வெள்ளி, 8 செப்டம்பர், 2017

கிருஷ்ணசாமி அவதூறு பரப்புகிறார்: அனிதாவின் சகோதரர்!

மின்னம்பலம் :  எங்களின் குடும்பத்தில் நடந்தது தெரியாமல், எங்களுக்கு உதவி
செய்தவர்கள்மீது புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அவதூறு பரப்புவதாக அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் தெரிவித்துள்ளார்.
மாநிலப் பாடத்திட்டத்தின்படி தான் மருத்துவம் படிக்க அனைத்து தகுதிகள் இருந்தும், நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவப் படிப்பு கனவு கலைந்துபோனதால், வேதனையடைந்த மாணவி அனிதா கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், தமிழ் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்க, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மட்டும், மாணவியின் மரணத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளார். மேலும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் மீதும், பிரின்ஸ் கஜேந்திரபாபுவையும் அவதூறாக பேசி வருகிறார்.

வளர்மதி ஆவேசம்: போராட்டம் தொடரும்.. குண்டர் சட்டத்தில் விடுதலையான ... BBC

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 23 வயதான சேலம் வீராணத்தை சேர்ந்த மாணவி வளர்மதி பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் விடுவிக்கப்பட்டார் கதிராமங்கலம் நெடுவாசல், ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்கும் விதமாக சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகில் அத்திட்டங்களைக் கைவிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

ஜனவரி 20 நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தை எட்டிக்கூட பார்க்காத ..

 ஆனந்த்குமார் சித்தன் : இன்றைக்கு பூதாகரமாக வெடித்து இருக்கும் நீட் விளைவுகளை.. ஊரே ஜல்லிக்கட்டு கும்மி அடித்துக்கொண்டு இருக்கும் போது நீட் பிரச்சினை மையமாக வைத்து போராட்டம் அறிவித்தது திமுகவின் ஸ்டாலின் மட்டுமே.. அன்றைய தேதியில் தேடி பார்த்தால்.. இணைய எச்சைகள், பூண்டு முருகேசன் போன்றே புழுத்த புன்னகைகள், நக்கல் செய்வதை தவிர நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அறிவிலி கூடிகள் , நடுப்பக்க நக்கிமகன்கள் இவர்கள் அனைவரின் எழுத்தும் ஜல்லிக்கட்டை திசை திருப்ப ஸ்டாலின் முயற்சி செய்வது போலவும், காமெடி செய்வதாகவும் புழு உண்ணும் நாய்கள், மலம் புரண்ட பன்றிகள் போல இந்த ஜனவரி நீட் போராட்ட அறிவிப்பை கேலி கிண்டல் செய்து கொண்டு இருந்தன.. ஆனால் இதே எச்சைகள் , கபோதிகள், அவர்களின் ஹே விளம்பி ப்லோ ஜாப்கள் எல்லாம் திடீர் காந்தியாக மாறி ,
ஏன் ஸ்டாலின் உப்பு சத்தியாகிரகம் செய்யவில்லை, ஏன் தண்டி மார்ச் செய்யவில்லை என்று எல்லாம் கரைத்து குடித்த பேதியார் போல பாடம் நடத்துவதை பார்த்தால்.. நரகல் கூட்டம் எல்லாம் நடனமாடி வாயில் வழிவது போல இருக்கிறது..மூக நீதி விஷயங்களில் நீங்கள் திமுகவை விட பல வருடம்.பின்னோக்கி இருக்கிறீர்கள் என்பதை சொல்லி
மூடுங்கடா .. என்பதை தவிர ஏதும் இல்லை.

Sabarimala: நிதானமாகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்' நீட் எதிர்ப்புக்காக வேலையை உதறிய ஆசிரியை சபரிமாலா

அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதா
ஆசிரியை சபரிமாலா - அனிதா12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்களைப் பெற்று எப்படியும் மருத்துவராகவிடுவோம் எனும் எண்ணத்தில் இருந்தார். இந்த ஆண்டு நிச்சயம் நீட் தேர்வு வராது என ஆட்சியாளர்கள் நம்பிக்கை அளித்திருந்தனர். ஆனால், திடீரென்று நுழைக்கப்பட்ட நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்களை அனிதாவால் பெற இயலவில்லை. இதனால் மனமுடைந்த அவர், தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதித்தனர். அந்த வரிசையில் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா, அனிதாவின் மரணம் தந்த வலியில் இதற்குச் சரியான தீர்வு கிடைக்க வேண்டும் எனத் தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், வைரபுரம் எனும் ஊரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் சபரி மாலா. மாணவர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும்கொண்டவர்.

BBC :ரோஹிஞ்சா வீடுகள் எரிவதை நேரில் கண்ட செய்தியாளரின் அனுபவங்கள்

மியான்மரின் ரகைன் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட
வன்முறையைத் தொடர்ந்து, சுமார் 1,64,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குள் வந்து குவிந்துள்ளனர்.
ரோஹிஞ்சா தீவிரவாதிகள் போலீசாரின் நிலையைத் தாக்கியதைத் தொடர்ந்து, ராணுவமும் ரகைன் பெளத்தர்களும் தங்களை விரட்டியடிப்பதற்காக, தங்கள் கிராமங்களை அழித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அரசாங்கம் அதை நிராகரிக்கிறது. தீவிரவாதிகளும், அங்குள்ள முஸ்லிம்களும் தங்கள் கிராமத்துக்கு தாங்களே தீ வைப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், அங்குள்ள பிபிசியின் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஜொனாதன் ஹெட், முஸ்லிம் கிராமத்துக்கு ரகைன் பெளத்தர்கள் தீ வைத்ததை தான் நேரில் கண்டதாகக் கூறுகிறார். தான் நேரில் கண்டதை அவர் விவரிக்கிறார்:

சீமான் ஒரு RSS உளவாளி ! அதை மறைக்க பாஜகவை தாக்கிப்பேசி நாடகம் ..!



Damodaran : சீமான் பாஜகவை கடுமையாக எதிர்ப்பது ஏன் ?
சீமான் தன் வேஷம் கலைந்துவிடும் சாயம் வெளுத்துவிடும் என்ற பயத்தில் பாஜகவை தாக்குகிறான் ஆனால் ஆர் எஸ் எஸ் ஐ தொடுவதில்லை .கவனியுங்கள்.
சீமான் ஆர் எஸ் எஸ் இன் ஸ்லீப்பர் செல்.
சீமானுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே டாஸ்க் " பார்ப்பனீய ஆதிக்கத்திற்கு எதிரான திமுகவை தேர்தலில் தோற்கடிக்க திமுகவை அவதூறு பேசவேண்டும் " என்பதே ஆகும்
இப்போது தமிழகத்தில் பாஜகவிற்கு எதிராக கடும் சுனாமி வீசுகிறது ஆகவே பாஜக வை திட்டினாள் தான் சீமான் பேச்சு எடுபடும் என்பது யதார்த்தம் ...
அதேநேரம் ...
சமூகநீதிக்கு சுயமரியாதை மாநில சுயாட்சிக்கு சொந்தக்காரர்களாகிய திக..திமுகவை ஆதரித்தும் சீமானால் பேசமுடியாது. கூலி வாங்கிட்டானே...
ஆகவே இருதலைக்கொள்ளியாக சீமான் தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ள சிரமப்படுகிறார்.
அதை புரிந்துகொள்ளாமல் இங்கே சில இளைஞர்கள் பாழாகிக்கொண்டு இருக்கிறார்கள்.

வியாழன், 7 செப்டம்பர், 2017

நீட் .. வர்க்கம் பார்வை கூட இல்லையென்றால், சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியா?

விவேக் மாவோயிஸ்ட் : சி.பி.எம். கட்சியினர் தாம் கேரள மாநிலத்திலும், பிற
மாநிலங்களிலும் நீட் தேர்வை ஆதரிக்கும் தவறை மழுப்பவதற்காகத் தொடர்ந்து சில வாதங்களை முன் வைக்கின்றனர்.
தாங்கள் ஆளும் மாநிலங்களில் கல்வி 'தரம்' மேலாக உள்ளது என பெருமை பேசி வருகின்றனர். அந்த தரம் பற்றியும் கிழிக்கலாம்தான்.ஆனால், விசயம் திசை திரும்பி விடும் என்பதால், இவர்களின் 'தரத்தை' விட்டு விடுவோம்.
நீட் கல்வி தரம் பற்றியது என்பது ஆளும் வர்க்கத்தின் திசை திருப்பும் வாதமே.
நீட் ஏழை மக்களின், கிராமப்புற மக்களின் கல்வி உரிமையை பறிக்கிறது என்பது பாமரன் முதல்அறிவு ஜீவிகள் வரை அறிந்த உண்மை. இந்த வர்க்கம் பார்வை கூட இல்லையென்றால், சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியா?
மேலும் சாதியம், ஆணாதிக்கம் போன்ற ஏற்றத்தாழ்வுகள் பலமாக உள்ள ஒரு நாட்டில் இத்தகைய 'தகுதி' தேர்வுகள் அப்பட்டமாக சமூக நீதிக்கும், சமத்துவமும் சிந்தனைக்கும் எதிரானவை என்பது சிபிஎம்முக்கு தெரியாதா?
புதிய. கல்விக் கொள்கை என்ற மேட்டுக்குடி கல்விக் கொள்கை கொண்டுவந்த நவோதயா பள்ளிகளின் தொடர்ச்சிதானே நீட்டும்.
மேலும், ஒரு objective வகைத் தேர்வு கொண்டு அறிவை அளப்பது தான் மார்க்சியமா?

ஸ்டாலின் .: தமிழக அரசின் அடுத்த துரோகம் ..கல்வி உதவித்தொகைகளைக் குறைப்பு

tamilthehindu : பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி பயிலும் ஆதி திராவிட,
பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைகளை, முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், திடீரென்று பெருமளவுக் குறைத்து அடுத்த துரோகத்தை செய்துள்ளது 'குதிரை பேர' அரசு என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி பயிலும் ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைகளை, முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், திடீரென்று பெருமளவுக் குறைத்து அரசு ஆணை வெளியிட்டு, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமுதாய மக்களை வஞ்சித்திருக்கும் ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குஜராத்.. நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ படிப்பை சிதைத்து விட்டது


<p>Parents want separate merit lists for Gujarati- and English-medium exams.<br></p>Parents want separate merit lists for Gujarati- and English-medium exams.
AHMEDABAD: Parents of students who had appeared for the National Eligibility cum Entrance Test in Gujarati have decided to challenge the examination, which was held on May 7, in the Gujarat high court. They said that the government should standardize the marks or should have different merit lists for those who took NEET in English, and those who took the test in Gujarati.
Mathi Oneindia Tamil அகமதாபாத்: தமிழகத்தைப் போல ஆயிரக்கணக்கான குஜராத் 'அனிதா'க்களின் மருத்துவ படிப்பு கனவிலும் கொள்ளி வைத்திருக்கிறது நீட். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களால் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் அரியலூர் அனிதா தூக்கிடு மாண்டு போனார். அனிதாவின் மரணம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. கடந்த 6 நாட்களாக மாணவர்கள் வீதியெங்கும் வீரியத்துடன் போராடி வருகின்றனர். அதேநேரத்தில் நீட் ஆதரவாளர்களோ, மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறது; அவர்களும்தான் நீட் எழுதினார்கள் என சப்பை கட்டு கட்டுகிறார். உண்மையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான அனிதாக்களின் மருத்துவ படிப்பு கனவில் கொள்ளி வைத்திருக்கிறது இந்த நீட். குஜராத் நீட் தேர்வில் தமிழகத்தைப் போல இன்னொரு கொடுமை நிகழ்ந்துள்ளது. குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆங்கில வினாத்தாள் எளிதாகவும் குஜராத்தி மொழி வினாத்தாள் மிக கடினமானதாகவும் இருந்திருக்கிறது.

கோவை பேருந்து நிலையே கூரை விழுந்து ஐவர் மரணம் !

தினமணி :சோமனூர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு
முதலமைச்சர் பழனிசாமி தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகையாக அறிவித்தார். நிவாரண தொகையை ஏற்க சோமனூரில் இறந்தவர்களின் குடும்பம் மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இறந்தவர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வளாத்தில் இருந்த கடைகள் இடிந்து விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பத்துக்கும் மேற்ப்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

24 தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் ..12 கலைஞர் ஆரம்பித்தது ... இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்!

மார்ட்டின் சந்தர் கிங் : இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான
அரசாங்க மருத்துவ கல்லூரிகள்.. மொத்தம் 24 அரசு மருத்துவ கல்லூரிகள்... அவற்றில் 50% கல்லூரிகள் திமுக ஆட்சிகாலத்தில் கலைஞர் அவர்களால் துவக்கப்பட்டது....
கலைஞர் - 12
MGR - 2
ஜெயலலிதா - 2
காமராஜர் & 

பக்தவச்சலம் - 5
சுதந்திரத்திற்கு முன்பே, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது - 3

இப்போது புரிகிறதா, மருத்துவ சுகாதார வசதிகள்   அளவீடுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் திமுக தான் என்று...

நீட் – குழந்தைகளைக் கொல்லும் ஏற்பாடு மட்டுமல்ல.

villavan.wordpress.com  : நீட் மற்றும் அனிதா தற்கொலை குறித்தான
பெரும்பான்மை உரையாடல்கள் சில கேள்விகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது (சாதாரண மக்களிடையே). சமூக ஊடக விவாதங்கள் அதை நன்கறிந்தவர்கள் இடையே மட்டும் நடக்கிறது. அதனை மற்றவர்களுடனான ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய தேவை இப்போது கணிசமாக இருக்கிறது. இந்த பதிவு அதற்கான முயற்சியில் ஒரு சிறிய பாகம் மட்டுமே. எங்கள் உறவுக்கார மாணவர்கள் இருவர் எழுப்பிய சந்தேகங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
தகுதித் தேர்வு இல்லாவிட்டால் தகுதியான மருத்துவர்களை எப்படி உருவாக்க முடியும்?
டாக்டருக்கு மட்டுமல்ல, எல்லா பணிக்குமே தகுதியானவர்கள்தான் வரவேண்டும். ஆனால் ஒரு வேலைக்கான தகுதி என்பது வெறுமனே தகுதியான ஆளை தெரிவு செய்வது மட்டுமில்லை. முறையான பயிற்சி, அனுபவம் மற்றும் அதனை அளவிடும் தேர்வுகள் வாயிலாகவே தகுதியானவர்களை உருவாக்க முடியும்.

ஆசிரியை சபரிமாலா : ஜாக்டோ ஜியோ விழித்துக் கொள்ளுமா?

thetimestamil.com :நீட் நடைமுறை தேர்வை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா தனது அரசு பணியை துறந்துள்ளார். மறுபுறம் பொருளாதார கோரிக்கைக்காக ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்துகிறது. அமைப்பாக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு சங்கமான ஜேக்டோ ஜியோவில், பல ஆசிரியர்கள் சபரி மாலாவைப் போலவே அரசியல் உணர்வு பெற்று இருப்பர். சமூகநீதிக்க எதிரான, வசதி படைத்தவர்களுக்கான இந்த நீட் நடைமுறைக்கு எதிராக, அனிதாவின் மரணத்தால் உலுக்கப்பட்டவர்கள் நிச்சயமாகவே இந்த சங்கத்தில் இருக்கவே செய்வார்கள்.
ஆனால், ஜேக்டோ ஜியோ தொழில்சங்கத்தின் அரசியல் அற்ற தலையானது,பொருளாதார கோரிக்கைக்காக மட்டுமே சங்கம் உள்ளது என்ற மாயையை உளவியல் ரீதியாக கட்டுகிறது; அரசியல் நீக்கம் பெற்ற தொழில்சங்கவாதத்தால், தொழிற்சங்க உறுப்பினர்களின் அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. கூலி உயர்வுக்கான பேரம் பேசுகிற போரட்டமாக, நாள், தேதி, கிழமை, நேரம் அறிவிக்கப்பட்டு சடங்காக கூடி கலைந்துவிட்டுப் போகிற போராட்டமாக தொழிற்சங்க போராட்டங்கள், அரசியல் நீக்கம் செய்யப்பட்டு சீரழிந்து போயுள்ளன.

அரசு ஊழியர்கள் சங்கங்கள், ' ஒரு தரப்பினர் இன்று முதல் வேலை நிறுத்தம்!

அரசு ஊழியர்கள், Government employees, ஸ்டிரைக்,Strike, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palaniasamy, ஜாக்டோ  ,Jacotto, ஜியோ,Geo,  காலவரையற்ற வேலை நிறுத்தம்,indefinite strike, இளங்கோவன்,Ilangovan,  பாலசுப்பிரமணியம்,Balasubramaniam,  ஜாக்டோ-  ஜியோ,Jacotto-Geo,  முதல்வர்,Chief Minister,  பழனிசாமி,Palanisamy, தமிழகம் , Tamil Nadu,TN, Tamil,tamilnadu  Government employees Strike,தினமலர் : முதல்வர் பழனிசாமியின் பேச்சுக்கு பின், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, இரண்டாக உடைந்தது. ஒரு தரப்பினர், வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகினர்; மற்றொரு தரப்பினர், இன்று வேலை நிறுத்தத்தை துவங்குகின்றனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தது.இதையடுத்து, கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி நேற்று,
ஈரோட்டில் உள்ள, அரசு விருந்தினர் மாளிகையில், ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார். கால அவகாசம்

21 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடையாது அதிகாரபூர்வ அறிவிப்பு - பெரும்பான்மையை இழந்த எடப்பாடி அணியில் 114

Mathi : Oneindia Tamil சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை 21 எம்.எல்.ஏக்கள் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளனர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 114 ஆக குறைந்தது. தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியே கடிதம் கொடுத்தனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள். ஆனால் முதலில் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் 116 எம்.எல்.ஏக்கள்தான் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தனர். இந்நிலையில் அந்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கம்பம் ஜக்கையன் இன்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பதாக அறிவித்தார். இதையடுத்து தினகரன் அணியின் எண்ணிக்கை 18 ஆனது.
இதனிடையே கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 3 எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனடிப்படையில் தினகரன் அணியில் அதிகாரப்பூர்வமாக 21 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மையை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 114 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர்.

நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா பதவி விலகினார் ! 7 வயது மகனுடன் சேர்ந்து போராடியவர் ..


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி போராடிய ஆசிரியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பொதுநுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை சபரிமாலா, தனது 7 வயது மகனுடன் சேர்ந்து நீட் தேர்வுக்கு தடை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதகாவும், அதற்காகவே தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் முறைப்படி அவர் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நக்கீரன்

சங்கராச்சாரி :புத்திசாலிங்களுக்கு பிளஸ் 2 படிப்பே போறுமே? அவாளுக்கு எதுக்கு மேற்படிப்பு? flashback!

Venkat Ramanujam · தமிழ் பெண் அனிதாவின் மரணம் எல்லாரையும் பேச வைத்து விட்டது பள்ளி மாணவர்களை கூட தெருவுக்கு போராட வர செய்து விட்டது சரியான நேரத்தில் உண்மையை போட்டு உடைச்ச Rajagopal Meenatchisundaram அண்ணனுக்கு நன்றிகள் ஆயிரம்:
Rajagopal meenadchisundaram : : விஜயகாந்த் முன்பு  சங்கராச்சாரியை சந்தித்த போது சங்கராச்சாரி விஜயகாந்திடம் அவரது கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் பற்றி கேட்டார், அதற்கு விஜயகாந்த் : சிலருக்கு சலுகை அடிப்படையிலும் சிலரை இலவசமாகவும் சேர்த்து கொள்வதாக பதிலழித்தார்,
அதற்கு சங்கராச்சாரி ,"  எதுக்கு வித்தையை தானமா கொடுக்கிறேள்? தட்சணை வாங்கிக்கொண்டுதான் வித்தையை கொடுக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்றது .ஃபீசை  குறைக்கிறதோ தள்ளுபடி செய்யறதோ கூடாது . நான் எனாதூர்ல அப்படித்தான் கொடுக்கிறேன்.
விஜயகாந்த் : இல்லை நல்ல படிக்கிற பசங்களுக்கு இலவசமா கொடுக்கலாம்னு நெனச்சேன்!
சங்கராச்சாரி : படிக்கிறதுக்கு தட்சணை கொடுக்க முடியல்லன்னா அவா படிக்க வேணாமே? நல்ல மார்க் வாங்கிற புத்திசாலிங்களுக்கு பிளஸ் 2 படிப்பே போறுமே?  அவாளுக்கு எதுக்கு மேற்படிப்பு?
இதுதாண்டா இந்துத்வா கலாசாரம்

கெளரி லங்கேஷ் ... ஒரு மாதமாக தொடர்ந்த கொலையாளிகள்

Lakshmi Priya.. Oneindia Tamil : பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்ய கொலையாளிகள் அவரை ஒரு மாதமாக பின்தொடர்ந்து வந்தது தெரியவந்துள்ளது. லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கவுரி லங்கேஷ். சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவரும் கூட. பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை மாலை வெளியே சென்றுவிட்டு அவரது வீட்டின் கதவை திறந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் அவரை கடந்த 15 நாள்களாக பின்தொடர்ந்து வந்திருக்கக் கூடும் என்று முதல் கட்ட விசாரணை கூறுகிறது.

சமூக வலைதள தகவல் பரிமாற்றத்தை வேவு பார்க்க கமிட்டி...மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற, சமூக வலைதளங்களில், தகவல்கள் பரிமாற்றத்தை முறைப்படுத்துவது பற்றி ஆலோசிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான கமிட்டி, அமைக்கப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்திய அரசியல் சட்டத்தின்படி, தனிநபர் ரகசியம், அடிப்படை உரிமையே' என, ஆதார் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஒன்பது நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில், தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்ற, சமூக வலைதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை பாதுகாப்பது குறித்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்த தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது கமிட்டி:அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது:
சமூக வலைதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை முறைப்படுத்துவது பற்றி ஆய்வு செய்து, ஆலோசனைகள் வழங்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.என்.கிருஷ்ணா தலைமையிலான கமிட்டி, அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி, வழங்கும் பரிந்துரை தினமலர்

30 சதவீதத்தை விட்டு விட்டு, அரசுப்பள்ளி மாணவர்களில் 1%தான் என்கின்ற பொய். நீட் ஆதரவுப் பிரசாரம்

muthuram :NEET விஷயத்தில் அவர்களின் பிரச்சார உத்திகளைக் கையாள்வதில் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
அரசு பள்ளிகளில் இருந்து வெறும் 1% மாணவர்களே மருத்துவம் பயில செல்கிறார்கள்னு சொன்னாங்க.
உண்மை என்னனு பாப்போம்.
தமிழக அரசு விண்ணப்பப் படிவத்தில்,
அரசு பள்ளி
அரசு உதவி பெறும் பள்ளி
கார்பரேஷன் பள்ளி
முனிசிபால்டி பள்ளி
பஞ்சாயத்து யூனியன் பள்ளி
கே.வி
சிபிஎஸ்சி பள்ளி
தனியார் பள்ளி
என்று வகை உள்ளது
இதில்
அரசு பள்ளி
அரசு உதவி பெறும் பள்ளி
கார்பரேஷன் பள்ளி
முனிசிபால்டி பள்ளி
பஞ்சாயத்து யூனியன் பள்ளி
என்று ஐந்து வகை பள்ளிகளிலும் படிப்பவர்கள் ஏழைகள் தான்.
ஆனால்
இதில் அரசு பள்ளியில் இருந்து வருபவர்கள் 1 சதம் அரசு உதவி பெறும் பள்ளி, கார்பரேஷன் பள்ளி, முனிசிபால்டி பள்ளி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆகிய நான்கில் இருந்து வருபவர்கள் மிக மிக அதிகம்.
இந்த மிக மிக அதிக சதத்தை நயமாக மறைத்து விட்டு அரசு பள்ளி என்ற வார்த்தை விளையாட்ட மட்டும் வைத்துகொண்டு 1 சதம் என்று பொய் கூறுபவர் எவ்வளவு அறிவுடைய நபராக இருக்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமி பள்ளர் சாதியை சேர்ந்தவரே அல்ல? RSS சு சாமி கும்பலால் நுழைக்கப்பட்டவர்? வந்த வழியில் ஒரே மர்மம்!

டாக்டர் கிருஷ்ணசாமி ரெட்டியார் + பார்பனர் கிருஷ்ணசாமியின் அப்பா ரெட்டியார், அம்மா அருந்ததியர், மனைவி பிராமின்,மருமக பிராமின்.இவுங்க காப்பாத்தற இயக்கம் தேவேந்திரகுலம். ஒரு மெடிக்கல் காலேஜ் கட்ட எப்படி எல்லாம் உழைக்காறாரு
Murugan Kanna : கிருஷ்ணசாமி எங்கிருந்து வந்தார்...
அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் தாக்குதல் சம்பவத்தின் போது எங்கோ இருந்த யார் என்று எவருக்கும் தெரியாத நபர் கிருஷ்ணசாமி கொடியன்குளம் வந்து தன்னை பள்ளனாக அறிமுகபடுத்தி கொன்டார் அறியாமையில் இருக்கும் மக்களும் நம்பினார்கள். 1996ல் சுப்பிரமணியசாமி என்ற ஆர்எஸ்எஸ்ன் ஜனதா கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1998ல் திமுக ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர் கூலி உயர்வு போராட்டத்தில் காவல்துறையினரால் திட்டமிட்டு நெல்லை தாமிரபரணியில் 17 உயிர்கள் படுகொலை சம்பவம் நிகழ்ந்தது ஆனால் 2001 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கிருஷ்ணசாமி கூட்டனி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்.
கொடியன்குளம் தாக்குதலுக்கு காரனமான அதிமுகவுடன் 2011ல் கூட்டனி அமைத்து ஓட்டபிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012 பரமகுடியில் தியாகி இம்மாணுவேல் சேகரன் நிணைவேந்தல் நிகழ்ச்சியில் பேரணியாக வந்த மக்களை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு 6 உயிர்களை படுகொலை செய்தனர். சில மாதங்களில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிருஷ்ணசாமி ஆதரவளித்தார்.

பாஸ்போர்ட் விதிமுறை திருத்தம்... பெற்றோருக்கு பதில் சாதுக்கள் சந்நியாசிகள் சட்ட பூர்வ பாதுகாப்பாளர் ஆகலாமாம்

இரவிக்குமார் : கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய பாஸ்போர்ட் விதிமுறைத் திருத்தம்

பாஸ்போர்ட் எடுப்பதற்காக புதிய விதிமுறைகள் பற்றி இன்று ஒரு மெயில் வந்திருந்து. அதைப் படித்துப் பார்க்கையில் கவனத்தைக் கவர்ந்தது இது. அரசின் மதம் சார்ந்த தன்மைகள் அதிகரித்துக் கொண்டே வருவதன் அறிகுறி இது. இதுவரை கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கேட்கும் விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெற்றோர்கள் பற்றிய விவரம் கட்டாயம் கேட்கப்பட்டிருக்கும். இப்போது, பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாப்பாளர் (கார்டியன்) பெயர் குறிப்பிடலாம் என்கிற கூடுதல் வசதி அளிக்கப்பட்டிருப்பது. இது வரைக்கும் பிரச்சனை இல்லை. அதனோடு, ஆன்மீகத் தலைவர்கள் (சாதுக்கள்/சந்நியாசிகள்) போன்றவர்களையும் தங்கள் பெற்றோருக்குப் பதில் குறிப்பிடலாமாம். அதிலும் ஆன்மீகத் தலைவர்கள் (சாதுக்கள்/சந்நியாசிகள்) என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள். இதில் முல்லாக்கள், பாதிரியார்கள் என்று குறிப்பிடாமல் சாதுக்கள்-சந்நியாசிகள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அரசு மரியாதையுடன் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் உடல் அடக்கம்: முதல்வர் சித்தராமையா அஞ்சலி

மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மூத்த பெண்
பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் உடலுக்கு பெங்களூரில் புதன்கிழமை அஞ்சலி செலுத்துகிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் சித்தராமையா உள்பட அரசியல் மூத்த தலைவர்கள், இலக்கியவாதிகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கன்னட பத்திரிகையின் ஆசிரியரும், சமூக செயல்பாட்டாளருமான கெளரி லங்கேஷ், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

சென்னையில் 33 இடங்களில் போராட்டங்கள்... ஆயிரம் பெண்கள் உள்பட 6,215 பேர் கைது .. பின்னர் விடுவிக்கப்பட்டதாக

சென்னை, நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை நகரில் 33 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 5 இடங்களில் நடந்த போராட்டங்களில் 11 பெண்கள் உள்பட 199 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு அவர்களை விடுதலை செய்தனர். இதேபோல் 28 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரம் பெண்கள் உள்பட 6,215 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர.
 சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்புறப்படுத்தி காவல்துறையினர் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். அதேபோல் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே திரளான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிந்த கொலையாளி, வெளிநாட்டுத் துப்பாக்கி cctv காட்சிகள்

gauri_roadபெங்களூர்:மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் கொலைச் சம்பவம் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.> சமூக ஆர்வலரும், மூத்த பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூரில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கியவாதியுமான கெளரி லங்கேஷ் (55)  பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்தார். செவ்வாய்க்கிழமை காரில் வெளியே சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கௌரியை கைத்துப்பாக்கியால் 7 முறை சுட்டுள்ளனர்.
இதில் நெற்றி, மார்பு உள்ளிட்ட இடங்களில் 3 குண்டுகள் பாய்ந்ததில் நிகழ்விடத்திலே கெளரி லங்கேஷ் உயிரிழந்தார். தகவலறிந்த ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.