ஞாயிறு, 10 ஜனவரி, 2016

கே.என்.நேருவுக்கு எதிராக திருச்சி சிவா ஆதரவாளர்கள் போர்க்கொடி...சமாதானம் செய்த நேரு

திருச்சியில் திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் முன்னாள்
அமைச்சர் கே.என்.நேரு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கே.என்.நேருவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். திமுக பொதுக்கூட்டங்களில் திருச்சி சிவா புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். உடனே கே.என்.நேரு, சரி.. சரி.. இனி வரும் அழைப்பிதழில் போட சொல்கிறேன் என்று சொல்லவும் அனைவரும் கலைந்து சென்றிருக்கிறார்கள். இதற்கு இடையில் தீடீர் என்று கட்சி அலுவலகத்தை வந்து முற்றுகையிட்ட சம்பவம் நேருவின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இதையடுத்து கண்டோன்ட்மென்ட் பகுதியில் உள்ள திருச்சி சிவா வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது பேனர்களை, கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் கிழித்தனர். மேலும், ஏர்போர்ட் அருகே உள்ள காகித அட்டை கம்பெனியின் அலுவலகத்தையும் நேருவின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து இரண்டு பேர் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவில் இருதரப்புக்கும் நடந்த இந்த மோதல் கட்சித் தலைமையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெ.டி.ஆர் nakkheeran,in

கருத்துகள் இல்லை: