திங்கள், 22 பிப்ரவரி, 2016

ரஜினிகாந்த் வருவார் - பொன்.ராதாகிருஷ்ணன்: விஜயகாந்த் கூட்டணியில் உள்ளார்

விஜயகாந்த் கூட்டணியில் உள்ளார்; ரஜினிகாந்த் வருவார் - பொன்.ராதாகிருஷ்ணன் விஜயகாந்த் பாஜக
கூட்டணியில்தான் உள்ளார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவை பெற பாஜக முயற்சி செய்யும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.;சென்னை புரசைவாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. பாஜக மதவாத கட்சி என்று பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். பாஜகவில் ஏராளமான முஸ்லிம் சகோதர-சகோதரிகள் இணைந்திருக்கிறார்கள்.. அப்புறம் ஏனுங்க ரஜனி விஜயகாந்த் குண்டுமணி கோமளவல்லின்னு நாயா பேயா அலையுறீங்க? வெக்கமாயில்லை?
50 ஆண்டுகளாக அதிமுக, திமுகஆகிய 2 கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது. திமுக, -ஏன் அதை இலவசமாக வழங்கவில்லை என்றால், இலவசமாக வழங்கினால் நீங்கள் அதை உரிமையோடு கேட்கமுடியாது. அதுவே நீங்கள் பணத்தை கொடுத்து கேட்க உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஓட்டு போடுவதற்கு தற்போது அனைத்து கட்சிகளும் பணம் தருவார்கள். அப்படி தருபவர்கள் யோக்கியமாக அதை சம்பாதிக்கவில்லை. அயோக்கியத்தனமாக சம்பாதித்த பணத்தை தான் உங்களுக்கு தருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.பின்னர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள், விஜயகாந்த், கிங்காக இருக்கணுமா? கிங் மேக்கராக இருக்கணுமா? என்று கேட்டிருக்கிறார். அதுபற்றிய உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், ”ஏறக்குறைய சரியான விஷயத்தை தான் அவர் சொல்லி இருக்கிறார். பாஜகவில் இருந்து எந்த ஒரு முதலமைச்சர் வேட்பாளரையும் அறிவிக்கவில்லை. அவர் யாருக்கு சொன்னாரோ அவர்களுக்கு தான் பொருந்தும். ஆகையால் எங்களுக்கு அது பொருந்தாத விஷயம்” என்றார். >மேலும், பாஜக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவை பெற முயற்சிக்குமா? என்று கேட்டதற்கு, “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 5 கோடிக்கும் மேற்பட்ட அனைத்து வாக்காளர்களின் ஆதரவுகளையும் பெற வேண்டும் என்ற முயற்சிக்கிறோம்.>அந்தவகையில் ரஜினிகாந்தின் ஆதரவை பெற கட்டாயமாக முயற்சிப்போம். திரைப்பட தயாரிப்பில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டிப்பாக அவரை சந்திப்போம்” என்று கூறியுள்ளார்  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: