சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்வதில் மிக திறமையாக செயல்படும் தமிழக சட்டமன்ற சபாநாயகர், தமது சாதனை இலக்கை எட்டிக்கொண்டு இருக்கிறார். சாதனை முயற்சியாக நேற்று, 19 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை 19 பேர், இரண்டு நாட்களுக்கு, சட்டசபை நடவடிக்கையிலிருந்து, சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.
இவர்கள். சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டார்கள் என்பதே ட்ரபிள். அவர்கள் ஏன் பேச வேண்டும்? அமைச்சர் பேசியதற்கு பதில் கூற முயன்றார்கள்.
சட்டமன்றத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் பேசியபோது, “காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில், தி.மு.க. துரோகம் செய்துவிட்டது’” என்று ஒரு ‘பிட்’டை தூக்கி போட்டார்.
இதற்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ. துரைமுருகன், “தி.மு.க. அரசு என்ன துரோகம் செய்தது என்பதை, பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் கூற வேண்டும்; அவரின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்கிறேன்” என்றார்.
அமைச்சர் ராமலிங்கம் பதில் கூற ரெடியாக வரவில்லையோ, அல்லது, பதிலடி அருமையாக இருக்காதோ என்று தெரியவில்லை. அவரை கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க, அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட சில அமைச்சர்கள் முனைந்தனர். இறுதியில், சபை முன்னவரான அமைச்சர் பன்னீர்செல்வம் பதில் கூறினார்.










.jpg)

