வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

27 சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 500 அதிகாரிகள் சோதனை

சென்னை : ஜவுளி, நகை விற்பனையில் பிரபலமான சென்னை சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் 27 இடங்களில் நடந்த சோதனையில் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக நடந்த சோதனை இன்றும் தொடரும் எனத் தெரிகிறது.

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில், Ôசரவணா ஸ்டோர்ஸ்Õ துணிக் கடையும், அதன் எதிரே பாத்திரக் கடையும் உள்ளது. மேலும், ரங்கநாதன் தெருவுக்கு எதிரே Ôசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ்Õ என்ற துணிக்கடை மற்றும் பாண்டிபஜார் பனகல் பார்க் எதிரே உஸ்மான் சாலையில் ÔÔசரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய்ÕÕ என்ற பெயரில் துணிக்கடை, அதன் அருகே ÔÔசரவணா செல்வரத்தினம் ஜுவல்லரி என்ற நகைக்கடையும் உள்ளன.

புரசைவாக்கத்திலும் சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய்என்ற பெயரில் 6 அடுக்கு மாளிகை உள்ளது. இந்தக் கடைகள் எல்லாம் யோகரத்தினம், ராஜரத்தினம், செல்வரத்தினம் ஆகிய 3 சகோதரர்களுக்குச் சொந்தமானது. இப்போது, செல்வரத்தினத்தின் மகன் சரவணன் அருள் என்பவர் தனது தந்தை பெயருடன் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் தனியாக நடத்தி வருகிறார். யோகரத்தினம், ராஜரத்தினம் மகன்கள் சபாபதி, டாக்டர் அருள் ஆகியோர் சரவணா ஸ்டோர்ஸ் பெயரில் பல்வேறு பிரிவுகளாக இயங்கும் கடைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கடைகளில் துணிகள் மட்டுமின்றி, எலக்ட்ரானிக் பொருட்கள், காய்கறிகள், விளையாட்டு சாமான்கள், ஸ்வீட்ஸ், மரச்சாமன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கடைகள் காலை 9 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம். அதற்காக ஊழியர்கள் காலை 8 மணிக்கு பணிக்கே வந்து விடுவார்கள். அதன்படி நேற்று காலை 8 மணிக்கு மேனேஜர்கள், ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

அவர்களுக்கு முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். 500 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக எல்லா கடைகளிலும் தனித்தனி பிரிவாக புகுந்தனர். அதையடுத்து கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடைகளுக்கு விடுமுறை என்று எழுதி ஒட்டப்பட்டன.

சோதனை நடைபெறுவது தெரியாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்காமல் திரும்பிச் சென்றனர். குறைந்த விலை என்பதால், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அவர்களும் திரும்பிச் சென்றனர். பணிக்கு வந்திருந்த ஊழியர்கள் மட்டும் கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த ஊழி யர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் உள்ளே இருந்தவர்களும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. மேலும் கணக்கு காட்டாமல் துணிகள் வாங்கியது, விற்பனை செய்தது, விற்பனை பற்றிய முறையான கணக்குகள் இல்லாததையும் கண்டறிந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சோதனை நேற்று இரவு முழுவதும் நடந்தது.

சோதனை குறித்து வருமானவரித்துறை (புலனாய்வு பிரிவு) கூடுதல் இயக்குனர் எஸ்.ரவிச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:சென்னையில் ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் காய்கறி ஆகிய வியாபாரத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு வர்த்தக குழுமத்திற்கு சொந்தமான கடைகள், வீடுகள் என 27 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் 500க்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டனர். இந்த வர்த்தக குழுமத்திடம் இருப்பில் உள்ள பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை காலை 7.45 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டான் டிவியின் நேருக்குநேர் நிகழ்ச்சியில் வரதராஜப்பெருமாள்‏!முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்


டான் டிவியின் நேருக்குநேர் நிகழ்ச்சியில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்‏!

கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் அவர்கள் கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சி 21.08.2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 (இலங்கை நேரம்) மணிக்கு

பொலிஸாருடன் 25 இளைஞர்களைக் கொண்ட குழு


பொலிஸாருடன் 25 இளைஞர்களைக் கொண்ட குழு (படங்கள்)


மட்டக்களப்பு ஊறணியில் ஏற்பட்ட நிலைமையை தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸாருடன் இணைந்து செயற்படும் வகையில் 25 இளைஞர்களைக் கொண்ட கிராமியக் குழுவொன்றை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அமைத்துள்ளார்.

ஊறணியில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தினைத் தொடர்ந்து சுமூக நிலைமையை ஏற்படுத்த ஊறணி பேச்சியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிள்ளையாரடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு வந்த இனந்தெரியாதவர் அங்கிருந்த பெண் ஒருவரின் இரு கைகளிலும், மார்பகங்களிலும் கீறிவிட்டு ஓடியதையடுத்து ஊறணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குழப்பமடைந்த மக்கள் ஊறணி பிரதான வீதியில் டயர்களை எரித்ததுடன், ஊறணி பொலிஸ் நிலையத்தினை தாக்க முற்பட்டனர். இதனையடுத்து படையினராலும் பொலிஸாரினாலும் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் அப்பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்ததுடன் பொலிஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டுசென்றார்.

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உட்பட பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.
சுமார் இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலில், 25 இளைஞர்களை உள்ளடக்கிய இளைஞர்கள் கிராமிய குழுவொன்று அமைக்கப்பட்டதுடன் அந்த இளைஞர்களுடன் அப்பகுதியில் பாதுகாப்பை மேற்கொள்வதற்கு பொலிஸ் அதிகாரிகளுடன் இரண்டு ஜீப் வண்டிகளையும் வழங்க உறுதியளிக்கப்பட்டது.
அத்துடன் அப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் ஊறணி பொலிஸ் சாவடியில் கடைமையாற்றும் பொலிஸாரை உடனடியாக இடமாற்றவும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

வடிவேலு - சிங்கமுத்து இருவருமே ஏமாந்த கதை


சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன், நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியதாகவும், அதை போலி ஆவணங்கள் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் வடிவேலுக்கு விற்கப்பட்டு இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வடிவேலுவும், சிங்கமுத்துவும் போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. போலி தஸ்தாவேஜுகளை காட்டி நிலத்தை அவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில்,
’’வடிவேலு வாங்கிய சர்ச்சைக்குரிய நிலம் டி.கே.ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேருக்கு உரிமையானது. இவர்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி முதலீட்டு கழகத்திடம் ரூ. 8 லட்சம் கடன் வாங்கினர். அதற்கு பதிலாக இந்த நிலத்தை அடமானம் வைத்தனர். ஆனால் அதற்கு வட்டி செலுத்தவில்லை.

இதையடுத்து நிலத்தை டிக் நிறுவனம் ஏலத்துக்கு கொண்டு வந்தது. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் அதை ஏலத்தில் வாங்கியுள்ளார்.

இதற்கிடையில் நிலத்தை அடமானம் வைத்தவர்கள் சிங்கமுத்துக்கு நிலத்துக்கான அதிகார பத்திரத்தை எழுதி கொடுத்துள்ளனர்.
2000-ம் ஆண்டில் இதனை எழுதி வாங்கியுள்ளார். பின்னர் 2002-ல் அதனை வடிவேலுக்கு சிங்கமுத்து விற்றுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் இருவரும் ஏமாந்துள்ளனர்.

வடிவேலு, சிங்கமுத்துவை ஏமாற்றிய 5 பேரும் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு நிலத்தில் உரிமை இல்லை. பழனியப்பனுக்கு தான் நிலம் சொந்தம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

கரையோர பாதுகாப்பை பலப்படுத்தவே போர் விமானங்கள் கொள்வனவு: அரசு

இலங்கை ஒரு தீவு என்ற ரீதியில் அதன் கரையோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனாலேயே, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன' என்று அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, இன்று வியாழக்கிழமை பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர், 'யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து இராணுவ ஹெலிகொப்டர்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?' என்ற கேள்வியை எழுப்பினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 'கரையோரப் பாதுகாப்பில் காணப்பட்ட பலவீனம் காரணமாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் பாரியளவு போர் ஆயுதங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் கட்டவிழ்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. அதனால் நாட்டுக்குள்ளேயும், நாட்டுக்கு வெளியேயும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே வெளிநாடுகளிலிருந்து ஹெலிகளையும், போராயுதங்களையும் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது' என்றார்.

பணயக்கைதிகளைக் காப்பாற்றுவதற்கு உயிர்களை விலை கொடுக்க வேண்டியிருந்தது

தருஸ்மான் அறிக்கையைப் பற்றிய உண்மைகள்
 தயான ்ஜயதிலக
தனித்துவமானதும் மதிப்பிற்குரியதுமான சண்டே ரைம்ஸ் பத்தி எழுத்தாளர் லசந்த குருகுலசூரியவின் கட்டுரையைத் தவிர (ஆகஸ்ட் 14,2011ல் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் காணப்பட்ட “ ஒரு நாய்க்கு கெட்டபெயர் வழங்கி அதை தூக்கிலிடுவது” என்ற கட்டுரை) ஸ்ரீலங்கா ஊடகங்கள் மற்றும் கொழும்பின் கருத்துரையாளர்கள் என அனைவரும் சமகால சரித்திரத்தில் யுத்தத்துக்குப் பிந்திய கட்டத்தில் குடியியல் சமூகத்தில் மிகவும் முக்கியமான அறிவுசார்ந்த ஒரு நிகழ்வினை முற்றாகத் தவற விட்டுள்ளார்கள்.
எங்கள் ஓய்வுபெற்ற தொழில்முறையாளர்களையும் மற்றும் புத்திஜீவிகளையும் குறைந்தளவு வேறுபாட்டுடன் புகழ் வீரர்களாக நடத்துவது ஒரு ஊடகப் பழக்கமாகிவிட்டது, ஒன்றில் அறியாமையினாலோ அல்லது தெரிவு செய்வதை தவிர்க்கும் காரணமாகவோ மார்க்கா நிறுவனத்தால் எம்மத்தியில் உள்ள பழமைவாய்ந்த சிந்தனைச் சிற்பிகளினால் நடத்தப்பட்ட ஆய்வரங்கில் இன்றைய நாட்களில் பளிங்குபோல் தெளிவாகப் பளிச்சிடும் அழுத்தமான பிரச்சனையான தருஸ்மான் அறிக்கை அல்லது மிகச்சரியாகக் கூறுவதானால் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் ஆலோசனைக் குழுவினரின் அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் மிகவும் மோசமானது  எங்கள் ஊடகங்களும், கருத்துரையாளர்களும் ஸ்ரீலங்காவின் அனுபவமிக்க பழமையான புத்திஜீவிகளில் வடித்தெடுக்கப்பட்ட இலக்கிய விமர்சகர்களில் ஒருவரும்,மிகவும் வேறுபட்ட தன்மையைக் கொண்ட அரச சேவை உத்தியோகத்தரும் உலகிலேய மிகவும் மதிப்புவாய்ந்த மிகச்சில புத்திசாலிகளில் ஒருவர் எனக் கருதப்படும் கொட்பிறே குணதிலகாவினால் மேற்கொள்ளப்பட்ட தருஸ்மன் அறிக்கையின் விரிவான பகுப்பாய்வை அறியவில்லை போலத் தெரிகிறது.
ஸ்ரீலங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டங்களின் உண்மையும் பொறுப்புக்கூறுதலும் என்கிற தலைப்பிலும், ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறுதலைப்பற்றிய ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கையின் பகுப்பாய்வும் மற்றும் பரிணாமமும் எனும் உபதலைப்பிலும் ஒரு ஆய்வுக் கட்டுரையினை  அவர் மார்கா நிறுவனம் 21.07.2011 ல் பொறுப்புக்கூறுதல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் நல்லிணக்கம் எனும் தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த ஆய்வரங்குக்காகத் தயாரித்திருந்தார்.
ஊடகங்கள் சாதாரணமாக இந்தக் கதையினை தவற விட்டுவிட்டதாகவே நாம் கருதிக்கொள்வோம். நான் ஆவலோடு காத்திருந்தது இந்தச் செய்தி பற்றிய பிரசுரத்துக்கும் மற்றும் வரும் வாரங்களில் அதைப்பற்றிய கடுமையான வர்ணனைகளும் அந்த வார்த்தைகள் உரக்கப் பேசப்பட்டு, ஜீரணமாகிப் பிரதிபலிப்பை ஏற்படுத்துவதற்கு போதுமான நேரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவுமே.
அத்தகைய முன்னேற்றங்களுக்காக நான் விசேட ஆர்வத்தோடு காத்திருந்தது ஏனென்றால் கொட்பிறே குணதிலகாவினால் பரிணாமத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் தருஸ்மான் அறிக்கை, ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் ஆயுதப்படையினரையும் விமர்சிக்கும் அதேவேளை அவரது வைரமணியினைப்போன்ற முக்கிய நுண்ணறிவு, சுத்திகரிக்கப்பட்ட வழிமுறைகள், மற்றும் தாராளவாத மனிதநேய நன்னெறிகள் போன்றவற்றுடனான சரியான ஒத்திசைவுள்ள நிரூபணத்தை தயார்படுத்தி, மேற்கு, சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தளமாகக் கொண்டியங்கும் உலக குடியியல் சமூகம், வெளிநாட்டில் குடியேறி வாழும் தமிழ் சமூகம், மற்றும் கொழும்பில் உள்ள மேல்தட்டு நாகரிக வலையமைப்புகள் என்பன ஸ்ரீலங்காவின் மீது நடத்தும் தாராளவாத மனிதநேய மற்றும் மனித உரிமைகள் பற்றிய சொற்பொழிவின் அடிவேரை நறுக்கித் தள்ளிவிடும் என்பதற்காகவுமே.
இதில் எனக்குத் தோன்றுவது கொட்பிறே குணதிலகாவினைப் போன்ற கலைக்களஞ்சியத்தைப் போல படிப்பறிவும் மற்றும் அறிவார்ந்த உருவமுமாக எழுந்து நிற்கும் ஒருவரது நேர்மை, மதிப்பு, மற்றும் நீதியான தீர்ப்பு வழங்கல் என்பன ஒருபோதும் கேள்விக்கு இலக்காவதில்லை, ஆனால் ஒரு போரை மதிப்பீடு செய்யும்போது அறிவுள்ள ஒரு குள்ளன் (ஒப்பீட்டுக்காக வேண்டி) பகிரங்க கண்டனமாக ஸ்ரீலங்கா அரசுக்கு ஒழுக்கவியல் போதனை செய்வதைப் போன்று முற்றிலும் வேறுபடுகிறது.
யுத்தத்தில் சிக்கலான மையப் பிரச்சினைகளான, சுமத்தப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற வரலாற்று வரையறை மீது சட்டபூர்வ அரச அதிகாரம் ஆதரவு வழங்குதலைப் பற்றிய அவருடைய கருத்து குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீட்டிக்கும் தன்மையான ஒரு ஊடுருவும் புறநிலைக் கண்ணோட்டத்தில் உள்ளது. கொட்பிறியின் முடிவுகளிலிருந்து இதோ ஒரு நுண்ணிய பகுதி:
“ அறிக்கையில் உள்ள பிரச்சினைகளின் அடிவேர் தாங்கியிருப்பது, அரசாங்கத்தின் இராணுவ மூலோபாயம் வடிவமைக்கப்பட்டது. எந்தவித மனிதாபிமான நோக்கமுமின்றி தமிழர்களை பூண்டோடு அழிக்கும் நோக்கத்திலா அல்லது பணயக்கைதிகளைக் காப்பாற்றும் முயற்சியிலா என்பதில்தான். இந்த விளக்கத்தின் மூலமாக குழுவானது தனது அரைக்கண் பார்வையினூடாக அரசாங்க முயற்சிகளை உருக்குலைக்கத்தக்கவாறு தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கை மேலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி வேண்டுமென்றே இந்த நடவடிக்கைகள் சம்பந்தமாக வழங்கப்பட்ட மிகவும் வித்தியாசமானதும்  சரியானதுமான விளக்கங்களை நீக்கிவிட்டு மட்டுப்படுத்தப்பட்ட கருத்துக்களை கொடுத்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை விபரிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் இந்தக் குறைபாடு காணப்படுகிறது( முடிவுகள், பக்கங்கள் 28 – 29 ).
“ ....எல்.ரீ.ரீ.ஈ யினர் வேண்டுமென்றே தங்கள் இராணுவ முயற்சிகளுக்கு பொதுமக்களை ஒன்றுகூட்டியதுடன்  தாக்குதலற்ற வலயங்களையும் யுத்த களமாக்கினார்கள். தாக்குதலற்ற வலயங்களில் பொதுமக்களை இராணுவ முயற்சிகளில் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்தியதுடன் பொதுமக்களைப் பலவந்தமாகச் சேர்த்து தங்கள் பாதுகாப்பு அரண்களை பலப்படுத்தியதுடன், மற்றும் இராணுவ முயற்சிகளுக்குத் தேவையான சகலதையும் அவர்களைக் கொண்டு செய்வித்தனர். பொதுமக்களுக்கும் போராளிகளுக்கம் இடையில் உள்ள வேறுபாட்டை எல்.ரீ.ரீ.ஈ வெகு திறமையாக மங்கிப்போக வைத்தது. இராணுவத்தினரின் நடவடிக்கையின் நோக்கத்தையும் விகிதாசாரத்தையும் இப்படியான ஒரு நிலையில் எவ்வாறு மதிப்பிடப்பட முடியும்? மேலும் எல்.ரீ.ரீ.ஈ சரணடைய மறுத்தும் வந்தது.
இதிலிருந்து தெளிவாகத் தெரியவருவது, எல்.ரீ.ரீ.ஈ யினைத் தோற்கடிப்பதற்கும் மற்றும் பணயக்கைதிகளைக் காப்பாற்றுவதற்கும், எல்.ரீ.ரீ.ஈ போராளிகள், கட்டாயமாக இராணுவசேவைக்கு சேர்க்கப்பட்ட பொதுமக்கள், படை வீரர்கள் மற்றும் போராளிகள் அல்லாதவர்கள் என பாரிய மனித உயிர்களை விலை கொடுக்க வேண்டியிருந்தது இன்றிமையாத ஒன்றாக இருந்தது என்பதே.
இந்தக்கட்டத்தில் இராணுவம் தனக்கு கிடைத்திருக்கும் தெரிவுகளையும் ஏற்படப்போகும் பின்விளைவுகளையும் எடைபோட்டுப் பார்த்து, வெளிப்படையாக அது தாக்குதலை நிறுத்த முடியாது எனவும் மற்றும் முன்னோக்கிச் சென்று எல்.ரீ.ரீ.ஈ யின் எதிர்தாக்குதலுக்கு விரைவான முடிவு கட்டவேண்டும் என்றும் முடிவு செய்தது. இதில் குறிப்பிடவேண்டிய ஒரு விடயம், எல்.ரீ.ரீ.ஈ இருந்த விரக்தியான நிலையில் அவர்கள் மிகப் பாரியளவு பொதுமக்களின் மரணங்களை விளைவிக்கக் கூடிய எத்தகைய கொடும்பாதகச் செயல்களையும் நாடக்கூடும் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுத்திருக்க வேண்டும் என்பதாகும்” (முடிவுகள்: பக்கம் 33).
இந்த இடத்தில் என்னை ஒரு கருத்தினைக்கூற அனுமதியுங்கள். கொட்பிறே குணதிலகாவின் புத்திசாதுர்யமான விரிவான நுண்ணாய்வு மிக அழகாக அலட்சியம் செய்யப்படும். அயல்நாடு; உட்படலான வெளிநாட்டு செய்திப் பிரிவுகள், அதை கண்டுகொள்ளாது. ஊடகங்கள் அதை வெளியிடாது. சமூக ஊடகங்கள் அதை இருட்டடிப்புச் செய்யும். தூதுவர்கள் அதனைக் காணவோ அதன்பக்கம் தமது செவிகளைத் திருப்பவோ மாட்டார்கள். மேதைகள் அதை ஆராயவோ அல்லது வெறுமனே படித்துப் பார்க்கக்கூட மாட்டார்கள். ஆரவார மதக்கொள்கை உடையவர்கள் ஆனால் மனச்சுதந்திரம் குறைவானவர்கள் மற்றும் புத்திஜீவி என்கிற நிலையிலுள்ளவர்கள் போன்ற ஏனைய வெளிச்சங்கள் தொடர்ந்தும் ஒளிவட்டம் வீசுகிற மகான்களாகச் சித்தரிக்கப் படுவார்கள்.
இது ஏனென்றால் அரசியல் ரீதியாக அரச இறையாண்மைக்காக ஒரு போலித் தன்மையான நுட்பமான இகழ்ச்சியைக் ஏற்றுக் கொள்வது சரியானதாகும். அதேவேளை மகிந்த ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸ, மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் நடத்தைகள் என்பனவற்றை நோக்கி காட்டும் வெறுப்பினை சிறிது சிறிதாக விட்டுக்கொடுத்து வருவதும் அரசியல் ரீதியாகத் தவறானது. கொட்பிறியின் அத்தகைய ஒரு புறநிலைக் கண்ணோட்டத்தின்படி, மேற்கின் அர்த்தமற்ற காட்சியாக  சமீபகாலமாக இடம்பெற்று வரும் ஆட்சி மாற்றத் தூண்டுதலில் நாட்டங்கொண்ட சாத்தியமுள்ள சக்தியாகத் திகழும் எந்த ஒரு வாரிசுக்கோ அல்லது நாடு கடந்த அரசுக்கோ அதன் எண்ணம் ஈடேற உதவி கிடைக்காது. அது எந்த நிதியுதவியையோ அல்லது பலமான கரவொலியையோ பாதிக்கப்பட்ட தனி ஒருவருக்கு நிரந்தர உணர்வோடு செவிலித்தன்மை புரிந்துவரும் தமிழ் குடியேற்ற சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப் போவதில்லை.
கொட்பிறியின் எழுத்துக்கள் கருத்துபூர்வமாகவோ அல்லது உறுதியாகவோ நேரடி விமர்சனத்தில் ஈடுபடவில்லை ஏனெனில் அவை  தர்க்கரீதியாக வெல்ல முடியாத பலம் கொண்டவை மேலும் குடியியல் சமூகத்தின் விமர்சகர்கள் மட்டுமே போதுமானதாக இல்லை. அதை சிங்கள பௌத்த ஏகாதிபத்திய வாதம் அல்லது புதிய தாராண்மைவாத இராணுவவாதம் எனப் புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில் கொட்பிறி பௌத்தருமல்ல புதிய தாராண்மைவாதியுமில்லை. அதை ஆட்சியின் ஆதரவாளர் அல்லது அதற்கு ஆசைப்படும் ஒருவருடைய கருத்து என்று ஒரு பக்கமாக ஒதுக்கி வைக்கவும் முடியாது. ஏனெனில் கொட்பிறி அப்படியான ஒரு ஆதரவை ஒருபோதும் விரும்பியதுமில்லை, மற்றும் தனது 85வது வயதில அந்தப்பழக்கத்தை அவர் பின்பற்றுவார் என்று கற்பனை செய்வது கூடக் கடினம்.
முரண்பாடாக, மார்கா ஆய்வரங்கின் பிரதான பங்களிப்பாளரான கொட்பிறே குணதிலகா மற்றும் டேவிட் பிளாக்கர் (ஒரு யுத்த அனுபவஸ்தரும் ஆங்கில உரைநடைக்காகப் பரிசு பெற்ற எழுத்தாளர். இவர் சிங்கள பௌத்தரோ அல்லது  ஸ்ரீலங்கா அடையாளமாகிய அடிப்படைவாத எண்ணங்களைப் பின்பற்றுபவருமல்ல) என்பவரும் மட்டுமே தருஸ்மான் அறிக்கையைப்பற்றி மிகக் கடுமையான மற்றும் சிக்கலான விமர்சனங்களையும் மற்றும் போரின் இறுதிக் கட்டம் பற்றி நம்பிக்கையான திடமான பகுப்பாய்வையும், விளக்கமான மாற்றுக் கட்டமைப்பையும,; வேறு எந்த குறுகிய தேசியவாத சித்தாந்தங்களையோ அல்லது பேச்சாளர்களையோவிட சிறப்பாக செய்திருந்தனர்
தருஸ்மான் அறிக்கையை கிடப்பில் போட்டுவிட்டு  சட்டபூர்வமான நிலையைத் திரும்பவும் அடைவதற்கு கொட்பிறே குணதிலகா மற்றும் டேவிட் பிளாக்கர் ஆகியோரது மறைமுகமான விரிவாக்கல் மூலமான முக்கியமான தலையீடுகள் இருந்தன. இன்னும் கூறினால் மோசமான குற்றம் பரப்பும் சனல் - 4ன் தயாரிப்புகளில் கூட சூழலுக்கும் நிகழ்வுக்கும் ஏற்றதான ஒரு யதார்த்தமான மறு இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. உதாரணத்துக்கு டேவிட் பிளாக்கர் கூறுகிறார் “.....காட்சிகளில் அடையாளம் காணக்கூடிய ஸ்ரீலங்கா வீரர்களின் செய்கை அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் அடையாளம் தெரியாத நபர்கள் வெளிப்படையாக குற்றச் செயல்கள் புரிவதையும் குற்றவியல் அல்லாத நடவடிக்கைகளின் காட்சியுடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ளது. இதனால் உணர்த்தப்படடுள்ளது, அனைத்து செயல்களும் குற்றவியல் நடவடிக்கைகளே அவை அடையாளம் காணக்கூடிய ஸ்ரீலங்கா இராணுவப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டவை என்று” (‘தருஸ்மானின் பாதகாப்புத் துறையிலுள்ள ஓட்டைகள்’)
இவை அறிவுபூர்வமானதும் அனைத்தும் மிக மதிப்பு வாய்ந்ததும் மற்றும் புகழ்ச்சிக்கு உரியவையுமாகும், “ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்” எனும் தலைப்பில் பாரிய அழிவை உண்டாக்கும் ஆயுதத்தின் பாணியில் உள்ள சனல் - 4 ன் திட்டங்களைப்பற்றிய முக்கியமான ஒற்றை விமர்சனம் கூட இல்லாது அதேவேளை உண்மையில் பரபரப்பான அவர்களின் பிதற்றலை கிளிப்பேச்சுப் போல திருப்பிச் சொல்லியிருக்கும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்துள்ள எதிர் ஆவணப் படத்தின் (மினோலி ரத்னாயக்கா விவரணையுடன் வழங்கியிருப்பது) மீது கருத்துரையாளர்கள் தீர்ப்பு வழங்கும் சமயத்தில் இவை ஒரு சமயம் உதவக்கூடும்.
தமிழில்: எஸ்.குமார்

அன்னா ஹஸாரே? இத்தனை நாட்களாக எங்கிருந்தார்? ராமதாஸ்

சென்னை:  ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் இந்த அன்னா ஹஸாரே யார்? இத்தனை நாட்களாக எங்கிருந்தார்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் இந்த அன்னா ஹஸாரே யார்? அவர் இத்தனை நாட்களாக எங்கு இருந்தார்? ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை. லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்ப்பது பற்றி நாடாளுமன்றத்தில் தான் சட்டம் கொண்டு வர வேண்டும்.

அன்னா ஹஸாரே ஊழலை எதிர்த்து இவ்வளவு தீவிரமாகப் போராட்டம் நடத்துவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது என்றார்

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அண்ணாவின் மகன் இளங்கோவன் காலமானார். சிகிச்சைக்குகூட பணம் இல்லை

கடந்த வாரத்தில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் இளங்கோவன் என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.
சிகிச்சைக்கு பணம் கட்டக்கூட இயலாத நிலைமை. அங்கே இங்கே மிகவும் சிரமப்பட்டு பணம் ஏற்பாடு செய்து கட்டியிருக்கிறார்கள். மொத்தச் செலவு ஒரு லட்சத்திற்குள் தான் என்று கேள்வி. அதற்கே இத்தனை சிரமம்.
தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகள் பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை இளங்கோவனை!
முன்னாள் முதல்வரின் மனைவி மட்டும் இளங்கோவன் சிகிச்சை பெற்று வந்த போது சென்று பார்த்து பத்தாயிரம் ரூபாய் கைச்செலவுக்கு கொடுத்து வந்திருக்கிறார் என்கிறார்கள்.
இளங்கோவன்…. முன்னாள் முதல்வரும் தி.மு.க.வின் நிறுவனத் தலைவருமான பேரறிஞர் அண்ணாதுரையின் வளர்ப்பு மகன்! அண்ணாவின் மகனுக்கு சிகிச்சைக்குகூட பணம் இல்லை திராவிட கட்சிகள் சோரம் போய் பலநாள்

நடிகை குட்டிபத்மினி கொடுத்த புகார் வாபஸ் மாஜி திமுக எம்.எல்.ஏ. மீது



தி.மு.க., முன்னாள் எம்.எல். ஏ., சிவாஜியிடமிருந்து நிலத்தை திருப்பி வழங்குமாறு போலீசிடம் கொடுத்த புகாரை, நடிகை குட்டிபத்மினி வாபஸ் பெற்றுள்ளார்.
திருவள்ளூர் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவாஜி மீது நடிகை குட்டி பத்மினி நில அபகரிப்பு புகார் கொடுத்தார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில்,

‘’கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் உள்ள ரூ. 5 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. சிவாஜி அபகரித்து விட்டார். அதை மீட்டு தாருங்கள்’’ என்று கூறியிருந்தார்.  

இது தொடர்பாக நடிகை குட்டி பத்மினி,

’’கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் கிராமத்தில் ராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து 5 ஏக்கர் நிலத்தை எனது பெயரிலும், எனது 3 மகள்கள் பெயரிலும் வாங்கினேன். கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியின் காரணமாக தற்போது அந்த இடம் மிகப்பெரிய பழத்தோட்டமாக மாறியுள்ளது.

200 மா மரங்கள், 300 தென்னை மரங்கள், பலா, சப்போட்டா மரங்களும் உள்ளன. மரங்களை வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் விலை உயர்ந்த மரக்கன்றுகளுடன்தான் சென்னை திரும்புவேன். இப்படி பார்த்து பார்த்து பழத்தோட்டத்தை உருவாக்கினேன்.
இந்நிலையில் டி.வி. தொடர் ஒன்றுக்காக எனக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது.

இதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. சிவாஜியிடம் ரூ. 3.5 லட்சம் கடன் வாங்கினேன். இதற்கு முறையாக வட்டியும் செலுத்தி வந்தேன்.

திடீரென ஒருநாள் சிவாஜி என்னிடம் வந்து நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியோடு சேர்த்து ரூ. 4.5 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு எனக்கு நெருக்கடி கொடுத்தார். உடனடியாக என்னால் அவ்வளவு பணத்தை கொடுக்க முடியவில்லை.  

இதனால் 5 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கர் நிலத்தை மட்டும் அவருக்கு எழுதிக் கொடுத்தேன். ஆனால் சிவாஜி, மீதியுள்ள 4 ஏக்கரையும் அபகரித்துக் கொண்டார். பழத்தோட்டத்தினுள் பெரிய வீடு ஒன்றையும் கட்டினார் இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவரிடம் சென்று, நீங்கள் செய்வது சரியா? என்று கேட்டேன். நீங்கள் வாங்கிய கடனுக்கு எல்லாம் சரியாகி விட்டது. இந்த இடத்தை கேட்டு தொந்தரவு செய்தால் கை கால்களை எடுத்து விடுவேன். யாரும் உயிரோடு இருக்க முடியாது என்று மிரட்டினார்.

இதனால் பயந்து போன நான் இதுபற்றி அப்போது புகார் எதுவும் செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு சொந்தமான சொத்தை அவர் அனுபவித்து வருகிறார்.  

அந்த இடத்தில் முதியோர் இல்லத்தை கட்டி, அங்கேயே நானும் தங்கி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது. அந்த சொத்துக்கான ஒரிஜினல் பத்திரம், பட்டா எல்லாம் இன்னும் என்னிடம்தான் இருக்கிறது. எனவே சிவாஜியிடமிருந்து எனது இடத்தை மீட்காமல் விடமாட்டேன்’’ கூறியிருந்தார்.  

இதனிடையே, திருவள்ளூர் நில தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் முன்னிலையில், 2 ஏக்கர் நிலத்தை ரூ. 24 லட்சத்திற்கு கிரையம் செய்த பின், அவர் புகாரை வாபஸ் பெற்றார்.
1994ம் ஆண்டில், 1 ஏக்கர் நிலத்தை, சிவாஜியிடம் அடமானமாக வழங்கிய நடிகை குட்டி பத்மினி, தற்போது தனது 5 ஏக்கர் நிலத்தையும் சிவாஜி அபகரித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தனது மகள் கீர்த்தனா பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை ரூ. 24 லட்சம் மதிப்பிற்கு கிரையம் செய்தார்.

சரவணா ஸ்டோர்ஸ், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இன்று (18.08.2011) காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த சோதனை காரணமாக கடையில் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும் வேலை செய்யும் ஊழியர்களும் கடைக்கு வெளியே காத்திருந்தனர்.

இதேபோல் சென்னை டி.நகரில் உள்ள சரவணா ஸ்டோருக்கு சொந்தமான 6 கடைகளிலும்,  சோதனை நடைபெற்ற

Vijayakanth ஒரு ஹீரோ ஜீரோவாகிறான் கேப்டனின் கொடநாட்டில்

 
''தேர்தல் முடிந்து முடிவும் அறிவிக்கப்பட்ட பிறகு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மாண்புமிகு முதல்வராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் உட்காருவார்கள். அவருக்கு எதிர் வரிசையில் மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவராக புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் அமர்வார்கள்!'' என்று கோவையில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடையில் ஜெயலலிதா முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னார். அவர் சொன்னதுதான் நடந்தது. ஜெயலலிதா, முதல்வர் ஆனார். விஜயகாந்த், எதிர்க் கட்சித் தலைவர் ஆனார். முதல்வர் செயல்படுகிறார். ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் செயல்படுகிறாரா? இதுதான் இன்றைய அரசியலின் பிரதானக் கேள்வி!

கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது, போயஸ் கார்டனில், சிறுதாவூரில், கொடநாட்டில் ஜெயலலிதா நிம்மதியாகப் பதுங்கிக்கொண்ட ரோலை இப்போது விஜயகாந்த் கைப்பற்றிவிட்டதாகவே தெரிகிறது. எதிர்க் கட்சித் தலைவர் பதவி என்பது சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், அது முதலமைச்சருக்கு இணை யான பொறுப்பு. சபையில் யார் பேசும் போதும் முதல்வர் குறுக்கிடலாம். முதல்வர் எழுந்தால், பேசிக்கொண்டு இருப்பவர் உடனடியாக உட்கார வேண்டும். அதைப் போலத்தான் எதிர்க் கட்சித் தலைவரும் யார் பேசும்போதும் குறுக்கிடலாம். அவர் எழுந்தால், மற்றவர்கள் உட்கார்ந்து விடுவார்கள். இன்னும் சொன்னால், முதல்வர் பேசும்போதும் தயக்கம் இல்லா மல் குறுக்கிட்டுக் கேள்விகள் கேட்கக்கூடிய அதிகாரம் எதிர்க் கட்சித் தலைவருக்கு உண்டு. அவ்வளவு அதிகாரம் பொருந்திய பதவியை விஜயகாந்த் 'சும்மா’ வைத்திருப் பதன் சூட்சுமம் என்ன?

சட்டசபையில் மிக முக்கியமான நிகழ்வு, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது. அன்றைய தினம் விஜயகாந்த் சபைக்கே வரவில்லை. அடுத்தடுத்த நாட்கள் நடந்த விவாதங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. எதிர்க் கட்சித் தலைவர் பேசியே ஆக வேண்டிய அன்று மட்டும் விஜயகாந்த் வந்தார். அன்றும் 'அம்மா’வை விமர்சிக்கவில்லை. பொதுவாகவே, எப்போதும் இலவசங்களை விஜயகாந்த் எதிர்ப்பார். கடந்த ஆட்சியில் கருணாநிதியைக் காய்ச்சி எடுத்ததே இலவசங்களை வைத்துத்தான். 'அரிசி ரெண்டு ரூபாய்க்குக் கொடுத்தா போதுமா? கொழம்புவைக்க இருபத்தஞ்சு ரூபா வேணுமே’ என்று விஜயகாந்த் கேட்ட கேள்விதான் தீயாகப் பரவியது. அதை மறந்துவிட்டு, இப்போது விஜயகாந்த் சொல்வதை வாசியுங்கள்...

''2011-12ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்... ஏழை, நடுத்தர மக்கள் பயனடையும் வகையில், இலவச அரிசி, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி, கறவை மாடுகள், ஆடுகள், லேப்டாப் கம்ப்யூட்டர், வேட்டி, சேலை என சுமார் 50 இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் இல்லை என்று கூறுவோர், கண் இருந்தும் பார்க்க மறுக்கும் கருத்துக் குருடர்கள் ஆவார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழியில் கூற வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு இந்த பட்ஜெட்டைப் பாராட்டி மகிழலாம். அந்த அளவுக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன'' என்று விஜயகாந்த் சொல்லச் சொல்ல... பூரிப்பில் முகம் மலர்ந்து கொண்டே இருந்தார் முதல்வர் ஜெயலலிதா!

ஜெ. முதல்வரானதும் ஏற்பட்ட முதலாவதும் பெரியதுமான சறுக்கல் சமச்சீர்க் கல்வி விஷயத்தில் நடந்தது. ஜூன் 4-ம் தேதி இந்த ஆண்டுக்கான படிப்பைத் தொடங்கி இருக்க வேண்டிய பிள்ளைகள், ஆகஸ்ட் 9 வரை என்ன படிப்பது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு இருந்தார்கள். தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இந்த விஷயத்தில் கொந்தளித்தன. அ.தி.மு.க. கூட்டணியில் அசைக்க முடியாத வகையில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் போராட்டத்தைத் தயக்கம் இல்லாமல் முன்னெடுத்தது. ஆனால், அப்போதும் விஜயகாந்த் மௌனமாகவே இருந்தார். கேப்டன் டி.வி-யின் மெயிலில் மக்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில்கூட, 'நாங்கள் கேட்டது குதிரை. கருணாநிதி தந்தது கழுதை.’ என்று மையமாகப் பதில் சொன்னார். சமச்சீர்க் கல்வியை அவர் ஆதரிக்கிறாரா, இல்லையா என்பதே தெரியாமல் இருந்தது அந்தப் பதிலில்.

இப்போதுகூட சட்டசபையில் அவர் பேசும்போது, ''சமச்சீர்க் கல்வி என்ற பெயரால் கடந்த தி.மு.க. ஆட்சியில் பொதுப் பாடத் திட்டம் மட்டுமே கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தக் காலகட்டத்தில் வரவேற்கக்கூடியது என்றாலும், அது உண்மையில் சமச்சீர்க் கல்வி கிடைக்க வழி வகுக்குமா என்பதே என் கேள்வி'' என்று கேட்டது... சுற்றி வளைத்து எந்த முடிவுக்குமே வர முடியாத வார்த்தைகளின் கோவையாக அமைந்துவிட்டது.

இயல்பில் விஜயகாந்த், வெள்ளந்தியாகப் பேசக் கூடியவர். அடுக்கு மொழியோ, அலங்கார வார்த்தைகளோ இல்லாமல், மனதில் பட்டதை அப்படியே சொல்லக் கூடியவர். ''என்னை மாதிரிதான் மற்ற கட்சிகளும் பேசணும். வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுனு பேசணும். அவங்களைத்தான் மக்கள் நம்புவாங்க. நான் தயவு தாட்சண்யம் பார்க்காம, நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்காம, மக்களுக்கு இன்னிக்கு என்ன தேவையோ, அதைப்பத்தி நான் மட்டும்தான் பேசுறேன். எனக்கு எந்தப் பயமும் இல்லை'' என்று சொல்லிக்கொண்ட விஜயகாந்த், இன்று அளவுக்கு மேல் அடக்கி வாசிப்பதற்குக் காரணம், உள்ளாட்சித் தேர்தல்!

''உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்போது கேப்டன் செயல்படுகிறார். அது வரை இந்தக் கூட்டணியில் எந்தச் சிக்கலோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார். இன்றைக்கு அ.தி.மு.க-வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி மிக மனப்பூர்வமாக அமைக்கப்பட்டது. அந்த முடிவை எடுப்பதற்கு முன்னால், மிகத் தீவிரமாக தீராத யோசனைகளில் கேப்டன் ஆழ்ந்து இருந்தார். பல்வேறு சாதக பாதகங்களை அலசிய பிறகுதான், கூட்டணியை உறுதி செய்தார். அதன் பிறகு, கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கோபக் கொந்தளிப்பு காட்டியபோதுகூட, கேப்டன் அமைதியாகத்தான் இருந்தார்.

'ஒரு கூட்டணிக்குள் போயாச்சு. கேட்ட தொகுதி கிடைக்கலைனு சொல்லிட்டு வெளியே வந்தால், சில்லியா இருக்கும். அவங்ககிட்ட நம்ம கோரிக்கையை வைப் போம்’னு கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் சாந்தமாகப் பதில் சொன்னார்.

'விஜயகாந்த் வேகமா இருப்பார்னு பார்த்தா, நம்மைவிட பக்குவமா இருக்காரே!’ என்று மார்க்சிஸ்ட் தலைவர் ஒருவர் கமென்ட் அடித்துவிட்டுப் போனார். அதை அடக்கம் என்று சொல்ல முடியாது. கூட்டணி தர்மம், கட்டுப்பாடு என்று சொல்லலாம். இப்போதும் தேவை இல்லாமல் கேப்டன் எந்த கமென்ட்டும் அடிப்பது இல்லை.
''இன்றைக்கு 29 பேர்தான் எம்.எல்.ஏ-க் களாக ஆகி இருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக கேப்டனுக்காக ரசிகர் மன்றம் நடத்தி எதையும் அனுபவிக்காத எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கட்சி தொடங்கி, கைக் காசைப்போட்டு இன்று வரை கட்சியை வளர்த்து வரும் நிர்வாகிகள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் சின்னப் பதவிகளாவது வாங்கித் தர வேண்டும் என்று விஜயகாந்த் துடிக்கிறார். தேவை இல்லாமல் கூட்டணியில் குழப்பம் செய்து வெளியே வந்தால், என்ன ஆகப்போகிறது? எனவேதான் பயம் என்று சொல்கிறார்கள் சிலர். பிளான் என்கிறார்கள் சிலர். எதுவாக இருந்தாலும் விஜயகாந்த்துக்கு நன்மைதான்'' என்றும் அவரது மனம் அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.

ஆக்ஷன் ஹீரோ திடீரெனக் குடும்ப சென்டிமென்ட் படத்தில் நடித்தால் போரடிக்கும் அல்லவா? அப்படித்தான் இருக்கிறது விஜயகாந்த்தின் நடவடிக்கைகள்.
'எப்பவுமே அடிதடியில நடிச்சிட்டே இருந்தா... எனக்கும் போரடிக்காதா?’ என்று விஜயகாந்த் சொல்வார்.
K Ramasamy
விஜயகாந்த் ஆக்க பூர்வமான கருத்துகளை சொல்லி இருக்க வேண்டும். சமச்சீர் கல்வியில் அதிமுக அரசு தவறு இழைத்து விட்டது. இவர் முதல்வர் மீது மரியாதையாக இருந்தாலும், யார் மீது தவறோ அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்க வேண்டும். தவறு கல்வி செயலர் ஐஏஎஸ், கல்வி அமைச்சர் சண்முகம் மற்றும் அரசு வக்கீல் நவ நீத கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இருக்க வேண்டும்.

இவர் பேசாமல் இருப்பது, இவருக்கு மக்கள் செல்வாக்கை குறைக்கும். மக்கள் 2011 ல் சாதி பார்ப்பதில்லை (பாமக, கொமுக, விசி எல்லாம் தோல்வி), கூட்டணி பலம் பார்ப்பதில்லை (திமுக கூட்டணி பலமானது). மக்கள் எதிர்பார்ப்பது வேறு., இவர் ஜெயலலிதா கூட்டணிக்கு காத்திருந்தால், இவரை மக்கள் மதிக்க மாட்டார்கள்

Electronic IC இலத்திரனியல் அடையாள அட்டைக்கு அங்கீகாரம் இலத்திரனியல் அடையாள அட்டைக்கு அங்கீகாரம்


இலத்திரனியல் அடையாள அட்டைக்கு அங்கீகாரம்
இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்-டாக்டர் ராமதாஸ் திராவிடக் கட்சிகளுடன்

சென்னை: கடந்த காலத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை டாக்டர் ராமதாஸ் நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
மக்களின் வாழ்வா தாரத்தைப் பெருக்கும் திட்டங்களைத்தான் அரசு வழங்க வேண்டுமே ஒழிய, இலவசங்கள் வழங்கக்கூடாது. கல்வியையும், சுகாதாரத்தையும்தான் இலவசமாக வழங்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் இலவசத் திட்டங்களுக்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இப்போதைய அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் இலவச திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 44 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழர்களின் மொழி, கலாசாரத்தை அவர்கள் சீரழித்துவிட்டனர்.

திராவிடக் கட்சிகளை மாற்றி,மாற்றி ஆட்சியில் அமர்த்தியதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். திராவிடக் கட்சிகளை அகற்றுவதே பாமகவின் கொள்கை.
தமிழக பள்ளிகளில் சிபிஎஸ்இ கல்வி முறையை ஒழிக்க வேண்டும். கட்டாய தமிழ் வழி கல்வி முறை கொண்டு வர வேண்டும். அதேவேளையில், மாணவர்கள் நன்றாக ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் பயிற்றுவிக்க வேண்டும்.
மதுக்கடைகளை மூட வேண்டும். இதை வலியுறுத்தி கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, நானே தலைமை தாங்கி நடத்துவேன். மதுபானங்கள் விற்பனை 2002-03 ஆம் ஆண்டில் 2 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றார் ராமதாஸ்.
லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிடுவார்
பாமகவின் குடும்ப அரசியல் குறித்து பொன்முடி கூறியுள்ளாரே என்ற கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் ராமதாஸ்,

வரும் மக்களைவைத் தேர்தலில் அன்புமணி போட்டியிடுவார். நான் எந்தப் பதவியும் வகிக்கவில்லை. அதைப்போல அன்புமணியும் எந்தப் பதவியும் வேண்டாம் என்றுதான் இருந்தார். கட்சியினரின் வற்புறுத்தலால்தான் அமைச்சரானார். எனவே குடும்ப அரசியலால் வந்தவர் என்று சொல்ல முடியாது. அவர் அமைச்சராவதற்கான முழு தகுதியுடன் உள்ளவர் என்றார் அவர்.

போர்ச்சுகல் நாட்டு குடியுரிமை பெற கோவா மக்கள் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.

கோவா பகுதியை போர்ச்சுகீசியர்கள் நீண்ட காலம் ஆண்டனர். இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது கோவா போர்ச்சுகல் நாட்டினராலும் வசமும், புதுச்சேரி பிரான்ஸ் நாட்டினராலும் ஆளப்பட்டு வந்தன.

தங்களது ஆட்சி காலத்தில் பிறந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் 2 தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் போர்ச்சுகல் நாடு குடியுரிமையை வழங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இதற்கான விதிகளையும் அந்த நாடு தளர்த்தியது. இதையடுத்து அந் நாட்டுப் பிரஜைகளாகும் கோவா பகுதியினரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சமீப காலமாக இது மேலும் வேகம் பிடித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,855 பேர் போர்ச்சுகீசிய நாட்டு குடியுரிமையைப் பெற்று அந் நாட்டுப் பிரஜைகளாகியுள்ளனர்.
2008ல் 312 பேரும், 2009ல் 432 பேரும், 2010ல் 807 பேர் அந்த நாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளனர். 2011ம் ஆண்டில் முதல் 3 மாதங்களிலேயே 304 பேர் தங்கள் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு போர்ச்சுகீசியர்களாகியுள்ளனர்.

இது குறித்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இயக்குனரகத்தின் தலைவர் யு.டி.காமத் கூறுகையில், போர்ச்சுகீசிய குடியுரிமை பெற்று அந் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுவிட்டால், ஐரோப்பாவுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கிறது. அத்தோடு, ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெறவும் வசதியாகிறது. இதனால் தான் அந் நாட்டுப் பிரஜைகளாக போட்டி போட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு அந் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்தியாவில் அரசு வேலையில் சேர முடியாது, இந்தியாவில் விவசாய நிலங்களை வாங்க முடியாது. இந்தியாவில் ஓட்டுரிமையையும் இழப்பர் என்றார்.
கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரி நாராயண் நவ்தி கூறுகையில், போர்ச்சுகீசியர்களாக மாறி வரும் மக்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது என்றார்.

விரைவில் இந்திய வல்லரசாக மாற இருக்கிறது எனவே தயவு செய்து போகாதீர்கள் ம்ம்ம் எங்கே கேட்க போகிறீர்கள்? 

ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையை சஜித் ஏற்றுகொண்டார் முழுக்கட்சியும் ரணில் தலைமையில்

article_imageSajith Group accepts Ranil as UNP leader

Suspension of Rosy shelved; Harin, Ruwan new faces in WC


by Zacki Jabbar

After weeks of publicly opposing UNP leader Ranil Wickremesinghe the Sajith Premadasa Group yesterday accepted his leadership and agreed to work together.

Informed sources told The Island that despite all the challenges thrown at Wickremesinghe, no one who attended yesterday’s Working Committee Meeting at the party headquarters, Sirikotha, had asked him to step down and hand over the reins to Co-Deputy Leader Karu Jayasuriya.

The proceedings which lasted nearly four hours concluded with all present pledging to work for the party’s victory at the forthcoming elections to 23 local authorities scheduled for October. Sixty of the 67 members appointed so far to the 95 member WC were present including the two newest entrants Harin Fernando and Ruwan Wijewardena.
A proposal to suspend Rosy Senanayake for publicly branding the UNP Constitution as ‘illegal’ was shelved after the intervention by several members, including Jayasuriya and Premadasa. The WC agreed that any repetition would be met with stern disciplinary action.

The court case filed by Maithri Gunaratne has only challenged the validity of 15 appointments to the WC and not the legality of the entire body or the UNP Constitution. For anyone to claim otherwise was wrong and tantamount to breach of party discipline, Wickremesinghe said, according to sources.

He had also pointed out that if the said 15 appointments were ‘illegal’ as claimed, those concerned should leave the meeting immediately, which prompted Dayasiri Jayasekera, who is one of the respondents in the court case in his capacity as Deputy Chief Opposition Whip, to question if the reference included him and attempted to walk out, but several members had pacified Dayasiri with Harin escorting him back to his chair, sources said. 
Premadasa, according to sources, while airing his grievances said that he was willing to work on the basis of the agreements reached on March 23, 2011 with a view to making the UNP victorious once again.

Jayasuriya had said that he was neither power hungry nor on a mission to oust the leader, but was only interested in party unity and was willing to work with anyone to achieve the objective, sources said.

Ravi Karunanayake, whose appointment as National Organiser has been challenged in court, said that he had already spent around Rs.2 million defending himself and queried why he had to do that if Wickremesinghe had favoured him as alleged.

அங்காடிதெரு புகழ் சரவணா ஸ்டோரில் ரெய்டு : வியாபாரம் நிறுத்திவைப்பு!

சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சரவணா குழுமத்தில் உள்ள 17 கடைகளில் 100அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

மேலும் சரவணா குழும உரிமையாளர்கள் வீடுகளும் சோதனைக்கு தப்பவில்லை. வருமான வரி சோதனையைத் தொடர்ந்து வியாபாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் தெரியவந்துள்ளது

டொராண்டோ கொண்டாட்டங்களும் நட்சத்திர திருவிழாக்களும்

-சடகோபன்- கனடா
கனடா டொராண்டோவில் தமிழர் மத்தியில் நடை பெறுகின்ற கொண்டாட்டங்களும் நட்சத்திர திருவிழாக்களும் தமிழ் மக்களிடம் பணத்தை சுரண்ட நடாத்தும் கூத்துக்களில் இதுவும் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் இப்படி பல கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என்று நடாத்தி மக்கள் பணத்தை வசூலித்தவர்கள் 2009ஆம் ஆண்டு காலபகுதியில் அதை நிறுத்தி தற்போது மீண்டும் மக்கள் மத்தியில் அரங்கேற்றியுள்ளனர்

இங்கு வாழும் இவ் மக்கள் மீண்டும் இவ்வாறான கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் சென்று தங்கள் பணத்தை வாரி வாழங்குவர்களா? மக்களை முட்டாள்கள் ஆக்கும் கூட்டம் உள்ளவரை முட்டாள்ளாகும் மக்களும் இருப்பார்களா? அதில் சந்தேகம் இல்லை..
இங்கு வாழுகின்ற மக்களின் அளவிற்கு ஆதிகமாக இலவச தமிழ் பத்திரிகைகள், வானொலி சேவைகள், தொலைகாட்சி சேவைகள் ஒவ்வொரு வரும் போட்டியும் பொறாமையுடன் நடத்தி வருகின்றனர்.
அளவிற்கு ஆதிகமாக தமிழ் சேவைகள் இம்மக்களுக்கு தேவையா? சொந்த நாட்டை விட இங்கு அதிகம் பத்திரிகைகள், வானொலி சேவைகள், தொலைகாட்சிகள்…. இவர்களின் ஆட்டங்கள் தான் இந்த கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் இலவசம் என கூறுவார்கள் ஆனால் அங்கு சென்றவுடன் மக்களிடம் பணத்தை பிடுங்குவதில் முன்னிப்பர்.. இதற்கு இங்குள்ள மக்கள் மீண்டும் துணை போவார்களா? சும்மா தென் இந்தியாவிலிருந்து பாடர்களை கொண்டு வந்து மக்களிடம் போய்க்காட்டுவதும் இவற்றுக்குள் அடங்கும் இது தேவையா?
மக்களை சுரண்டுபவர்களை மக்களே இனம் காணவேண்டும் கடந்த காலங்களில் போராட்டம் என்றும் கடைசி யுத்தம் என்றும் அகதிகள் புனர் வாழ்வென்றும் மக்களை எம்மற்றியவர்கள் சிலர் இலட்சசாதிபதியானர்கள் இது பலரும் அறிந்தது. மீண்டும் பல இலட்சசாதிபதிகளை உருவாக்க துணை போக வேண்டாம் என்பதே மக்கள் தெரிந்து கொள்ளவேண்டியது.

நடிகர் RK 40 இளைஞர்களை மோசடி செய்தார் வேலைவாய்பு தருவதாக




சென்னை : நடிகர் ஆர்கே மீது போலீஸ் கமிஷனரிடம் 40 இளைஞர்கள் புகார் கொடுத்துள்ளனர். அரும்பாக்கம் என்எஸ்கே நகரை சேர்ந்தவர் குணசேகரன் உள்பட 40 இளைஞர்கள் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மே மாதம் 29ம் தேதி கார்ப்பரேட் கம்பெனியில் வேலை ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தோம். தி.நகர் கோபாலகிருஷ்ணன் தெருவில் இயங்கி வரும் அந்த கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கு சென்றோம். அப்போது அங்கு இந்த கம்பெனியின் இயக்குனரான திரைப்பட நடிகர் ஆர்.கே. என்ற ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதன் மேலாளர் விஜயகுமார் ஆகியோர் எங்களை இன்டர்வியூ செய்தனர்.

கம்ப்யூட்டர் தொடர்பான வேலை தருவதாக கூறினர். மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் தருவதாக தெரிவித்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் அதில் வேலைக்கு சேர்ந்தோம். ஆனால் சேர்ந்த சில வாரங்கள் எங்களுக்கு எந்த வேலையும் அவர்கள் கொடுக்க வில்லை. பின்னர் ஈசிஆர் ரோட்டில் உள்ள பெரிய நிலத்தை காட்டி இங்குள்ள பிளாட்டை நீங்க விற்று தர வேண்டும். அப்போதுதான் சம்பளம் தருவோம். மேலும் எந்தளவுக்கு விற்று தருகிறீர்களோ அந்தளவுக்குதான் அலவென்ஸ் தருவோம் என்று அந்த கம்பெனி நிர்வாகத்தினர் கூறினர்.

கம்ப்யூட்டர் வேலை என்று கூறி எங்களை நியமித்து விட்டு இப்போது ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக மாற்றுகிறீர்களா. இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டோம். ஆனால் கம்பெனி மேலாளர் விஜயகுமார் எந்த பதிலும் கூறிவில்லை. இந்நிலையில் 2 மாதங்கள் தொடர்ந்து வேலை பார்த்தோம். சம்பளம் தரவில்லை. அது பற்றி கேட்டதற்கு எங்களை தரக்குறைவாக பேசி விஜயகுமார் அனுப்பி விட்டார்.
நடிகர் ஆர்கே செல்வாக்கு மிக்கவர் என்பதால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அந்த கம்பெனிதான் பொறுப்பு. எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அந்த 2 மாத சம்பளம் மற்றும் அலெவன்சை மட்டுமாவது போலீசார் பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர் உரிய விசாரணை நடத்தும்படி தி.நகர் உதவி கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
‘இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’
சம்பளம் தரவில்லை என்று 40 இளைஞர்கள் புகார் கொடுத்தது குறித்து நடிகர் ஆர்கே கூறுகையில், “தி.நகரில் உள்ள கம்பெனிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விஜயகுமார் என்பவர் என்னிடம் வந்து, “உங்கள் இடத்தை பிளாட் போட்டு விற்று தருகிறேன். அதற்காக 40 இளைஞர்கள் என்னிடம் இருக்கிறார்கள். அவர்கள் மார்க்கெட்டிங் செய்து விற்று தருவார்கள்’’ என்று தெரிவித்தார். நானும் அதை நம்பினேன். ஆனால் இந்தளவுக்கு பிரச்னை வரும் என்று எனக்கு தெரியாது. இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை’’ என்றார்.

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்


வெங்காயத்தின் மகத்துவங்கள்.

வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.தென்இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பலநாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும்.
3. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
4. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
5. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
6. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
7.. வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
8. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
9. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
10. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
11. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
12. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
13. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
14. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
15. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
16. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
17. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
18. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறுவெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும்.
19. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி. நோய் குறையும்.
20. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
21. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
22. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.
23. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.
24. மாரடைப்பு நோயாளிகள். ரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
25. சின்னவெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
26. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்
இத்தனை மகத்துவம் பொருந்திய வெங்காயத்தை சாப்பிடக்கூடாது என்று பார்பனர்கள் ஏன் பலமான பிரசாரத்தை கட்டி எழுப்பி வைத்துள்ளனர்?
தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் திராவிடரும் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதாலா?
 

ராமதாஸ்:அன்னா ஹசாரேயை யாரென்றே தெரியாது

சென்னை: ""அன்னா ஹசாரேயை யாரென்றே தெரியாது'' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். சென்னையில் நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில், ராமதாஸ் கூறியதாவது: மக்களுக்கு இலவசங்கள் வழங்க, தி.மு.க., ஆட்சியில் ஐந்தாண்டுகளில் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டனர். இந்த அ.தி.மு.க., ஆட்சியில், இலவசங்களுக்கு இவ்வாண்டு மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட உள்ளதாகக் கூறுகின்றனர். இலவசங்களைக் கொடுத்தே மக்களை மழுங்கடிக்கப் பார்க்கின்றனர். மது விற்பனை மூலம் 2002 - 2003ம் ஆண்டில், 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2011ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம், 17 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது குடிமக்களின் உயர்வைவிட "குடி'மகன்களின் வளர்ச்சியைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தில், திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்ததற்கு, பா.ம.க., மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. மக்கள் எங்களுக்கு பாவ மன்னிப்பு வழங்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, என் தலைமையில் டாஸ்மாக் கடை மூடும் போராட்டம் நடத்த உள்ளோம். என் மகன் அன்புமணிக்கு தகுதியும், திறமையும் இருந்ததால் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தகுதியில்லாமலே சிலரது வாரிசுகள் அரசியல் நடத்துகின்றனர். அன்னா ஹசாரேயை யாரென்று எனக்குத் தெரியாது. அவர் போராட்டம் நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
2011-08-18 02:14:55 IST Report Abuse
உள்ளதை உள்ளபடியே நேர்மையாக பேசுபவர்தான் மருத்துவர் ஐயா, நடிகர் ரஜினியை நம் எல்லோருக்கும் பிறந்ததிலிருந்தே தெரியும். ஆனால் அண்ணா ஹசாறேவை ஆறுமாதத்துக்கு முன் கூட யாருக்கும் தெரியாது. அண்ணா ஹசாறேவுக்கு எதிரா கருத்து பதிவு செய்யக்கூடாதுன்னு எதிர்பாக்குறது ஜனநாயகம் இல்ல , அண்ணா ஹசாரே செய்யிறது ஜனநாயகத்தின் அடிப்படையை ஆட்டிப்பார்க்கும் செயல் , ஊழலே செய்யாத மருத்துவர் ஐயா அண்ணா ஹசாறேவை விமர்சிக்க தகுதியான ஆள்!
Durai annamalai - Trichy,இந்தியா
2011-08-18 05:38:23 IST Report Abuse
ஹை.....ஹை.....ஜாலிதான்.....இன்னிக்கு எனக்கு லீவு...கொத்து பரோட்டா கிடைச்சாச்சு.....டவுசர் தாஸ் பத்தின வாசகர் கமெண்ட படிச்சு வயிறு குலுங்க சிரிச்சு இன்றைக்கு டைம் பாஸ் பண்ணிடலாம்....ஹா....ஹா.....ஸ்டார்ட் மியூசிக்......ரம்பம்பம்...ஆரம்பம்.....ரம்பம்பம்...ஆரம்பம்...
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-08-18 05:08:15 IST Report Abuse
ஹசாரே அவர்களுக்கு என்ன நெஞ்சழுத்தம்..? எப்படி அவர் தன்னை இவரிடம் அறிமுகம் செய்து ஆசி வாங்காமல் போனார்? தோற்றாலும் "பட்ஜெட்" தயாரிக்கும் பணியில் உள்ள ஓர் கட்சியின் தலைவரிடம் அன்னா ஹசாரே அவர்கள் தன்னை அறிமுகம் செய்யாத காரணத்தால்தான் அவருக்கு இவ்வளவு பிரச்சினையுமே..!! இலவசங்களை இப்போது எதிர்கின்றார்..ஆனால் தேர்தல் பிரச்சாரத்திலே மஞ்ச துண்டார் அறிவித்த மிக்சி கிரைண்டர் பற்றி வானளாவ புகழ்ந்தார்..இப்போது சவுகரியமாய் மறந்துபோய் எதிர்க்கின்றார்..என்றால் அவ்வளவு "மன உறுதி" உள்ளவரிடம் அன்னா ஹசாரே அவர்கள் மரியாதை நிமித்தமாவது வந்து "வணங்கி" சென்றிருக்க வேண்டாமா? பேரன்களின் பெயரை தமிழில் வைக்காமல் தார் டின்னோடு தமிழ் அல்லாத விளம்பர் பலகைகளை அழித்தவரை..அன்னா ஹசாரே கூட வேண்டாம் அவரது குளுவினராவது இவரை வந்து பார்த்து பல்லிளித்து சென்றிருக்க வேண்டாமா...அப்படியெல்லாம் செய்யாத ஒருவரை "இவர்" ஏன் அவரை மதித்து தெரியும் என்று சொல்லவேண்டும்? நியாயம்தானே..? அவரை தெரியாது ஆனால் அவர் நடத்தும் போராட்டம் மட்டும் உள்நோக்கம் கொண்டது என்று தெரிகின்றது பாருங்கள்..அங்கேதான் "நிற்கின்றார்' இந்த இருபதாம் நூற்றாண்டு தமிழக "காந்தி"..! ராமதாஸ் காந்தி..!! ( மகாத்மா காந்தியை ஒப்பிட்டு சொல்லவில்லை..!! சோனியா, ராகுல் போன்ற வகையறா காந்தி போன்ற தகுதியில் உள்ளவர்களோடு ஒப்பிட்டேன்- தவறா? )

ஜெயலலிதாவை வரவழைக்க எங்களுக்குத் தெரியும்!

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன!

சொத்து குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை சாட்சிகளின் விசாரணைகள் அனைத்துமே முடிந்து விட்டன. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதம், நீதிபதி மல்லிகார்ஜூனையா உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுப்​படி சசிகலா, இளவரசி இருவரும் கடந்த ஜுலை மாதம் 27-ம் தேதி கோர்ட்டில் ஆஜரானார்கள். உடல் நிலை​யைக் காரணம் காட்டி, சுதா​கரன் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவின் வழக்கறி​ஞரான பி.குமார், ஜெயலலிதா ஆஜராகாமல் இருப்பதற்கான வாதங்களை எடுத்து வைக்க.. அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட்-12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ஏக எதிர்பார்ப்பு​களுக்கி​டை​யில், கடந்த 12-ம் தேதி தனி நீதிமன்றம் கூடியது. நீதிபதி மல்லிகார்ஜூனையா, ''ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்​பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி, வக்கீல்பி.குமார் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்திருக்​கிறார். அந்த மனுக்​களைத் தள்ளுபடி செய்கிறேன்.'' என்று கையோடு கொண்டு​வந்திருந்த குறிப்பை வாசிக்க... உடனே எழுந்த ஜெயல​லிதாவின் வழக்கறிஞர் குமார், '' செப்டம்பர் 14-ம் தேதி வரை தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. அதற்குள் ஜெயலலிதாவை கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடக் கூடாது.'' என அடுத்த மனுவை தாக்கல் செய்ததும் கடுப்பாகிவிட்டார் நீதிபதி. ''ஜெயலலிதாவை எப்போது இங்கே வரவழைக்க வேண்டும் என கோர்ட்டுக்குத் தெரியும்.'' என்று சொல்லி அந்த மனுவையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி.
இந்த விவகாரங்களைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகியோரின் வக்கீல்கள், இன்னொரு மனுவைத் தாக்கல் செய்​தனர். அதில், ''சொத்து குவிப்பு வழக்கை விசா​ரித்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவிடம் மீண்டும் மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்.'' என கோரினர். இந்த மனு மீதான விசாரணையை, ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

விசாரணை முடிந்து வெளியில் வந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவை பத்திரிகை​யாளர்கள் சூழ்ந்துகொண்டு கருத்து கேட்க, ''ஒவ்வொரு முறை விசாரணையின் போதும் மனு மீது மனு போட்டு வழக்கை இழுத்தடிச்சிட்டே இருக்காங்க. இது எங்கே போய் முடியப்போகுதோ போங்க!'' என்று சலித்துக்கொண்டு போனார்.

ரணிலை பதவி நீக்கும் சஜித்தின் போராட்டம் தோல்வி

செயற்குழுவில் காரசாரம்; ரணிலுக்கு கூடுதல் ஆதரவு
ஆர்ப்பாட்டத்தில் குளவிகளால் அல்லோலகல்லோலம்
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு, அதன் பிரதித் தலைவரான கரு ஜயசூரியவை தலைவராக நியமிக்க வேண்டுமென சஜித் பிரேமதாச தலைமையிலான பிரிவினர் முயற்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று பிற்பகல் 2 மணியளவில் கூடி ஆராய்ந்தது.
செயற்குழு தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக சஜித் குழுவினர் நேற்று சத்தியாக்கிரகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். என்றாலும், கட்சித் தலைமையகம் முன்னால் ஆர்ப்பாட்டமோ சத்தியாக்கிரகமோ நடத்தக் கூடாதென கங்கொடவில் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, தங்களது சத்தியாக்கிரகப் போராட்டத்தை சஜித் பிரேமதாச அணியினர் கொழும்பு, விஹார மகாதேவி பூங்கா அருகில் நடத்தினர்.
என்றாலும், ஐ.தே.க. செயற்குழு எவ்வித தடைகளுமின்றி நேற்று நடந்தது. செய்தி அச்சுக்கு போகும் வரை செயற்குழு தீர்மானங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை. சஜித் அணியினரின் ஆர்ப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவு ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது யாரோ குழவிகளை கலைத்து விட்டதால் சஜித் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட்டது.
அவர்கள், பேய்விரட்டும் தொனியில் வீதியில் ஆடிப்பாடி “ரணில் அரக்கனே பதவியைவிட்டு ஓடிவிடு” எனக் கோஷமிட்டவாறுவந்து, எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் முன்னால் தரையில் அமர்ந்து வலதுகையை உயர்த்தி “கரு ஜயசூரியவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தைக் கொடுத்துவிட்டு ரணில் விக்ரமசிங்க சென்றுவிடவேண்டும்” என்று பிரதிக்ஞை செய்துகொண்டார்கள்.
நேற்று பிற்பகல் இரண்டரை மணியளவில் விகாரமகாதேவி பூங்காவிலுள்ள புத்தபெருமானின் சிலைக்கு முன்னால் சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர, ரோசி சேனாநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, தலதா அத்துகோரல, சுஜீவ சேரசிங்க, புத்திக பத்திரண உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் குழுமியிருந்தனர்.
பின்னர், அவர்கள் ஒவ்வொருவராக ஒரு வாகனத்தின் மீது ஏறிநின்று அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைமைப் பதவியைத் துறக்கவேண்டும். அவர் அவ்விதம் ஒரு தீர்மானத்தை எடுத்தால்தான் கட்சி வலுவடைவதுடன் அரசாங்கத்துக்கு எதிர்வரும் தேர்தல்களில் ஒரு சவாலாக உருவெடுக்க முடியுமென்றும் கோஷமிட்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான உரைகளை சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜெயசேகர ஆகியோர் நிகழ்த்தினர். அங்குரையாற்றிய சஜித் பிரேமதாச, பதினேழு வருடங்களாக படுதோல்வியை எதிர்நோக்கியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்புவது ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமல்ல என்றும், அவருக்கு கட்சியின் தலைமை பதவியில் வீற்றிருக்கும் சுயநலநோக்கம் மாத்திரமே இருக்கிறது என்றும் கண்டனம் தெரிவித்தார். ரணிலுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கும் எண்ணத்துடன் தாங்கள் சத்தியாக்கிரகம் போன்ற சாத்வீகப் போராட்டங்களை நடத்துவதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். ரணில் எதிர்பார்ப்பதைப் போன்று நான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு ஓடிவிடமாட்டேன் என்று அறிவித்த சஜித் பிரேமதாச உயிருள்ளவரை கட்சியின் நம்பிக்கைக்குரிய சேவகனாக இருப்பேன் என்று சொன்னார்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர தமதுரையில், ரணிலுக்கோ, சஜித்துக்கோ ஆதரவாக தாங்கள் இங்கு வரவில்லையென்றும், இந்நாட்டு மக்களின் நல்வாழ்வைக் கருத்தில்கொண்டே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதாகத் தெரிவித்தார். சர்வாதிகாரப் போக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு என்றென்றும் பதவியில் வீற்றிருக்க முடியாது என்றும், அவர்களின் பதவிக்காலம் கூடிய விரைவில் முடிவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தே அந்த ஆர்ப்பாட்டத்தை அங்கு சடுதியில் இடமாற்றம் செய்ததாகவும் சென்னார்.
அதையடுத்து அங்கு குழுமியிருந்த சுமார் 2 ஆயிரம் பேர் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப ‘ரணில் அரக்கனே, உடனடியாக தலைமைத்துவத்தைத் துறந்து ஓடிவிடு’ என்று கோஷமிட்டவாறு ரணில் விக்ரம சிங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு பாதயாத்திரையில் வந்தனர். அதற்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்னால் தரையில் அமர்ந்திருந்த அனைவரும் வலது கையை உயர்த்தி கரு ஜயசூரியவுக்கு உடனடியாக கட்சியின் தலைமைத்துவத்தைக் கொடுத்து ரணில் விக்ரமசிங்க பதவி துறக்கவேண்டும் என்று பிரதிக்ஞையொன்றை எடுத்தார்கள்.
இதே வேளையில், கட்சியின் தலைமை யகமான ‘ஸ்ரீகொத்தாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நிரூஸி விமலவீர, லக்ஷ்மி பரசுராமன்

பிரபாகரனை, பேரறிவாளன் ரகசியமாக சந்தித்துத் திரும்பியதற்கும் ஆதாரங்கள் இருந்தன

அவர்கள் குற்றவாளிகள் தான்!''

சொல்கிறார் ரகோத்தமன்!

ராஜீவ் காந்தி படுகொலையை விசா ரித்த சி.பி.ஐ-யின் விசாரணை அதி காரியான ரகோத்தமன், ஓய்வு பெற்று சென்னையில் இப்போது வசிக்கிறார். அவரைச் சந்தித்தோம்!
'' மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமா... கூடாதா என்று வாதங்கள் தொடங்கி உள்ளன. உங்கள் கருத்து என்ன?''

''ஒரு மனித உயிரை இன்னொரு மனிதன் எடுக்க, எந்தவித அதிகாரமும் இல்லை. ஆனால், மரண தண்டனையை ஒரு குற்ற வாளிக்குக் கொடுக்கச் சொல்லி சட்டத்தில் இருக்கும் வரை, எந்த நீதிபதியும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. ஆகவே, 'சட்டத்தில் இருந்தே, மரண தண்டனையை எடுத்து விடலாமே?’ என்பதுதான் இன்று எழுப்ப வேண்டிய கேள்வியாக இருக்க முடியும். 'கொடூரமான குற்றங்கள் பெருகும்போது, அதைச் செய்யும் குற்றவாளிகள் மேலும் மேலும் உருவாகி, இந்தச் சமூகத்தையே அழிப்பார்கள். ஆகவே, இந்த மரண தண்டனை வேண்டும்.' என்று ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். இன்னொரு தரப்பினரோ, 'வளர்ந்த சமூகத்தில் இதுபோன்ற மரண தண்டனை விதிப்பது காட்டு மிராண்டித்தனம். இந்தத் தண்டனையைச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.' என்கி றார்கள். கொடூரமான படுகொலைகளைச் செய்கிற குற்றவாளிகளை மரண தண்டனை மூலம் தண்டித்தால்தான், அப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது என்னைப் பொறுத்தவரை வீண் வாதம். ஏனென்றால், பலதரப்பட்ட கொடூரக் குற்ற வாளிகளுக்கு மரண தண்டனை விதித்தும் இந்த நாட்டில் படுகொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், எதிரி நாட்டுக்கு ரகசியத்தை விற்பதுபோன்ற நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஒருவன் கொடூரக் குற்றம் செய்தால், அப்போது அவனுக்கு நிச்சயம் மரண தண்டனை விதிக்கலாம்!''
'' ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையே இன்னமும் முடியவில்லை. 'ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கைப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பல்நோக்கு விசாரணைக் குழு என்று இன்னொரு அமைப்பை நியமித்தார்களே... அது என்ன ஆனது? அதெல்லாம் முடியாத நிலையில், எந்த அடிப்படையில் சி.பி.ஐ. சொன்னதை மட்டும் கேட்டு, முருகன், சாந்தன், பேரறிவாளன்... மூவருக்கும் மரண தண்டனை விதிக்கலாம்?’ என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேட்கிறார்களே?''
''விசாரணை ஏஜென்சிகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஜெயின் கமிஷனோ, பல்நோக்கு விசாரணைக் குழுவோ... சி.பி.ஐ. கைது செய்து பிடித்த குற்றவாளிகள்பற்றி எதுவுமே கருத்து சொல்லவில்லை. அவர்கள் தலையிடவும் இல்லை. எங்களால் கைது செய்யப் பட்டவர்களை நிரபராதிகள் என்றும் சொல்லி விடவில்லை. அவர்கள் சொன்னது - 'புலிகள் இயக்கத்திடம் இந்தக் காரியத்தைச் செய்யத் தூண்டிய வேறு ஏதாவது சக்திகள் பின்னணியில் இருக்கின்றனவா?’ என்ற கோணத்திலும் விசாரிக்கும்படி சொன்னார்கள். அதற்கும் சி.பி.ஐ-க்கும் சம்பந்தமே இல்லை. இதை ஒரு வாதமாக வைத்து, சி.பி.ஐ.யைத் திசை திருப்பக் கூடாது. எங்களைப் பொறுத்த வரை, அந்தக் கொலை வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது!''

''இரண்டு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காகவா, பேரறி வாளனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்கிறார்களே?''
''இது ஒரு சப்பையான வாதம்தான்!
'பெல்ட் குண்டு எங்கே தயாரிக்கப்பட்டது? இங்கு எப்படி கொண்டுவரப்பட்டது என்கிற விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.’ என்று நான் ஒரு பேட்டியில் சொன்னேன். அதை மேற்கோள் காட்டி, 'பெல்ட் குண்டைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அதற்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தவருக்கு மரண தண்டனையா?' என்று இப்போது வினா எழுப்புகிறார்கள். நான் அப்படிச் சொன்னது வாஸ்தவம்தான். ஆனால், அந்த பெல்ட் குண்டு எங்கு இருந்து தயாரிக்கப்பட்டது என்று இதுவரை தெரியவில்லை. அதை இயக்கத் தேவைப்பட்ட ஸ்பெஷல் பேட்டரிகளை, பேரறிவாளன் மூலம்தான் ஒற்றைக் கண் சிவராசன் பெற்றான் என்பதற்கு சி.பி.ஐ.யிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த பொருட்களில், அந்த பேட்டரியின் பாகங்களை நாங்கள் கைப்பற்றினோம். யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகள் இயக்கத் தலைவர்களுடன் சிவராசன் ரகசியமாகத் தொலைபேசியில் பேச, தேவைப்பட்ட பேட்டரியும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில், பேரறிவாளனே பொய்யான விவரங்களைக் கொடுத்து, அவரே டெலிவரி எடுத்துச் சென்றதை விசாரணையில் கண்டுபிடித்தோம். சிவராசனுக்காகப் புது மோட்டார் சைக்கிளை அவர் வாங்கிக் கொடுத்ததையும் அறிந்தோம். யாழ்ப்பாணத்தில் இருந்த
பிரபாகரனை, பேரறிவாளன் ரகசியமாக சந்தித்துத் திரும்பியதற்கும் ஆதாரங்கள் இருந்தன. பிரபாகரன் சொல்லித்தான், 'சாத்தானின் படைகள்’ என்ற புத்தகத்தை, தமிழகத்தில் ரகசியமாக பேரறிவாளன் அச்சடித்தார். 'பிரின்டடு இன் யு.கே. இது ஒரு விடுதலைப் புலிகள் பிரசுரம்' என்கிற வாசகங்கள் அதில் இருந்தன. அதற்கான தொகையை, திருச்சி சாந்தன் மூலம் இவர் பெற்று இருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களைப் பார்த்தால், 'ராஜீவ் காந்தியை ஏன் கொல்ல வேண்டும்?’ என்கிற குறிக்கோளை வெளிப்படுத்திய முக்கிய ஆவணம் இது. இதற்கு மேல் அவரைக் குற்றவாளி என்று சொல்ல, வேறு என்ன ஆதாரம் வேண்டும்?''

''ராஜீவ் காந்தியைக் கொலை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு தண்டனை. தற்போது, விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை. இது எப்படி நியாயம்?''
''1991 முதல் எட்டு வருடங்கள் விசாரணை நடந்தது. தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மாநில, மத்திய அரசுகளிடம் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனுப் படலம் 12 வருடங்கள் நடந்தது. இவர்கள் மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் கருணை மனு போட்ட மரண தண்டனைக் கைதிகள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். எனவே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் கால தாமதம் ஏற்படவில்லை. கருணை மனு மீதான இறுதி முடிவு தெரியும் வரை, தண்டனை பெற்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும், சிறையில் இருப்பதுதான் முறை. அதுதான் இங்கேயும் நடந்தது!''

தமிழ்க் கட்சிகள் புதுடில்லி பயணம்

இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு தமிழ்க் கட்சிகளை புதுடில்லிக்கு வரும்படி இந்தியா அழைத்துள்ளது. இச் சந்திப்பு எதிர்வரும் 23ம், 24ம் திகதிகளில் புதுடில்லியில் இடம்பெறும்.
இலங்கை அரசுடன் ஒரு தீர்வை எட்டுவதற்கு முன்பாகத் தமிழ்க் கட்சிகளிடம் ஒருங்கிணைந்த கருத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தக் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் உலக அபிவிருத்திக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் ஒன்றியம் எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் தமிழ்க் கட்சிகளின் பிரநிதிகளை கலந்துகொள்ளுமாறு அமைப்பின் தலைவரான இந்திய காங்கிரஸ் கட்சி எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்) சுரேஷ் மற்றும் பத்மநாபா அணிகள், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) ஆகிய கட்சிகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
முதல்நாள் அமர்வில் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களை கேட்டறியப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சியினருக்கும் இணக்கப்பாடான பொதுக்கருத்து நிலையொன்றை ஏற்படுத்தப்படும். இரண்டாம் நாள் அமர்வில் புதுடில்லியில்உள்ள முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்களை தமிழ்க் கட்சியினர்  சந்திப்பார்களெனவும் தெரியவருகிறது.

போபாலில் ஊழலை எதிர்த்து போராடிய பெண் சுட்டுக் கொலை

மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ஊழலை எதிர்த்து போராடி வந்த ஷெஹ்லா மசூத் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷெஹ்லா மசூத். ஊழலை எதிர்த்து போராடியவர், தகவல் அறியும் சட்ட ஆர்வலர், சூற்றுச்சூழல் ஆர்வலர். அவர் மத்திய பிரததேசத்தில் புலிகளைக் காக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார்.
நேற்று போபால், மசூத் கோ இ பிசா பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கழுத்தில் குண்டு பாய்ந்து இறந்தார் என்று போலீஸ் அதிகாரி சைலேந்திர ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் குழுவிற்கு மசூத் தலைமை தாங்கி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அன்னா ஹஸாரே முதன்முதலாக டெல்லியில் போராட்டம் நடத்தியபோது மசூத் மத்திய பிரதேசத்தில் நடத்தினார்.
கடந்த திங்கட்கிழமை அன்று மசூத் ஊழலை வெளிப்படுத்த உறுதி எடுத்ததோடு அதை நிரூபிக்க தன்னிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். மறுநாளே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் அஜய் துபே கூறியதாவது,
மாநிலத்தில் பல புலிகள் இறந்துபோது ஷெஹ்லா தான் துணிச்சலாக கேள்வி கேட்டார். ஒரு வேளை புலிகளை வேட்டையாடும் கூட்டம் அவரைக் கொன்றிருக்கலாம்.
இந்த கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்களுக்கு மாநில அரசு மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐ தான் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.