unews.lk : பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பீலே தமது 82 ஆவது வயதில் காலமானார்.
வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ண வெற்றிகளில் பீலே பிரேசில் கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
பின்னர் 2000 ஆம் ஆண்டில், அவர் நூற்றாண்டின் சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆர்ஜென்டீனாவின் முன்னாள் தலைசிறந்த வீரர் டியாகோ மரடோனாவுடன் பீலேயும் கால்பந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக