சனி, 14 ஜனவரி, 2012

தில்லியின் தாழ்வு மனப்பான்மை Google Facebook youtube

கூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்

சீனாவில் செய்கிறார்களே  தில்லியின் தாழ்வு மனப்பான்மை 
கூகிள், பேஸ்புக் போன்றவை தத்தம் தளங்களில் உள்ள ‘ஏற்கத்தகாத விஷயங்களை’ (Objectionable materials) நீக்குவதற்கு ஒரு முறையை ஏற்படுத்தாவிட்டால், சீனாவில் நடப்பதைப் போல அவர்களுடைய தளங்கள் தடை செய்யப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் வழக்கு ஒன்றில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதிக்கு தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். கூடவே, கூகிள், ஃபேஸ்புக் இன்னபிற சோஷியல் தளங்கள் பற்றிய புரிதலும் குறைவாக உள்ளது என்றே கருத வாய்ப்புள்ளது. அவர் எதிர்பார்ப்பதைச் செய்வது என்பது தொழில்நுட்ப ரீதியில் மிகக் கடினமானது. சொல்லப்போனால் செய்யவே முடியாத ஒன்று.

இப்படிப் பேச்சு வரும்போதெல்லாம் சீனாவில் செய்கிறார்களே என்ற கேள்வி எழுகிறது. சீனாவில் எம்மாதிரியான தணிக்கை முறை இணையத்தில் நிலவுகிறது என்பதை விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மனிதனை மனிதன் தூக்குவது பச்சைப் பார்ப்பனக் கொடுமையாகும்!

சிறீரங்கம் அர்ச்சகப் பார்ப்பனர்களை சூத்திரர்கள் தூக்க வேண்டும் என்ற கருத்தினால் சுவரொட்டி ஒட்டுவதா? மாபெரும் கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
சிறீரங்கம் கோவில் அர்ச்சகர்ப் பார்ப்பனர் களைப் பல்லக்கில் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கோரியும், சட்டப்படி நடந்து கொண்ட அதிகாரியை அச்சுறுத்தியும் சுவரொட்டி ஒட்டிய பார்ப்பனர்களைக் கண்டித்தும், சட்டப்படி நடந்து கொண்ட அதிகாரிமீது நடவடிக்கை எடுத்தால் மாபெரும் கிளர்ச்சி வெடிக்கும் என்று எச்சரித் தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சிறீரங்கம் கோவில் திருவிழாவின்போது (கிருத்திகா என்பது அதன் பெயர்) திருக்குறுங்குடி நம் பாடுவான் என்ற கீழ்ஜாதிபக்தன் (பக்தர்களானாலும் ஜாதி முத்திரை மாறுவதில்லை இந்த புண்ணிய பூமியில்) ஆண்டவன் நாராயணன் பற்றிப் பாடுவானாம். துவாதசி 12ஆம் நாள் அன்று பிரம்ம ராட்சசர்கள் (பார்ப்பனர்களாக இருந்து சாபத்திற்கு ஆளானவர்கள் தான் பிரம்ம ராட்சசர்கள் என்று சொல்லப்படுவது கர்ண பரம்பரைக் கதை) இந்த கீழ்ஜாதியானைக் கண்டு பொறாமைப்பட்டு இவனை விழுங்கி விட விரும்பினார்களாம்; அவனோ நான் நாராயணன்மீது பாடி பூஜை முடிக்கும்வரை காத்திருந்து பிறகு என்னை விழுங்குங்கள் என்று வேண்டினானாம்! இந்தப் பக்தியைக் கண்டு அந்த ராட்சசர்களே இரங்கினார்கள் - பிறகு மோட்சத்திற்கு போய் விட்டானாம் அவன்.
மனிதனை மனிதன் தூக்குவது இன்று பொருந்துமா?

டெல்லியில் 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானிகள் 12 பேர் ஒரே சமயத்தில் இன்று விடுப்பு எடுத்தால், இதுவரை 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லியில் இருந்து சென்னை பெங்களூரு, நாக்பூர், அஹமதாபாத்துக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அமிர்தசரஸ், கொல்கொத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஷங்கர் மீது SRM பாரிவேந்தர் பாய்ச்சல்..பாரி பூரி கக்கூஸ் லாரி என கிண்டல் பண்ணுவதா?


Parivendhar and Shankar
இயக்குநர் ஷங்கர் பாரிவேந்தர் பெயரை வேண்டுமென்றே கிண்டலடித்து அவமானப்படுத்துவதாக இந்திய ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பாரிவேந்தர் என்பவரது உண்மையான பெயர் பச்சைமுத்து. இவர்தான் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் பல தொழில் நிறுவனங்களின் உரி்மையாளர். புதிய தலைமுறை இவரது தொலைக்காட்சிதான்.
தனது பெயரான பச்சை முத்து என்பதை எந்திரன் படத்தில் ஒரு குடிகாரனுக்கு சூட்டிவிட்டார் என ஏற்கெனவே இவர் இயக்குநர் ஷங்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார் (ஏன், குடிப்பவர்களுக்கு பச்சைமுத்து என்ற பெயர் இருக்கக் கூடாதா என்ன?!!).

புதிய காப்பீட்டுத்திட்டத்தை கலைஞர் வரவேற்கிறார்

  தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மூடிவிட்டு, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர். நான் தொடங்கிய திட்டம் மூடப்பட்டு விட்டதில் எனக்கு வருத்தமில்லை. எந்தப் பெயரிலோ, எப்படியோ திட்டம் நடைபெற்று மக்கள் பயன்பெற்றால் போதுமென்று எண்ணுகிறேன்.
திமுக அரசால் தொடங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 642 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டதுக்கு மாறாக, இப்போது 1,016 வகையான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போகின்றனர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப் படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது... அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது அரசு.

MGR யாரை காங்கிரஸ் பயன் படுத்தி திமுகவை அழிக்க...untold istory


இந்திரா காந்தியின் எமெர்ஜென்சிக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது.
வேர் விடாத குரோட்டன்ஸ் செடியாக தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி அருவிநடை போட்டுக்கொண்டிருந்தது.
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல்; அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திரா போட்டியிட விரும்பினார். ஆனால் மொரார்ஜி தேசாய் அக்கினிப் பார்வை பார்த்தார்.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

TATA டாடா எலக்ட்ரிக் கார் 160 கிமீ தூரம் 4 பேர் அமர்ந்து செல்ல முடியும்

Tata eMo Electric Car
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்த ஈமோ என்ற புதிய எலக்ட்ரிக் கார் கான்செப்ட் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ரூ.10 லட்சம் என்ற மிகக்குறைந்த விலை கொண்ட எலக்ட்ரிக் காராக  விற்பனை செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெயேந்திரர் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை மந்தவெளியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன். இவரை கடந்த 2002-ம் ஆண்டு சிலர் சேர்ந்து தாக்கினர். இதில், ராதாகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2005-ம் ஆண்டு பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயேந்திரர் முதலாவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து இந்த வழக்கில் சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், சுந்தர், ஆனந்த், கண்ணன், லட்சுமணன், பூமி என்ற பூமிநாதன், குமரன் என்ற சின்ன குமரன், ரவிசுப்பிரமணியன் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். ரவிசுப்பிரமணியன் இந்த வழக்கில் அப்ரூவராக மாறினர்.

செல்போன் திருட்டு: சிக்கிக்கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருபாவர் கவுதம். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் சேலத்தில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
வரது அறையில் உடன் தங்கியிருக்கும் ஷெரின் என்பவரின் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நவீன வசதிகைக்கொண்ட புதிய செல்போன் ஓன்று கடந்த சிலதினங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டது.
ஷெரின் தொலைந்து போன தன்னுடைய செல்போனில் இருக்கும் நம்பருக்கு கூப்பிடும் போதெல்லாம் இந்த என் “சுவிச் ஆப்” செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் மட்டும் வந்தது.
இரண்டு நாட்கள் செல்போனை தேடிய ஷெரின் பிறகு, புதிதாக ஒரு போன் வாங்கிக்கொண்டு தான், முன்பு பயன்படுத்திய “சிம்” கார்டின் நம்பரையே மீண்டும் வாங்கி கொண்டு வந்து விட்டார்.

Kollywood வசூல் மழை என்பதெல்லாம் சும்மாதாங்க...!' - பிலிம்சேம்பர்

சென்னை: விளம்பரத்துக்காக படங்கள் வெளியானதும் 'மகத்தான வெற்றி... வசூல் மழை' என்றெல்லாம் நாங்களே விளம்பரம் செய்கிறோம். அதை நம்பி சேவை வரி கேட்கிறது மத்திய அரசு என்று புலம்பினர் திரையுலகின் முக்கிய சங்க நிர்வாகிகள்.
சினிமாவுக்கான சேவை வரியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இது சினிமாக்காரர்களுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

துக்ளக் விழாவில் அத்வானி- மோடி: நாளை ஜெ.- ரஜினியைச் சந்திக்கிறார்கள்!


Jaya, Modi, Advani and Rajini
சென்னை: நாளை சென்னைக்கு வருகை தரும் பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்கிறார்கள்.
சிங்கப்பூரில் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் பெற்று வந்திருக்கும் ரஜினியிடம் உடல் நலம் விசாரிக்கவே இந்த சந்திப்பு என கூறப்படுகிறது.
சோ நடத்தும் துக்ளக் பத்திரிகையின் 43 வது ஆண்டு விழா நாளை ஜனவரி 14-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

முல்லைப் பெரி​யாறு அணை.. கண்டுபிடித்த முத்து இருளப்பனும்... களம் அமைத்துக் கொடுத்த ராபர்ட்டும்


காவல் கோட்டம்’ நாவலுக்கான தேடுதலில் இருந்தபோது என்னை மலைக்கவைத்த தரவுகளில் முக்கியமானது முல்லைப் பெரி​யாறு அணையின் கட்டுமானப் பணிகளின் தொடக்க காலம்.
இன்று அரசியலுக்காக சிலர் அதை இடிக்கக் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், அது எத்தகைய இடையூறுகளுக்கு மத்தியில் கட்டப்பட்டது என்பதை பிரிட்டிஷ் ஆவணங்கள் ரத்தமும் வியர்வையுமாகச் சொல்கின்றன.
முதல் நன்றி முத்து இருளப்ப பிள்ளைக்கு!
அனாதி காலம்தொட்டு மனித நடமாட்டமே இல்லாத அந்த மலையுச்சிக் காட்டுப் பகுதியில், நதியின் குறுக்கே தடுப்பு அணை கட்டு​வதற்கான ஆரம்பப் பணிகள் துவங்கி இருந்தன. காற்று கூட உள்நுழைய முடியாதபடி பசுமையால் மூடி அது தனது வளத்தைக் காத்துக் கிடந்தது. அதற்குள் மனிதர்கள் ஊடுருவிப் போனார்கள். உயர்ந்த மரங்​களையும் செடி கொடிகளையும் வெட்டி அழித்தபடி அவர்கள் உள்ளே நுழைந்தனர். பொறியாளர்களால் குறியிடப்பட்ட அந்த இடத்தில் நதியின் இரண்டு பக்கமும் இருந்த மலைப்பாறைகளை உடைத்து எடுக்கும் பணி துவங்கி இருந்தது. தடுப்பு அணை கட்டப்படுவதற்கு வலதுபுறம் இருந்த ஒரு சிறிய சமவெளிப் பகுதியில் மரங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. அங்குதான் கூடாரங்​கள் போடப்பட்டன. கூரைகள் வேயப்பட்ட சிறு குடில்கள் கட்டப்பட்டன.
விலங்குகளுக்கான பட்டியுடன் ஒரு சிறு கிராமம் போல இருந்தது அந்த இடம். சுற்றிலும் அடர்ந்த காடு. தேன் கூட்டுக்குள் குச்சியைச் சொருகி உள்ளே தேன் இருப்பதைக் கண்டறிவதைப் போல அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நதியின் ரகசியம் ஒன்றைக் கண்டறிந்து சொன்னவர்கள் அங்கு இருந்த வன மைந்தர்களான பளியர்களே. அவர்கள்தான் 200 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் முத்து இருளப்பப் பிள்ளைக்கு இந்த இடத்தைக் காட்டினார்கள். 'வைகையின் ஊற்று வறண்டுகிடந்த ஒரு கோடைக் காலத்தில் இந்த மலையில் இருந்து தண்ணீர் பெற எதுவும் செய்ய முடியாதா?’ என்று அவர் இறைஞ்சிக் கேட்டபொழுது, வருசநாட்டுப் பளியர்கள்தான் உச்சிமலையில் தண்ணீர் ஓடும் அந்த இடத்தைக் காட்டினார்கள்.

30-story building built in 15 days in china


கூகுள், பேஸ்புக்கிற்கு தடை விதிப்போம்: டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை

புதுடில்லி: ஆட்சேபனைக்குரிய படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெறுவதை தடுக்க, கூகுள் மற்றும் பேஸ்புக் வளைதளம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சீனாவில் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது போல, இந்தியாவிலும் தடை விதிக்கப்படும் என, டில்லி ஐகோர்ட் எச்சரித்துள்ளது.
சமூக வளைதளங்களில் ஆட்சேபணைக்குரிய படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெறுகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிடக்கோரி, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி சுரேஷ்கைத் முன், விசாரணைக்கு வந்த போது, அவர், "சமூக வளைதளமான பேஸ்புக், கூகுள் தேடுபோறி (சர்ச் இன்ஜின்) போன்றவை, தங்கள் வெப்சைட்களில் ஆட்சேபணைக்குரிய படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெறுவதை தவிர்க்க ஒரு செயல்பாட்டு முறை ஒன்றை உருவாக்க வேண்டும். அப்படி இல்லையெனில், இதுபோன்ற வெப்சைட்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டது போல, இந்தியாவிலும் தடை விதிக்கப்படும்' என்றார்.

Natarajan அதிமுகவில் ஜெயலலிதாவின் அடாவடிக்கு பதிலடி?


அ.தி.மு.க.,வில் நெடுங்காலமாக ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஆட்சி செய்து   கொண்டு இருந்த சசிகலாவை ஜெயலலிதா பிரிந்த பின்பு , அடுத்து என்ன நடக்கும். சசி மற்றும் நடராஜன் ஆகியோரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதுதான் பலரது கேள்வி. இதற்கு, தஞ்சாவூரில் பொங்கல் பண்டிகையன்று, புதிய பார்வை ஆசிரியர் நடராஜனால் நடத்தப்படும், "தமிழர் கலை இலக்கியத் திருவிழா' வில் விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க., வினரிடையே ஏற்பட்டுள்ளது.
 ஜெயலலிதாவின், முன்னாள் தோழி சசிகலாவின் கணவர், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன். இவரது தந்தை மருதப்பாவின், நினைவாக, "மருதப்பா அறக்கட்டளை' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று துவங்கி மூன்று நாள், தமிழர் கலை இலக்கிய திருவிழா நடப்பது வழக்கம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடராஜனே முன்னின்று கவனிப்பார்.
அடித்தளமே இங்கு தான்: ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விழாவை முன்னிட்டு, சட்டசபை தேர்தலோ அல்லது லோக்சபா தேர்தலோ நடக்கும் சூழ்நிலை இருந்தால், அதற்கேற்றார்போல் அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு தேவையான கட்சிகளின் தலைவர்களை விழாவுக்கு அழைத்து வந்து கூட்டணிக்கான அடித்தளம் அமைப்பார். கடந்த 2006 சட்டசபை தேர்தலின் போது நடந்த விழாவில், அப்போதைய ம.தி.மு.க., அவைத் தலைவர் கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் கார்த்திக் ஆகியோரை ஒரே மேடையில் ஏற்றி, அ.தி.மு.க., கூட்டணிக்கு தூபம் போட்டார். அவராலோ அல்லது எதிர்பாராத விதமாகவோ ம.தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தன.

Kerala:புதிய அணை வேண்டுமாம் மின்சாரமும் தண்ணியும் வேண்டுமாம்

திருவனந்தபுரம் : முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும்போது, தமிழகம் & கேரளாவுக்கு தண்ணீர், மின்சாரத்தை சமமாக பங்கிட அனுமதிக்க வேண்டும் என்று கேரளா கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவிடம் கேரள அரசு நேற்று தாக்கல் செய்த 2வது அறிக்கையில் கூறி இருப்பதாவது:

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும்போது அந்த அணையில் உள்ள தண்ணீரையும், மின்சாரத்தையும் சமமாக பங்கீடு செய்வதற்கு கேரளாவுக்கு உரிமை வேண்டும். தமிழ்நாடு முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை உபயோகித்து உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் கேரளாவுக்கும் உரிமை உண்டு. அணை பலவீனமாக இல்லாவிட்டாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அணையில் இருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், புதிய அணையில் மீன் பிடிக்கவும், சுற்றுலாவுக்கு பயன்படுத்தவும் கேரளாவுக்கு உரிமை வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!


ஸ்ரீ ராம் சேனாவின் முத்தாலிக்
இந்திய நாட்டை உடைக்க வேண்டுமா? மதக் கலவரங்களை தோற்றுவித்து அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டுமா?  அவர்களது பொருட்களை சூறையாட வேண்டுமா? இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி, மதக் கலவர பூமியாக குறிப்பிட்ட ஒரு பகுதியை அரசே அறிவிக்கும்படி செய்ய வேண்டுமா? இதன் வழியாக ஓட்டை பொறுக்கி ஆட்சியாளர்களாக மாறி, நாட்டின் வளங்களை கொள்ளையிட வேண்டுமா?
அப்படியானால், பார்ப்பன, பாசிச, இந்துத்துவா கருத்துகளை உங்கள் சிந்தனையின் ஒவ்வொரு துளியிலும் விதைக்க வேண்டும். அப்போதுதான் பொய் பேச முடியும். ஒரு பொருளை தானே திருடிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்த முடியும். திட்டமிட்டு மக்கள் குவியும் இடத்தில் தாங்களே குண்டு வைத்து விட்டு, இந்தக் ‘படுபாதக’ செயலை நிகழ்த்தியது இஸ்லாமிய அமைப்புதான் என்று குற்றம்சாட்ட முடியும்.

3 Idiots நண்பன் ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் பிரமாண்ட ரிலீஸ்

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள முதல் படமான நண்பன், பொங்கல் ஸ்பெஷலாக இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகியுள்ளது.
பொதுவாக விஜய் படங்களுக்கு பெரிதாக எதிர்ப்பார்ப்பை ஏற்றிவிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை. விஜய் நடிப்பில் நண்பன் என்று ஒரு வெளியாகுதுப்பா என்ற அளவுக்குதான் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.சத்யராஜ் தவிர வேறு யாரும் இந்தப் படம் இப்படியாக்கும் அப்படியாக்கும் என தம்பட்டம் அடிக்கவில்லை.

வியாழன், 12 ஜனவரி, 2012

நக்கீரன் to ADMK:Why டி கொலை வெறி

எதை நடத்தவேண்டும் என்று நினைத்ததோ அதை நடத்த ஆரம்பித்துவிட்டது ஜெ.அரசு. கடந்த 7-1-12 சனிக்கிழமையன்று காலையில் வெளியான நக்கீரன் இதழைத் தமிழகத்தின் பல
பகுதிகளிலும், மேலிட உத்தரவுப்படி அ.தி.மு.க.வினர் பறிமுதல் செய்து, தீ வைத்துக் கொளுத்த ஆரம்பித்தனர்.
""ஜெ.''வை பற்றிய தகவலுடன் கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. ஜெயலலிதாவின் படத்துடன் வெளியாகியிருந்த இந்த இதழைத்தான் அ.தி.மு.க.வினர் கொளுத்திக் கொண்டிருந் தனர்.
இந்நிலையில், காலை 10.50 மணியளவில் நக்கீரன் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் வழக்கம்போல் நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆசிரியர், இணையாசிரியர், நக்கீரன் ஆசிரியர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். நக்கீரன் அலுவலகத்தின் மற்ற பிரிவுகளின் ஊழியர்களும் முழுமையான அளவில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், திடீரென ஒரு கும்பல் பெரும் சத்தத்துடனும் அருவருக்கத்தக்க வார்த்தைகளுடனும் கையில் உருட்டுக் கட்டை, பாறாங்கல், சோடாபாட்டில் ஆகியவற்றுடன் நக்கீரன் அலுவலகத்தின் வாசல்கதவைத் தாண்டி உள்ளே நுழைந்தது. அ.தி.மு.க கரைவேட்டி, சட்டைப் பாக்கெட்டில் ஜெயலலிதா படம் வைத்திருந்த அந்த கும்பல் ஆவேசம் காட்டத் தொடங்கியது.

Sasi Jeya சேர்ந்து சந்தித்தாலே வழக்கில் தப்ப முடியாது


திருச்சி வேலுச்சாமி. அதிரடி கருத்துக்குச் சொந்தக்காரர். காமராஜர் காலத்திலிருந்து அரசியல் செய்து வருபவர். தமிழ் இன உணர்வாளர். எம்.நடராஜனுடன் நீண்ட கால நட்பு கொண்டிருப்பவர். போயஸ் கார்டனில் வீசிய புயல் குறித்து பேச சரியானவர் என்பதால் இவரிடம் பேசினோம்.
(மகாமகம் குளத்தில் இரண்டுபேரும் மாறி மாறி தண்ணீர் ஊற்றினீர் களே அதற்கு எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். 60-வது கல்யாணத்திற்கு திருக்கடையூர் கோயிலில் இரண்டு பேரும் மாலை மாற்றினீர்களே அதற்கு எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். வளர்ப்பு மகன் என்று தத்து எடுக்கும்போது எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள்.)


நக்கீரன் : நடராஜன் மற்றும் சசிகலா ஆகியோருடன் தங்களுடைய தொடர்பு பற்றி?

Pakistan எந்த நேரத்திலும் ஆட்சி காலி?- ராணுவ ஆலோசனை

ராவல்பிண்டி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் இன்று ராவல்பிண்டியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் முப்படைத் தலைமைத் தளபதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். இதனால் பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ந்து ராணுவப் புரட்சி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலால் பாகிஸ்தான் முழுவதும் மக்கள் பதட்டத்துடன் உள்ளனர்.
பாகிஸ்தானில் மக்கள் ஆட்சியை விட ராணுவ ஆட்சியே அதிகம் நடந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நீடிக்கவே விடுவதில்லை ராணுவத்தினர். ஜியா உல் ஹக், முஷாரப் வரை என பல ராணுவ தளபதிகள் அந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரிந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரியும், மத்திய அரசின் தடையை அமல் படுத்தக்கோரியும் விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பான மனுவில், 'மாநில கால்நடைத்துறை செயலாளரின் அனுமதியின் பேரில், ஜல்லிக்கட்டு நடத்த திருச்சி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததி ராய்: Anna கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்!

ந.வினோத்குமார்
24 மணி நேரமும் கார்ப்பரேட் ஊடகங்களால் கவரேஜ் கொடுக்கப்பட்டு அந்தப் போராட்டமும் ஊழல்படுத்தப்பட்டது. அந்த கவரேஜ் கூட ஒரு வகையில் ஸ்பான்ஸர்ஷிப்தான். மக்களின் நியாயமான கோபமும் கார்ப்பரேட் படுத்தப்பட்டுவிட்டது. ஒரு இடத்திலும் 'தனியார்மயமாக்கலுக்கு முடிவு கொண்டு வாருங்கள்' என்று கோஷம் எழவில்லை. ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதன் மூலம் ஊழலை ஒழித்துவிட முடியாது!"அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. அதிரடிப் பேச்சுக்காரர். அறிவு ஆளுமைகளில் முக்கியமானவர். உலகமயமாக்கலுக்கு எதிரானவர். அதனாலேயே வளர்ச்சிக்கு எதிரானவர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். ஆங்கிலத்தில் 'புரோக்கன் ரிபப்ளிக்' என்ற தலைப்பில் தான் எழுதிய புத்தகம் 'காலச்சுவடு' பதிப்பகத்தால் 'நொறுங்கிய குடியரசு' என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்னை வந்திருந்த அருந்ததி ராயைச் சந்தித்தேன். இரு மாநில மக்களிடையே கொந்தளிப்பான சூழல் நிலவுவதால், இப்போதைக்கு 'முல்லைப் பெரியாறு' தவிர்த்து எதுவும் பேசலாம்" என்றபடி பேட்டிக்குத் தயாரானார்.

கலைஞர்: தேவிகுளம், பீர்மேட்டை மீட்கும் கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டது கேரளா


Karunanidhi
சென்னை: வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலியுறுத்திக் கூறவேண்டிய கட்டாயத்திற்கு கேரள அரசு நம்மை இட்டுச் சென்றிருக்கின்றது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம் மற்றும் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதை வரலாற்று சான்றுகளுடன் விவரித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பீர்மேடு வட்டத்தில் கட்டப்பட்டிருக்கிறது. தேவிகுளம் வட்டத்தில் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதி அமைந்திருக்கிறது.
மொழிவழி மாநிலப் பிரிவினை நடைமுறைக்கு வந்தபோது தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரள மாநிலத்தோடு அதன் இடுக்கி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. அப்போதிருந்தே தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை கேரள மாநிலத்தோடு சேர்த்தது தவறு என்றும், அவை தமிழ்நாட்டோடு இருந்திட வேண்டுமென்றும் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.