
மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அந்த நெருக்கடியின் விளைவாக, ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், ( 2006, மார்ச் மாதத்திற்கு பின்) ஏர்செல் நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின.
ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் , ஸ்பெக்ட்ரம் கைமாறியதும், மேக்சிஸ்ஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் 600 கோடியை முதலீடு செய்தது. இந்த முதலீடு என்ன காரணத்தினால் எந்த ரூபத்தில் நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக தேவையான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ,., மற்றும் அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த வழக்கில் தயாநிதி மற்றும் கலாநிதி ஆகிய இரண்டு பேரும் , வரும் 20 மற்றும் 21 ம் தேதிகளில் ஆஜராக அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக