வியாழன், 18 மே, 2017

மத்திய அமைச்சர் அணில்தவே மரணம் ... சுற்று சூழல் துறை அமைச்சர் .. ஆர் எஸ் எஸ் கடும்போக்காளர்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் முக்கிய பணியாற்றி பின்னர் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பதவியேற்றவர் அனில்மாதவ் தவே இன்று உடல்நலக்குறைவினால் மரணமடைந்துள்ளார். By: Mayura Akilan டெல்லி: ஆஸ்பெஸ்டாஸ் கூரை இல்லாத நகரங்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்று கூறி வந்தவர் அனில் மாதவ் தவே. 2009ஆம் ஆண்டு முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் அனில் மாதவ் தவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மோடி அமைச்சரவையில் இடம் பெற்றார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பெரும்பங்காற்றியவர். உடல்நலக்குறைவினால் சிகிக்சை பெற்று வந்த போதும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று ஆர்வமுடன் செயல்பட்டவர் அமைச்சர் தவே என்ற தகவல் வெளியாகியுள்ளது. ..

குமரி அனந்த மகள் தமிழிசை சவுந்தரராஜன் , சித்தப்பன் வசந்தகுமார் ,,,, நவீன குடும்ப மாபியா?

stanley.rajan.:   22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 900
கோடி ரூபாய் வியாபாரம்: வசந்த் & கோ நிறுவனரின் கதை என சில பத்திரிகைகள் எழுத தொடங்கிவிட்டன < ஆனால் குமரி அனந்தன் என்பவர் யார்? அவர் என்ன செய்தார்? அவருக்கும் வசந்தகுமாருக்கும் என்ன உறவு என்பதெல்லாம் பற்றி ஒரு பயலும் எழுதமாட்டான்
வசந்தகுமார் என்பவர் விஜிபி போல தானாக வளர்ந்தார் என நம்பிகொள்ளவேண்டும், நம்பிகொள்வோம்
முன்பு ஒரு வெறிபிடித்த முன்னாள் காங்கிரஸ்காரரிடம் பேசிகொண்டிருந்தேன், தெற்கு பகுதியினை சார்ந்தவர் மிக பெரும் காங்கிரஸ் பக்தர் அல்லது தொண்டர்
குமரி அனந்தனின் தமிழ் அவருக்கு மிக பிடித்தமான ஒன்று, ஒருமுறை நாகர்கோவிலில் குமரி அனந்தன் இலக்கியம் பற்றி 4 மணிநேரம் பொதுகூட்டத்தில் பேசி அனைவரையும் கட்டிபோட்ட கதை எல்லாம் சொன்னார்

ஈழம் அமையாமல் தடுத்தது பாஜக அரசு, அருகே இருந்தவர் வைகோ... புலிகள் யாழ்ப்பாணத்து வாசலில் நின்ற பொழுது

stanley.rajan. புலிகள் எங்குமே முழு வெற்றி பெற்றவர்கள் அல்ல, அவர்களின் சிறிய தாக்குதலையும் ஏதோ பெரும் அமெரிக்க தாக்குதல் போல சித்தரித்தவை தமிழக ஏடுகள், அங்கே சும்மா புலிகள் ஆயுதம் இல்லாதவனை சுட்டால் கூட, இங்கே பெரும் யுத்தம் இலங்கையில் நடந்தது போல எழுதுவார்கள்
அப்படித்தான் புலிகளின் செய்திகள் இருந்தன, தாக்குதல் வெற்றிக்கும், பெரும் போருக்கும் புலிகளுக்கும் வெகுதூரம், எல்லாம் ஊதிபெருக்கிய பிம்பம்
அன்றைய வடமராட்சியில் அவர்கள் கதை முடியும்பொழுதே ராஜிவ்காந்திதான் காத்தார்,
புலிகள் அப்படித்தான் சிங்களனை அடித்துவிட்டு ஓடுவார்கள், அல்லது மக்கள் நடுவில் அமர்வார்கள், சிங்களன் வந்து மொத்தமாக அப்பாவிகளை கொல்வான்,
இப்படித்தான் அவர்களின் வீரவிளையாட்டு பொதுவாக‌ இருந்தது
அவர்களின் ஒரே பலம் ஊதிபெரிதாக்கும் ஊடக செய்திகளும், ஆண்டன் பாலசிங்கத்தின் வாயும்
ஆனால் ஒரே ஒரு இடத்தில் புலிகள் முழுவெற்றி பெற்றார்கள், அது ஆனையிறவு தாக்குதல் , முக்கியமான வெற்றி அவர்களின் முந்தைய‌ 20 வருட போராட்டத்தில் அது ஒன்றுதான் உச்ச வெற்றி...
இலங்கையின் வரைபடத்தினை கவனித்தால் புரியும் யாழ்பாண பகுதிகளையும் இலங்கையினையும் இணைக்கும் நிலபரப்பது அதுவே, மிக முக்கியமான பகுதி, அங்கு இலங்கை ராணுவத்தின் முகாம் இருந்தது 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்
கிட்டதட்ட 2 ஆயிரம் புலிகளை இழந்து அந்த முகாமினை புலிகள் பிடித்தனர், புலிகள் வாழ்வில் ஒரே வெற்றி
அந்த வெற்றியில் 50 ஆயிரம் சிங்களர்களை புலிகள் சிறைபிடித்தனர், அத்தோடு வடக்கில் இருந்து சிங்களம் வெளியேறிற்று,இனி ஈழக்கொடி ஏற்றவேண்டியதுதான் பாக்கி

ரெஜினா ...தமிழ் திரை உலகின் ஒரே ஒரு சிக்ஸ் பேக் நடிகை

தமிழ் சினிமாவின் ஒரே சிக்ஸ்பேக் நடிகை என்றால் அவர் ரெஜினாதான். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் நாயகி இவர்தான். இந்த படம் படுமொக்கை என விமர்சனம் செய்யப்பட்டாலும், ரெஜினாவின் அழகு, கவர்ச்சியை அனைவரும் மனம் திறந்து பாராட்டினர். இந்த நிலையில் தனது கட்டுடலை சிக்கென்று வைத்திருக்கும் ரெஜினாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளது. தனது உடலை கவர்ச்சியாகவும் ஃபிட்டாகவும் வைத்து கொள்வது குறித்து ரெஜினா கூறியதாவது: நான் எப்போது நடிகை ஆனேனோ அப்போது இருந்தே டயட்ஸ் கடைபிடித்து வருகிறேன்.

தேர்தல் அரசியல் தோற்றுவிட்டது! கீழடி மூடப்பட்டது ... நீட் தேர்வு சிபிஎஸ்சி ...தொ.பரமசிவம்

தொ.பரமசிவம்" : தமிழகத்தில் தேர்தல் அரசியல் தோற்றுவிட்டது - " கீழடி அகழாய்வு நிறுத்தப்பட்டது; அதன்பின் அதிகாரி பணியிடம் மாற்றப்பட்டது; நீட் தேர்வு முறை போன்ற பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழர் விரோதமாக உள்ளது என பல தரப்பிலும் கூறப்படுகிறது. இதுகுறித்து மே 12ஆம் தேதி தமிழின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவமைத் திருநெல்வேலியில் அவரது இல்லத்தில் சந்தித்து மின்னம்பலம் வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக பேட்டி கண்டோம். சமகால அரசியல் மற்றும் பண்பாட்டு விஷயங்கள் குறித்த தனது பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்தார் தொ.ப.
கீழடியை அகழாய்வு செய்த அதிகாரியைப் பணியிட மாற்றம் செய்திருப்பது அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாகியிருக்கிறதே?

பெண் டாக்டர் தற்கொலை? மகனை பார்க்க முடியாமல் மன உளைச்சல் காரணம் ...

பணி சூழல் காரணமாக பிஞ்சு மகனை பிரிந்திருக்க முடியாத ஏக்கத்தில் சென்னையில் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
By: Mayura Akilan சென்னை: வேலை பளுவினால் குடும்பத்தை கூட கவனிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இன்றைக்கு பல பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. பெண் மருத்துவர் சுதா மல்லிகாவிற்கோ, பணி சூழலினால் தனது மகனை பிரிந்திருக்க வேண்டியிருக்கிறதே என்ற ஏக்கமே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. ஆசையாய் பெற்றெடுத்த மகனை உடனிருந்து பார்த்து கவனித்து வளர்க்க முடியவில்லையே ஏன்ற ஏக்கத்தில் மகனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் சுதா மல்லிகா. சென்னை சூளை மாணிக்கம் தெருவில் உள்ள ரூபி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ்குமார்,30, அரசு மருத்துவர். இவருக்கும் ஈரோடு பவானியை சேர்ந்த டாக்டர் சுதாமல்லிகா,28 என்பவருடன் எம்பிபிஎஸ் படிக்கும் போதே காதல் ஏற்பட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

வைகோ அரசியலை விட்டு விலகுகிறார் .. மதிமுக இனி மக்கள் இயக்கமாம் .. புரோக்கர் சேவை தொடரும்?

தீக்குளித்தவர்கள்...தீவிர அரசியலில் இருந்து வைகோ மட்டுமல்ல அவரது மதிமுக கட்சியுமே ஒதுங்கி சீர்திருத்த இயக்கமாக செயல்பட உள்ளது.
 By: Raj
சென்னை:

தீவிர அரசியலில் இருந்து வைகோ மட்டுமல்ல அவர் சார்ந்த மதிமுகவும் விடைபெறுகிறது. திராவிடர் கழக பாணியில் தேர்தல் அரசியலுக்குப் போகாத சமூக சீர்திருத்த இயக்கமாகிறது மதிமுக. திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அக்கட்சி நிர்வாகிகள் பெருமளவில் வெளியேறினர். எம்ஜிஆருடன் தொண்டர்கள்தான் வெளியேறினர்.
ஆனால் வைகோவுடன் கணிசமான நிர்வாகிகளும் கை கோர்த்தனர்.
தீக்குளித்தவர்கள்… தமிழக அரசியலில் வைகோவுக்காக மட்டுமே தீக்குளித்த தொண்டர்கள் ஏராளம்… இடிமழை உதயம், நொச்சிப்பட்டி தண்டபாணி என எண்ணற்றோர் தங்களையே வைகோவுக்காக தீக்கிரையாகினர். கரைசேரலையே…

குட்கா வியாபாரிகள் போலீசுக்கு மாதம் 20 லட்சம் ரூபா மாமூல் ..

யார் யாரிடம் விசாரணை
செங்குன்றம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மாதாவரத்தில் கடந்த 2011 முதல் இயங்கி வந்த குட்கா குடோனில் கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அப்போது குட்கா வியாபாரியின் ரகசிய டைரியும் வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அந்த டைரியில் சென்னை முழுவதும் குட்கா வியாபாரம் தடையின்றி நடக்க இன்ஸ்பெக்டர்கள் முதல் காவல்துறை ஆணையர்கள் வரை பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பெயருடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் தமிழக அரசுக்கு அறிக்கையும் 30 அதிகாரிகள் கொண்ட பட்டியலும் அனுப்பியது.
அதன்படி தமிழக உள்துறை செயலாளர் 30 அதிகாரிகளையும் விளக்கம் அளிக்கும் படி அறிக்கை அனுப்பியது.

நித்தி - ரஞ்சிதா ஜோடி பல்லாவரத்தில் நில அபகரிப்பு அடாவடி!


சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(67). இவர் தனது உறவினர்களுடன் அங்குள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில்  40 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார்.
அந்த இடம் அரசு புறம்போக்கு, கிராம நத்தம் இடம் என்றும், இதன் மதிப்பு ரூ.30 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமநாதன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு இந்த இடம் தனக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்களை ராமநாதன் நீதிமன்றத்தில் சமர்பிக்காததால் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மேலும் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த குடியிருப்பில் தொடர்ந்து வசிக்க அனுமதி வழங்கியது.
இந்நிலையில் பிரபல சாமியார் நித்யானந்தாவின் சீடர்கள் 20க்கும் மேற்ப்பட்டோர் நேற்று நடிகை ரஞ்சிதா தலைமையில் அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது ரஞ்சிதா, இந்த இடம் ராமநாதனின் மகளுக்கு சொந்தமானது. அவர் நித்தியானந்தாவின் சீடர் என்பதால் இந்த இடத்தை அவர் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார்.

மகன் திருமணம் செய்ததால் மனமுடைந்த தாய் தற்கொலை .. தேனியில் சோகம்!

தேனியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி ஜெயபாரதி(55). இவர் ஆசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது மகன் மனோஜ்(28) இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அங்கு தனது உறவினரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதற்கு ஜெயபாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், மனோஜோ தாயின் எதிர்ப்பை மீறி கடந்த 12ம் தேதி தான் காதலித்த பெண்ணை சென்னையில் வைத்து திருமணம் செய்து கெண்டார். திருமணம் முடிந்த பிறகு தனது தாயை சமாதானம் செய்வதற்காக நேற்று தேனிக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்திருக்கிறது. மனோஜ் எவ்வளவு தட்டியும் கதவை திறக்கவில்லை. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

82 வயதில் சிறையில் இருந்தபடியே, 12ம் வகுப்பு `பாஸ்` செய்தார் சௌதாலா

At 82, former Haryana CM Om Prakash Chautala clears class XII exam .
BBC :ஹரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 82ம் வயதில் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சையில் தேர்வு பெற்றுள்ளார். இளமையில் இழந்த கல்வியை , முதுமையில், சிறைவாசத்தில் பெற்றார் சௌதாலா டெல்லியில் உள்ள திஹார் சிறையில் இருக்கும் தனது தந்தை சிறை தண்டனை காலத்தை அர்த்தமுள்ளதாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார் என்று ஓம் பிரகாஷ் சௌதாலாவின் மகன் அபெய் சௌத்தாலா தெரிவித்தார். ஆசிரியர்களை பணியமர்த்துவதில் தவறு இழைத்ததற்காக 2013ல் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய அபெய் சௌதாலா தனது தந்தை ''தினமும் சிறையில் உள்ள நூலகத்திற்கு செல்வதாக'' குறிப்பிட்டார். ''அவர் செய்தித் தாள்கள் மற்றும் புத்தகங்களை வசிக்கிறார். அவருக்கு பிரியமான புத்தகங்களை அடுக்கி வைக்குமாறு கூறுகிறார்.

தலைமை செயலகத்தில் வெங்காயத்துக்கு என்ன வேலை?

AdmkFails:  மத்திய அரசை கண்டு பயந்து தாங்கள் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றவும் , பதவியை தக்க வைத்துக்கொள்ளவும் சுயமரியாதை இன்றி மத்திய அரசுக்கு #Blowjob செய்யும் கேடுகெட்ட அரசு தேவையா ? மாநில அரசு தலைமை செயலகத்தில் வெங்காயத்திற்கு என்ன வேலை ? ! மாநில சுயாட்சி பேசிய அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தி அண்ணாவின் கொள்கையை அடகு வைத்து நாயுடுகளுக்கு வாய் வேலை பார்க்கும் எடுபிடி பழனிசாமியின் ஆட்சி இன்னும் நீடிக்க வேண்டுமா !

தலித் சகோதரர்களுக்கு, திராவிட ஆட்சி தங்களுக்கு செய்தது என்ன??

prakash.jp. சில தலித் சகோதரர்களுக்கு, திராவிட ஆட்சி தங்களுக்கு செய்தது என்ன?? என திடீர் சந்தேகம் வந்துள்ளது... தமிழகத்தில் அவர்களின் நிலையையும், வட மாநில நிலையையும் ஒப்பிட்டு பார்போம்.. "தமிழகத்தில் தலித் பிரிவு மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது" என நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓநாய்களை நம்பும் சில வழிதவறிய ஆடுகளின் கவனத்துக்கு....
1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.
2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.
3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்..
5. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 12 எம் எல் ஏக்கள் ... கூவத்தூர் வாக்குறுதிகள் நிறைவேறவில்லையாம்

கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புகார் தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் 12 பேர் சென்னையில் தோப்பு #வெங்கடாசலம் தலைமையில் ரகசிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. #எடப்பாடி க்கு எதிராக எம்எல்ஏக்கள் ரகசிய கூட்டத்தால் பழனிசாமி அரசுக்கு #சிக்கல் வந்து விடுமோ என்ற அச்சத்தில் பிஜேபி கட்சி உள்ளதாக தகவல் வருகிறது .. # அதிமுக பெயரில் இப்போது தான் தாம் நினைத்தது நடக்கிறது என்றும் இப்பொது எல்லாம் மத்திய மந்திரியே நேரடியாக வந்து தலைமை செயலகத்தில் உத்தரவு போட முடிகிற நிலையில் கட்சி உடைந்தால் இதன் பயன் திமுக வுக்கு சென்று விடாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று #பிஜேபி கட்சியினர் படபடப்போடு ஆலோசனை செய்து வருகிறார்களாம்
Special Correspondent FB Wing

ஏன் இல்லை ஒரு பெண் நபி?

Marx Anthonisamy:  இறைத்தூதர் (Prophet) மரபில் ஒரு பெண் நபி கூடஏன் இல்லை? - என்கிற கேள்வி பிரசித்தம்.
இறைத் தூதர் என்றில்லாவிட்டாலும் அடியார்கள் என்கிற வகையில் காரைக்கால் அம்மையார், மங்கையற்கரசியார் , இசைஞானியார் என மூன்று பெண் அடியார்கள் சைவத்தில் உண்டு.
இறைத்தூதர் என்கிற மரபில் வைத்துப் பார்க்கத் தக்கவர்களாக சமணத்தில் தீர்த்தங்கரர்களையும் பவுத்தத்தில் போதிசத்துவர்களையும் ('எண்ணில் புத்தர்கள்') கொள்ள முடியும்.
அந்த வகையில் சமணம் தனித்து நிற்கிறது. அதில் ரிஷபதேவர் தொடங்கி மகாவீரர் ஈறாக 24 தீர்த்தங்கரர்களை அவர்கள் வணக்கத்துக்கு
உரியவர்களாகப் போற்றுவர். இந்த வரிசையில் 19 வது தீர்த்தங்கரராக அவர்கள் போற்றும் மல்லிநாதரை ஸ்வேதாம்பரர்கள், குறிப்பாக யாப்பானியர்கள் ஒரு பெண் தீர்த்தங்கரர் ஆக ஏற்று வணங்குகின்றனர். திகம்பரர்கள் அப்படி ஏற்பதில்லை.
ஸ்வேதாம்பரர்கள் மல்லிபாயை ஜீன நிலை அடைந்தவராக ஏற்பத்ற்கு அவரிடம் இருந்த ஆண் தன்மையே (பும்வாத) காரணம் என்பர். மேற்கு கர்நாடகப் பகுதியில் செழித்திருந்த சமணப் பிரிவினரான யாப்பானியர்கள் அப்படிக் கருதுவதில்லை.

ஷாலின் : சமூக இழிவுகளுக்கு காரணமாய் இருக்கும் மதத்தை நாங்கள் ஏன் விமர்சிக்க கூடாது?

நான் வந்தேறி. வந்தேறி .எனக்கு கொடுக்கப்பட்ட பட்டம் .எனக்கு மட்டுமல்ல
இன்னும் யார் மீள் அரசியல் ரீதியான கருத்துக்களை கூற வேண்டாமென்றும் தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் ,தமிழை பற்றியும் பேச கூடாதென்றும் ஒவ்வொருமுறையும் எச்சரிக்க படுகிறோம் .
என் இனிய தமிழரே இந்திய கிறிஸ்தவர்கள் ஒன்றும் வாஸ்கோடகமாவின் துணிப்பை வழியோ இல்லை மவுண்ட் பேட்டனின் ட்ரங்க் பெட்டி வழியாகவோ இந்தியாவில் நுழைந்தவர்கள் அல்ல .இதே மண்ணில் ஆயிரம் வருடங்கள் ஒடுக்கப்பட்டு ,தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டு மாளாத ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அதில் இருந்து மானத்தோடு வாழ மதம் மாறிய உன் தமிழ் மக்களேதான் .
வடக்கேயிருந்து இங்கு 'வந்து ஏறிய' ஜாதியின் கோரப்பிடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் . ஒருபடி அரிசிக்காகவும் ,ரொட்டிக்காகவும் மதம் மாறியவர்கள் என்று நகைக்கும் நேரத்தில் நினைத்துப்பார் அந்த ரொட்டி துண்டைக்கூட அவர்களுக்கு கிடைக்க செய்யாமல் பார்த்துக்கொண்டது அவர்களின் தாய் மதம் .

புதன், 17 மே, 2017

இனி பெண்களும் தலாக் கூறலாம்! முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில்

ஆண்களைப் போல பெண்களும் முத்தாலாக் கூறி விவாகரத்து செய்யலாம் என இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முத்தலாக் நடைமுறைக்கு எதிராகப் பல பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது அரசியலமைப்புக்கு விரோதமானது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அது முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், ‘முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானது. முத்தலாக், பலதார மணம் மற்றும் ‘நிக்காஹ் ஹலாலா’ போன்றவை இஸ்லாமிய நடைமுறைகளுடன் ஒருங்கிணைந்தது இல்லை எனத் தெரிவித்தது.

விஜய் டிவி... கமல் நிகழ்ச்சிக்கு வரமறுத்த ராஜ்கிரண்

கமல் அழைத்தும் ‘நோ’ சொன்ன ராஜ்கிரண்!
நூறு படங்களில் நடித்தவர் போல ஒரு இமேஜ் இருக்கிறதல்லவா ராஜ்கிரண் மீது? ஆனால் அவர் நடித்தது நாற்பதுக்கும் குறைவான படங்களில்தான்!.
தமிழ்சினிமாவின் மிக மூத்த கலைஞர் என்று ஆராதிக்கிற அளவுக்கு இருக்கிறது அவருக்கான ரசிகர் கூட்டம். மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரைத்துறையினர் மத்தியிலும் அவருக்கென்று ஒரு நற்பெயர் இருக்கிறது.
இந்நிலையில் ‘பணத்துக்காகத் தான் சின்னத்திரை பக்கம் வந்தேன்’ என்று ஓப்பனாகவே பேட்டியளித்திருக்கும் கமல், பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சிக்காகத் தரப்போகிறார். இதில் ஒவ்வொரு வாரமும் பிரபலங்களையும் பொதுமக்களையும் அவர் சந்தித்து பேசுவதாக நிகழ்ச்சி அமைந்திருக்குமாம். அப்படி பிரபலங்கள் லிஸ்ட் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டுள்ளதாம் விஜய் டி.வி.
அதில் ராஜ்கிரண் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். கமல் சார்பில், ராஜ்கிரணிடம் பேசப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அவரே எதிர்பார்க்காதளவுக்கு ஒரு பெரும் தொகையை தரவும் முன் வந்ததாம் விஜய் டி.வி.

அருண் ஜெட்லி :லாலு பிரசாத் யாதவ், ப.சிதம்பரம் வீடுகளில் ... பழிவாங்குதல் நடவடிக்கை அல்ல!

சிதம்பரம் வீட்டில் ரெய்டு : அருண் ஜெட்லி பதில்!லாலு பிரசாத் யாதவ் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரது வீட்டில் வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ. நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோரது, வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. நேற்று சோதனை நடத்தியது. அது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதற்குப் பதில் தெரிவித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று மே 16ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் மத்திய அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்ற வருமானவரித்துறை மற்றும் சிபிஐ நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.

சிதம்பரம் ரஜினியோடு பேசிய அடுத்தநாளே சிதம்பரம் வீட்டில் சி பி ஐ ... ரஜினிக்கு மிரட்டல்!

பாஜக அழைப்பு : ரஜினி சொன்ன பதில்!
தனது ரசிகர்களை மே 15-ம் தேதி முதல் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், 'இன்று நான் நடிகனாக இருக்கிறேன். நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. ஒரு வேளை நான் அரசியலுக்கு வந்தால் பணத்துக்கு ஆசைப்படுபவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்' என்று அறிவித்தார்.
இதுவரை பல ஆண்டுகளாக அரசியல் பிரவேசத்தை ஒரேயடியாக மறுத்து வந்த ரஜினிகாந்த் , இப்போது, 'ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால்' என்று சொல்லியிருப்பதன் மூலம் அரசியலில் இறங்குவதற்கான விருப்பத்தை முதல் முறையாக வெளிப்படுத்தினார்.
அவ்வளவுதான்... ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றும், பி.ஜே.பி.யில் சேர்ந்து தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படப் போகிறார் எனவும் தகவல்கள் அலையடித்தன.
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் தமிழக பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், 'ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வரவேற்கின்றோம். பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தாலும் வரவேற்கின்றோம். அது அவரது தனிப்பட்ட முடிவு. அவரை கட்டாயப்படுத்த முடியாது' என்று தெரிவித்திருந்தார்.

LTTE ( 1985 ~2009) ஜெயலலிதா போல கண்டும் காணாமல் திமுக இருந்து இருக்க வேண்டும் ...

Vankat Ramanujam :வளர்ச்சியும் வீழ்ச்சியும் #LTTE ( 1985 ~2009)
1986 : திமுக எதிர்க்கட்சி #TESO கூட்டம் கூட்டி கொடுத்த பண முடிப்பை வாங்காமல் #MGR ஐ ஆதரித்து அணைத்து கட்சியும் தவிர்த்து பார்த்து "போடா வெண்ணை" என்றார் பிரபாகரன் .. அப்போது இந்த "போடா வெண்ணை" குழுவில் திமுகவில் வைகோவும் திமுகவுடன் நெடுமாறனும் இருந்தார்கள் என்பது கூடுதல் சிறப்பு ..
1989 : IPKF ஐ LTTE எதிர்த்த போது திமுக LTTE ஐ கண் முடித்தனமாக ஆதரித்தது ( strategic blunder by DMK said then External affairs Experts ., Ambassadors watching Indo Lanka relations)
1990 : Kalaignar Karunanidhi ., #IPKF வரவேற்க மறுத்த காரணம் ஆட்சி கலைப்பிற்கு காரணமாக ஜெயலலிதா & அன்றைய law minsiter ., இன்றைய #porki Dr. Subramanian Swamy யால் கூறப்பட்டது ..
1991~1996 காலகட்டத்தில் வேகமாக LTTE வளர்ந்தது .. அதிகாரம் பெற்று பொருளரீதியாக வும் கூட .. இதே காலகட்டத்தில் #திமுக குற்றயிராக எழவே முடியாத கோமாவில் இருந்தது ..
1996-2009 : ராஜிவ் படு கொலைக்கு பின்னர் திமுக , LTTE ஐ பல மைல் தூரத்தில் வைத்தே இருந்தது ..எப்போதும் திமுகவை புறக்கணிக்கும் LTTE எப்போதும் போலவே இதனை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை ..
நோர்வே தூது குழு தெரிவித்த மிக அருமையான யோசனையை பிரபாகன் நிராகரிக்காமல் இருந்து இருந்தால் தமிழர் வாழ்வு மேம்பட்டு இருக்கும் ..
LTTE தேர்தலை புறக்கணிக்காமல் இருந்து இருந்தால் ரணில் வெற்றி பெற்று ராஜபக்சே போல அல்லாமல் a soft attitude தமிழர் அரசாங்கம் ஏற்படுத்தி இருப்பார் ..
கருணாவை வெளியேற்றி ., அன்டன் பாலசிங்கம் அவமதித்து பிஜேபி யை நம்பி திமுக காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை தொடர்ந்து எடுத்து ஒரு அரசன் போல அல்லாமல் போர் தளபதி போல குறுகிய கண்ணோட்டம் பெற்று lot of blunders made LTTE fall ..

தமிழ் கற்று கொள்ளுங்கள் வளம் பெறுங்கள் ஹிந்தி மொழி பேசும் மக்களே ..

savenra? வளர்ச்சி அடைந்த நாடுகள் உள்ளிட்ட 121 நாடுகளில் ., 143 கோடி மக்கள் பேசும் மொழி ஆங்கிலம் வேண்டுமா... வளர்ச்சி அடையாத பனி பூரி விற்கும் நிலையில் வைத்து இருக்கும் வட இந்திய மொழி., 39 கோடிகள் மக்கள் மட்டுமே பேசும் ஈரானிய திரிபு மொழி வேண்டுமா ... என்றால் ...
இந்தியா உள்ளிட்ட 44 நாடுகளில் 10.5 கோடி அறிவுள்ள புத்திசாலி தமிழ் பேசும் மக்கள் வளர்ச்சியை விரும்பும் காரணத்தினால் ஆங்கிலத்தை மட்டுமே தேர்வு செய்வார்கள் எனபதை சொல்லி தான் தெரிய வேண்டுமா .. சுமார் 5000 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள தமிழ் மொழியை ., மொழி பாரம்பரியம் , இலக்கிய சுவை எதுவுமே இல்லாத ஹிந்தி மொழி பேசுபவர்கள் கற்பது தானே முறை .. தமிழ் கற்று கொள்ளுங்கள் வளம் பெறுங்கள் ஹிந்தி மொழி பேசும் மக்களே ..

மேற்கு வங்கத்தில் வங்கமொழி கட்டாயம் மம்தா பானர்ஜி அதிரடி! மீதி நீங்கள் விரும்பும் மொழிகளை கற்கலாம்

Ms Banerjee said in a Facebook post. "One of the three languages would have to be Bengali. The two other choices are completely dependent on what the students chooses," she said.If the student chooses Bengali, Hindi, English, Urdu, Gurmukhi, Nepali, as first language, he/she may opt for two other languages of their choice,"
ஆழி செந்தில்நாதன்  : சற்று முன்பு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி முகநூல் வழியாக எழுதியிருப்பது இது.மேற்கு வங்கத்தில் வங்காள மொழியைக் கட்டாயாமாக்கிய கையோடு தனது மொழிக்கொள்கையை – அதாவது கல்வித்துறை சார்ந்த மொழிக்கொள்கையை – மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் மமதா. அதில் மமதா பானர்ஜியின் வியூகத்தைப் பாருங்கள். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே மும்மொழித் திட்டம் இருக்கிறது. அதன்மீது அவர் கைவைக்கவில்லை. ஆனால் அதன் அடிப்படையையே மாற்றிவிடுகிறார்.“மூன்று மொழிகளைப் படியுங்கள், ஆனால் வங்க மொழி அதில் ஒன்று. வங்க மொழி கட்டாயம். மற்ற இரண்டும் உங்கள் விருப்பம். எதையும் தேர்ந்தெடுத்து்ககொள்ளலாம்” என்கிறார் மமதா.
 மற்ற இரண்டு எது? அது ஆங்கிலமாகவோ இந்தியாகவோ உருதுவாகவோ பஞ்சாபியாகவோ சந்தாலியாகவோ நேபாளியாகவோ இருக்கலாம்.
மமதா இங்கே ஒரே பந்தில் இரண்டு விக்கெட்களை வீழ்த்துகிறார். இந்தியை விருப்பப்பாடமாக ஆக்கிவிடுகிறார். மேற்கு வங்கத்தின் சிறுபான்மை மொழிகளான நேபாளி, சந்தாலி, உருது, பஞ்சாபி மொழிகளையும் அங்கீகரித்துவிடுகிறார்.

JNU ஜே என்.யு வில் காணமல் போன மாணவர் நஜீப் அகமது வழக்கு சி பி ஐ க்கும் மாற்றம்!

மாணவர் காணாமல்போன வழக்கு: சி.பி.ஐ-க்கு மாற்றம்!ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காணாமல்போன மாணவர் நஜீப் அகமதுவின் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்துறை மாணவரான நஜீப் அகமது, கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி காணாமல் போனார்.
நஜீப் அகமது காணாமல் போனதற்கு முன்தினம் அவரை இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்பட்டது. அதையடுத்தே, மாணவர் நஜீப் அகமது மாயமானதாக, அகில இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து, மாணவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்: லாலு பிரசாத் யாதவ்

சி.பி.ஐ. சோதனை மூலம் எனது குரலை ஒடுக்கிவிட முடியாது என்றும் பாஜக-வின் வெற்று மிரட்டல்களுக்கெல்லாம் நான் அடிபணிய மாட்டேன் என்றும் ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது கட்சியின் எம்.பி. பி.சி.குப்தாவின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. பினாமிகள் பெயரில் நிலம் வாங்கி, 1,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகக் கூறி இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் தன்னுடைய ட்விட்டர் வலைப்பதிவில் அடுத்தடுத்து தெரிவித்துள்ளதாவது, ‘எனது குரலை ஒடுக்கும் சக்தி பாரதிய ஜனதாவுக்குக் கிடையாது. வெற்று மிரட்டல்களுக்கு நான் அடிபணிய மாட்டேன்.