சனி, 17 மார்ச், 2012

Rolls Roys மல்லிகா ஷெராவத்தின் 'பின்புலம்' சரியில்லை

உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டாக ரோல்ஸ் ராய்ஸ் திகழ்கிறது. அரசப் பரம்பரையினர், பிரபல நட்சத்திரங்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டும்தான் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்க முடியும் என்ற நீடிக்கிறது.
இதற்கு பணம் இருந்தால் மட்டும் போதாது, தகுதியும் அதாவது தக்க பின்புலமும் வேண்டும் என்பது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கொள்கையும் ஒரு காரணமாக இருக்கிறது.

250 கோடி மோசடி: நடிகை ஜெனிலியா உள்பட 5 பேர் மீது வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

ஹைதராபாத் கட்டுமான நிறுவனத்தின் ரூ 250 கோடி மோசடியில், அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கும் நடிகை ஜெனிலியா உள்பட ஐவர் மீது வழக்கு தொடர ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அஞ்சனிபுத்ரா இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தூதராக உள்ளார் நடிகை ஜெனிலியா.
ரூ 250 கோடி நிதி மோசடியில் சிக்கியுள்ளது இந்த நிறுவனம். வீடுகட்டித் தருவதாகக் கூறி 500 பேரிடம் பெரும் தொகையை வசூலித்தது இந்த நிறுவனம்.

Actor ரித்தீஷ் எம்.பி.யை தேடி போலீசார் கேரளா விரைந்தனர்


தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடத்தல் வழக்கில் ரித்தீஷ் எம்.பி.யை தேடி போலீசார் கேரளா விரைந்தனர். இதுதொடர்பாக 20 இடங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிரவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக ரித்தீஷ் எம்.பி. உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் ரித்தீஷ் எம்.பி. உள்ளிட்டோரை தேடிவந்தனர்.

பணம் குடுத்தாதான் ஓட்டுப்போடுவோம்! - சங்கரன்கோவில் பெண் வாக்களாளர்கள்

Votters

சங்கரன்கோவில்: ஓட்டுக்கு பணம் வழங்க கோரி அதிமுக தேர்தல் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டதால் சங்கரன்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
பணம் கொடுக்காவிட்டால் அதிமுகவிற்கு ஓட்டுபோடமாட்டோம் என்று அவர்கள் கூறியதால் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.

குஷ்புவுக்கு கமல் தந்த இன்ப அதிர்ச்சி!

நடிகை குஷ்புவுக்கு, கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சில தினங்களுக்க முன்னர், நடிகை குஷ்பு வீட்டிற்கு போன் வந்திருக்கிறது. போனை எடுத்த குஷ்புவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, நான் கமல்ஹாசன் பேசுகிறேன். விஸ்வரூபம் சூட்டிங்கிற்கு கொஞ்ச வர முடியுமா என்று கமல் கேட்க, குஷ்புவும் கமலின் போன் அழைப்பை ஏற்று சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு குஷ்புவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா...?
இதோ குஷ்புவே சொல்கிறார் கேளுங்கள், நான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற போது அங்கு கமல்ஹாசன் கதக் டான்ஸ் கற்றுக்கொண்டு இருந்தார். அவருக்கு பிரபல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜ், கதக் நடனம் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தார். எனக்கு கதக் டான்ஸ் தெரியும், அதுமட்டுமல்ல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜாவையும் ரொம்ப பிடிக்கும். அதன் காரணமாகத்தான் எனது நண்பர்(கமல்) எனக்கு போன் போட்டு விஸ்வரூபம் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர வழைத்தார். சூட்டிங் ஸ்பாட்டில் பிர்ஜூ மகாராஜை பார்த்ததும் ரொம்ப ஆச்சர்யமாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. பின்னர் அவரை சந்தித்து சில நிமிடம் பேசினேன். பிர்ஜூவை சந்திக்கும் வாய்ப்‌பை ஏற்படுத்தி கொடுத்து, இன்ப அதிர்ச்சியளித்த கமல்ஹாசனுக்கு எனது நன்றி என்றார்

கோச்சடையானை வீழ்த்தும் சூர்யாவின் மாற்றான்!

சௌந்தர்யா அஸ்வின் இயக்கும் கோச்சடையான் படத்தின் சிறப்பம்சம் Performance Capture Technology தான். ஒரு உயிரினத்தின் அசைவுகளை பதிவு செய்து அதை அப்படியே வேறு கதாபாத்திரத்திற்கு மாற்றுவது தான் இந்த Performance Capture Technology என்பது. 
இந்த யுக்தியைத் தான் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தில் உபயோகிக்கிறார்சௌந்தர்யா.

எதிர்க்கட்சிகளை டெபாசிட் இழக்க செய்யுங்கள்: ஜெயலலிதா வேண்டுகோள்

சென்னை:""எதிர்க்கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்'' என, சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை தீட்டி, மக்களிடையே எடுத்துச் செல்வது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவம். இதற்கு மாறாக, தி.மு.க., ஆட்சியில் குடும்ப நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, திட்டங்களைத் தீட்டினர். இதனால், கருணாநிதி தலைமையிலான ஆட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் வெளியேற்றப்பட்டு அ.தி.மு.க., ஆட்சி மலர்ந்தது.அ.தி.மு.க., பொறுப்பேற்றதிலிருந்து, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா அரிசி, முதியோர் உதவித் தொகை உயர்வு, காப்பீட்டுத் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் இணைப்பு, மாணவர்களுக்கு விலையில்லா மடி கணினி என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திராவிட குறிக்கோளில் இருந்த இடம் மாறிவிட மாட்டோம்

சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலைஞர்
அண்ணா தான் எங்களுக்கு ஆசிரியர். அவரை உருவாக்கியவர் தந்தை பெரியார். எக்காரணம் கொண்டும் திராவிட குறிக்கோளில் இருந்த இடம் மாறிவிட மாட்டோம் என்று சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலைஞர்  உரையாற்றினார்..


சங்கரன்கோவில் தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து சங்கரன்கோவில் வடக்கு ரதவீதி, மேற்கு ரதவீதி சந்திக்கும் இடத்தில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்துக்கு மத்திய மந்திரியும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பேசியதாவது:-
சங்ரன்கோவில் இடைத்தேர்தல் பொதுக்கூட்டம் போல் அல்லாமல், ஒரு பிரசார மாநாடு நடைபெறுவது போன்று இந்த பொதுக்கூட்டம் அமைந்து இருக்கிறது.

சங்கரன்கோவிலில் :242 வாக்குச்சாவடிகளும் கேமரா

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,   ‘’சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 18-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவையடுத்து சங்கரன்கோவிலில் பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள், வீடியோ படக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் தொகுதியை சுற்றி வந்து கண்காணிப்பார்கள்.
சங்கரன்கோவில் தொகுதியில் அமைந்துள்ள 242 வாக்குச்சாவடிகளிலும் உள்ள வீடியோ படப்பிடிப்பு மற்றும் `வெப் காஸ்டிங்' மூலம் திருநெல்வேலியில் இருந்தபடி மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்தும் கண்காணித்து கொண்டிருப்பார்கள்.
அங்கு நியாயமாகவும், நேர்மையுடனும் தேர்தல் நடத்துவதற்கு பந்தோபஸ்து பணிக்காக மத்திய ஆயுதப்படை போலீசார் 6 கம்பெனிகள் வந்துள்ளனர்.
இத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை இந்தப் படையின் ஒரு கம்பெனி இங்கு தங்கியிருக்கும்’’என்று கூறியுள்ளார்.

ஒரே வீட்டில் 3 சிறுவர்கள் மர்ம மரணம்

குஜராத் மாநில ராஜ்காட் மாவட்டத்தின் ஜாஸ்டான் பகுதியில் வசிக்கும் கானா புரியா, டோய்னா தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் வசிப்பதற்கு இவர்களுடைய முதலாளியின் பண்ணையில் ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
நேற்று மதியம் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து திரும்ப வந்து பார்த்தபோது ராதா(7), ரிங்கு(4) மற்றும் சஞ்சய்(9) மூன்று குழந்தைகளும் இறந்து கிடந்தனர். இவர்கள் விஷம் அருந்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது முடிந்தபிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என இந்த வழக்கை விசாரிக்கும் அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.என். பாட்டீல் கூறியுள்ளார்.

வெள்ளி, 16 மார்ச், 2012

2 லட்சம் வருமானம் வரை வரி இல்லை: ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30% வரி!

இன்று 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நாம் எவ்வளவு ஊதியம் வாங்கினாலும் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை வரி இல்லை.
ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்துக்கு 10% வருமான வரி விதிக்கப்படும்.

கலைஞருக்கு அழகல்ல தீக்குளிப்பேன், உயிர் கொடுப்பேன் போன்ற

இன்னமும் தீக்குளிப்பேன், உயிர் கொடுப்பேன் என்பன போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் முதிர்ச்சி அடைந்த கலைஞருக்கு அழகல்ல!

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. ஸ்டாலின், வைகோ, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா தெலுங்கு மொழியில் பேசி, வாக்குகளை வசீகரிக்கும் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார். அவர் விட்ட பணியை அவருடைய அமைச்சர்கள் செய்துவருகின்றனர்.
அவரைத் தொடர்ந்து திமுக தலைவர்  சங்கரன்கோவில் சென்றார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட மேடை தொடர்பாக பிரச்னை எழுந்தது. பிறகு அமைச்சர் அழகிரி, தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரைச் சந்தித்துப் பேசியபிறகு பிரச்னை தீர்ந்தது.

தமிழ்நாட்டுல மாமி ஆட்சி நடுக்குதுன்னு ஐயருங்கோ மட்டும் துள்ளல

நித்தியானந்தா
சாருவுக்கு காச விட்டெறிஞ்சு பி.ஆர்.வோ வேலைய பாக்கச் சொன்ன மைனர் சாமி அமெரிக்காகாரனுக்கு சில கோடிய வுட்டெறிஞ்சு கிளீயரன்ஸ் சர்டிபிக்கேட் வாங்கியிருக்கான்.









மக்கா,
நாட்டுக்குள்ள பல சங்கதிக சூடா நடக்கது தெரியுமுல்லா! இன்னைக்குத்தாம்லே பிரணாப் முகர்ஜி நம்ம நாட்டோட பட்ஜட்ட தாக்கல் செய்யுதாறு! அதுல எத்தன மக்க தாலிய அறுக்கப் போறாரோ தெரியல. முந்தா நேத்து ரயில்வே பட்ஜெட்டுல சாதாரண மக்கமாரு டிக்கெட்டை எக்குத் தப்பா ஏத்திவிட்டுறுக்காகடே. அதுல அது கட்சி மந்திரிய மாத்தணும்னு ஆத்தா மம்தா பானர்ஜி அம்சமா காமடி பண்ணிக்கிட்டு இருக்கத பாத்தேயில்லா!
சங்கரன் கோவில்ல பிரச்சாரம் முடிஞ்சாலும் 32 மந்திரிமாரு அவனவனுக்கு வாக்கப்பட்ட வட்டத்துல வாக்கு குறைஞ்சா அம்மா பிரிச்சு மேஞ்சுருமேனு பஸ் ஸ்டாண்டு பாய் கடை பிரியாணியை தின்னு செரிக்காம கிடக்கானுகல்லா! இதுல நாங்களும் பஜாருல்ல கடை வச்சுருக்கம்லான்னு தி.மு.க தாத்தா, ம.தி.மு.க மாமா, தே.மு.தி.க சித்தப்புன்னு அல்லா தலைவருமாரும் அங்கனேயே சுத்தி சுத்தி வந்தாகல்லா!
இதெல்லாம் வுட்டுட்டு நித்தி மாமாவைப் பத்தி எழுதணுமான்னு அண்ணாச்சின்னு வினவுக்காரவுக கேட்டாக. இருந்தாலும் பயபுள்ள ஓவரா பிலிம் காட்டுதான், அவன சும்மா வுடலாமான்னு நாந்தேன் எடுத்துச் சொன்னேன்.
இந்த லட்சணத்துல மைனர் சாமி நித்தியானந்தா அமெரிக்காரனோட ஆதாரம், கீதாரம்னு அறிவாளி பத்திரிகை ஹிந்துவுல ஏதோ பினாத்தியிருக்கான்னு கொஞ்சம் எட்டிப் பாத்தேன். அந்தக் கதயை கேளுலே!

லட்சக்கணக்கில் பெருகிய அலையாத்தி..!

ஒரு ஆராய்ச்சியும்... ஆச்சரியமும்...
கரு. முத்து
 
தமிழகத்தில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற சுனாமி தாக்குதலை அடுத்து... 'அலையாத்திக் காடுகளைப் பெருக்க வேண்டும்’ என்கிற கோரிக்கை வலுவாக எழுந்தது. இன்றுவரையிலும் அதை அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால், இந்த சுனாமி தாக்குதலுக்கு முன்பாகவே, இம்மரங்களின் அருமையை உணர்ந்த ஒரு தனிமனுஷி, சீர்காழி பகுதி கடற்கரையோர கிராமத்தில் ஆயிரக்கணக்கில் அலையாத்தி மரங்களை நட்டு வைக்க... அதன் அருமையை உணர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் அலி உசேன், அந்த மரங்களை தொடர்ந்து நடவு செய்ய... இன்று லட்சக்கணக்கில் பெருகி நின்று... அப்பகுதியையே அலையாத்தி வனமாக மாற்றி வைத்திருக்கின்றன அந்த மரங்கள்!
ஆங்கிலத்தில் 'மேங்ரோவ்' என்றழைக்கப்படும் அலையாத்தி மரங்கள், பல நூறு ஆண்டுகளாக நம் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தன.

மாட்டிக் கொண்ட அதிமுகவினர்!ஓட்டுக்கு பணம் வைகோ வீடு வரை போலீஸ்!



“அட, ஜெயலலிதாவின் கைக்கூலிகளே..” வைகோ வாக்குவாதம்!

இன்று (16.03.2012) கலிங்கப்பட்டியில் வீடு தோறும் ஓட்டுக்கு ரூ.1000 என கொடுத்து வந்த அதிமுகவினர், ஒரு குடும்பத்திடம் “உங்க வீட்ல ஏழு ஓட்டு இருக்கு.. இந்தாங்க ஏழாயிரம்..” என்று பணத்தை நீட்டியிருக்கின்றனர்.


அந்தக் குடும்பமோ “பணம் எங்களுக்குத் தேவையில்லை..” என்று மறுத்து விட்டு, இந்தத் தகவலை அதே கிராமத்தில் வீட்டில் இருந்த வைகோ விடம் போய்ச் சொல்லியிருக்கிறது.



இதனைத் தொடர்ந்து, எப்படியாவது கலிங்கப்பட்டியில் மதிமுகவைக் காட்டிலும் அதிக ஓட்டுக்களை வாங்கி விட வேண்டும் என்று மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுக்கு ஏற்ப அங்கு பண மழை பொழிந்து கொண்டிருந்த அதிமுகவினர் 4 பேரை ஊர்க்காரர்கள் பணமும் கையுமாகப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

இந்த தகவலை மேலிடத்துக்குத் தெரிவித்து விட்டு, நேராக வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டுக்குச் சென்றது போலீஸ். “அதிமுகவினரை அடித்துக் காயப்படுத்தி போலீஸிடம் ஒப்படைத்தது உங்கள் வீட்டில் இருக்கின்ற 5 பேர் தான்.. அவர்களிடம் விசாரிக்க வேண்டும்..” என்று அங்கிருந்த வைகோ விடம் கண்டிப்பு காட்டியிருக்கிறார் ஏ.டி.எஸ்.பி. மகேஷ்.

அப்போது ஊர்க்காரர்களும் அங்கு திரண்டு விட, கொந்தளித்து விட்டார் வைகோ. “பிடிச்சுக் கொடுத்தவங்க என் வீட்டுல இல்லை,.. அதுக்காக விசாரணைக்குன்னு என் வீட்ல இருக்கிற அஞ்சு பேரைக் கூட்டிக்கிட்டுப் போயி அரெஸ்ட் பண்ண நினைக்கிறது நடக்காது.

நான் கேட்கிறேன்.. இப்பவும் ஊருக்குள்ள பணம் கொடுத்துக்கிட்டிருக்காங்களே ஆளும் கட்சிக்காரங்க.. அவங்களைப் பிடிக்கிறத விட்டுட்டு, பிடிச்சுக் கொடுத்தவங்களத் தேடி அலையறீங்களே.. உங்களின் கடமை உணர்வு என்னாயிற்று?

ஜெயலலிதா பிரச்சாரத்துகு வந்த போது அவர் பின்னால 1000 காருக்கு மேல வந்துச்சே.. அப்பத்தானே கோடி கோடியா தொகுதிக்குள்ள பணம் வந்துச்சு.. அந்தக் காரையெல்லாம் ஏன் செக் பண்ணல? அட.. ஜெயலலிதாவின் கைக்கூலிகளே..!” என்று ஆங்கிலத்தில் வைகோ பொரிந்து தள்ள.. எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பியிருக்கின்றனர் காக்கிகள்.

Anna நூலகத்தை இடித்தால் தீக்குளிப்பேன்: கலைஞர் எச்சரிக்கை

சங்கரன்கோவில்: ""சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடிக்க முற்பட்டால் நான் தீக்குளிப்பேன்,'' என சங்கரன்கோவிலில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலைஞர் பேசினார்
திராவிடம் என்ற சொல்லை சிலர் பெயரளவுக்கு வைத்திருக்கலாம். ஆனால் தி.மு.க., மட்டுமே அதனை இனவளர்ச்சிக்காக பயன்படுத்தியிருக்கிறது. இந்த தேர்தலை இடைத்தேர்தல் என்பதைவிட, அ.தி.மு.க.,வின் 9 மாத கால ஆட்சியை எடைப்போட்டு பார்க்கும் எடைத் தேர்தல் என கூறலாம். தற்போது மின்பற்றாக்குறையால் மக்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள். "கருணாநிதிதான் தமிழகத்தை இருளாக்கிவிட்டார். நான் வந்தால் ஒளியாக்கிவிடுவேன்,' என கூறியவர்கள் தற்போது ஒளிந்துகொண்டார்கள். தமிழகத்திற்கு கிடைத்த கூடங்குளம் அணுமின் திட்டத்தையும் நிறைவேற்ற மனமில்லை. ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்க வழியிருந்தும் பயன்படுத்த மனமில்லாமல், மக்கள் படும் கஷ்டத்தை பற்றி கவலைப்படாமலும் இருக்கிறார்கள்.

118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது

மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த துணை கலெக்டர், 118 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில், 1988ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை, பல்வேறு மாவட்டங்களில் துணை கலெக்டராக பணியாற்றியவர் நிதிஷ் தாக்கூர். கடந்த ஆண்டு பிப்ரவரியில், முகேஷ் வகேலா என்ற கட்டுமான நிறுவன உரிமையாளரை மிரட்டியது தொடர்பாக, நிதிஷும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, நிதிஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல், ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நிதிஷின் சொத்துகளை கண்காணித்தனர். மகாராஷ்டிராவின், எட்டு நகரங்களில், 26 இடங்களில், 118 கோடி ரூபாய் அளவுக்கு, நிதிஷ் சொத்து சேர்த்துள்ளது தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அவரை கைது செய்ய சென்ற போது, மும்பையின் வில்லிபார்லி பகுதியில் உள்ள சொகுசு பங்களாவிற்கு சென்று, அவர் தாழிட்டுக் கொண்டார். ஊழல் தடுப்பு அதிகாரிகள், கதவை உடைத்து சென்று, அவரை கைது செய்துள்ளனர். துணை கலெக்டராக பணி புரிந்த நிதிஷின் மாத வருமானம், 50 ஆயிரம் ரூபாய்.

மைனாரிட்டி 13,000 பேருக்கு வாழ்வளித்தது: மெஜாரிட்டி அவர்களை வீட்டுக்கு அனுப்பியது: துரைமுருகன்


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் திமுக பிரச்சார பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
இந்த தேர்தல் ஒரு ஆட்சியை மாற்றி அமைக்கக் கூடிய தேர்தல் அல்ல. அபரிதமான மெஜாரிட்டியோடு ஜெயலலிதாவின் ஆட்சி தமிழத்திலே அமைந்திருக்கிறது. இந்த தேர்தலில் அவர்கள் வென்றாலும் அந்தக் கட்சிக்கு புதிய வேகம் வராது. தோற்றுவிட்டாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. < ஆனால் இந்த தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும் என்றால், மீண்டும் நீங்கள் ஆளும்கட்சிக்கே ஓட்டு போட்டால் மறுபடியும் பத்தோடு பதினொன்று என்று ஒரு உறுப்பினர் அந்தப் பக்கம் போய் உட்காருவார். அப்படி உட்காருவதிலே கூட நமக்கு கவலையில்லை. ஆனால் இந்த ஆட்சியின் செயல்பாடுகளை நீங்கள் ஒப்புக்கொண்டதுபோல் ஆகிவிடும்.

84 வயதில் 5வது முறையாக பஞ்சாப் முதல்வரான பர்காஷ் சிங் பாதல்

Parkash Singh Badal
சப்பார்சிரி: சிரோமணி அகாலிதள கட்சித் தலைவர் பர்காஷ் சிங் பாதல் 5வது முறையாக பஞ்சாப் முதல்வராக நேற்று பதவியேற்றார். அவரது மகன் சுக்வீர் சிங் பாதல் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பஞ்சாப் மாநிலத்தில் 2வது முறையாக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதனையடுத்து மாநிலத்தின் முதல்வராக சிரோமணி அகாலிதள கட்சித் தலைவர் பர்காஷ் சிங் பாதல்(84) நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

Aakash 2 tablet ஆகாஷ்-2 டேப்லெட் சிறப்பான துல்லியத்தினை கொடுக்கும்


அடுத்த மாதம் வெளியாகும் ஆகாஷ்-2 டேப்லட்!“ஆகாஷ் டேப்லெட்டின் மேம்படுத்தப்பட்ட மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது,”வாடிக்கையாளர்களின் மத்தியில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்திய உலகின் குறைந்த விலை டேப்லெட்டான ஆகாஷ் செயல்திறனில் சிறப்பாக இல்லை என்று கருத்து எழுந்துள்ளது. இந்த நிலையில், அதிவேக செயல்திறன் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக ஆகாஷ் மாற்றப்பட்டுள்ளது.
ஆகாஷ்-2 என்ற பெயரில் இந்த டேப்லட் வருகிறது. இந்த நிலையில், ஆகாஷ்-2 டேப்லெட் அடுத்த மாதம் வெளியிடப்பட இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
புதிய ஆகாஷ்-2 டேப்லெட் சிறப்பான துல்லியத்தினை கொடுக்கும் திரையினையும், நீடித்து உழைக்கும் பேட்டரியினையும் கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதி வேகத்தில் இயங்க 700 மெகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

வியாழன், 15 மார்ச், 2012

தயாநிதிக்கு சம்மன் ஏர்செல் - மேக்ஸிஸ் டீல்

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, ஏர்செல் - மேக்ஸிஸ் டீலிங்கிற்குப் பின், சன் குழுமத்தில் மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்தது குறித்து நேரில் விளக்கம் அளிக்க (வரும் 20 ம் தேதி ) ஆஜராகுமாறு மாஜி அமைச்சர் தயாநிதி மற்றும் அவருடைய சகோதரர் கலாநிதிக்கு அமலாக்க துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Video Games குழந்தைகள் வன்முறை குணம் கொண்டவர்களாக

வீடியோ கேம்உணர்ச்சி எதுவாயிருந்தாலும் அதன் ஆயுள் குறைவாய் இருக்க வேண்டுமென்பதை வீடியோ கேம் விளையாட்டுக்கள் நிலைநாட்டியுள்ளது. குறுகிய நேர அளவில், காதல், காமம், கொலை வெறி, வன்முறை ஆகிய உணர்ச்சிக் கலவைக்குள் சிறுவர்களை பிடித்துத் தள்ளுவதில் எது வெல்கிறதோ அதுவே சந்தையைக் கைப்பற்றுகிறது.
நீங்கள் சாலையில் இரு சக்கர வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அடர்த்தியான  போக்குவரத்து நெரிசல். திடீரென உங்கள் முன்னே சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டி நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிறார். கீழே சரிந்து சிதறி விழுகிறார். மண்டை பிளந்து ரத்தம் தெறிக்கிறது. உங்களால் அந்தக் காட்சியைப் பார்க்காதது போல கடந்து செல்ல முடியுமா? அல்லது யாரோ அறிமுகமற்ற நபராயினும் கண்ணெதிரே ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் சரிந்து விழுவதை நாம் கண்டு ரசிக்க முடியுமா? ஒரு வேளை இதெல்லாம் ரத்தமும் சதையுமான மனிதர்களாயில்லாமல் ஒரு மெய்நிகர் காட்சியாய் இருக்கும் பட்சத்தில் நாமே தலையிட்டுக் கூடுதல் ரத்தம் சிந்த வைத்து அதை ரசிக்க முடியுமா? முடியாது என்று நீங்கள் சொல்வீர்கள். எனினும் இந்தக் கேள்விகளுக்கு எந்தத் தயக்கமுமின்றி ’முடியும்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

அனாதை என்று ஆசிரியர் திட்டியதால் வேதனை-தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவன்!

தஞ்சை: மற்ற மாணவர்கள் முன்பு தன்னை அனாதைப்பயலா என்று ஆசிரியர் கேட்டதால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவர் தூக்கு போட்டுக் கொண்டார். அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் அலி. தனியார் குளிர்பான நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது மகன் முகமது இத்ரீஸ்(17). அவர் திருவிடைமருதூர் அருகே புளியம்பேட்டையில் உள்ள தனது சித்தி ஷகீலா பானு வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
அண்மையில் நடந்த பள்ளித் தேர்வில் இத்ரீஸ் மிகவும் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதனால் அவரை தமிழாசிரியர் சாரதி கண்டித்துள்ளார்.

மம்தாவும் கலைஞரும் ஒரே சமயத்தில் மிரட்டல் மத்திய அரசு தாங்குமா?

எது நடக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நினைத்ததோ அதுவே நடந்துவிட்டது. ஆம். மமதா பானர்ஜியும்  கலைஞரும்
மத்திய அரசுக்கு எதிராக ஒரே சமயத்தில் களத்தில் குதித்துள்ளனர். இருவருடைய நோக்கமும் வெவ்வேறானவை. ஆனால் செய்யும் காரியம் ஒன்றுதான். மிரட்டல்.
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வைத் தன்னால் ஏற்கமுடியவில்லை. உடனடியாக அவற்றை வாபஸ் பெறவேண்டும் என்றார் மமதா பானர்ஜி. இதில் முரண்நகை என்னவென்றால் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான்.