சனி, 29 மார்ச், 2025

சிவாஜி சேர்த்த சொத்துக்கள் கோடிகளில் - சிவாஜி செய்த தானங்கள் கோடிகளில்!

May be an image of 1 person and text that says 'சிவாஜி உழைத்து வாங்கிய சொத்துகளும் அதன் சிறப்புகளும் SHANI A'

Senthilvel Sivaraj :  பராசக்தி படத்தில சிவாஜி நடிச்சுட்டு இருந்த  போதும் சரி ,அந்த படம் ரிலிசாகி சிவாஜி உச்ச நிலைக்கு வந்த போதும் சரி  ஒரு வாடகை  வீட்டில் தான் குடி இருந்தார்.
அந்த வீட்டுல தான் சிவாஜி ஒரே குடும்பமா வசிச்சுட்டு இருந்தார்.
பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ,கூட நடித்த விகே ராமசாமியிடம் சிவாஜி சொன்ன ஒரு விஷயம்,இந்த படம் மட்டும் வெளி வரட்டும். பின்பு திரையுலகமே என்னை தேடி வரும் என்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார்.
சிவாஜி திரைத்துறையில் நிலை பெற்று இரண்டு மூன்று வருசம் ஆகியும் சொந்த வீடு வாங்கற வாய்ப்பு வரலை.
கலைவாணர் NS.கிருஷ்ணன் சிவாஜியோட ரெண்டாவது படமான பணம் படத்தை டைரக்சன் செஞ்சார்.


கலைவாணருக்கு ராயப்பேட்டை பெசண்ட்நகர்லே ஒரு வீடு இருந்துச்சு.அந்த வீட்டை சிவாஜி வாங்கற வாய்ப்பு வந்துச்சு.
நிறைய தானங்கள் செஞ்சதாலும், ஒரு கொலை வழக்கில சிக்கி சிறைக்கு போனதாலும் சினிமாவில் நடிக்கறதை நிறுத்தியதாலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கடன் சுமை ஏற்பட்டுச்சு . அந்த சமயம், சென்னை ராயப்பேட்டை சண்முகமுதலி தெருவில் இருந்த தன்னோட  வீட்டை வித்துடலாம்னு என்.எஸ்.கிருஷ்ணன் முடிவெடுத்தார்.இந்த வீட்டை கலைவாணர் விக்க போறதா செய்தி வந்ததும் சிவாஜி அந்த வீட்டை வாங்கலாம்னு முடிவு செஞ்சார்.
இந்த வீட்டை சிவாஜிக்கு விக்கறதா முடிவு செஞ்சு  வாயளவில ஒரு தொகையும் பேசப்பட்டது. பணம் இன்னும் கைமாறவில்லை. பத்திரமும் பதியப்படவில்லை. அப்போ மார்வாடி ஒருவர் சிவாஜி பேசிய தொகையை விட அதிகவிலைக்கு அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாக சொல்லி இருக்கிறார்.
NS.கிருஷ்ணனுக்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால ‘மார்வாடிக்கே வீட்டை வித்துடுங்கன்னு அவரோட நண்பர்கள் சொன்னாங்க.
ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அதில  விருப்பமில்லை. ‘நான் பல வருசங்களா வசிக்கற  வீடு இது. இந்த பக்கம் வர்றப்போ  நாம வாழ்ந்த வீட்டை ஒரு மார்வாடிக்கு கொடுத்துட்டோமேன்னு  நினைச்சா மனசு கஷ்டப்படும். ஆனா சிவாஜிக்கு வித்தால் ‘நம்ம வீட்டுல நம்ம தம்பி கணேசன்’ இருக்கார்னு மனசு சந்தோஷப்படும். வீட்டுக்குள்ள போகவும் மனசு கூசாது’ன்னு  சொல்லி அந்த வீட்டை சிவாஜிக்கே வித்துட்டார் என்.எஸ்.கிருஷ்ணன்.
அது வரைக்கும் வாடகை வீட்டுலே இருந்த சிவாஜி தன் உழைப்புலே வந்த பணத்தை வெச்சு கலைவாணர் வீட்டை விலைக்கு வாங்கி அந்த வீட்டுலே குடியேறினார்.
சிவாஜி முதன் முதலா வாங்குன சொத்து ,வீடு இதுதான்.இது 1954 -55 வாக்குலே நடந்தது.
இந்த வீட்டுலே நாலஞ்சு வருஷம் இருந்த பின்னாலே சிவாஜியோட வளர்ந்து வந்த குடும்பத்துக்கு அது போதுமானதா இல்லே.சிவாஜியை பாக்க பல பெரிய தயாரிப்பாளர்கள் விஐபிக்கள் வர்றதும் போறதுக்கும் வசதிப்படலே.அந்த நேரத்துலே ஒரு வீடு விலைக்கு வந்துச்சு. அந்த  வீட்டை வாங்க சிவாஜி முடிவு செஞ்சார்.விலைக்கு வாங்கி அன்னை இல்லம்னு பேர் வெச்சு குடி போனார்.இந்த அன்னை இலத்தை பத்தி இங்க சொல்லியாகணும்.
ஒன்றரை ஏக்கர் அளவில கட்டப்பட்ட  அன்னை இல்லம் என்ற இந்த மாளிகை, பாக்கறதுக்கு ஒரு சிறிய வெள்ளை மாளிகை போலவே இருக்கும்.. அன்னை இல்லம் வீட்டை சிவாஜி வாங்கறதுக்கு முன்னாலே  யாருகிட்டே இருந்துச்சுங்கறது ஒரு சுவாராஸ்யமான விஷயம்.
 ஐசிஎஸ் அதிகாரியா  இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்குச் சொந்தமான வீடாக இது இருந்துச்சு.. இவர் 1921-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்தார். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். தலைமைச் செயலாளர் ஆகவும் இருந்திருக்கிறார். 1930-கள் மற்றும் 1940-களில் சென்னை மாகாணத்தின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா (அப்போதைய ஒரிசா) மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசிச்சு வந்ததாலேதான் இந்த வீடு இருந்த தெரு தெற்கு போக் ரோடுங்கற பேர்லே இருந்துச்சு.
பின்னனாலே, சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடுங்கறவர் இந்த வீட்டை வாங்கினார்.
இவர் இம்பீரியல் சட்டப்பேரவைக் கவுன்சிலில் உறுப்பினரா இருந்தார். சென்னை மாகாணத்தின் செயல் கவர்னராகவும் இருந்தார். சென்னை மாகாணத்தின் பிரதமராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். 1950-களின் தொடக்கத்தில இஸ்லாமியர் ஒருத்தர் இந்த வீட்டை வாங்கினார். இந்த இஸ்லாமியர் மூக்குப் பொடி தயாரிப்பு தொழில் வியாபாரம் செய்யறவர்.
இந்த இஸ்லாமியர் கிட்டே இருந்து1959-ம் வருஷம்  சிவாஜி இந்த வீட்டை வாங்கினார். அதுக்கு பின்னாலே வீட்டில பல மாற்றங்கள் செஞ்சார் சிவாஜி.இதுக்கே இரண்டு வருஷம் ஆச்சு . வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தார்.
இந்த வீட்டுக்கு சிவாஜி குடும்பம்  வந்த பின்னாலே ராயப்பேட்டை வீட்டை சிவாஜி பிலிம்ஸ் ஆபிசா மாத்திட்டாங்க.
சிவாஜி நடித்த பல படங்களோட  படபிடிப்புகள் அன்னை இல்லத்தில்தான் நடந்திருக்கு.. சிவாஜி வீட்டுக்குப் பல பிரபலங்கள் வந்திருக்காங்க.  பிரதமராக இருந்த வி.பி.சிங் வந்தார்.  ஹாலிவுட் டைரக்டர் டேவிட்லீன் வந்திருக்கார்.இந்திய பிரபலங்கள் நிறைய பேர் வந்திருக்காங்க.
அன்னை இல்லம், ஒரு வெள்ளை மாளிகை போல பளபளப்பாக இருக்கும்.  தரைத்தளத்தில இருக்கற டைனிங் ஹாலில் வீட்டில  இருக்கற  எல்லாரும் ஒரே நேரத்தில்  சாப்பிடுவாங்க.குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாஜியின் மகள் சாந்தியின் குடும்பத்தினரும் அன்னை இல்லம் வந்து விடுவாங்க.எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவாங்க.. ஓட்டுநர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், சமையல்காரர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் இந்த வீட்டில வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க.
சிவாஜியின் பிறந்த நாள் வந்தா ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டுக்கு வருவாங்க. அன்னைக்கு வீட்டுக்குள்ள ரசிகர்கள் எல்லாரும் வருவாங்க.
சிவாஜி பிறந்த நாளான அக்டோபர் ஒன்று .காமராஜரை நேரில் பார்த்துதான் சிவாஜி ஆசி வாங்குவார். 1975-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி காமராஜரே சிவாஜியின் வீடு தேடி வந்து வாழ்த்திவிட்டுப் போனார்.
"சிவாஜி தன்னோட உழைப்பாலே சொத்து வாங்குன இன்னொரு ரொம்ப பேமசான விஷயம் சென்னை மவுண்ட் ரோடுலே வாங்குன சாந்தி தியேட்டர்.இந்த தியேட்டரை கட்டுனவர் ஜி.உமாபதி.இவரு கிட்டே இருந்து சிவாஜி தியேட்டரை வாங்குனார்.உமாபதியோட மகள் பேர் சாந்தி.அதே பேர் சிவாஜி மகள் பேராவும் இருந்ததாலே சிவாஜி பெயர்மாற்றம் செய்யலே.சிவாஜி ரசிகர்களோட சொர்க்கபுரியா சாந்தி தியேட்டர் இருந்துச்சு.சென்னைலே ஒரு பிரபலமான அடையாளமா இந்த சாந்தி தியேட்டர் இருந்தது.
சாந்தி தியேட்டரை  திறந்து வெச்சவர் முதலமைச்சர் காமராசராஜர்.1961 ஆம் வருசம் திறந்து வைக்கப்பட்டது.குளிர்சாதன வசதியயோட சென்னையில் தொடங்கப்பட்ட முதல் திரையரங்கம் சாந்தி திரையரங்கம்.
சென்னைலே சிவாஜி வாங்குன ஒரு பெரிய சொத்து சிவாஜி கார்டன்.பல ஏக்கர் பரப்பளவில் பெரிய தோட்டமா இது அமைஞ்சிருக்கு.பல பழைய   தமிழ் படங்களை இந்த தோட்டத்துலே சூட்டிங் பண்ணி இருக்காங்க.டைட்டில்லே சிவாஜி கார்டன்னு போடுவாங்க. இந்த தோட்டத்தை குறைஞ்ச விலைக்கு பல வருசங்களுக்கு முன்னாலே இதோட மதிப்பு தெரியாமே வித்துட்டாங்க. இப்போ இந்த இடத்தோட மதிப்பு மட்டும் 200 கோடி 300 கோடி இருக்குமாம்.
தஞ்சாவூர்லே இருக்கும் சூரக்கோட்டை பண்ணை வீடும் சிவாஜியோட சொத்துகள்லே ஒண்ணு.பல
ஏக்கர் பரப்பளவுலே தென்னந்தோப்பு வயல் நிறைஞ்ச இடமா இருக்கும்.
சிவாஜி கமலாம்மா  இங்க வந்தா அவங்க கூட விவசாய வேலைகளை கவனிப்பாங்க. சூட்டிங் இல்லாத டயத்துலே சிவாஜி இங்க வந்து நிம்மதியா ரெஸ்ட் எடுப்பார்.சூரக்கோட்டைன்னா சிவாஜியோட பண்ணை வீடுதான் ஞாபகத்துக்கு வரும்.
சென்னைலே சாந்தி தியேட்டர் இருக்கற மாதிரி தஞ்சாவூர்லேயும் தியேட்டர் கட்டணும்னு சிவாஜி விருப்பப்பட்டார் .அப்படி தஞ்சாவூர்லே இடம் வாங்கி சிவாஜி கட்டுன தியேட்டர்கள்தான் சாந்தி கமலா தியேட்டர்.
இதுவும் சிவாஜியோட சொத்துகள்லே ஒண்ணு .
இந்த தியேட்டர்கள் 1984 ஆம் வருஷம் திறக்கப்பட்டது.
மேலே குறிப்பிட்ட இந்த சொத்து விபரம் எல்லாம் எல்லாமே பேமசா இருக்கறதாலே தெரிஞ்ச விஷயம்தான்.இது மட்டும்தான் சிவாஜி சேர்த்த சொத்துக்களான்னு ஒரு கேள்வி கேட்டா இந்த விஷயத்தை தான் சொல்லணும்.
இந்த சொத்துகள் சேர்த்ததுக்கு சிவாஜி தம்பி வி.சி. சண்முகத்தோட மூளை இருக்கு. அவர்தான் ஒவ்வொரு வருமானத்தையும் உபயோகமா மாத்தி வழி செஞ்சார்.
சண்முகம் காலமாகி பல வருஷம் கழிஞ்சும் கூட அவர் இருந்த ரூமை யாரும் சரியா பாக்கலே.ரொம்ப நாள் கழிச்சு ரூமை சுத்தாம் பண்ணலாம்னு பல டிராயர்களை திறந்தா அதுலே பல டாக்குமெண்ட்டுகள் இருந்துச்சாம்.அந்த டாக்குமெண்ட்லே இருந்த சொத்துக்கள் எல்லாம் எங்க இருக்கு எப்படி வாங்குனது கூட குடும்பத்துலே இருந்தவங்களுக்கு தெரியாதாம்.
அப்படி நிறைய சொத்து பத்து விபரங்கள் சண்முகத்துக்கு மட்டும் தான் தெரியும்.
சிவாஜியோட உழைப்பு சண்முகத்தோட சாமார்த்தியம் தான் அன்னை இல்ல வளர்ச்சிக்கு ஆதாரமா இருந்திருக்கு.
1970 கள்லே திருச்சிலே ரொம்ப பேமசான ரியல் எஸ்டேட் நிறுவனமா இருந்தது சிவாஜி ரியல் எஸ்ட்டேட்.சிவாஜி ரியல் எஸ்டேட் வளர்ச்சியை பாத்து அதுக்கு இடைஞ்சல் பண்ண உள்ளூர் நிர்வாகமும் அப்ப இருந்த கவர்மெண்ட் கூட முயற்சி செஞ்சதா கூட சொல்வாங்க.
நடிகர்திலகம் தன் வாழ்நாளில் செய்த தானம் தர்மங்கள் இன்றைய மதிப்பின் படி 300 கோடிக்கு மேல் இருக்கும்.
செந்தில்வேல் சிவராஜ்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சிவாஜி யாருக்குடா தானம் குடுத்தான் . கருணாநிதி போலவே அவனும் எச்சிற்க்கையால் காக்கா கூட ஓட்டாதவன்

பெயரில்லா சொன்னது…

உனக்கு தெரியலங்கறதால அவர்கள் செய்த நன்மைகள் பொய்த்து விடாது, பார்ப்பனர் வசம் பத்திரிக்கைகள் இருந்த காலம் - எம்.ஜி.ஆர் செய்த கேடுகளை மறைத்ததுடன் கலைஞர் செய்த நன்மைகளையும் மறைத்தனர், பார்ப்பனன் சொல்வதென்ன ? தான் மட்டுமே உயர்ந்த வர்க்கம் ஏனையோரெல்லாம் தனக்கு கீழ் அடங்கி அவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்கிறான், திராவிட கருத்தியல் அதனை மறுத்து எல்லோரும் சமம், சமுதாயத்தில் பின் தங்கியோர் மேன்மை அடைய வேண்டும் என்கிறது, அதனால்தான் பார்ப்பனர்கள் ஜன்ம வைரியாக திராவிட கோட்பாட்டினை எதிர்க்கிறார்கள், சிவாஜி கணேசன் தமிழர் எனபதாலேயே அந்த மாபெரும் கலைஞனுக்கு தாதா சாகேப் பால்கே விருது இன்றளவும் கிடைக்கவில்லை