வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு
ஆதார் அடையாள அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். தில்லியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தை வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சகம் நடத்தி வந்தது. இப்போது அந்த அமைச்சகத்தை மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியை வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்தியது.















