சனி, 31 டிசம்பர், 2022

 ராமேஸ்வரம் தலைமன்னார் புகையிரத பாதை சாத்தியமா? 1893 இல் ஆங்கிலேயர்கள் முயன்ற திட்டம் .. இந்திய லங்கா றெயில்




 

1893 ஆம் ஆண்டிலேயே இந்தியாவையும் இலங்கையையும் ரயில் பாதை மூலம் இணைக்கும் ஒரு முயற்சியை ஆங்கிலேயர்கள் ஆய்வு செய்துள்ளனர் . இதன் விபரங்களை அன்றைய ஆங்கிலேய அரசின் உரிய ஆவணங்களை படித்தால்தான் முழுமையாக தெரியவரும்
மன்மோகன் சிங் அவர்களின் காலத்தில் அன்றைய இலங்கை பிரதமராக இருந்த திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் இது கவனம் எடுத்திருந்தார்.
இந்திய அரசிடம் இது பற்றி பேசியும் இருந்தார் . அந்த பேச்சுவார்த்தை ஆய்வு நிலையிலேயே இருந்தது. திரு ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கோரிக்கை இந்திய ஆட்சியாளரிடம் என்ன விளைவை அப்போது ஏற்படுத்தி இருந்தது என்பது தெரியவில்லை . ஆனாலும் இது பற்றி ஆய்வு செய்வதாக கூறியிருந்தனர் .
ரணிலின் ராமேஸ்வரம் தலைமன்னார் ரயில் பாதை என்பது நடக்கவே முடியாத ஒரு திடடம் என்று கூற முடியாது. இது பற்றி 1893 யிலேயே ஆங்கிலேயர்கள் சிந்தித்து இருக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான செய்தியாகும் . இது பற்றிய ஒரு முக்கிய குறிப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து அப்போது வெளியான கத்தோலிக்க பாதுகாவலன் அல்லது Jaffna Catholic Guardian என்ற இதழில் வெளியாகி உள்ளது  

உலகளாவிய அறிவுச் சுட்டெண் - தெற்காசியாவில் இலங்கை முன்னணி நாடு என்ற நிலையை எட்டியது

ஜாப்னா முஸ்லீம் :  உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணுக்கு அமைவாக 2022 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட 132 நாடுகளில் இலங்கை 79வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிடைத்துள்ள சுட்டெண் 43.43 ஆகும். இது உலகளாவிய அறிவு குறியீட்டு சராசரி மதிப்பை விரைவில் தொடக்கூடியதாக அமைந்துள்ளது.
உலகளாவிய அறிவுக் குறியீட்டின் சராசரி மதிப்பு 46.5 , மேலும் உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணின் படி, தெற்காசியாவில் இலங்கை முன்னணி நாடு என்ற நிலையை எட்டியுள்ளது.

துடிக்க துடிக்க மஸ்தான் கொலை - காருக்குள் நடந்தது என்ன?

மின்னம்பலம் - Kavi  : முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.பி.மஸ்தான். திமுகவில் மாநில சிறுபான்மையினர் நலச் செயலாளராக இருந்தார்.
தனது மகனுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்த மஸ்தான் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். திருமண அழைப்பிதழ் வைப்பதற்காகக் கடந்த 21ஆம் தேதி இரவு திருச்சி புறப்பட்டார்.
அப்போது அவரது சகோதரர் மகன் இம்ரான் பாஷா மஸ்தானிடம், “நீங்கள் தனியாகப் போக வேண்டாம். நானும் உங்களுடன் வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.   பின்னர், காரை இம்ரான் பாஷா இயக்க, மஸ்தான் அவருடன் கிளம்பினார். இரவு 9.30 மணிக்குச் சென்னையிலிருந்து கிளம்பிய நிலையில் நள்ளிரவில் இம்ரானிடம் இருந்து மஸ்தான் வீட்டுக்கு ஒரு அழைப்பு வந்தது.

சென்னை சங்கமம் ..கனிமொழி தலைமையில் நாட்டுப்புற கலைஞர்களின் சங்கமம்

நக்கீரன் : நாட்டுப்புறக் கலைகளுக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும்,
அவர்களின் கலைக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்று 2022 - 2023 ஆம் நிதியாண்டில் சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடைபெறும் ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை குறுந்தகடு அல்லது பென்டிரைவில் பதிவு செய்து மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டம்! 368 இடங்களில் சோதனைச்சாவடிகள்; காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை

மாலை மலர் :  M தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

2,400 தற்காலிக நர்சுகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்படுவார்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 மாலைமலர் : சென்னை: கொரோனா காலத்தில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததால் ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை தேர்வு செய்து கொள்ள தேசிய சுகாதார குழுமம் அனுமதி அளித்தது.
அதன் பேரில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நர்சுகளை தேர்வு செய்தது. மொத்தம் 2,400 நர்சுகள் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களின் பணிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இனி பதவி நீட்டிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இது நர்சுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. உண்ணாவிரத போராட்டம் தொடரும்.. இடைநிலை ஆசிரியர்கள்

 tamil.oneindia.com  -  Mani Singh S :  சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிஐபி வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தொடர் இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுகு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு நாள் வித்தியாசத்தில் நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கேசன்துறை புதுசேரி கப்பல் போக்குவரத்திற்காக குடிவரவு குடியகல்வு துறைமுகமாக காங்கேசன்துறை அறிவிப்பு !

hirunews.lk  :  பயணிகள் கப்பல் சேவைக்காக தயாராகும் காங்கேசன்துறை!
காங்கேசன்துறை துறைமுகத்தை குடிவரவு குடியகல்வு அனுமதியுடைய துறைமுகமாக அறிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட அரசு அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 23ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு, இந்த அரசு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
காங்கேசன்துறைக்கும், புதுச்சேரிக்கும் இடையில் ஜனவரி மாதம், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,
காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 30 டிசம்பர், 2022

கம்போடியாவில் நட்சத்திர ஓட்டல் தீவிபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்வு

மாலை மலர் :  பெனாம் பென்.  கம்போடியா நாட்டில் தாய்லாந்து எல்லையில் கிராண்ட் டயமண்ட் சிட்டி கேசினோ என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.
நேற்றிரவு 11.30 மணி அளவில் ஓட்டலின் ஒரு அறையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த அறை தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பக்கத்து அறைகளுக்கும் பரவியது.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டல் அறைக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதில் 10 பேர் பலியானதாகவும்,30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை! போலீஸ் தகவல் – சம்பவ நாளில் என்ன நடந்தது?

BBC Tamil :  திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான், மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தவர் மஸ்தான்.
கடந்த 21ஆம் தேதி காரில் செங்கல்பட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், அவரது குடும்பத்தினர் மஸ்தானின் மரணத்தில் சந்தேகமடைந்தனர். தங்கள் தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டுமென காவல்துறையில் புகார் அளித்தனர்.

ஓடும் விமானத்தில் அண்ணாமலை? தண்ணீ தொட்டி தேடி வந்த ஆட்டுக் குட்டி?

May be an image of 1 person

 Maezhi.:  தண்ணீ தொட்டி தேடி வந்த அசிங்க ஆட்டுக் குட்டி யார்?
பிட்டு படம் தான் எடுப்பான்கள் என்று பார்த்தால் ஓசியில் எது கிடைத்தாலும் விட மாட்டானாம்.
இப்படிதான் கட்சி செலவில் ஹோட்டலில் தங்க வைத்தால் ஓசி சரக்கு வாங்கி வயிறு முட்ட குடித்து விட்டு காஸ்ட்லி உணவுகளை தின்று உடல் ஊதி வருகிறானாம்.
ஓவராக சரக்கடித்து வாய் உப்பி விட்டது !
கவனித்தீர்களா?
கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ஹோட்டலில் தண்ணீ அடித்ததால் ஆட்டுக்கும், தேதஸ் ஆட்டுக்கும் விமானத்தில் ஹோங்கோவர் ஏற்பட்டது என்று சொல்லி வயிறு முட்ட குடித்தனர் தேசியர்கள்.
விமானத்தில் இருக்கும் பணிப் பெண்களிடம் நாங்கல்லாம் யார் தெரியுமா ? என்று பெருமை பீத்திக் கொண்டு இருந்த போது வயிறு முட்டக் குடித்ததால் சிந்து பைரவி சிவக்குமாருக்கு போல் வாந்தி வந்து உள்ளது.
போதையில் பாத்ரூம் என்று நினைத்து விமானத்தில் உள்ள எமர்ஜென்ஸி வாசலை திறக்க முயன்றனர் தமிழ்நாடு,கர்நாடக அசிங்க குட்டிகள் இருவரும்.

மருத்துவத்துறையில் செவிலியர்களின் துன்பம் .. கண்டு கொள்ளாத அமைச்சர் மா சுப்பிரமணியம்

Loganayaki's :       மா.சு அவர்கள் மருத்துவத்துறையில் கொட்டும் வன்மத்தை பார்த்தால் ... மாடு ஒரு பெரிய விலங்கு.. தமிழனுக்கு சாப்பிட்டால் செமிக்காதுன்னு கதை கட்டுற கேங்க் தான் வருங்கால தமிழக மருத்துவக்குழுவாக இயங்கும் என எதிர்பார்க்கிறேன்.
    அவரால் கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி அரசுத்துறை செவிலியரை பெர்மெணண்ட் செய்ய இயலாது.
    அரசு மருத்துவர்கள் field லயும் இருக்கனும் ..field க்கு சம்மந்தமில்லாத தூரத்தில் இருக்கும் சுகாதார நிலையத்தில் attendance ல கையெழுத்தும் போட்ருக்கனும்.
    துணை சுகாதார மைய செவிலியர்கள் சுகாதார நிலையத்துல போய் biometric தினமும் காலை மாலை இருவேளை பதிவு செய்யனும்.என் துணை சுகாதார மையத்துல இருந்து சுகாதார மையம் 25 நிமிடம் ட்ராவல்.பேருந்து அடிக்கடி இல்லை.திரும்ப என் லொக்கேசனுக்கு போய் வேலை துவங்க 12 ஆகும்.அடுத்து 4 மணிக்கு திரும்ப சுகாதார நிலையம் தேடி பஞ்ச் பண்ணனும்.அதுக்கு 3 மணிக்காவது பஸ் இருக்கனும்.இந்த துயரக்கதைய dept ல சொல்லி 2 நாள் போதும் என்றனர்.(பெரும்பாலும் ஒவ்வொரு சுகாதாரமையமும் தூரமாகத்தான் இப்படித்தான் இருக்கும்)

உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் பீலே காலமானார்.. பிரேசில் நாட்டை சேர்ந்தவர்

unews.lk  :  பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பீலே தமது 82 ஆவது வயதில் காலமானார்.
வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ண வெற்றிகளில் பீலே பிரேசில் கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
பின்னர் 2000 ஆம் ஆண்டில், அவர் நூற்றாண்டின் சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் இந்து பெண் தலை துண்டித்து படுகொலை

 மாலை மலர் : கடந்த 27ந் தேதியன்று வெளியே சென்ற நிலையில் அந்த பெண் வீடு திரும்பவில்லை.
வயல் வெளியில் இருந்து அவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்.
சிந்து: பாகிஸ்தானின் இந்து பெண் தயா பீல் என்பவர் (வயது 44) தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சிந்து மாகாண சிறுபான்மை பிரிவு நிர்வாகி கிருஷ்ணகுமாரி தமது டுவிட்டர் பதிவில், சின்ஜிரோ பகுதி வயல்வெளியில் இருந்து அவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
நான்கு குழந்தைகளுக்கு தாயான தயா பீல், கடந்த 27ந் தேதியன்று வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
தாய் வராததால் அவரை தேடி சென்றதாகவும் பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு வயலில் அவரது சிதைந்த உடலை கண்டதாக, தயா பீல் மகன் சூமர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வழங்கிய அரிசி மூடைகளை பதுக்கிய அபிவிருத்தி சங்க ஊழியர்கள்! புழுக்களும் வண்டுகளும் நிறைந்து பாவனைக்குதவாது போனது

தேசம்நெட் -  அருண்மொழி : தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகள் வவுனியா – ஆசிக்குளம், மதுராநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கிராம மக்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழக அரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி அரிசி மூடைகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மதுராநகர் கிராமத்தில் சுமார் 1000 கிலோவிற்கும் மேற்பட்ட அரிசி மூடைகள் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த அரிசி மூடைகள் பழுதடைந்து புழுக்களும் வண்டுகளும் நிறைந்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நாகலிங்கம் கமலதாசன் நியூஸ்ஃபெஸ்டிற்கு கருத்து தெரிவிக்கையில், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரை குறித்த இடத்திற்கு அனுப்பி அறிக்கையிடுமாறு தெரிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்க முடியும் எனவும் கூறினார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மறைவு

 PM Narendra Modis mother Heeraben Modi dies

tamil.oneindia.com  -  Mani Singh S  :  அகமதாபாத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. 100 வயதான ஹீராபென் மோடி குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதரருமான பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார்.

சந்தேக வளையத்தில் இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா? veerakesari

வீரகேசரி : அமைச்சர்கள் பந்துல குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட, 22 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பொதுஜன பெரமுனவின் 37 அரசியல்வாதிகள் தாக்கல் செய்த ரிட் மனுவொன்று வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பது, ஆளும்கட்சியின் அரசியல்வாதிகள். பிரதிவாதிகளாக கூறப்பட்டிருப்பவர்கள், பாதுகாப்புத் தரப்பின் உயர்மட்ட அதிகாரிகள்.
காலிமுகத்திடலில் ‘கோ ஹோம் கோட்டா’ போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, மே 9ஆம் திகதி வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அலரி மாளிகையில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் புறப்பட்ட ஆளும்கட்சியின் குண்டர்கள், போராட்டக்காரர்களின் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாட்டின் பல்வேறு பாகங்களிலும் வன்முறைகள் இடம்பெற்றன.  அதன்போது, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அந்தச் சந்தர்ப்பத்தில் வீடுகளை இழந்த 37 பேரே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு! .. Dok 1 Max Syrup'

 நக்கீரன் : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இருந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 'மரியான் பயோடெக்' நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை, 'Dok 1 Max Syrup' என்ற அந்த இருமல் மருந்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பட்டு வேட்டியில் சீன தூதரக அதிகாரி!

/tamil.adaderana. :  சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடையான பட்டு வேட்டியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது அங்கிருப்பவர்களை கவர்ந்தது.
நேற்று யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அக்குழுவில் அடங்கிய பிரதிநிதி ஒருவரே இவ்வாறு பட்டு வேட்டியுடன் வருகை தந்திருந்தார்.

வியாழன், 29 டிசம்பர், 2022

ஸஹ்ரானுடன் தொடர்பில் இருந்த ஐ.எஸ் உறுப்பினர் உட்பட இருவர் தமிழகத்தில் கைது!

hirunews.lk இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரொருவர் உட்பட இருவரை இந்திய புலனாய்வு பிரிவு நேற்று கைது செய்துள்ளது.
அக்டோபர் 23 ஆம் திகதி, தமிழகம்- கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தீண்டாமை கொடுமை வழக்கு எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது - தயவு தாட்சண்யமே கிடையாது.. அமைச்சர் மெய்யநாதன்!

tamil.oneindia.com -  Vignesh Selvaraj  :  புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், எந்த தயவு தாட்சண்யமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்.
இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் வாட்டர் டேங்க்கில் மலம் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையின்போது அந்த கிராமத்தில் கோவிலில் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படாதது அதிர்ச்சியைக் கிளப்பியது.

நடிகர் சித்தார்த் விளக்கம்: "இந்தி புரியுமில்ல? நாங்க எதை அகற்ற சொல்றோமோ அதுதான் விதி" - மதுரை விமான நிலைய சம்பவம் முழு விவரம்

BBC News தமிழ் : மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும்,
 பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாகவும்,
 நடிகர் சித்தார்த் சமூக ஊடகத்தில் பதிவிட்டது இணையத்தில் பேசுபொருளான நிலையில்,
விமான நிலையத்தில் என்ன நடந்தது என்ற விரிவான விளக்கத்தை நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் தனது பெற்றோருடன் விமானப் பயணத்திற்காக மதுரை விமான நிலையம் சென்றிருந்தபோது அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து தனது முந்தைய பதிவில் சாடியிருந்தார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம்.

TTF வாசன் ..சமூகத்தை சீரழிக்கும் ஒரு வியாதி! கேள்விக்கு பதில் சொல்லாமல் Walkout செய்த TTF வாசன்

Mohamed Abbas Abs : TTF வாசன் வளர்ச்சி கண்டு பொறாமைல அவன பத்தியே பேசிட்டு இருக்கேன் ன்னு தோணுதா உங்களுக்கு...?
அது தான் இல்ல TTF வாசன் மாதிரி யூடியூப் வழியா சம்பாதிக்கும் எத்தனயோ நபர்கள் இருக்காங்க,சொல்லப்போனா இவன விட அதிக Followers ஓட லாம் இருக்காங்க
அப்படி இருக்கப்போ இவன மட்டும் Target பண்ண என்ன காரணம் னா....வேற ஒன்னுமே இல்ல....இவன் Toxic to the core
இன்னைக்கு அய்யப்பன் ராமசாமி உடனான Interview ல Road Accidents 80% குடியாலயும், ஆடு மாடு குறுக்க வர்றதாலயும் தானே நடக்குது..
.20% தான Overspeed ஆல நடக்குது...அரசாங்கம் 80% பிரச்சினைய தான முதல்ல சரி பண்ணனும் ன்னு கூலா சொல்றான் ...
சமீபத்துல எவ்வளவோ Overspeed Accidents பார்த்தாச்சு... சின்ன பசங்க அவ்வளவு பேரு இவனால Inspire ஆகி சுத்துறாய்ங்க.... இவனுக்கு எத பத்தியும் கவல இல்ல...

ஈபிஎஸ் தான் பொதுச்செயலாளர்; அங்கீகரித்த மத்திய அரசு; கொண்டாட்டத்தில் பழனிசாமி 

நக்கீரன் : ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதார செலவுகளைக் குறைக்கவும் தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்கவும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை நடைமுறைக்குக் கொண்டு வர ஆலோசித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளைக் கேட்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை ஆணையகம் ஏற்பாடு செய்துள்ளது.

Ex CM சந்திர பாபு நாயுடுவின் மாநாட்டில் கூட்டநெரிசல்; 8 பேர் உயிரிழப்பு

நக்கீரன் : தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் கந்துக்கூர் பகுதியில் ஆளுங்கட்சிக்கு எதிராக மாநாடு நடைபெற்றது.
 இதில் தெலுங்கு தேசம் கட்சியினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன் அங்கிருந்த மக்கள் மற்றும் கட்சியினர் என அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது அங்கு கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.