Officer Supervising Demolition In Himachal Shot Dead By Hotel OwnerSpecial Correspondent FB Wing : பாஜக ஆளும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றச் சொன்ன பெண் அதிகாரி சுட்டுக்கொலை
இமாச்சலப்பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் உள்ள கசவுலி என்ற மலைப்பாங்கான பகுதியில் பலர் விதிமுறைகளை மீறி உணவு விடுதிகள் கட்டியுள்ளனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகள் உடனே அகற்ற வேண்டும் என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது< உச்ச நீதிமன்ற உத்தரவு நகலுடன் விதிமுறைகளுக்கு புறம்பாக உணவு விடுதிகளை கட்டியுள்ளவர்களை எச்சரிப்பதற்காக நகர திட்டமிடல் துறை பெண் அதிகாரி ஷாலி பால சர்மா என்பவர் சக அதிகாரிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை அப்பகுதிக்கு சென்று உணவு விடுதி கட்டியுள்ளவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்.
அப்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர், ஒரு வாரத்திற்குள் விதிமுறையை மீறி கட்டியுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
































