
இதோ குஷ்புவே சொல்கிறார் கேளுங்கள், நான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற போது அங்கு கமல்ஹாசன் கதக் டான்ஸ் கற்றுக்கொண்டு இருந்தார். அவருக்கு பிரபல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜ், கதக் நடனம் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தார். எனக்கு கதக் டான்ஸ் தெரியும், அதுமட்டுமல்ல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜாவையும் ரொம்ப பிடிக்கும். அதன் காரணமாகத்தான் எனது நண்பர்(கமல்) எனக்கு போன் போட்டு விஸ்வரூபம் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர வழைத்தார். சூட்டிங் ஸ்பாட்டில் பிர்ஜூ மகாராஜை பார்த்ததும் ரொம்ப ஆச்சர்யமாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. பின்னர் அவரை சந்தித்து சில நிமிடம் பேசினேன். பிர்ஜூவை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து, இன்ப அதிர்ச்சியளித்த கமல்ஹாசனுக்கு எனது நன்றி என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக