந்த நிலையில் போலிஸ் சுற்றி வளைத்தது.
முதலில் அவர்களைக் கைதுதான் செய்திருக்கின்றனர்.  ஆனால் அப்படி செய்தால் என்ன நடக்கும் என உணர்ந்த அதிகாரிகள் ஜெயலலிதாவிடம் என்கவுண்டருக்கான அவசியத்தைச் சொல்ல ;
ஐந்து பேரை அவர்கள் கதறக் கதற சுட்டுக் கொன்றனர்.  இது 2012.
அவர்கள் இனி தமிழ்நாட்டுப் பக்கமே வரமாட்டோம் என அரைகுறைத் தமிழில் கதறியதை சுற்றியிருந்தவர்கள் கேட்டிருக்கின்றனர்.
என்ன சோகமெனில் ஐந்து பேரில் ஒருவர் கொள்ளையர்களுடைய சமையல் ஆள்.  சப்பாத்தி உருட்டுவதற்கென அழைத்து வந்திருக்கின்றனர்.
இதை விரிவாக என் வலைப்பக்கத்தில் எழுதியிருப்பது கீழே 👇
அதன்பின், வடக்கில் உ.பியிலோ, பீகாரிலோ, ம.பியிலோ, ராஜஸ்தானிலோ நடப்பதைப் போன்ற பகிரங்கக் கொள்ளைகள் அரிதாகவே நிகழும்.
நேற்று நடந்தது திட்டமிட்ட பயங்கரம்.
இனி காவல்துறையினரை தூங்கவிட மாட்டோம் என ஆட்டுப்புழுக்கை அறைக்கூவல் விடுத்ததைப் பார்த்தால் ?
முன்னாள் காவல்துறை ஆள் என்பதால் ஜெயிலர் படக் கதை போல அத்தனை அக்யூஸ்ட் டீட்டைலும் அவரிடம் இருக்கும் என்பது என் சந்தேகம்.  இதைவிட கொள்ளையர்கள் வாழும் மாநிலங்கள் இப்போது அவர்களுடைய கைகளுள் இருப்பதால் எதையும் எங்கும் அரங்கேற்றத் துணிவார்கள் !
இன்னும் ஒரு வருடத்திற்கு Acid Test தான்.  சட்டம் ஒழுங்கை தொடர்ந்து சீரழிக்க, மதக்கலவரம் வரை துணிவார்கள்.  காவிச் சங்கிகளுக்கு உதவத்தான் நீலச்சங்கிகளும், பச்சைச்சங்கிகளும் தயாராக இருக்கிறார்கள் அல்லவா ?
எனவே நம் அருகிலிருக்கும் சங்கி மனோபாவ ஆட்களிடம் மிக எச்சரிக்கையாக இருங்கள்.  நேரடி எதிரிகளை விட முதுகில் குத்தும் துரோகிகள் பேராபத்தானவர்கள், அவர்களிடமிருந்து தூர விலகி நில்லுங்கள் !
2026 -ல் தமிழ்நாட்டில் எங்களுடைய கூட்டாட்சிதான் என்று அமித்ஷா வேறு நேற்று சூளுரைத்திருக்கிறார்.  குஜராத்தை தக்கவைக்க, ம.பியைத் தக்கவைக்க, மகராஷ்டிராவைத் தக்கவைக்க, உ.பியைத் தக்கவைக்க, பீகாரைத் தக்கவைக்க, மணிப்பூரைத் தக்கவைக்க, திரிபுராவைத் தக்கவைக்க, டெல்லியை மீட்க அவர்கள் என்னவெல்லாம் சதி புரிந்தனர் என்பது உள்ளங்கை கிரிணிப்பழம்.  முதலில் மிகைப்படுத்தப்பட்ட புனைவுகளை நம்பும் நடுநிலைகளும், ஆளுங்கட்சி அபிமானிகளும் கொஞ்சம் பக்குவப்பட வேண்டும்.  நீங்கள் முந்திரிக்கொட்டைகளாய், அவசரக்குடுக்கைகளாய், உடனடியாக கற்பை மெய்ப்பிக்க நெருப்பாற்றில் நீந்தத் துடிக்கும் உங்கள் புஜங்கள் சற்று சாந்தமடைய வேண்டும்.  பிறகுதான் உங்களால் பொதுமக்களை இவர்களிடமிருந்து காக்கவே முடியும் !
எதிரியை வெல்ல எந்த பின்புற வழியாகினும் அதைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் கற்றுக் கொடுத்திருக்கிறது.  வாலியை மறைந்திருந்துக் கொன்றாலும் அது வீரம் தான், மனைவியைச் சந்தேகப்பட்டாலும் அவன் ஆண்மகன்தான்,  அசுவத்தாமன் இறந்துவிட்டான் எனப் புரளி கிளப்பி வீரனை முடக்கினால் அது இராஜதந்திரம், தர்மம்தான் அவன் தலைக்காக்கிறதென்றால் அந்த தர்மப் பலன்களையேத் தானமாக பெற்றுக் கொல் என்பதுதான் கீதை.  எனவே பாவம் செய்ய அவனுக்கு கடவுளே துணை நிற்கும் என நம்புவான்.  அவனை நீங்கள் ஒருபோதும் திருத்த முடியாது.  ஆனால் அவனை அண்டவிடாமல் செய்ய முடியும்.  துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது சங்கிகளுக்கும், சங்கி சகவாசம் கொண்டோருக்குமான முதுமொழி !!!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மூணாம் வகுப்பு படித்த கருணாநிதி திமுகவின் தலைவராக எப்படி ஆக முடிந்தது . விலை மாதர்களின் வேலை முடிந்த பின் அவர்கள் பணத்தை பறித்த தெலுங்கன் கருணாநிதி எப்படி தமிழ் நாட்டின் தலைவராக முடிந்தது . விபச்சார குடும்பத்தில் பிறந்த கருணாநிதி குடும்பமே ஸ்திரீலோலர்களாகவும் திருடர்களாவும் இருந்தாலும் எப்படி மக்கள் அவர்களை நம்பி ஓட்டு போடுகிறார்கள் .