வியாழன், 18 மே, 2017

தலித் சகோதரர்களுக்கு, திராவிட ஆட்சி தங்களுக்கு செய்தது என்ன??

prakash.jp. சில தலித் சகோதரர்களுக்கு, திராவிட ஆட்சி தங்களுக்கு செய்தது என்ன?? என திடீர் சந்தேகம் வந்துள்ளது... தமிழகத்தில் அவர்களின் நிலையையும், வட மாநில நிலையையும் ஒப்பிட்டு பார்போம்.. "தமிழகத்தில் தலித் பிரிவு மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது" என நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓநாய்களை நம்பும் சில வழிதவறிய ஆடுகளின் கவனத்துக்கு....
1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.
2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.
3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்..
5. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

சரி, ஹிந்து ஒற்றுமையை காக்கும் பிஜேபி 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் மக்களின் நிலையை கொஞ்சம் பார்ப்போமா???
திருமண அழைப்புக்கு குதிரை மீது தலித் வகுப்பை சார்ந்த மாப்பிளை அமர்ந்து வந்ததால், ஆத்திரம் கொண்டு தலித் மக்கள் மீது கடும் தாக்குதல்..
தலித் வகுப்பை சார்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் பேண்ட் வாத்தியம் வைத்தால், எரிச்சல் கொண்டு, தலித் வகுப்பினர் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணெய்யை ஊற்றி பாழ்படுதினர் ஆதிக்க சாதியினர்..
தலித் வகுப்பை சார்ந்த மாப்பிள்ளை அலங்கரிகபட்ட காரில் ஊர்வலமாக வந்ததால், ஆத்திரம் கொண்டு தலித் மக்கள் மீது கடும் தாக்குதல்..
இவைகளெல்லாம் அங்கே தினந்தோறும் சர்வசாதாரணமாக நடப்பவைகள்.. சரி, இந்து சாமியார் யோகி தலைமையில் பிஜேபி ஆட்சி செய்யும் உத்திரபிரதேசத்தில், ஆதிக்க சாதியினர் ஊர்வலம் நடத்தி வன்முறை வெடித்து, தலித் குடியிருப்புகள் எரிப்பு.... 
உண்மைநிலவரம் இப்படியிருக்க, திராவிட ஆட்சியில் தலித் மக்கள் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: