திங்கள், 22 பிப்ரவரி, 2016

சிம்புவிடம் இன்னும் 150 பீப் பாடல்கள் இருக்கின்றன'...கொதிக்கிறார் புகார்தாரர்!


கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் நேற்றிரவு(ஞாயிறு) தன்னுடைய தந்தை டி.ராஜேந்தருடன் ஆஜராகியிருக்கிறார் சிம்பு.
"பீப்" பாடலுக்குப் பின் டிசம்பர் மாதம் முதல் தலை மறைவு வாழ்வில் இருந்த நடிகர்  சிம்பு இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். சிம்புமீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் மற்றும் சென்னையில் அடுத்தடுத்த புகார்கள் மாதர் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு பால் முகவர்கள்  தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர்- நிறுவனர் ஆவின் எஸ்.ஏ.பொன்னுச்சாமியும் ஒரு புகாரைக் கொடுத்திருந்தார். இதுதவிர,  பெண்கள் அமைப்பினர் இடைவிடாத போராட்டங்களையும் நடத்தினர். போலீசாரும் சிம்புவைத் தேடிவருவதாக தெரிவித்தனர். கண்றாவி பீப் பாடல்  செய்தியெல்லாம் படிக்க வேண்டி இருக்கிறதே...அதாய்ன் நல்ல ஒரு பழைய அழகிய தமிழ் பாட்டு

மதவெறியர்கள் : நம்மளுக்கு புரியாத எல்லாம் தேசதுரோகம்தாய்ன்

நமக்கு புரியாத விசயமுன்னா அதுங்க (ஜனநாயகம், மதச்சார்பின்மை,
சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை, இலக்கியம், அறிவியல், சமூகவியல், நுண்கலை) எல்லாம் தேசத்துரோகம் தான்!vinavu.com

வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியது யார் ? கழுவமுடியாத பாவக்கறை...

ரோகித் வெமுலாரோகித் வெமுலா – ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவன். அம்பேத்கர் மாணவர் சங்கம் என்ற அமைப்பின் முன்னோடி. சனவரி 17-ஆம் தேதியன்று சக மாணவன் ஒருவனது அறையில் வெமுலா தற்கொலை செய்து கொண்டான். சக மாணவர்கள் யாரும் அவனது முகத்தைக் கூடக் காண விடாமல், வெமுலாவின் உடலை ஒரு அநாதைப் பிணம் போல அப்புறப்படுத்தியது பல்கலைக்கழக நிர்வாகம். வெமுலாவின் தாயை மட்டும் அழைத்து வந்த போலீசு, அவர்களுடைய குடும்ப வழக்கத்தின்படி உடலைப் புதைப்பதற்குப் பதிலாக, அவசர அவசரமாக எரியூட்டியது.
இது தற்கொலைதானா என்று சந்தேகிப்பதற்கான எல்லா முகாந்திரங்களும் இந்த நடவடிக்கைகளில் உள்ளன. இது தற்கொலைதான் என்று நம்புவதற்கான ஆதாரம் ஒன்று உண்டெனில், அது வெமுலாவின் கடிதம். அக்கடிதம் வெளிப்படுத்தும் உணர்ச்சி உண்மையானது.

பிரேமலதா பேச்சு...பேட்டை ரவுடிகளே வெட்கப்படுகிறார்கள்...

தேமுதிக சார்பில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் வேடலில் நடைபெற்ற 'திருப்புமுனை மாநாடு' எதை திருப்பியதோ இல்லையோ பல்வேறு சர்ச்சைகளுக்கு தூபம் போட்டுள்ளது. சட்டசபை தேர்தல் கூட்டணியை அறிவிக்கப்போகிறார் விஜயகாந்த் என்று, உருவாக்கப்பட்ட, எதிர்பார்ப்போடு, வேடலில் பல ஆயிரம் தொண்டர்கள் மத்தியில் கூடியது திருப்பு முனை மாநாடு. கட்சி தலைவர் விஜயகாந்த் கூட்டம் தொடங்கியபோது வரவில்லை என்றாலும், அவர் இடத்தில் நின்று மாநாட்டை நகர்த்திக்கொண்டிருந்தது பிரேமலதா விஜயகாந்த்தான்.
தெறிக்கவிட்ட பிரேமலதா மாநாட்டில் விஜயகாந்த் பேச்சைவிட, பிரேமலதா பேச்சுதான் ரொம்ப ஷார்ப்பாகவும், தொண்டர்களை தட்டி எழுப்புவதாகவும் இருந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்களை மொத்தமாக பார்த்த உணர்ச்சி மிகுதியிலோ என்னவோ, பிரேமலதா வரம்பு மீறி வார்த்தைகளை தெறிக்கவிட்டார் ஜெயலலிதாவை தாக்குவதாக எண்ணிக்கொண்டுகொஞ்சம் கூட நாகரீகம் இன்றி மோசமான வார்த்தைகளை வாந்தி எடுத்துள்ளார்

ரஜினிகாந்த் வருவார் - பொன்.ராதாகிருஷ்ணன்: விஜயகாந்த் கூட்டணியில் உள்ளார்

விஜயகாந்த் கூட்டணியில் உள்ளார்; ரஜினிகாந்த் வருவார் - பொன்.ராதாகிருஷ்ணன் விஜயகாந்த் பாஜக
கூட்டணியில்தான் உள்ளார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவை பெற பாஜக முயற்சி செய்யும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.;சென்னை புரசைவாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. பாஜக மதவாத கட்சி என்று பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். பாஜகவில் ஏராளமான முஸ்லிம் சகோதர-சகோதரிகள் இணைந்திருக்கிறார்கள்.. அப்புறம் ஏனுங்க ரஜனி விஜயகாந்த் குண்டுமணி கோமளவல்லின்னு நாயா பேயா அலையுறீங்க? வெக்கமாயில்லை?

வங்கதேசத்தில் இந்து மதகுரு வெட்டிக்கொலை

வங்கதேசத்தில் இந்து மதகுரு ஒருவர் தனது மடத்தில் வைத்து ஞாயிறன்று
வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.அந்த கொலை தொடர்பில் 3 பேரை கைது செய்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டுவரும் வங்கதேச ஜமாத்துல் முஜாஹிதீன் என்னும் தடை செய்யப்பட்ட இஸ்லாமியவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகிறார்கள்.அந்த மதகுருவான ஜகதீஸ்வர் ராய் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பஞ்சாகார்க் மாவட்டத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

விஜயகாந்த்துடன் முதல் சுற்றுப் பேச்சு முடிந்து விட்டதாக தமிழிசை தகவல்!

சென்னை: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை விஜயகாந்த் தெளிவாகச் சொல்லவில்லை. அவர் திமுக மற்றும் பாஜகவுடன் ஒரே நேரத்தில் பேரம் பேசி வருவதாக கூறப்படும் நிலையில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழிசை. அப்போது இதுகுறித்து அவர் கூறுகையில், தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் கூட்டணி பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை. விஜயகாந்த் உடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது.  2014ல் அமைந்த பாஜக கூட்டணியை மீண்டும் அமைக்க முயற்சி செய்கிறோம். பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.

தினமலர்: ம.தி.மு.க.,வை இழுக்க அ.தி.மு.க., முயற்சி...ரகசிய அழைப்பு....?

தி.மு.க.,- - காங்., கூட்டணிக்கு, கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரசாரம் செய்வதற்காக, ம.தி.மு.க.,வை இழுக்க, அ.தி.மு.க., தலைமை காய் நகர்த்துகிறது. கடந்த, 2009ம் ஆண்டு, லோக்சபா தேர்தலுக்கு முன், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற காங்., தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்தது.அதே நேரம், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் உச்சக்கட்ட போர் நடந்தது. மத்திய அரசு தரப்பில் இருந்து, இலங்கை ராணுவத்திற்கு உதவிகள் செய்வதாக புகார் எழுந்தது. இதை எதிர்த்து, தமிழகத்தில் ம.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும், காங்., - -தி.மு.க., --வி.சி., இணைந்து தேர்தலை சந்தித்தன. இத்தேர்தலில், அந்த கூட்டணிக்கு வெற்றியும் கிடைத்தது.  அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு பொங்குது அன்பு மனசு கண்ணுக்கு நூறு வயசுன்னு வைக்கோ பாடினாலும் பாடுவார்...? 

ஒப்புதல் வாக்குமூலம்: திமுக–காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிப்பது சந்தேகம்: பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக – காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிப்பது சந்தேகம் என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.  தேமுதிக மாநாட்டில் விஜயகாந்தை ‘கிங்’ ஆக்க வேண்டும் என்று அக்கட்சித் தொண்டர்கள் கூறியுள்ளனர். இதற்கு நாங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால் தேமுதிக எங்கள் கூட்டணியில்தான் உள்ளது. முதல்வர் வேட்பாளரை அறிவித்த கட்சிகள்தான் இதற்காக கவலைப்பட வேண்டும். சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகியுள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் மண்டபத்தில் ஞாயிறன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

திமுக காங்கிரஸ் கூட்டணியை உடைக்க.....உளவுத்துறை Full Gearஇல்?

திமுகவோடு எந்தக் கட்சியும் கூட்டணி அமைத்துவிடக் கூடாது என்பதற்காக
உளவுத் துறையுடன் இணைந்து எதிரிகள் சதி செய்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடக்கவுள்ளது. விருப்ப மனு அளித்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் திமுகவுக்காக உழைத்தவர்கள். பலர் கட்சிக்காக போராடி சிறை சென்றவர் கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

கச்ச தீவு திருவிழா.....தமிழ் சிங்கள மலையாள பக்தர்கள் சுமார் 7 ஆயிரம்....


கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நேற்றுடன் முடிந்தது. இதில் இரு
நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அந்தோணியார் ஆலய திருவிழா இந்தியா- இலங்கை இடையே நடுக்கடலில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல பதிவு செய்திருந்த பக்தர்கள் அனைவரும் நேற்று முன்தினம் விசைப்படகுகள் மூலம் கச்சத்தீவுக்கு சென்றனர். இதேபோல் இலங்கையில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் பிளாஸ்டிக் படகுகள் மூலம் கச்சத்தீவுக்கு வந்து இருந்தனர். விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மாலை கொடி ஏற்றப்பட்டது. பின்னர், சிலுவைப்பாதை திருப்பலி பூஜையும், தேர்பவனியும் நடைபெற்றது.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேமுதிகவைச் சேர்ந்த 8 பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ததையடுத்து, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் பிரதான கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தைவிட (23 இடங்கள்) அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. விஜயகாந்த் 14-வது பேரவையின் எதிர்க்கட்சி தலைவரானார்.

டுபாக்கூர் : ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் ! – இதுவரை தயாரிக்கப்படவோ, அசெம்பிள் செய்யப்படவோ இல்லை!!

edit feb 21Freedom 251 என்ற பெயரில் அறிவி‌க்கப்பட்டுள்ள உலகின் மிகக் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க முதல் இரண்டு நாள்க‌ளில் 5 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 25 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக விரைவில் வழங்கப்படும் என்று நொய்டாவைச் சேர்ந்த Ringing Bells நிறுவ னம் தெரிவித்துள்ளது. ரிங்கிங் பெல் நிறுவனத்தை உருவாக்கியவர், மோகித் குமார் கோயல். இவரோட அப்பா ராஜேஷ் கோயல், உ, பி. ஷாம்லி மாவட்டம் கர்கிபுக்தாவில், தக்கனூண்டு மளிகைக் கடையை நடத்தி வருகிறார். டெல்லியில் உள்ள அமிட்டி பல்கலையில் பொறியியல் பட்டம் படிக்கும் வரை, ஊரில், தன் அப்பாவுக்கு உதவியாக மளிகைக் கடையில் வேலைபார்த்தார் மோகித் குமார்.

மீண்டும் சமஸ்கிருதத் திணிப்பா? ‘விடுதலை’யை சுட்டிக்காட்டி கலைஞர் கண்டனம்

வரும் கல்வியாண்டு முதல் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் கட்டாயப் பாடமாக சமஸ்கிருதம் கொண்டு வருவதை கண்டித்தும், வழக்கிழந்த சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதைக் தவிர்க்கவும், பல கோடி மக்களிடையே உயிரோட் டத்துடன் இருந்து வரும் பல்வேறு மொழிகளை பாதுகாத்திட வலியுறுத்தி திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (21.2.2016) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பா.ஜ.க. அரசு 2014ஆம்  ஆண்டில்  அமைந்ததற்குப் பிறகு, அடிப்படை வாதமான இந்துத்வாவின் அடை யாளமாகிய   சமஸ்கிருத  மொழியைத் திணிப்பதில் வேண்டுமென்றே  பிடிவாதமாக இருக்கிறது.  மத்திய அமைச்சர்களில் ஒரு சிலரும், அவர்களுக்குத் துணையாக சில அதிகாரி களும் இணைந்து சமஸ்கிருத மொழித்  திணிப்பை  இதுவரை மறைமுக நோக்கமாகக் கொண் டிருந்தவர்கள், தற்போது முகமூடியைக் கழற்றி விட்டு வெளிப்படையாகவே அத்தகைய முயற்சிகளில் வேக மாக  ஈடுபட்டு வருகிறார்கள்.

சரத்குமார் :எவ்வளவு சீட் கொடுத்தாலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது..என்னா நேர்மை?


நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.கூட்டத்தில் பேசிய அவர், சமத்துவ மக்கள் கட்சியை அதிமுக கருவேப்பிலையை போல் பயன்படுத்தியது. இனி எவ்வளவு சீட் கொடுத்தாலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. கூட்டணி தர்மம் குறித்து தெரியாதவர்கள், ஏன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்.நேற்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்துவிட்டது. இனி ஒரு சிறந்த ஆட்சி அமைவதற்கு நாம் எப்படி பயணிக்கப் போகின்றோம் என்று முடிவு எடுக்க வேண்டும்.கடைசி பேருந்து ஆட்டோ கட்டைவண்டி எல்லாத்துக்கும் காத்திருந்து விட்டு  சீ சீ இந்த அதிமுக புளிக்கும்

அம்மாவுக்கு தெரியாமலா திறந்தது கம்மா?....பாட்டுக்கு தோழர் கோவன் மீண்டும் கைதாவாரா?



விஜயகாந்த் கேள்வி பதில் தொகுப்பு....டங்கு டக்கு டா...என்ன ஒரு தெளிவான பேச்சு நாடு வெளங்கிடும் .

விஜயகாந்துக்கு தான் , ஊடகங்களை விட எதிர் கட்சி என்ற முறையில் ஆட்சியை கேள்வி கேக்கும் அதிகாரத்தை அரசியல் அமைப்பு வழங்கி உள்ளது இவர் எதிர்கட்சி தலைவர் ஆகி சாதித்தது என்ன ..?

உதாரணம் .... ஊடக கேள்வியும் ,, பதிலும் 
கேள்வி ; தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது ? பதில் : சட்டம் ஒழுங்கு மோசம் ,, ரோடு எல்லாம் மிக மோசமா இருக்கு , என் வண்டிக்கு 2 புது டயர் போட்டு இருக்கேன் , 
இந்த பேட்டி டெல்லியில கேள்வி ; தமிழகத்தில் வளர்ச்சி எப்படி இருக்கு ? பதில் ; அதுவெல்லாம் என்னது , அதுவெல்லாம் எனக்கு தெரியாது , அத நான் படிக்கல சார் 
கேள்வி ; வெள்ள நிவாரணம் பற்றி .. பதில் ; அந்த அம்மாகிட்ட போய் கேளு கேள்வி ; இந்த நடப்பு பாராளுமன்ற கூட்ட தொடரில் காவிரி மேலாண்மை குறித்து உங்க கருத்து பதில் ; ADMK ஆதரிக்கும் எந்த கருத்தையும் , விசயத்தையும் நான் ஆதரிக்க மாட்டேன் 
கேள்வி ; தமிழக அரசியல் பற்றி ... ? பதில் ; போயா நான் பேப்பர் படிக்கல , என் கிட்ட வந்து கேட்டு கிட்டு 

சனி, 20 பிப்ரவரி, 2016

பொன்.ராதாகிருஷ்ணன்: கடலில் மூழ்கும் கப்பலுக்கு கப்டன்......? விஜயகாந்தை விட ஜெயலலிதாவே பெட்டர்?

கடலில் மூழ்கும் கப்பலுக்கு கேப்டன் செல்வாரா என கேள்வி எழுப்பினர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியாவில் தயாரிப்போம் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி அமைத்தே தேர்தலை;க் சந்திக்கவிருக்கின்றன.

வைகோ சாத்தூரில் போட்டி? நாயுடு வாக்குகள் கைகொடுக்குமாம்...கடந்த தேர்தலில் திமுகவை விட வைகோவுக்கு அதிக...

மதிமுக பொதுச்செயலர் வைகோ இந்தமுறை சாத்தூர் சட்டப் பேரவைத்
தொகுதியில் போட்டியிடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக, தேமுதிக கூட்டணியில் போட்டியிட்ட வைகோ 2,61,143 வாக்குகள் பெற்று திமுகவை மூன்றாமிடத்துக்கு தள்ளி னார். அந்தத் தேர்தலில் சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவை 5,724 வாக்குகள் பின்னுக்குத் தள்ளி, 45,823 வாக்குகள் பெற்றார். இந்த கணக்குகளை வைத்து சாத்தூர் தனக்கு சாதகமாக இருக்கும் என அவர் கணக்குப் போடுவதாகச் சொல் லப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக தலைமைக் கழகப் பொறுப்பாளர் ஒருவர், ’’திமுகவில் இருந்த காலம் தொட்டே பெரும்பாலும் விருதுநகர் மாவ ட்டத்தை மையப் படுத்தியே தேர்தல் களம் கண்டுவரும் வைகோ, இம்முறை சாத்தூர் தொகுதியை விரும்புவதற்கு சாத்தூர் தொகுதியில் நாயுடு சமூகத்தினர் கணிசமாக இருப்பதும் ஒரு காரணம்.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சினிமா ஆண்கள்

webdunia.com தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சூப்பர் நடிகரின் மாப்பிள்ளையும் முன்னணி ஒல்லிக்குச்சி நடிகருமான ஒருவர் பற்றிய கிசுகிசு கோடம்பாக்கத்தில் அனலாக பறக்கிறது. சினிமாவில் அந்த மாதிரி விஷயங்கள் சகஜம் தான் என்றாலும், பல நடிகர்கள் பற்றிய விஷயங்கள் கிசுகிசுவோடு பிசுபிசுத்து போகும் ஆனால் இந்த மாப்பிள்ளை நடிகர் பற்றிய விவகாரம் ரொம்பவே ஓப்பனாக பேசப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மாப்பிள்ளை நடிகரின் அந்த மனம் கவர்ந்த நடிகை வேறு யாரும் இல்லைங்க சமீபத்தில் தமிழ் சினிமாவுக்கு கேரளாவில் இருந்து இறக்குமதியான கீர்த்தமான ஆண் பெயரை கொண்ட நடிகை தான்.

கருப்பாக இருப்பவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல!

உலகமயமாக்கலின் மூலம் இங்கு நுழைந்த கார்ப்பரேட் பேய்கள்,  கருப்பினை நமக்கு அசிங்கமானதாக மூளைச் சலவை செய்து வெள்ளை நிறத்தைப் பெற களிம்புகளை நோக்கி ஓட வைத்தன. கருப்பாக இருக்கும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வினை ஏற்படுத்தி இருப்பவை இந்த காஸ்மெடிக்ஸ். ஏழு நாட்களில் சிகப்பழகு என்ற விளம்பரம் பொய் என்று தெரிந்தும் அதனை வாங்க வைத்திருப்பதன் மூலம் நம்மை ஏமாளிகளாக்கி கொழுத்து பெருத்திருக்கின்றன இந்தப் பெருநிறுவனங்கள்.
என்னதான் நாம் நவநாகரீக மனிதர்களாக மாறி இருந்தாலும், நமது உடையும் பேச்சும் மாறி இருக்கும் அளவுக்கு நமது மனநிலை மாறவில்லை என்பதே உண்மை. அதில் முக்கியமானது இந்த நிறம். 'சிவிலைஸ்டு சொசைட்டி' ( Civilized Society )  என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாம், உண்மையில் நிறம் என்ற ஒன்றை காட்டுமிராண்டி தனமாக தூக்கிப் பிடித்துக்கொண்டுதான் நிற்கிறோம். அதுவும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிற வேறுபாடு குறித்த எண்ணம் ஆழமாக வேறூன்றி கிடக்கிறது.

JNU கண்ஹயா குமாரின் தேசவிரோத விடியோ போலி....பாஜக கும்பலின் தில்லுமுல்லு அம்பலம்

ஜெஎன்யு மாணவர் சங்க தலைவர் கண்ஹையா குமார் கைது செய்யப்பட்ட பின், சமூக வலைத்தளங்களிலும், சில தொலைகாட்சி சேனல்களிலும் பரவிய வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த வீடியோக்களை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
கண்ஹயா குமார், கைது செய்யப்பட்ட போது, தேசத்திற்கு எதிராக அவர் கோஷம் எழுப்பியதற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டது.

விஜயகாந்த் கூட்டணி முடிவை காஞ்சிபுரத்திலும் அறிவிக்கவில்லை.....ஏரியா விற்பனைன்னா லேசா?

மக்களே மக்களே கிங்கா இருக்கணுமா கின்மேக்கரா இருக்கனுமா ?  அப்புறம் முடிவை அறிவிக்கிறேன் என்றார் சேலம்: காஞ்சிபுரத்தில் நடக்கும் தே.மு.தி.க., மாநாட்டில் பங்கேற்க
நீண்ட இழுபறிக்கு பின், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, 41 தொகுதிகளை பெற்றார். அதில், 28 இடங்கள் கிடைத்தது. ஓரிரு மாதங்களில் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டு, அங்கிருந்து வெளியேறினார். தற்போது, 2016 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சியும் காத்திருக்கிறது. 'தி.மு.க.,வுடன் கூட்டணி சேரலாம்' என, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூறினாலும், முடிவு எடுப்பதில் விஜயகாந்த் குழப்ப நிலையில் இருக்கிறார் என கூறப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணியா, பா.ஜ.,வா என்ற நிலையில் தான் அவர் உள்ளார் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.மக்ஸிமம் தொகுதிகளை பறிக்ககணும் நன்னா குடிக்கணும்  பிரேமலதா சந்தோசமா இருக்கணும் சுதீஷ் டெல்லிக்கு போகணும் அப்புறம் சு.சாமிகிட்ட கேக்கணும் ...இதாங்க நம்ப கொள்கை 

பிரேமலதா சாமியாட்டம்....ஜெயலலிதாவே உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே....

காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் மிக மோசமாக விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வேடலில் நடந்த தேமுதிக மாநாட்டின்போது நீண்ட உரையாற்றினார் பிரேமலதா விஜயகாந்த் தனது பேச்சின்போது அவர் தமிழக அமைச்சர்களை சரமாரியாக சாடினார். அடிமைகள் என்று அழுத்தம் திருத்தமாக பேசினார். a மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை நீயெல்லாம் மனுஷனா என்று காட்டமாக கேட்டார். யுபிஎஸ் என்றார். உச்சகட்டமாக முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சித்தார் பிரேமலதா. ஜெயலலிதாவை ஒருமையில் பேசிய அவர் உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும் என்று அவர் பேசியதுதான் உச்சகட்ட மோசமான பேச்சு.நம்மளுக்கு என்னவோ இது ஒரு வகை  ஏமாற்றத்தின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது....திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டதால் சு சாமி ரொம்ப நொந்து போய்விட்டார் அதாய்ன் இவுங்க சாமியாடுறாய்ங்க?இப்ப திமுகவை குஷிப்படுத்த இந்த டிராமா...முந்தி அதிமுகவை குஷிப்படுத்த கலைஞர் மீது வசைமாரி.....ரொம்ப கேவலமாக  அரசியல் பண்றாய்ங்க  

அமைச்சர் ரமணா ஆபாச வாட்சாப்.....அமைச்சு,கட்சி பதவிகள் அனைத்தும் காலி

அமைச்சரவையில் இருந்தும், கட்சி பொறுப்பிலிருந்தும் பி.வி. ரமணா நீக்கம்: ஜெ. அறிவிப்பு தமிழக அமைச்சரவையில் இருந்து பி.வி.ரமணா நீக்கப்பட்டுள்ளார். ரமணா வகித்து வந்த பால்வளத்துறையை அமைச்சர் மோகன் கூடுதலாக கவனிப்பார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார் திருவள்ளுர் மேற்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் ரமணா நீக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படும் வரை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் கவனித்துக்கொள்வார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். திருவள்ளுர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினரான பி.வி.ரமணா, அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவது இரண்டாவது முறையாகும். nakkheeran,in