ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

கிருஷ்ணகிரி 15 வயது மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சிறுவர்கள்

Velmurugan P  - tamil.oneindia.com/ : கிருஷ்ணகிரி: 15 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய பள்ளி சிறுவர்கள் 3 பேரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்னசந்திரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரது 15 வயது மகள், சென்னசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் படித்து 11ம் வகுப்பு படித்து வரும் பேட்டப்பனூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், அந்த சிறுமியை காதலித்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் இதை நம்பிய அந்த சிறுமி கடந்த மாதம் 5ம் தேதி, பேட்டப்பனூர் அருகில் உள்ள மார்கண்டேயன் நதி கரைக்கு, சிறுவன் அழைத்ததன் பேரில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அந்த சிறுவனின் நண்பனான, அதே ஊரை சேர்ந்த, வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் வந்துள்ளான். இவர்கள் இருவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் அதை வீடியோவும் எடுத்துள்ளனர்.

பா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு? சுந்தர் சி bJP முருகனை சந்தித்து பேசியதாக தெரிகிறது.. தினமலர்

 தினமலர்  ::காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும்,

நடிகையுமான குஷ்பு, அடுத்த சில நாட்களில், டில்லியில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைகிறார்.
கடந்த, 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை.காங்., தலைவர் பதவியை ராகுல் ஏற்க மறுத்ததும், சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர்கள், தலைவர் பதவியை ஏற்கலாம் என்ற கருத்துக்கு, குஷ்பு ஆதரவு அளித்தார்.  இதனால், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, இளைஞர் காங்., தலைவர் ஹசன் மவுலானா உள்ளிட்ட சிலர், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா.. மாவட்ட வாரியாக நிலவரம்

tamil.samayam.com :தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
tn corona cases
தமிழகத்தில் இன்று மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,80,808 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 94,200 பேருக்கு கோவிட் பரிசோதனைகள் நடந்துள்ளன. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,88,043 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 1280 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்றைய நாளில் 10656 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இதுவரை 1,63,423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக நிலவரம்

இலங்கையை 5 பிராந்தியங்களாக பிரிக்க .. தமிழ்த் தரப்பு முக்கியஸ்தரிடம் வரைபை கோரினார் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையை 5 பிராந்தியங்களாக பிரிக்கும் முன்மொழிவு ; தமிழ்த் தரப்பு முக்கியஸ்தரிடம் வரைபை கோரினார் மஹிந்த veerakesari :இலங்கையை ஐந்து பிராந்தியங்களாக வகுக்கும் முன்மொழிவு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கரிசணை செலுத்தியுள்ளார். அதனடிப்படையில் இலங்கையை ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கும் முன்மொழி தொடர்பிலான வரைபினை தன்னிடத்தில் கையளிக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார். புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் மெல்ல மெல்ல பல்வேறு தரப்பினரினதும் கருத்துக்களை பெற்றுவரும் செயற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் அரசியல் விடயங்களை அதிகளவில் கையாளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அனைத்துத் தரப்பினையும் அரவணைத்து வெற்றி காணவேண்டும் என்றும் முனைப்புக் காட்டுகின்றார்.

குறிப்பாக தமிழ்த் தரப்பின் பங்களிப்பினைப் பெறுவதில் பல்வேறு நகர்வுகளையும் அவர் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

ஆளுநர்? ஹெச்.ராஜாவின் நம்பிக்கை!.. கேரளாவுக்கு?

minnambalam :பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று (செப்டம்பர் 26) அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து யாரும் இடம்பெறவில்லை.பாஜகவுக்கு தேசிய அளவில் 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள், இணையதள இளைஞர் பிரிவு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து தேசிய செயலாளராக ஹெச்.ராஜா, இளைஞரணி தேசிய துணைத் தலைவராக ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்டோர் பதவி வகித்து வந்தார்கள். நேற்றைய பட்டியலில் இவர்களின் பெயர் உட்பட தமிழகத்தில் இருந்து வேறு யார் பெயரும் இடம்பெறவில்லை.

தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்பது அரசியல் ரீதியான விமர்சனமாக எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிர்வாகிகள் பட்டியலால், கட்சி அளவிலும் தமிழகத்தை டெல்லி தலைமை புறக்கணிக்கிறதோ என்ற மனப்பான்மை பாஜகவினர் இடையிலேயே ஏற்பட்டிருக்கிறது.

வேளாண் சட்டங்கள்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

minnambalam : நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய வேளாண் சந்தைகள் உள்ளிட்ட மூன்று சட்டங்களுக்கும் இன்று (செப்டம்பர் 27) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் தொடர்பான சட்டம், விலை நிர்ணயம் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கவுல் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அக்கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது.  இதற்கிடையே நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த வேளாண்துறை மசோதாக்கள் தொடா்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறையிட்டன. அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தன.

பஞ்சாப்பில் விவசாயிகள் 3-வது நாளாக ரெயில் மறியல் போராட்டம்

 maalaimalar : பாராளுமன்றத்தில் 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் தங்களது போராட்டங்களைத் 3-வது நாளாக தீவிரப்படுத்தியுள்ளனர். பஞ்சாப்பில் விவசாயிகள் 3-வது நாளாக ரெயில் மறியல் போராட்டம் சண்டிகர்: பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் தங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!

nakkeeran :முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82 வயது) காலமானார்.உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஜஸ்வந்த் சிங் காலமானார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நிதித்துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஜஸ்வந்த் சிங். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை கண்டறியும் நாய்கள் - பின்லாந்தில் உள்ள விமான நிலையம்

BBC : ொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் நாய்களும் மனிதர்களுடன் இணைந்துள்ளன. பின்லாந்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில், பயணிகளின் துணிகளை நுகர்ந்தே அவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட 15 நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எஸ்.பி.பியைக் காப்பாற்ற முடியாதது ஏன்?

 எஸ்.பி.பியைக் காப்பாற்ற முடியாதது ஏன்?

minnambalam :எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு 52 நாட்கள் சிகிச்சை அளித்த பின்னரும் அவரை காப்பாற்ற முடியாதது ஏன் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.   பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 52 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் உடல் காவல்துறையினரின் 72 குண்டுகள் முழங்க தாமரைப்பாக்கத்தில் நேற்று (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்பட்டது.     எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது ஏன் என்று அவருக்கு சிகிச்சை அளித்த எம்.ஜி.எம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன், தீவிர சிகிச்சைத் துறை மருத்துவத் தலைவர் டாக்டர் சபாநாயகம் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை - போலீசார் விசாரணை

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை - போலீசார் விசாரணை thinathanthi : திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை - போலீசார் விசாரணை திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பதிவு: செப்டம்பர் 27, 2020 07:35 AM திருச்சி, திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பட்டது. சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் சொத்து மதிப்பு 8,401,743,000 இந்திய ரூபாய் 114 மில்லியன் டாலர்கள் .. எஸ்பிபியின் சொத்து மதிப்பு

.todayjaffna.com :இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய மறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.     நேற்று மாரடைப்பினால் காலமான இவரது மறைவினை ரசிகர்கள், பிரபலங்கள் என ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இவர் இந்திய மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததோடு, பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.      ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ள எஸ்பிபி கணக்கில் அடங்காத பல்வேறு மாநில விருதுகளை வென்றிருக்கிறார்.    இந்நிலையில் எஸ்பிபி இறக்கும் போது அவரது நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $114 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. எஸ்பிபியின் கடந்த கால படைப்புகளிலிருந்து பெறப்பட்ட ராயல்டி மற்றும் இசையில் அவரின் பல்வேறு பங்களிப்புகளையும் சேர்த்தே இந்த மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  மில்லியன் அமெரிக்க டாலர்கள் spb assets 114 millions


பெரியாரிஸ்ட் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்! பெரியாரிஸ்ட் என்று யார் உள்ளனர் ?

Kandasamy Mariyappan : · பெரியாரிஸ்ட் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து இந்துத்துவா சக்திகளிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். RSS, VHP, இந்து முன்னணி போன்ற இந்துத்துவா இயக்கங்கள் ஒருபொழுதும் பாஜகவையோ, அதன் தலைவர்களையோ, அதன் செயல்பாடுகளையோ குறை கூறுவதில்லை. இயற்கை வளங்களை பெரும் முதலாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுப்பதில் பாஜகதான் முதலிடத்தில் உள்ளது. ஊழலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. தீவிரவாதிகளையே MLA, MP யாக தேர்ந்தெடுத்துள்ளது. ரவுடிஸம் செய்வதில் முன்னணியில் இருக்கிறது.
ஆனாலும், இந்துத்துவா இயக்கங்கள் பாஜகவை குறை கூறுவதில்லை. காரணம், இந்துத்துவா கும்பல்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் ஆதரவு பாஜக. அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுபவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியும்.
அதேபோன்று, தமிழ்நாட்டில் திராவிட சித்தாந்தத்தை, தமிழ் தேசிய சித்தாந்தத்தை விரிவுபடுத்த அரசியல் ரீதியாக இருக்கும் ஒரே அமைப்பு திமுக மட்டுமே.
அதிமுக, ஒரு RSSன் எடுபிடி அமைப்பு அவ்வளவே.
ஆனால், பெரியாரிய, தமிழ் தேசிய இயக்கங்கள் திமுகவை பலமிழக்கச் செய்யும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்து வருவது, இந்துத்துவா கும்பல்களுக்குத்தான் சாதகமாக அமையும்.

பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம்!

webdunia : இன்று பாஜக கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியிட்டுள்ளது. பாஜக கட்சியின் தேசிய நிர்வாகிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளது அதில், தமிழகத்தைச் சேர்ந்த யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. இதில் முக்கியமாக பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கப்பட்டுள்ளார். 

மேலும், பாஜக இளைஞர் அணி தலைவராக கர்நாடகாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு இளைஞரணி தலைவராக இருந்த பூணம் மகாஜன் நீக்கப்பட்டுள்ளார்.

சாரு நிவேதிதா : ஒரு பாடகரின் மறைவை உங்கள் சொந்த துக்கமாக மாற்றுவது.. ?

 charunivedita.online  : 140. கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்…"2020-0 9-26       இதை எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் படிக்க வேண்டாம்.  மனம் பதற்றமடையும்.  என் மீது கோபம் வரும்.  அது உங்களுக்கும் அனாவசியம்.  எனக்கும் தேவையற்ற பிரச்சினை.  இதை எழுதுவது எழுத்தாளர்களுக்கு மட்டுமே.  மனசு கேட்காமல்தான் எழுதுகிறேன்.  அதுவும் இன்னும் நாலே மணி நேரத்தில் கோபி கிருஷ்ணன் பற்றிய உரை இருக்கிறது.  மூன்று மணி நேரம் பேச வேண்டும்.  அப்படிப்பட்ட நிலையில் இதை எழுதுகிறேன். 

நீங்களெல்லாம் (எழுத்தாளர்கள்) ஏன் பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரியும் புஷ்பா தங்கதுரை மாதிரியும் அல்லது நம்முடைய காவிய நாயகி ரமணி சந்திரன் அம்மாள் மாதிரியும் எழுதுவதில்லை.  கவிஞர்களாகிய நீங்கள் ஏன் கவிஞர் விவேகா மாதிரி எழுதாமல் தர்மு சிவராமு மாதிரியும் பாரதி மாதிரியும் பாப்லோ நெரூதா மாதிரியும் ரில்கே மாதிரியும் எழுதுகிறீர்கள்?  இது ஒன்றுதான் என் சந்தேகம்.  இதற்கு பதில் தெரியாமல் மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறது.  ஏதோ ஒரு கலை உன்னதத்தை நோக்கித்தானே உங்கள் பயணம்?  அதனால்தானே ராஜேஷ்குமாரும் வேண்டாம் விவேகாவும் வேண்டாம் என்று இந்தப் பாதையில் துணிந்தீர்கள்?  அதுவும் எப்படிப்பட்ட பாதை?  வழியில் ஒவ்வொரு முக்கிலும் ரத்தக் காட்டேரி நின்று கொண்டிருக்கும் பாதை.  முதல் பலி பாரதி.  அடுத்தது புதுமைப்பித்தன்.  அடுத்தது ஜி. நாகராஜன்.  அடுத்தது ஆத்மாநாம்.  அடுத்தது தர்மு சிவராமு.  அடுத்தது கோபி கிருஷ்ணன்.  ஒன்றா ரெண்டா, சொல்லிக் கொண்டே போகலாம்.  எழுத ஆரம்பித்தாலே பிச்சைப் பாத்திரத்தைக் கையில் கொடுக்கும் பாதை இது.  இருந்தும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கிறீர்கள்.  உங்களுக்கு என் வாழ்த்துக்கள். 

தமிழ்நாடு தேர்தலில் பெரியாரை பா.ஜ.க புகழ ஆரம்பம்?

Asiriyar K Veeramani : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கொள்ளப் பெரியாரை எதிர்க்காமல் புகழ்வது எனும் யுக்தியைப் பயன்படுத்தும் பா.ஜ.க. படம் பிடித்துள்ளது 'டைம்ஸ் ஆஃப் இண்டியா'

தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் ஏமாளிகள் அல்லர்; ஆரியத்தின் சூழ்ச்சியை முறியடிப்பார்கள் - பாடம் புகட்டுவார்கள்!
நேற்றைய (25.9.2020) ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்' தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்ள வேண்டு மானால், இதுநாள் வரை கடைப்பிடித்த தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தி, அவரது சிலைகளை இழிவுபடுத்தியும், அவரை ஈ.வெ.ரா. என்றும் பேசிவருவதன் மூலமும் தமிழ்நாட்டு இளைஞர்களின் பேரெதிர்ப்புக்கு ஆளாகி, உள்ளதையும் இழக்கும் நிலைதான் ஏற்படும் என்ற அச்சம் பா.ஜ.க.வினரை இப்போது உலுக்க ஆரம்பித்துவிட்டது.
அரசியல் பொம்மலாட்டத்தை பா.ஜ.க. நடத்திக் கொண்டிருக்கிறது
தமிழ்நாட்டை வளைக்க, விபீடணக் கட்சிகளைப் பிடித்து, இராமாயணத்தில், விபீடணன், சுக்ரீவன், அனுமார் ஆகிய பாத்திரங்களின் பங்களிப்பு எப்படியோ, அப்படி செய்து, அதிலும் ஒடுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., பி.சி., முதலிய வகுப்பி லிருந்து சில நபர்களைப் பிடித்து அவர் களுக்கு ‘‘வேஷங் கட்டி'' முன்னிறுத்தி, அரசியல் பொம்மலாட்டத்தை பா.ஜ.க. நடத்திக்கொண்டிருக்கிறது.
அதன் ஒருவகை உத்தி (Strategy) யாக சிலர் பெரியாரைப் புகழ ஆரம்பித்து ஒரு புது வசனங்களைப் பேசுகின்றனர்.

சனி, 26 செப்டம்பர், 2020

18 வயதுக்கு குறைவானவர்கள் இதை படிக்காதீர்கள்.. லிங்கம் பற்றிய உண்மை..!

Dinesh DK : · லிங்கம் உருவான கதை! குறிப்பு:18 வயதுக்கு குறைவானவர்கள் இதை படிக்காதீர்கள்!! (18+)கோயில்களில் மஞ்சள் குங்குமத்தோடு பூஜை புனஸ்காரமும்   செய்யும் அய்யர்வாள் அம்பிகள்., ஹிந்துக்கள் வழிபடும்..லிங்கம் பற்றிய உண்மை..! 

"சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தார், அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டார் சிவன் ..!! எப்படியாவது ரிஷியின் மனைவியை அடைந்தே ஆகவேண்டும் என்று தவித்த சிவன், திட்டமிட்டு நல்லிரைவில் ரிஷியின் வீட்டருகே வந்து கூவினார் சேவலை போல்... விடிந்துவிட்டது என்று விழித்த ரிஷி கங்கை நதியில் குளிக்க சென்றுவிடுகிறான் ..    ரிஷி வெளியே சென்ற நேரத்தில் சிவன் ரிஷியை போலே உருவம் மாறி ரிஷியின் மனைவியோடு படுத்து உடலுரவு கொள்கிறார் ..., கற்பழித்து முடிந்தப்பின் சிவன் ஓடிவிடுகிறார் ...!! வீடு திரும்பிய ரிஷி, தன் மனைவியின் உடலுரவுக்கொண்ட கோலத்தை பார்த்த கோபம்கொண்டு..!! "நான் இல்லாத நேரத்தில் என்னை போல நடித்து என் மனைவியோடு உடலுரவு கொண்டவனின் "லிங்கம்" அருபடட்டும்" என்று சாபம் விடுகிறான்.. உடனே சிவனின் "லிங்கம்" அறுபடுகிறது ..விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே சிவனின் மனைவி பார்வதியிடம் சொல்லி அழுகிறார்கள் ..

என் நண்பர் ராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி' - தமிழில் பிரதமர் மோடி ட்விட்!

 Delighted to address my friend Rajapaksa - Modi tweet in Tamil!

 nakkeeran :இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுடன் இந்தியப் பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார் . இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக, இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் முறையாகும்.     இந்நிலையில், 'என் நண்பர் ராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அபிவிருத்தி, பொருளாதார உறவு, கல்வி, கலாச்சாரம் குறித்த விஷயங்கள் குறித்து பேசினோம். பல்லாயிரம் ஆண்டுகளாக புத்தபெருமான் போதனைகள் எமது மக்களுக்கு வழிகாட்டுகின்றன. பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக எமது உறவு மேலும் வலுப்படும்'' என தமிழில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாடகர் SPB யின் மறைவு காலம் தாழ்த்தி அறிவிக்கப் பட்டுள்ளது? விவசாயிகளின் போராட்டத்தை மக்கள் கண்களில் இருந்து மறைக்கவே?

Maha Laxmi : ·சிங்கப்பூர் செய்தித்தாளில் முதல் பக்கத்தில் இந்திய விவசாயிகளின் போராட்ட செய்தி.. ஆனால் தமிழக / இந்திய செய்தித்தாளில் எங்கே? ஏன் மறைக்கப்படுகிறது?

ஊடகங்களில் பெரிதாக மீண்டும் மீண்டும் ஒரு விடயம் பேசப்படுகிறது என்றால் மிகவும் சந்தேகப்பட வேண்டிய காலகட்டம் இது . பாஜகவின் வரலாறு இந்த பாடத்தை தந்துள்ளது . எஸ்பி பாலாவுக்காக ஓவராக ஊடகங்கள் கண்ணீர் சிந்துவதை  அந்த கோணத்தில்தான் பார்க்கவேண்டும்  எத்தனையோ மோசமான பிரச்சனைகளை மறக்கடிக்க இன்று எஸ்பி பாலாவுக்காக மக்களின் கண்ணீரை ஆறாக பெருக்கெடுத்தது ஓடவைப்பதில் வழக்கம் போல ஊடகங்க பெரு வெற்றி பெற்றுவிட்டன.     இவர்கள் வெற்றி பெறும்போதெல்லாம் மக்கள் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறார்கள் .  பணமதிப்பு இழப்பாகட்டும் வேறு எந்த திடடத்தை பாஜக கொண்டுவந்தாலும் அதை முழு மனதோடு எஸ்பி பாலா ஆதரித்தவர் என்பதையும் நினைவு கூறுதல் நல்லது..  உடன் பிறப்பே வாழ்க வளர்க்க வெல்க 

Sundar P : விவசாயிகளின்  போராட்டத்தை மக்கள் கண்களில் இருந்து மறைக்கவே SPB யின் மறைவு காலம் தாழ்த்தி அறிவிக்கப் பட்டுள்ளது... 

வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பாதுகாக்காது! - நிரூபித்த அரசு...


vikatan : கு. ராமகிருஷ்ணன் :
வேளாண் சட்ட நகல் எரிப்பு
வேளாண் சட்ட நகல் எரிப்பு
`ஒப்பந்தச் சாகுபடி முறையில் கரும்புக்கே இந்த நிலையென்றால், நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களையும் ஒப்பந்தச் சாகுபடி முறையில் கொண்டுவந்தால், விவசாயிகளின் நிலை என்னவாகும்... நினைத்து பார்ப்பதற்கே மனம் பதறுகிறது.'

`மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மைகள் அதிகம்’ எனத் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும், அந்தத்துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடியும் தெரிவித்திருக்கிறாகள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக ஒப்பந்தச் சாகுபடி முறை கொண்டு வரப்பட்டதாகவும், அதேபோல்தான் மத்திய அரசு விவசாயிகளுக்கு உத்தரவாதமான விலை கிடைப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள். இது குறித்து கருத்து தெரிவிக்கும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், `கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பணத்தை தமிழக அரசால் பெற்றுத் தர முடியவில்லை. அப்படியென்றால், தற்போது மத்திய அரசு கொண்டுவரும் சட்டமும் தோல்வியில்தான் முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

maalaimalar :சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பென்னிக்ஸ்-ஜெயராஜ்

மதுரை:தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். 

அனைத்திலும் ஊடுருவிய RSS ! வித்யா பாரதி. சரஸ்வதி வித்யாமந்திர் உட்பட 13000 கல்வி நிறுவனங்கள். 75000 ஆசிரியர்கள், 17 லட்சம் மாணவர்கள்..

V
ijayasankar Ramachandran :
அனைத்திலும் ஊடுருவி நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (ஏ.ஜி. நூரானியின் புத்தகத்திலிருந்து) "சங்க பரிவாரம் என்கிற ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் அங்கங்கள் குறித்து மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் பத்திரிக்கையாளர் பாரத் பூஷன் நம் பாராட்டுக்குரியவர். அவருடைய பதிவு: “ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான் நாட்டின் சமூக, அரசியல் வாழ்க்கையின் ஓவ்வொரு நடவடிக்கைக்குள்ளும் சென்று தொடர்ந்து நுண் அரசியல் செய்யும் ஒரே அமைப்பு. அரசு சாராத கல்வித் துறையில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய அமைப்புதான் வித்யா பாரதி. சரஸ்வதி வித்யா மந்திர் உட்பட 13000 கல்வி நிறுவனங்களை நடத்தும் அதன் கீழ் 75000 ஆசிரியர்களும், 17 லட்சம் மாணவர்களும் இருக்கின்றனர்.

மத்திய அரசு சட்ட மீறல் ! சிஏஜி அறிக்கை ! மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்திய மோடி அரசு!

  Sivakumar Nagarajan : காலையில் ஸ்க்ரோல் தளத்தில் இந்த செய்தியை பார்த்தேன்...இந்த அதிர்ச்சியான செய்தியை வேறு மைன்ஸ்ட்ரீம் ஊடகங்கள் வெளியிட்டனவா...?
அதாவது , ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான செஸ் தொகை ரூ.47,242 கோடியை 2017-18 and 2018-19-ல் இந்திய தொகுப்பு நிதியில் (CFI-consolidated fund of India) வைத்து பிற நோக்கங்களுக்காக அந்தத் தொகையைப் பயன்படுத்தியதாகவும் இதன் மூலம் மத்திய அரசே சட்டத்தை மீறியுள்ளதகாவும் இந்திய தலைமைத் தணிக்கைக் கணக்காளரான சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ‘வருவாய் வரவுகளை அதிகப்படுத்தியும் நிதிப்பற்றாக்குறையை குறைத்தும் காட்ட முடிந்துள்ளது’ என்று சிஏஜி அறிக்கை பகீர் தக்வலை வெளியிட்டுள்ளது.
So,மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி மத்திய அரசு சட்ட மீறல் என்று வெளிப்படையாக அறிக்கை வந்து உள்ளதே என்று நிதி அமைச்சரிடம் கேட்டால்..?
அதற்கு நிர்மலா மேடம் பதில் என்ன சொன்னார்கள் தெரியுமா..? "மாநிலங்களுக்கான வருவாய் இழப்பை ஜிஎஸ்டி நிதியிலிருந்து கொடுக்குமாறு சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் இல்லை" என்று பதில் அளித்து இந்திய ஒன்றியத்திற்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறார்கள் ...Vivekanadan T

யாழ்நகரை கிழக்கு போராளிகள் கைப்பற்ற விடாமல் சூழ்ச்சி செய்தது பொட்டம்மான் - முன்னாள் கிழக்கு போராளி...

Reginold Rgi : ஈழ தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் இறுதி இலக்காக கருதப்பட்ட யாழ் நகர் நோக்கிய கிழக்கு படையணிகளின் படையெடுப்பு வெற்றியளித்திருந்தால் நிச்சயம் நாம் இன்று சுதந்திர தமிழீழ தனியரசை அடைந்திருக்க முடியும்.
ஆனால் அவ் இலக்கை அடையவிடாது தடுத்தவன் வேறு யாருமில்லை பொட்டம்மான் எனும் சுயநலவாதி
எதிரியின் பாரிய படைத்தள மையமாக கருதப்பட்ட யாழ் குடாநாட்டை தலைவர் அவர்கள் 2000மாம் ஆண்டு தான் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் கைப்பற்றியிருந்தால் நிச்சயமாக நாம் தமிழீழம் எனும் தனியரசை அன்றே உருவாக்கியிருக்க முடியும்.
ஆனால் அதை தனது ஏகாதிபத்திய வெறியினாலும், தான் என்ற சுயநலமான பதவி ஆசையினாலும், தன்னைவிட வேறு எந்த தளபதிகளும் முன்னுக்கு வரக்கூடாதென்ற பொட்டம்மானின் நயவஞ்சக குணத்தினாலுமே அன்று கிழக்கு படையணிகளால் யாழ் குடாநாட்டை கைப்பற்றமுடியாமல் போனதற்கான முதன்மை காரணம்.
இல்லையென்றால் அன்றே தளபதி கருணாவின் தலைமையில் யாழ் நகரம் கைப்பற்றபட்டிருக்கும்
ஏனென்றால், ஓயாத அலைகள் மூன்றின் இராணுவ நடவடிக்கை ஊடாக நாம் எதிரியின் மிகப்பெரும் தளமாகக் கருதப்பட்ட ஆனையிறவு படைத்தளத்தை கிழக்கு படையணிகளால் வெறும் 24 மணித்தியாலத்துக்குள் கைப்பற்றிய பின்னர், ஆனையிறவு படைத்தளத்தைவிட பெரிதான படைத்தளம் எதுவும் யாழ் குடாநாட்டில் இருந்திருக்கவில்லை.

விவசாயிகள் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களில் போக்குவரத்தை முடக்கி போராட்டம் ..

BBC : இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய விவசாயம் தொடர்புடைய மூன்று மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இன்று முதல் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் முதல் நாளான வெள்ளிக்கிழமை, விவசாயிகளும் அவர்கள் தொடர்புடைய அமைப்பினரும் பெருமளவில் கலந்து கொண்டு ரயில் மறியலில் ஈடுபட்டார்கள். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு சாதகமானது என்று இந்திய அரசு விளக்கம் அளித்தபோதும், அதன் பல அம்சங்கள், விவசாயிகளின் நேரடி வருவாயை பாதிக்கும் என்று விவசாயிகளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் தெரிவித்துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் அடிப்படையில் விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளதுடன் அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசும் மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அங்குள்ள எதிர்கட்சியான ஷிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் சமீபத்தில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.