சனி, 5 பிப்ரவரி, 2022

நாடற்ற இந்தியர்களும் இலங்கை அகதிகளும் ! தொ.பத்திநாதன்

May be an image of tree, outdoors and text

ந. சரவணன்:  காலச்சுவடு இதழிலில் எழுத்தாளர் தொ.பத்திநாதன்  அவர்களது கட்டுரை காலச்சூழலுக்கு ஏற்ற ஒன்றாகவே காண முடிகிறது.
Pathi Nathan  : தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள், அவர்களின் நிலை, அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள், மாநில அரசு அனுகும் விதம்,
ஏற்கனவே இருந்த பார்வையில் இருந்து அகதிகளை தற்போது அனுகும் விதம். என்பது பற்றியும்,
அடுத்து மத்திய மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெளிவான ஒரு பார்வையினை முன் வைத்துள்ளார்.
குறிப்பாக தமிழக முகாம்களில் இருக்கும் மக்கள் வெவ்வேறு பின்புலங்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள்,
அதாவது இந்திய வம்சாவழி தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் என இருக்கின்றனர். இருவேறு பின்புலங்களை கொண்ட மக்களுக்கான வாய்ப்புகளை வெவ்வேறு வகையான அனுகுமுறையிலேயே அனுக இயலும். அதற்குத்தான் தற்போதைக்கு வாய்ப்பிருக்கிறது.

ஆளுநர் அல்லது NEET என்பதை மாநில உரிமை என்பதோடு சம்மந்தப் படுத்தி பாருங்கள்.!

May be an image of one or more people, beard and eyeglasses

Kandasamy Mariyappan  :  தனியார் மருத்துவ கல்லூரிகள் என்றாலே..,
அரசியல்வாதிகள் கொள்ளையடித்து கட்டிய கல்லூரிகள் அல்லது
அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட கல்லூரிகள் என்று நமது மனதில் ஆழமாக திணித்து விட்டனர்.!
ஒரு சீட்டுக்கு பல கோடிகளை வசூலிக்கின்றனர் என்று உளறிக் கொண்டே இருக்கிறோம்.!
ஒரு மருத்துவ கல்லூரி நடத்துவது என்பது பெட்டிக் கடை நடத்துவது இல்லை.!
உதாரணமாக, சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் ஏறத்தாழ 5000 நபர்கள் பணி புரிகின்றனர்.
ஏறத்தாழ 20 கோடி ரூபாய் மாத சம்பளமாக வழங்குகின்றனர்.!
இது போக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை, Maintenance, Lab Facility, Cadavar Facility etc.!
இதெல்லாம் யார் தருவது.!

நீட் தேர்வு விலக்கு - மறுபரிசீலனை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு கோரிக்கை!

 zeenews.india.com  : நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநர் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்து ஆளுநர் அச்சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியுள்ளார்.

face book - Meta பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சி! ஒரே நாளில் ..

 vikatan  : பேஸ்புக்கின் உரிமையாளரான Meta நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் பங்குகள் 26.4 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.
பேஸ்புக்கின் வழமையான பயனர்களின் பாவனை கடந்த 18 வருடங்களில் முதற்தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.
Meta நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்றதிகாரி Mark Zuckerberg இன் நிகர சொத்து மதிப்பு 31 பில்லியன் டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக Bloomberg செல்வந்தர்களுக்கான குறிக்காட்டி தெரிவித்துள்ளது.

இராவணனை வழிபடும் இடங்கள் மத்தியப் பிரதேசத்தில்

May be an image of 1 person, standing, temple and outdoors

Muthu Selvan :  இராவணனை வழிபடும் இடங்கள்
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு உள்ளன.
இராவணனை, குணமளிப்பவனாகவும் பாதுகாவலனாகவும் கொண்டாடுகிறார்கள்.
1. அந்த மாநிலத்தில் உள்ள மண்ட்சார் என்னும் ஊர் இராவணனின் மனைவி மண்டோதரியின் ஊராகக் கருதப்படுகிறது. எனவே அந்த ஊர் மக்கள் இராவணனை மருமகனாகக் கருதுகின்றனர்.
அந்த நகரத்தின் கான்பூர் பகுதியில் உள்ள 35 அடி உயர இராவணன் சிலையின் இடது காலில் ஒரு சிவப்புக் கயிற்றைக் கட்டுவதன் மூலம் நோய் நொடிகளிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுவதாக நம்புகின்றனர்.

பாகிஸ்தானில் இந்து தொழிலதிபர் சுட்டு கொலை

 தினத்தந்தி  : பாகிஸ்தானில் இந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.  இங்கு கோட்கி மாவட்டத்தில் சத்தன் லால் என்ற இந்து தொழிலதிபருக்கு, 2 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை ஒப்படைத்து விட்டு இந்தியாவுக்கு ஓடும்படி, முஸ்லிம்கள், சத்தன் லாலுக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.
இதற்கு சத்தன் லால் மறுக்கவே, 8 ஆண்டுகளுக்கு முன் அவர் மீது துப்பாக்கி சூடு நடந்தது. அதில் படுகாயத்துடன் சத்தன் லால் உயிர் தப்பினார்.  இந்நிலையில், சத்தன் லால் நிலத்தில் பருத்தி ஆலை மற்றும் மாவு ஆலை அமைப்பதற்கான துவக்க விழா நடந்தது.

ஆங்கிலம் தெரிந்திருந்தும் தமிழக எம்பிக்களுக்கு இந்தியில் பதிலளித்த . ஜோதிராதித்ய சிந்தியா பிஜேபி எம்பி

hindutamil.in : புதுடெல்லி:  மக்களவையில் நேற்று தமிழக எம்.பி.க்கள் எழுப்பியிருந்த துணைக் கேள்விக்கு இந்தியில் பதிலளித்த பாஜக எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியாவை சசி தரூர் கண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரை ஆட்சி செய்த சிந்தியா என்ற மராத்திய அரச குடும்பத்தின் வாரிசு இந்த ஜோதிராதித்ய சிந்தியா. இளம் வயதிலிருந்தே காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்ட அவருக்கு 2018ல் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டது.
அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் பதவியை எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கமல்நாத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் காங்கிரஸிலிருந்து விலகினார். ஆட்சியைக் கவிழ்த்தார். பாஜக ஆட்சியைப் பிடிக்க அதற்குக் கைமாறாக மத்திய அமைச்சராக்கப்பட்டார்.
ஒரு காலத்தில் ஒரே கட்சியில் இருந்த சிந்தியாவை சசி தரூர் நேற்று சாடினார்.

வெளிநாட்டு திராவிடர் நலனுக்கான குழு! பேரறிஞர் அண்ணாவிடம் இ தி மு க.. (வரலாறு)

கொடியோடு ஏ இளஞ்செழியன்
ராதா மனோகர் :  1951 ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக மாநாட்டுக்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மூவரை அனுப்புவது என்று கழக தோழர்கள் முடிவு செய்தனர்
அம்மாநாட்டு  நிதியை சேர்க்கும் பணியை தோழர் இளஞ்செழியன் ஏற்று கொண்டார்.
இந்த நிதியை சேர்க்கும் முகமாக  கண்ணீர் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்கள்
மலையக தோட்டங்களில் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் மலையக மக்களின் கண்ணீர் கதையையே ஒரு நாடகமாக தயாரித்திருந்தார்கள்
இந்நாடகத்தை தோழர் வி செம்பனூர்  தோழர் கே கே இராமசாமி ஆகியோர் எழுதி இயக்கி இருந்தனர்

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

ஒவைசியின் கார் மீது துப்பாக்கி சூடு .. உத்தர பிரதேசத்தில்

 மின்னம்பலம் : உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கே ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசிக்கு ஒன்றிய உள்துறை இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க முன்வந்ததை ஓவைசி ஏற்க மறுத்திருக்கிறார்.
பிப்ரவரி 3 ஆம் தேதி மேற்கு உத்தரப் பிரதேச பகுதியில் உள்ள மீரட் நகரில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, ஓவைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார்.
ஹபூர் மாவட்டம் பில் குவா பகுதியில் சாஜர்ஷி டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓவைசியின் காரின் முன் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

ஐ.எஸ். தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டை வெடிக்கவைத்து உயிரிழப்பு. அமெரிக்க படையால் சுற்றிவளைக்கப்பட்டார்

veerakesarai :  அமெரிக்காவின் விசேட படைப்பிரிவினர் சிரியாவின் மேற்குபகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு விசேட நடவடிக்கையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி கொல்லப்பட்டுள்ளார்.
தங்களது படைகளால் சுற்றிவளைக்கப்பட்டவேளை ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டைவெடிக்கவைத்ததாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் இதன்போது கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 இல் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட பின்னர் ஐ.எஸ். அமைப்பின் தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

கண்ணீர் விட்ட ரஜினி: கோபத்தில் கத்திய தனுஷ், அதிர்ந்த ஐஸ்வர்யா

ரஜினி மீது நம்பிக்கையில்லை | Dinamalar Tamil News

Shameena Parveen  -  Samayam Tamil :    மூத்த மகளின் வாழ்க்கையை நினைத்து ரஜினிகாந்த் கண்ணீர்விட்டாராம்.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். பிரிவை அறிவித்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.
தனுஷையும், ஐஸ்வர்யாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஐஸ்வர்யாவின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்கிற வேதனையில் ரஜினி அழுதுவிட்டாராம்.
இது தவறான முடிவு, 2 மகன்களை நினைத்து மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ் என்று கூறியும் ஐஸ்வர்யா கேட்கவில்லையாம். இதற்கிடையே ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக இருக்கிறாராம் தனுஷ்.

நீட் விலக்கு விவகாரம் - ஆளுநர் மாளிகையை முற்றுகையிட தயாராகும் கட்சியினர்+ கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு!

 நக்கீரன்  :நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதுதொடர்பான விரிவான விளக்கத்தைத் தெரிவித்துள்ளது.
ஆளுநரின் முடிவைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில்,
குறிப்பிட்ட சில அரசியல் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று அறிவித்துள்ளனர். நேற்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்றனர்.

திருச்சி ராமஜெயம் (நேருவின் தம்பி) கொலை வழக்கு: சிபிசிஐடி - டிஜிபி - ஷகில் அக்தர் ஐபிஎஸ்ஸிடம்

ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு விசாரணை அதிகாரி இவர்தான்!

மின்னம்பலம் : திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29ஆம் தேதி அதிகாலை வாக்கிங் செய்ய சென்றவர் வீடு திரும்பவே இல்லை. அதற்கு பிறகுதான் அவர் மர்மமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட தகவல் தமிழகத்தை அதிர வைத்தது.
அந்த சம்பவம் நடந்து மிகச் சரியாக பத்து வருடங்கள் முடிய போகிற நிலையில், அவரை கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.

மறைந்த புதுக்கோட்டை (எம் எல் ஏ) திரு .பெரியண்ணன் .. இலங்கையில் ஆரம்பித்த திராவிட பயணம்.

திரு ஏ. பெரியண்ணன்
  ராதா மனோகர்  :  1953 ஆம் ஆண்டு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் அழைப்பை ஏற்று  தமிழ்நாட்டில் இருந்து சிந்தனை சிற்பி சி பி சிற்றரசு ,மற்றும் கிளர்ச்சி பத்திரிகையின் ஆசிரியரான இரா. சு.தங்கப்பழம் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர்
இலங்கையில் 30 இற்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கு பற்றி சொற் பொழிவாற்றினார்கள்  
(19 ஏப்பிரல் 1953 ) கொழும்பு மாவட்ட தி மு கழகத்தின் சார்பில் கொழும்பு நகரசபை மண்டபத்தில் தோழர் ஆர் ஆர் கே டெய்லர் தலைமையில் சிந்தனை சிற்பி சிற்றரசுவுக்கும் இரா சு தங்கப்பழம் அவர்களுக்கும் பெரும் வரவேற்பு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
கூட்டம் ஆரம்பிக்க முன்பு ஆயிரக்கணக்கான கழக தொண்டர்கள் கறுப்பு சிவப்பு கொடிகளை உயர்த்தி பிடித்தவண்னம் ஊர்வலமாக சென்றனர்
அவர்களின் பதாகைகளில்
சாதி மதம் ஒழிக்க
கண்மூடி பழக்கம் மண்மூடி போக
சமத்துவம் ஓங்குக

மத்திய சர்கார் ஒரே ஒரு மொழியை மட்டுமே வளர்க்கிறது! அமரர் விடுதலை விரும்பி அய்யாவின் ஆழமான ஒரு உரை!

 ராதா மனோகர் : தென்னிந்தியாவில் ஒரு ஆழமான கருத்து நிலவுகிறது . மத்திய சர்கார் ஒரே ஒரு மொழியை மட்டுமே வளர்க்கிறது அது உண்மையும் கூட .. சொல்லி விட்டு சொன்னேன் . If we go to the annual reports of the all ministries , we will find the chapter describing the actions taken or propose to be taken to develop the hindi language ..
இங்கே இருக்க கூடிய மந்திரிசபைகளின் ஆண்டறிக்கைகளில் பார்த்து சொன்னால் .
ஒவ்வொரு துறையில் உள்ள ஆண்டறிக்கையிலும் இந்தி மொழியை வளர்ப்பதற்காக திட்டங்கள் அல்லது இனி வளர்ப்பதற்கான திட்டங்கள் என்று ஒரு தனி அத்தியாயம் போட்டு எழுதுறான்..
but in a same time we do not find a single sentence to develop of other indian languages.
ஆனால் மற்றையை இந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்தது ஒரு வாக்கியம் கூட அந்த ஆண்டறிக்கையில் பார்க்க முடிவதில்லை.
there for எனவே I like to know from the honorable Prime Minister there were any proposal to develop other indian languages in a way it has done for the development of hindi language.

வியாழன், 3 பிப்ரவரி, 2022

அவர்கள் ஹிஜாப் போட்டா! நாங்கள் காவி துண்டு போடுவோம்! கர்நாடக மாணவர்களின் போராட்டம்.

Shyamsundar -  Oneindia Tamil  :   பெங்களூர்: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிப்பு அங்கு இருக்கும் பியு கல்லூரிகளில் இந்து மாணவ, மாணவியர் பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் 10ம் வகுப்பிற்கு பின் பியுசி படிக்கும் நடைமுறை இப்போது உள்ளது. அதாவது +1, +2 கர்நாடகாவில் ஜூனியர் காலேஜ் அல்லது பியு காலேஜ் என்று அழைப்பார்கள்.
இந்த பியு கல்லூரிகளில்தான் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இத்தனை காலமாக அங்கு இருக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்துதான் பியு கல்லூரிக்கு வந்துள்ளனர். இதுவரை அங்கு எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை.
ஆனால் சமீப காலமாக இஸ்லாமிய மாணவிகள் இப்படி ஹிஜாப் அணிவதை இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தென்னாபிரிக்க தமிழர்களின் மதம் தமிழ்தான் இந்து அல்ல.. பர்மா - பிஜி - ரியூனியன் தமிழர்களின் மதமும் தமிழே .. இந்து அல்ல

 Sundar P  :   நான் சில மாதங்களுக்கு முன் தாய்லாந்தில் உள்ள ஒரு காபி நிலையத்தில் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவர் கருப்பாய் தோற்றத்தில் இந்தியப் பெண் மாதிரி இருந்தார். சினேகமாய்ச் சிரித்தேன். அவரும் பதிலுக்கு சிரித்தார்
"இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?"
"இல்லை தென் ஆப்பிரிக்காவிலிருந்து" என்றார். எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது.
அவரது கையில் ஒரு காபி, எனது கையிலும் ஒரு காபி.
"இங்கு உக்காரலாமா?"
"ஓ" என்று தலையசைத்தார்
தானொரு கால்நடை மருத்துவர் என்றும், உயிரியல்  தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும்  சொன்னார்...

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? -முதல்வர் மு.க.ஸ்டாலின்

 நக்கீரன் செய்திப்பிரிவு   தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 7 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்தார் ஆளுநர் ரவி.
இந்த நிலையில், இன்று அந்த சட்ட மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பியிருக்கிறார்.
ஆளுநரின் இந்த செயல்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும்  கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் அறிவித்திருக்கும் நிலையில், அண்ணா நினைவு நாளான இன்று ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் 'பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

இரு மீனவர்கள் உயிரிழப்பு – கொந்தளிக்கும் யாழ். மீனவர்கள் – டக்ளஸ் தேவானந்தாவை முற்றுகையிட்டு வாக்குவாதம்



BBC : இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தங்களுடைய கடற்படை தடுக்கத் தவறினால், அந்த மீனவர்களை நாங்களே தாக்குவோம் என்று இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் வகையில் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மீனவர்கள் கோரியபடி, அவர்களின் பிரச்னைக்கு எழுத்துபூர்வ உத்தரவாதத்தை தர அமைச்சர் மறுத்ததால் அவர் மீது யாழ்ப்பாணம் மீனவர்கள் அதிருப்தியுடன் காணப்படுகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கும்போது பிடிபட்டதாகக் கூறி கைதாகி பின்னர் விடுவிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல, சமீபத்திலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதேவேளை, இரண்டு இலங்கை மீனவர்களும் சமீபத்தில் நடுக்கடலில் தாக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி

 மலைமலர் : நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.

இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள்.. அண்ணாவின் குரலை ஒலித்த ராகுல் காந்தி

May be an image of 2 people, people standing and text that says 'BREAKING NEWS SUN NEWS 80/ மக்களவையில் காங். எம்.பி. ராகுல் காந்தி விளாசல்! "பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது; உங்களால் அதை சாதிக்கவே முடியாது!" SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 02FEB2022'

திரு. ஆழி. செந்தில் நாதன் : அண்ணாவையே நினைவேந்தினார் ராகுல்...
இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள்
அவருக்கு நாம் நினைவேந்தலைச் செலுத்தும் இத்தருணத்தில், வேறு ஒருவர் ஒரு நாள் முன்னதாகவே அதைச் செலுத்திவிட்டார் என்று தோன்றுகிறது.
நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல் பேசியப் பேச்சைக் கேட்டேன். அவர் எப்போது திமுகவில் சேர்ந்தார்?
எந்த நாடாளுமன்றத்தில் அண்ணாவின் கூக்குரலுக்கு செவிமடுக்காமல், அவரது
அறிவுரையைக் கேட்காமல், அவரது எதிர்கால நோக்கை அறியாமல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பிற காங்கிரஸ், ஜனசங்க, கம்யூனிஸ்ட் தலைவர்களும் அவரைப் புறக்கணித்தார்களோ. அலட்சியப் படுத்தினார்களோ, தோற்கடித்தார்களோ, அதே நாடாளுமன்றத்தில், அதே ஜவஹர்லாலின் வாரிசு, ராகுல் காந்தி நேற்று பேசியதெல்லாம், அண்ணா அன்று சொன்னதை இன்று வழிமொழிந்ததுதான்.

சென்னை மாநகராட்சியில் காங்.க்கு 17, விசிக-வுக்கு 6 வார்டுகள்! சிதம்பரம் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கும் ஒதுக்கீடு

 நக்கீரன் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகளுக்குச் சென்னை மாநகராட்சியில் 18-திருவெற்றியூர், 45-பெரம்பூர், 72-திருவிக நகர், 107-அண்ணா நகர், 135-அசோக்நகர், 190-பள்ளிக்கரணை ஆகிய ஆறு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை என்றும், ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பவர் என்றும் கண்டிப்பது நல்லதல்ல: ஸ்மிருதி இரானி

tamil.indianexpress.com :" ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை என்றும், ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பவர் என்றும் கண்டிப்பது நல்லதல்ல: ஸ்மிருதி இரானி
இந்த நாட்டில் நடக்கும் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறைத் திருமணம் என்று கண்டிப்பதும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் கற்பழிப்பாளர் என்று கண்டிப்பதும் நல்லதல்ல .
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தான் அனைவருக்கும் முன்னுரிமை,
ஆனால் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை என்றும், ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பவர் என்றும் கண்டிப்பது நல்லதல்ல என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புதன்கிழமை ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிமோபோபியா!.. ரிஷ்வின் இஸ்மத்

Rishvin Ismath  :  சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிமோபோபியா!
ஹபாயா, ஹிஜாப் ஆகியவை பெண்கள் மீது இஸ்லாம் மதம் திணித்த பெண் அடிமைத்தனத்தின் சின்னங்களாக இருந்தாலும் கூட அவை இலங்கையில் தடை செயப்பட்ட ஆடைகள் அல்ல.
அத்துடன் ஹபாயா, ஹிஜாப் ஆகியவற்றை அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்கள் அணியக் கூடாது என்று சொல்கின்ற விதமாக கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்கள், சுற்றுநிரூபங்கள் எதுவும் கிடையாது.
இந்த நிலையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கல்லூரிச் சமூகத்தினர் ஹபாயா, ஹிஜாப் அணியும் முஸ்லிம் ஆசிரியைகள் தமது பாடசாலையில் கற்பிக்கக் கூடாது என்று வன்மத்துடன் செயலாற்றுவது அவர்களிடமுள்ள முஸ்லிமோபோபியாவின் வெளிப்பாடே என்பதில் சந்தேகமில்லை.
ஹபாயா என்கின்ற ஆடையும், ஹிஜாப் என்கின்ற துணியும் பெண்கள் மீது இஸ்லாம் மதம் திணித்த பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுகள் என்பதில் சந்தேமில்லை,
 என்றாலும் அவற்றினாலே அடுத்த மனிதர்களுக்கு எவ்வித இடையூறுகளுமே இல்லை,

நானும் ஒரு தமிழன்''-ராகுல் காந்தி பேட்டி!

நக்கீரன் செய்திப்பிரிவு  : இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியது.
கரோனா பரவல் காரணமாக, மக்களவை இந்த கூட்டத்தொடர் முழுவதும் மாலையிலேயே கூடுகிறது. இன்று மக்களவையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, தமிழக மக்களைப் பாரதிய ஜனதா வாழ்நாளில் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை மத்திய அரசால் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது.