சனி, 5 பிப்ரவரி, 2022

ஆளுநர் அல்லது NEET என்பதை மாநில உரிமை என்பதோடு சம்மந்தப் படுத்தி பாருங்கள்.!

May be an image of one or more people, beard and eyeglasses

Kandasamy Mariyappan  :  தனியார் மருத்துவ கல்லூரிகள் என்றாலே..,
அரசியல்வாதிகள் கொள்ளையடித்து கட்டிய கல்லூரிகள் அல்லது
அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட கல்லூரிகள் என்று நமது மனதில் ஆழமாக திணித்து விட்டனர்.!
ஒரு சீட்டுக்கு பல கோடிகளை வசூலிக்கின்றனர் என்று உளறிக் கொண்டே இருக்கிறோம்.!
ஒரு மருத்துவ கல்லூரி நடத்துவது என்பது பெட்டிக் கடை நடத்துவது இல்லை.!
உதாரணமாக, சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் ஏறத்தாழ 5000 நபர்கள் பணி புரிகின்றனர்.
ஏறத்தாழ 20 கோடி ரூபாய் மாத சம்பளமாக வழங்குகின்றனர்.!
இது போக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை, Maintenance, Lab Facility, Cadavar Facility etc.!
இதெல்லாம் யார் தருவது.!


ஒரு மளிகை கடை வைத்திருப்பவர் இலவசமாக பொருட்களை தருகிறாரா.!?
ஹோட்டல் வைத்திருப்பவர் இலவசமாக உணவு வழங்குகிறாரா.!?
Auditor, fees வாங்காமல் Auditing செய்கிறாரா.!?
Car, Bike Show room முதலாளிகள் லாபம் இல்லாமல் விற்பனை செய்கிறார்களா.!?
Ti Cycle, TVS  எல்லாம் இலவசமாக வாகனங்களை வழங்குகின்றனரா.!?
தனியார் மருத்துவ கல்லூரியோ, TVS கம்பெனியோ...
ஊழியர்களான பொதுமக்கள் சம்பளம் வாங்காமல் பணி புரிகின்றனரா.!?
மருத்துவ கல்லூரிகள் ஒருபுறம் பணம் வசூலிக்கின்றனர் என்றால்., மறுபுறம்...
1. நமக்கு தேவையான மருத்துவர்களை உருவாக்குகின்றனர்.!
2. ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றனர்.!
அந்த மக்கள் வாங்கும் பணத்தை செலவு செய்வதன் மூலமாக Economy வளர்கிறது.!
பணம் கட்ட முடிந்தவர்களை மட்டுமேதான் தனியார் கல்லாரிகள் அழைக்கின்றனர்.
பணம் கட்ட முடியாதவர்களுக்கு 38 அரசு கல்லூரிகள் உள்ளது. படித்து அங்கே சேர்ந்து கொள்ளலாமே.!
NEET என்ற போர்வையில் மீண்டும் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பு என்ற நிலையை உருவாக்கியது யார்., மத்திய அரசுதானே.!
இதனை உணராத பல அம்மாஞ்சிகள், அய்யோ அய்யோ என்று கூப்பாடு போடுவது இவர்களின் அறியாமையை காண்பிக்கிறது.!
இவர்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு பல வடக்கத்திய நாசகார சக்திகள் நமது பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் அழிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.!
இந்த அம்மாஞ்சி கும்பல் மொகலாயர்களோடு கூடி கும்மி அடிப்பவர்கள், ஐரோப்பியர்களோடு கொஞ்சி குலாபுவர்கள், அம்பானி அதானிகளின் அடியை நக்குபவர்கள்..,
நாளை சீனா வந்தால் அவர்களுக்கும் சீவி சிங்காரிப்பார்கள்.!
நமது வாழ்வாதாரம்தான் கேள்விக்குறியாக மாறி விடும்.!
எனவே,
ஆளுநர் அல்லது NEET என்பதை மாநில உரிமை என்பதோடு சம்மந்தப் படுத்தி பாருங்கள்.!
#recall_tngovernor

கருத்துகள் இல்லை: