திங்கள், 9 ஜனவரி, 2012

நக்கீரன் இதழுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு!

Print E-mail

தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மோகன் நாராயணன் நக்கீரனின் தீவிர வாசகர்களில் ஒருவர். இவரது மகன் ஸ்ரீராம்  அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நக்கீரனில் வெளியாகும்  முக்கிய செய்திகளை ஸ்கேன் செய்து தனது மகன் ஸ்ரீராமுவுக்கு இமெயிலில் அனுப்புவது மோகன் நாராயணனின் வழக்கம்.
அதுபோல, ஜனவரி 7 நக்கீரன் இதழில்  ’ஹெலன் கோர்டன்ஸ் கிறிஸ்துமஸ்’   என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை மோகன் நாராயணன் , ஸ்ரீராமுக்கு மெயில் அனுப்பி வைத்திருக்கிறார். அத்துடன் இந்த ஆண்டு நக்கீரனுக்கு வெள்ளி விழா ஆண்டு என்பதையும் தெரியப்படுத்தி இருக்கிறார்.

நாசா இன்ஜினியர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வழக்கமாம். அதன்படி , ஜனவரி 8 அன்று  ஸ்ரீராமின் வீட்டுக்கு எதிர்பாராமல் வருகை தந்த ஒபாமாவிடம் ஸ்ரீராம் நக்கீரனில் வெளியாகியிருந்த சிறுமி ஹெலன் கோர்டன்ஸ் பற்றிய கட்டுரையை மகிழ்ச்சியுடன் படித்துக்காட்டி ஆங்கிலத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

அதைக் கேட்டு மகிழ்ந்த ஒபாமா,  அக்கட்டுரையை எழுதிய ரவிவர்மனின் மெயில் ஐடிக்கு ஒரு குறுஞ்செய்தியை உடனடியாக அனுப்பி வைத்திருக்கிறார்.

அதில் வெள்ளிவிழா கொண்டாடும் நக்கீரன் வாரமிருமுறைக்கு தனது மேலான வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி இருக்கிறார்.

நக்கீரன் சார்பில்  அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நமது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை: