செவ்வாய், 10 ஜனவரி, 2012

அன்வர் இப்ராகிம், ஹோமோசெக்ஸ் வழக்கில் இருந்து நேற்று விடுதலையானார்

கோலாலம்பூர் : மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம், ஹோமோசெக்ஸ் வழக்கில் இருந்து நேற்று விடுதலையானார். அடுத்த ஒரு மணி நேரத்தில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், மலேசியாவில் பதற்றம் நிலவுகிறது. மலேசிய பிரதமராக 1981 முதல் 2003 வரை இருந்தவர் மகாதிர் முகமது. அரசியலில் 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்.
அவரது ஆட்சியில் 1993 முதல் 1998 வரை துணை பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம் (64). மகாதிரிடம் மிக நெருக்கமாக, நம்பிக்கை பெற்றவராக இருந்தார். மக்கள் கூட்டணி கட்சியில் தொடர்ந்து நற்பெயர் பெற்று வந்த நிலையில், மகாதிருக்கு மாற்றாக அன்வர் இப்ராகிம் மாபெரும் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திடீர் திருப்புமுனையாக, 1998&ல் அவர் மீது ஊழல் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. துணை பிரதமர் பதவியில் இருந்து அன்வரை மகாதிர் நீக்கினார். பின்னர், அவருக்கு ஊழல் வழக்கில் 6 ஆண்டு மற்றும் ஓரினச்சேர்க்கை குற்ற வழக்கில் 9 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கு 2004ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சியங்கள், ஆதாரங்களில் குறைபாடு இருப்பதால் அன்வர் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக நம்ப முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, அன்வர் நேற்று விடுதலை ஆனார். ஆனாலும், அவர் அரசியலில் ஈடுபட தடை தொடர்வதாக நீதிபதிகள் கூறினர்.

இதற்கிடையே அன்வர் தன்னிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் 2008ல் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாயின. தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட சதி நடப்பதாக கூறி அன்வர் அதை மறுத்தார். இந்நிலையில், அன்வர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அன்வர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இது குறித்து அன்வர் இப்ராகிம் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு எனது நேர்மையை நிரூபித்துள்ளது. விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்றார். வழக்கில் இருந்து அன்வர் விடுதலையான தகவல் வெளியான சில மணி நேரத்தில் கோலாலம்பூர் உட்பட 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் சிலர் காயமடைந்தனர். நாசவேலையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: