புதன், 17 மே, 2017

மேற்கு வங்கத்தில் வங்கமொழி கட்டாயம் மம்தா பானர்ஜி அதிரடி! மீதி நீங்கள் விரும்பும் மொழிகளை கற்கலாம்

Ms Banerjee said in a Facebook post. "One of the three languages would have to be Bengali. The two other choices are completely dependent on what the students chooses," she said.If the student chooses Bengali, Hindi, English, Urdu, Gurmukhi, Nepali, as first language, he/she may opt for two other languages of their choice,"
ஆழி செந்தில்நாதன்  : சற்று முன்பு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி முகநூல் வழியாக எழுதியிருப்பது இது.மேற்கு வங்கத்தில் வங்காள மொழியைக் கட்டாயாமாக்கிய கையோடு தனது மொழிக்கொள்கையை – அதாவது கல்வித்துறை சார்ந்த மொழிக்கொள்கையை – மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் மமதா. அதில் மமதா பானர்ஜியின் வியூகத்தைப் பாருங்கள். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே மும்மொழித் திட்டம் இருக்கிறது. அதன்மீது அவர் கைவைக்கவில்லை. ஆனால் அதன் அடிப்படையையே மாற்றிவிடுகிறார்.“மூன்று மொழிகளைப் படியுங்கள், ஆனால் வங்க மொழி அதில் ஒன்று. வங்க மொழி கட்டாயம். மற்ற இரண்டும் உங்கள் விருப்பம். எதையும் தேர்ந்தெடுத்து்ககொள்ளலாம்” என்கிறார் மமதா.
 மற்ற இரண்டு எது? அது ஆங்கிலமாகவோ இந்தியாகவோ உருதுவாகவோ பஞ்சாபியாகவோ சந்தாலியாகவோ நேபாளியாகவோ இருக்கலாம்.
மமதா இங்கே ஒரே பந்தில் இரண்டு விக்கெட்களை வீழ்த்துகிறார். இந்தியை விருப்பப்பாடமாக ஆக்கிவிடுகிறார். மேற்கு வங்கத்தின் சிறுபான்மை மொழிகளான நேபாளி, சந்தாலி, உருது, பஞ்சாபி மொழிகளையும் அங்கீகரித்துவிடுகிறார்.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை இந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டும் மையப்படுத்தியது. குறிப்பாக இந்தியைத் தான் அது மையப்படுத்துகிறது.
“இந்தி-ஆங்கிலம்-மற்ற மொழி” என்கிற அந்த மும்மொழித் திட்டத்தை, “வங்க மொழி – வேறு ஏதேனும் இருமொழிகள்” என்ற “மூன்று மொழி” திட்டமாக ஆக்கிவிடுகிறார் மமதா.
வங்காளம் கட்டாயம், ஆனால் இந்தி கட்டாயமில்லை!
மமதா, நீ்ங்கள் சாதாரண தலைவரில்லை! How diplomatic and pragmatic!
இதுபோல diplomacy நம் தலைவர்களுக்கெல்லாம் வாய்ப்பதில்லை.
நம்மூர் நிலைமை எப்படி?
தமிழ்நாட்டில் இருமொழித்திட்டம்தான் சட்டப்படி நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அதில் தமிழ் கட்டாயமில்லை!
தமிழ் வாழ்கவென்று கூத்திடுவோமடா!
ஆழி செந்தில்நாதன், பதிப்பாளர்; தமிழ்மொழி செயல்பாட்டாளர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: