சனி, 6 ஏப்ரல், 2013

தமிழ் படங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட வேண்டும்: அமைச்சர் ரோஹன திஸாநாயக்க!

தென்னிந்திய சினிமா கலைஞர்களின் திரைப்படங்கள் இலங்கையில் திரையிடப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என பிரதிப் போக்குவரத்து அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  உலக வரைப்படத்தில் இருந்த இலங்கையை அகற்றும் அளவிற்கு தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் மாறியுள்ளனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் முழு உலகத்திற்கு எடுத்து கூறியுள்ள நிலையில்,  ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித்குமார், சரத்குமார் போன்ற நடிகர்கள் இணைந்து உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் இந்த நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவதை தடைசெய்ய வேண்டும் இவ்வாறான காட்போர்ட் வீரர்களை சூப்பர் ஸ்டார்களாக கருதிய காலத்தை நாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் திஸாநாயக்க கூறியுள்ளார்./poonththalir.blogspot.com/

கருத்துகள் இல்லை: