விகடன் :நடிகர் ரஜினிகாந்த் மாநிலம் முழுவதும் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக ஏற்கனவே லைகா நிறுவன முன்னாள் ஊழியரான ராஜு மகாலிங்கத்தை அனுப்பி வைத்த நிலையில் தற்போது மன்றத்தில் முக்கியப் பதவியை அவருக்கு ரஜினி அளித்துள்ளார். முன்னதாக இன்று ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். அப்போது இது வழக்கமான சந்திப்புதான் எனத் தமிழருவி மணியன் தெரிவித்தார்தினத்தந்தி :கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் சூறாவளி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், திருச்சியில் மாநாடு நடத்தவும் ஆலோசனை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.


























