வெள்ளி, 30 ஜூலை, 2010

விஜய்யின் ‘காவல் காதல்’ படத்தை வெளிநாடுகளில் சிக்கல்

வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, விஜய்யின் ‘காவல் காதல்’ படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளது. இதில் 30 தமிழ் அமைப்புகள் உள¢ளன. இலங்கைக்கு செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை அமெரிக்காவில் திரையிட விடமாட்டோம் என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பிரிட்டன், கனடா நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளும் இம்முடிவை எடுத¢துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்காகவோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ இலங்கைக்கு செல்லக்கூடாது என்று திரையுலகில் சிலர் கூறிவருகின்றனர். அப்படி தடுப்பது தவறு என இன்னொரு தரப்பு கூறுகிறது. இந்த விஷயத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தலையிட்டு, இலங்கை செல்லும் நடிகர் நடிகைகளின் படங்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். ‘முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள படத்தை புறக்கணிப்போம்’ என அமெரிக¢க தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் சித்திக் இயக்கும் படம் ‘காவல் காதல்’. இதில் அசின் நடித்துள்ளார். தமிழ் படங்கள் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டுகின்றன. இந்நிலையில் தமிழ் அமைப்புகளின் முடிவால் விஜய் படத்தை அங்கு திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நடிகர் அஜீத் இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர் என்பது போல இணையதளத¢தில் தகவல்கள் பரவின. அவரது படத்தை புறக்கணிப்பதாக வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகள் அறிவித்தன. அஜீத் விளக்கம் தந்தார். இலங்கை தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்திலும் பங்கேற்றார். இதையடுத்து அவர் படங்கள் மீதான தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 Comments poopathi:
படம் நன்றாக இருந்தால் ஓடும் அவ்வளவுதான். வெளிநாடுகளில் தமிழ் படங்களை வைத்து வியாபாரம் (திருட்டு காப்பிகள் உட்பட) செய்பவர்கள்  எல்லாம் முன்னாள் புலி விசுவாசிகளே. அவர்களது கொள்கைகள் எல்லாம் கடைசியில் பணத்தில் பொய் நிற்கும். எதில் அதிக லாபமோ அதில் பெரிய விசுவாசி போல் காட்டிக்கொள்வார்கள். அவர்களது புலிவிசுவாசம்கூட மிக நிச்சயமான சுயநலத்தை அடிப்படையாக கொண்டதே.  சரியாக சொல்லப்போனால் அதிகமான அறியாமையில் மிதந்தவர்களும் படு சுயநலமான நோக்கம் கொண்டவர்க்களும்தான் அதிகமான  சத்தம் போட்டவர்கள்.
விஜய்க்கு ஒரு அட்வைஸ்: உங்கள் படம் சரியாக இருந்து ஜாதகமும் சரியாக இருந்தால் படம் ஓடும். புளிப்புச்சாண்டி காட்டுபவர்கள் எதோ உங்களிடம் இருந்து காசு கறக்கும் நோக்கத்தில் கத்துவது போல் தெரிகிறது.யாரிடமும் சமரசம் பேசவேண்டாம். மீண்டும் சொல்கிறேன்(மசாலா)  படம்  சரியாக இருந்தால் ஓடும்.

சோனியா அகர்வால் செல்வராகவனுடன் மீண்டும் இணைவாரா ?

மீண்டும் செல்வராகவனுடன் இணைய சோனியா அகர்வால் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை செல்வராகவன் தரப்பிலிருந்து பதில் ஏதும் அவருக்கு வரவில்லையாம்.

இயக்குநர் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் நீண்ட காலம் காதலித்து பின்னர் மணம் புரிந்து கொண்டனர். இந்த ஜோடி எப்படி நிலைக்கப் போகிறது என்று அப்போதே பேச்சு எழுந்தது. அதே போலவே நடந்தும் போனது.

கல்யாணமான வேகத்திலேயே இருவரும் பிரிந்தனர். இப்போது தனித் தனி பறவைகளாக வசித்து வருகின்றனர். திருமண முறிவுக்குப் பின்னர் நடிக்க முயற்சித்து வந்தார் சோனியா. இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. டிவி சீரியலிலும் நடித்துப் பார்த்தார், தேறவில்லை.

அதேசமயம், தனது சொந்த ஊருக்குப் போகாமல் தொடர்நது சென்னையிலேயே இருந்து வருகிறார் சோனியா. பட விழாக்களுக்கு போய் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மீண்டும் செல்வராகவனுடன் அவர் இணைய முயற்சிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதை உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் சோனியா தரப்பிலிருந்தே முயற்சிகள் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள். அதேசமயம், செல்வராகவன் தரப்பிலிருந்து இதுவரை பதில் ஏதும் வரவில்லையாம்.

சோனியாவும், செல்வராகவனும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என சோனியாவின் தாயாரும் தீவிரமாக உள்ளாராம். அதேபோல, செல்வராகவன் மீது தான் கொண்ட சந்தேகங்களில் சில தவறு என்பதை இப்போது சோனியா புரிந்து கொண்டுள்ளாராம். இதனால்தான் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறப்படுகிறது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, உரியவர்களுக்குப் புரிந்தால் சரி...

கடும் போட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான தலைவர் பதவிக்கு

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கவனித்து வருகிறது.
 
இந்த தேவஸ்தானத்தின் தலைவராக டி.கே.ஆதிகேசவலுநாயுடு இருந்து வருகிறார்.
 
குண்டூர் பாராளுமன்றத்தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு 5 தடவை தேர்வான ஆதிகேசவலு நாயுடு, திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவியை 2-வது முறையாக வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந் தேதியுடன் முடிகிறது.
 
எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டியதுள்ளது. ஆந்திர மாநில அரசு பரிந்துரை செய்யும் நபர் தான் திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே பெரும்பாலும் தேவஸ்தான தலைவர் பதவிக்கு வருவார்கள்.
 
தற்போதைய தலைவர் ஆதிகேசவலு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.ஆக இருந்தவர். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது கட்சி கட்டளையை மீறி ஆதிகேசவலு நாயுடு காங்கிரசுக்கு சாதகமாக நடந்து கொண்டார். அதற்கு பரிசாக சோனியா உத்தரவின் பேரில் இவரை திருப்பதி தேவஸ்தான தலைவராக அப்போதைய முதல்- மந்திரி ராஜசேகர ரெட்டி ஆக்கினார்.
 
தற்போது 3-வது முறையாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கு வர ஆதிகேசவலு நாயுடு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தலைவர் பதவிக்கு இந்த தடவை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
 
கடலோர ஆந்திராவில் செல்வாக்கு பெற்ற தொழில் அதிபர் ராயப்பட்டி சாம்ப சிவராவ், மேல்-சபை முன்னாள் எம்.பி.க்கள் கிராந்தி மல்லிகார்ஜூன ராவ், கிரீஸ் சங்கி, முன்னாள் எம்.பி. சுப்பிராமி ரெட்டியின் மனைவி இந்திரா ரெட்டி ஆகிய 4 பேரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
 
ஆதிகேசவலு நாயுடு சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு மட்டும் வசதி செய்து கொடுத்து விட்ட தாகவும், திருப்பதி வரும் ஏழை பக்தர்களின் நலனை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
 
தொழில் அதிபர் ராயப்பட்டி சாம்பசிவ ராவ் கடந்த 20 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கு முயன்று வருகிறார். இவர் முதல்வர் ரோசய்யாவை சந்தித்து பேசியுள்ளார்.
 
அது போல சுப்பிராமிரெட்டி மனைவி இந்திராரெட்டியும் ரோசய்யாவிடம் பேசியுள்ளார். தலைவர் பதவி கேட்டு அவர் டெல்லி காங்கிரஸ் மேலிட தலைவர் களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்திராரெட்டி தலைவரானால், திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பைப்பெறுவார்.

ஏ-9 வீதியில் இரு மருங்கிலும் பனம் விதை நடுவதற்குத் திட்டம்

முகமாலை முதல் வவுனியா வரையுள்ள ஏ - 9 வீதியின் இரு மருங்கிலும் பனம் விதை நடப்படவுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

ஐந்து லட்சம் பனைவிதை நடுகைத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே ஏ - 9 பாதையின் இரு மருங்கிலும் பனை விதைகள் நடப்படவுள்ளதுடன் வீதிகளின் இரு மருங்கில் உள்ள வெறும் காணிகள் மற்றும் பாடசாலைகளின் மைதானங்களைச் சுற்றியும் விதைக்கப்படவுள்ளன.

யுத்த காலங்களில் பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்பட்டமையும் அத்துடன் முன்னர் திட்டமிடாத முறையில் பனம் விதைகள் விதைக்கப்பட்டமையினால் அம்மரங்கள் அழிக்கப்பட்டமைக்காகவும் இவ் விதைகள் விதைக்கப்படுவதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிச

மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை - மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிசு இருந்தது. அரசின் "108' இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுரேஷ், விமல், சரவணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.
டாக்டர்கள் கூறியதாவது: இக்குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ளது. மேற்புறமாக கல் அழுத்தி உள்ளதால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் உடைந்துள்ளதாக தெரிகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுப்பப் பட்டுள்ளது, என்றனர்.
மனிதாபிமானமற்ற பெற்றோர் யார்?: நான்கு வழிச்சாலையில் வழியாக பயணம் செய்த யாரோ தான் இப்படி குழந்தையை போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும். குழந்தையின் கை மற்றும் காலில் கண்மை இடப்பட்டு உள்ளது. ஆசையுடன் கொஞ்சிய பச்சிளம் குழந்தையை இப்படி வீசியதற்கு பதில் அரசு தொட்டிலில் சேர்த்து இருக்கலாமே.

நடிகை ஆம்னியை கைது செய்ய போலீசார் முடிவு

கமலுடன் பாசவலை, விஜயகாந்துடன் ஆனஸ்ட்ராஜ் படங்களில் நடித்த நடிகை ஆம்னி தமிழ் தயாரிப்பாளர் ஒருவரை மணந்தார். அதன் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

இந்நிலையில் தனது சகோதரன் விவகாரத்தால் அவர் போலீசாரால் கைதாகும் நிலையில் இருக்கிறார்.
ஆம்னியின் தம்பி சீனிவாஸுக்கும் (35), நெல்லூரை சேர்ந்த லீலாவதி (31) என்ற பெண்ணுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரீத்தி (11) என்ற மகள் உள்ளார். சென்னையில் வசித்து வருகின்றனர்.திருமணத்தின் போது லீலாவதியின் பெற்றோர் 7 லட்சம் ரொக்கம், 45 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சில ஆண்டுகளாக குடிப் பழக்கத்துக்கு அடிமையான சீனிவாஸ், லீலாவதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதனால் வேதனை அடைந்த லீலாவதி, நெல்லூர் போலீசில் நேற்று புகார் செய்தார்.
’’எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார். எனது தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்கிறார்.

இதற்கு அவருடைய தாய் சரோஜாவும், நாத்தனார் நடிகை ஆம்னியும் உடந்தையாக உள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், சென்னையில் இருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இது குறித்து சென்னை போலீசிலும் புகார் செய்துள்ளேன்’’என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆம்னி உட்பட 3 பேர் மீதும் நெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சீனிவாசை நேற்று கைது செய்தனர். ஆம்னி, சரோஜாவை விரைவில் கைது செய்வோம் என போலீசார் கூறியுள்ளனர்.

பாலிவுட்டில் முதல் படத்திலேயே த்ரிஷா வெற்றி நாயகியாகி விட்டார்.

கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய த்ரிஷா, கட்டாமிட்டா படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். முதல் படத்திலேயே அம்மணி வெற்றி நாயகியாகி விட்டார். தன்னை தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்திய டைரக்டர் ப்ரியதர்ஷன் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தியில் நடிக்க சம்மதித்தார் த்ரிஷா. கட்டா மிட்டா படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக அக்ஷைகுமார் சாதாரண வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியான மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.30 கோடியாகும். படம் வெளிவருவதற்கு முன்பே விற்பனை உரிமை வகையில் ரூ.48 கோடிக்கு விலைபோனது. திரையிடப்பட்ட மூன்று நாட்களில் ரூ.20கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த வெற்றி தனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருவதாக த்ரிஷா கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் ரசிகர்கள் என்னை ரசித்ததைப் போலவே இந்தி ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இந்த படத்தின் வெற்றி எனக்கு இந்தியில் நல்ல பிளாட்பார்ம் அமைத்து கொடுத்திருக்கிறது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வெற்றியை தொடருவேன், என்றார். படத்தின் நாயகன் அக்ஷய் அளித்துள்ள பேட்டியில், எனது விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. படத்தில் என்ன<>
கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய த்ரிஷா, கட்டாமிட்டா படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். முதல் படத்திலேயே அம்மணி வெற்றி நாயகியாகி விட்டார். தன்னை தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்திய டைரக்டர் ப்ரியதர்ஷன் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தியில் நடிக்க சம்மதித்தார் த்ரிஷா. கட்டா மிட்டா படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக அக்ஷைகுமார் சாதாரண வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியான மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.30 கோடியாகும். படம் வெளிவருவதற்கு முன்பே விற்பனை உரிமை வகையில் ரூ.48 கோடிக்கு விலைபோனது. திரையிடப்பட்ட மூன்று நாட்களில் ரூ.20கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த வெற்றி தனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருவதாக த்ரிஷா கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் ரசிகர்கள் என்னை ரசித்ததைப் போலவே இந்தி ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இந்த படத்தின் வெற்றி எனக்கு இந்தியில் நல்ல பிளாட்பார்ம் அமைத்து கொடுத்திருக்கிறது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வெற்றியை தொடருவேன், என்றார். படத்தின் நாயகன் அக்ஷய் அளித்துள்ள பேட்டியில், எனது விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. படத்தில் என்னுடன் உழைத்த அத்தனைபேருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொருவரும் சிறந்த முறையில் தனது உழைப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில், குடும்ப பாங்கான படத்தை பிரியதர்ஷன் எடுத்துள்ளார், என கூறியுள்ளார்.
, கட்டா மிட்டா, த்ரிஷா, அக்ஷய் குமார்,‎
ுடன் உழைத்த அத்தனைபேருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொருவரும் சிறந்த முறையில் தனது உழைப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில், குடும்ப பாங்கான படத்தை பிரியதர்ஷன் எடுத்துள்ளார், என கூறியுள்ளார்.

்புலி ஆதரவாளர்கள் சிந்திக்க பயப்படுபவர்கள் கனவுகள் கூட பிரபகரனை மீறி இருக்கமுடியாது.

  • விடுதலைப்புலிகளி;ன் ஆயுதப்போராட்டம் முடிந்து விட்டது.
  • விடுதலைப்புலிகளும் ஆரசாங்கமும் ஒருவரை ஒருவர் நம்பாத நிலையில்;தான் பேச்சு நடத்தினார்கள்.
  • விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகி இருக்கக் கூடாது.- இப்படி வெளியேறியதன் மூலம் உலகின் தார்மீக ஆதரவை இழந்து விட்டார்கள்.
  • அமெரிக்காவும் யப்பானும் ஒவ்வொரு முறையும் விடுதலைப்புலிகள் பேசத்தொடங்கிய போது வெளியேறினார்கள்.
  • எந்த ஒரு உலக நாடும் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காது.
  • எதிர்காலத்தில் எந்த நாடும் ஆயதப் போராட்டத்தையும் ஆதரிக்காது.
  • இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுடன் பேசத்தேவையில்லை- அரசாங்கம் போரில் வென்று விட்டது
  • இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்துதான் புலம் பெயர்ந்தவர்கள் வேலை செய்யமுடியும்
  • வட கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு புலம் பெயர்ந்தவர்கள் உதவவேண்டும்.
  • வட கிழக்கு மக்களின் புனர்வாழ்வுக்கு புலம் பெயர்ந்தவர்கள் உதவவேண்டும்.
  • இப்படியான விடயங்களை பல விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மத்தியில் துணிந்து கூறிய நபர் யார் தெரியுமா?
முன்னாள் தமிழர் புனர்வாழ்வு கழகத்தலைவரும் விடுதலைப்புலிசார்பாக பல தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவருமான டாக்டர் ஜோய் மகேஸ்வரன.; கடந்த சனிக்கிழமை (24-07-2010) மெல்பேனில் மறைந்த கணித மேதை பேராசிரியர் எலியேசர் அவர்களின் நினைவு உரையில் இந்த விடயங்களை தீர்க்கமாகக் கூறினார். இந்தக் கூட்டத்தில் இவரைத் தவிர இரு அவுஸ்;திரேலியர்களும் லயனல் போபகேயும் உரையாற்றினார்கள்.
இலங்கையில் இன நல்லுணர்வு பற்றி பேசுவதாக இந்த கூட்டத்துக்கு தலைப்பிட்டு ஈழத்தமிழ் சங்கம் நடத்துவதாக எனக்கு ஈமெயில் வந்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்காமல் ஈழத்தமிழ்சங்கத்தலவரை தொடர்பு கொண்டு “இதென்ன நீங்களுமா இலங்கையில் இன ஒற்றுமையை வேண்டி கூட்டம் நடத்துகிறீர்கள். இந்த ஈமெயிலை சிங்கள இனத்தவர்களுக்கும் அனுப்ப முடியுமா? எனக்கேட்டபோது தமிழ்சங்கத்தலைவர் இதென்ன இப்படிக்கேட்கிறாய்? நாங்களும் இன ஒற்றுமைக்குத்தானே பாடுபடுகிறேம் எல்லோருக்கும் அனுப்பலாம் என சொன்னார். நானும் சந்தோசமாக பலருக்கும் அனுப்பிவிட்டு கூட்டத்துக்குக்கும் செல்ல தீர்மானித்தேன்.
லயனல் போபகே பலகால நண்பர் இன ஒற்றுமைக்காக பலகாலமாக கான்பராவில் உழைத்தவர். அவரை பலவருடங்களுக்கு முன்பு உதயத்தின் வருடாந்த விருந்தில் தமிழ் மக்கள்  மத்தியில் பேச வைத்தேன் இவரது உரையை செவிமடுப்பதன் மூலம் சிங்கள மக்களின் சிந்தனையை அறிந்து கொள்ள முடியும் என நினைத்து உற்சாகமாகச் சென்றேன்.
இது வேளையில் அவுஸ்திரேலியர்கள் இலங்கை தமிழர் பிரச்சினையை எனக்கு சொல்ல அதைக்கேட்டு அவர்களுக்கு கைதட்டும் நிலை எந்தக் காலத்திலும் எனக்கு வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவன். இதை எனக்கு ஏற்படும் அவமானமாக நினைப்பவன். ஆனால் பல தமிழர்கள்  அவர்களுக்கு அரைகுறை ஆங்கிலத்தில் சொன்னதை அவர்கள் தங்களது ஆங்கிலத்தில் திருப்பி சொல்லும் போது கைதட்டுகிறார்கள். இதில் இன்னும் ஒரு விசேசம் எங்களில் பலர் அகதி அந்தஸ்த்து பெற சொன்ன பொய்களையும் சேர்த்து அவர்கள் சரியான ஆங்கிலத்தில் புதிய கண்டுபிடிப்பாக சொல்லுவார்கள். இதையும் கேட்டு கைதட்ட ஒரு கூட்டம் உண்டு.
நான் உண்மையில் டாக்டர்ஜோய் மகேஸ்வரன் பேச்சை கேட்க உற்சாகத்துடன் போகவில்லை. இதற்கு பல காரணங்கள். இப்பொழுது அவை முக்கியமில்லை. ஆனால் லயனல் போபகே தனது பேச்சில் இலங்கையின் எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையுமில்லாமல் இருண்ட காலத்தை நோக்கி இலங்கை போயக்;கொண்டிருப்பதாக காண்பித்தார்
தலைவனாகவோ அல்லது அறிவாளியாகவோ தன்னை காண்பிப்பவன் தனது பேச்சில் நம்பிக்கையை கொடுக்கவேண்டும். அந்தகாரமான இருளில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுபவன்தான்  அறிவாளி. இருளை சபித்துக்கொண்டிருப்பவன் முட்டள் மட்டுமல்ல சோம்பேறியும் கூட. இலங்கை தமிழர்களும் சிங்களவர்களும் முப்பது வருடம் போரிட்ட போதும் அவர்களிடம் மானிடம் செத்துவிடவில்லை என்பதற்கு சுனாமிக்காலம் உதாரணம். அரசியல்வாதிகள் இன்று வருவார்கள் நாளை போவார்கள்.
இந்தவகையில் தமிழர்கள் இலங்கையில் இப்படித்தான் நடக்கவேண்டும் என அழுத்தமாக டாக்டர ஜோய் மகேஸ்வரன் கூறியது முக்கியமானது. ஒருவரும் ஆட்சேபிக்கவும் இல்லை. இது எனக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது.
 விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எந்தக்காலத்திலும் சுயமாக சிந்திக்க பயப்படுபவர்கள். அவர்கள் கனவுகள் கூட வேலுப்பிள்ளை பிரபகரனை மீறி இருக்கமுடியாது.
எனக்குத்தெரிய இந்தியாவில் ‘’ அண்ணை உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்கள்  எப்போதும் இயக்கத்தைவிட்டுப் போகலாம்’ என்று பாலசிங்கத்திடம் பிரபாகரன் 86ஆம் ஆண்டு கூறினார். ஆனல் சாகும் வரையும் கல்லறைகளுக்கு வெள்ளையடிக்கும் சாதாரண வேலையை மட்டும் செய்து கொண்டு மனவருத்தத்துடன் இறந்தார். இதேபோல் தம்பி சொன்னதால் சுட்டோம் என யோகி ஒரு முறை கோடம்பாக்கத்தில் கூறினார். ஏன் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கூட தங்களைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்த மண்ணில் இருந்து வந்த உத்தரவு என கூறிக்கொள்வார்கள்;. காலம் முழுக்க வித்தியாசமாக சிந்தித்தாலும் அதை வெளிச்சொல்லாமல் அப்படி சிந்திப்பவர்களின் சுமைதாங்கியாக வன்னியில் இருந்து மறைந்தவர் நண்பர் பாலகுமார். ஒரே ஒரு கருணா எனும் வினாயகமூர்த்தி முரளீதரன் மட்டும் விடயம் புரிந்தவுடன் துணிச்சலுடன்  வெளியேறியவர்.
தற்பொழுது வன்னிமக்களை காப்பாற்றி வாழ வைப்பதும் போராட்டம் என்ற பேரில் வலுக்கட்டாயமாக தங்கள் வாழ்க்கையையும் அவயவங்களையும் இழந்த இளைஞர் யுவதிகளுக்கு உதவுவதும்தான்  முக்கியம்  என நினைத்தாலும் பழக்க தோசத்தினால்  பலர் சொல்லப் பயப்படுகிறார்கள். ஒரு தனி மனிதனின் சிந்தனையின் பின்னாலே சென்ற இந்த மனிதக் கூட்டத்தில் தற்பொழுது டாக்டர் ஜோய் மகேஸ்வரன் பேச்சு ஒரு திருப்பு முனையாக குறைந்தது மெல்பேனில் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
செம்மறிகள் கூட அறிவுள்ள இடையனைத்தான் விரும்பும் என நடிகர் சிவகுமார்கூறியது நினைவுகூரத்தக்கது.
தமிழ்தேசியத்தை நம்பியவர்கள் இப்பொழுது தலைவன் இல்லாமல் உலகமெங்கும் திருடர் கூட்டத்தின் பின் செல்லுகிறார்கள் என்பதை எனது ஐரோப்பிய பயணத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவுஸ்திரேலியாவில் பலர் எந்த கொள்கையும் இல்லாத பக்கா மோசடிப்பேர்வழியான இன்பத்தமிழ் வானொலி பிரபாகரன் போன்றவர்களின் வழிநடத்தலில் செல்லும் அபாயம் உள்ளது. இவரை ஏற்கனவே நாடுகடந்த தமிழ்ஈழப் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். இனிமேல் .இந்த நாடுகடந்த தமிழ் ஈழக்காவலர்களினால் இவருக்கு தகவல் துறை அமைச்சிலிருந்து ஒரு ஜீப்பும் கிடைக்குமென்றுகூட பேசிக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்த்தேசியத்தை மட்டுமல்ல அவுஸ்திரேலியாவின் மானத்தையும் காப்பாற்ற வேண்டிய தேவை டாக்டர் ஜோய் மகேஸ்வரன், சண்முகம் சபேசன் போன்ற தமிழ் தேசியவாதிகளுக்கு உள்ளது.
uthayam@optusnet.com.au

கனடாவில் வசிக்கும் இலங்கையர் கைது,நாயினை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்

நாயினை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய இலங்கையர் கனடாவில் கைது

கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 51 வயதுடைய அஞ்சலோ அபயவிக்ரம என்பவர் நாயினை பலாத்காரபடுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.
இவரது வழக்கு நேற்று புதன்கிழமை கனடா நீதிமன்றில் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாயின் உறுப்பில் பலாத்காரமாக ஆணுறையினை அணிவித்து சித்திரவதை செய்ததால் அந்நாய் பரிதாபமாக துடிதுடித்த சம்பவத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அந்நபர் கைதுசெய்யப்பட்டார்.
மிருகவதை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபரின் விசாரணை நேற்று நடைபெற்றபோது, தான் வேண்டுமென்று அந்நாயினை சித்திரவதை செய்யவில்லை எனவும் அந்நாய் அடிக்கடி தனது வீட்டில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காகவே தான் அப்படி ஆணுறையினை அந்நாய்க்கு மாட்டிவிட்டதாகவும் சந்தேகநபர் மன்றில் தெரிவித்திருக்கிறார். மேலதிக விசாரணைகள் மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நபர் கடந்த 2007ஆம் ஆண்டு தனது நண்பருடன் கத்திக்குத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கும் இலக்காகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனின் மரணம்,விரைந்து செயல்பட அவர் தவறி விட்டார்.கேபி.

என் பேச்சை கேட்டிருந்தால் பிரபாகரன் இறந்திருக்க மாட்டார்-சொல்கிறார் - கேபி

இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் . இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி.

கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி.

ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆனால் இன்று இலங்கை அரசின் கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவத்தின் பிடியில் உள்ள கேபி, இலங்கை அரசின் ஐலன்ட் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

கைதுக்குப் பின்னர் கேபி அளித்துள்ள முதல் பேட்டி இது. பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

4வது ஈழப் போரின் திருப்பு முனை எது என்று கருதுகிறீர்கள்?
அமெரிக்காவில் அல் கொய்தா அமைப்பினர் நடத்திய அதி பயங்கரத் தாக்குதல்தான் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மேற்கத்திய சக்திகள் தலைமையிலான அனைத்து நாடுகளும் அனைத்து ஆயுதம் தாங்கிய குழுக்களையும் அபாயகரமானவை என்று அறிவித்தன. இது எங்களது நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது.

அல் கொய்தாவின் அதிவேக வளர்ச்சியால் ஒட்டுமொத்த ஆயுதக் குழுக்களும் பாதிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகள் ஆயுதப் போராட்டம் குறித்த தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள நேரிட்டது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்.

பிரிவினைவாத கருத்துக்களைப் பரப்புவதில் பெரும் சிரமங்கள் ஏற்படத் தொடங்கின. துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சில முக்கியத் தலைவர்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட யாருமே இந்த புதிய சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை. தங்களது உத்தியை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை.

அதை அவர்கள் செய்திருந்தால், செய்ய முன்வந்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். இன்று புதிய உலக நடைமுறை உள்ளது. இது ஆயுதப் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாது. இதை உணர வேண்டும். அதுதான் உண்மையும் கூட.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி உங்களுக்கு எப்போது கிடைத்தது. அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?

மே 19ம் தேதி எனக்கு பிரபாகரன் மரணச் செய்தி கிடைத்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். சர்வதேச மீடியாக்கள் இந்த செய்தியை முரண்பட்டு வெளியிட்டுக் கொண்டிருந்தன. சில மீடியாக்களில் மரணச் செய்தி குறித்து சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வந்தன. நான் பிரபாகரனின் மிகச் சிறந்த நண்பன். இதனால், அவருடைய உயிரிழப்பு குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன்.

அவர் எனது பேச்சைக் கேட்டிருந்தால், அரசுடன் உடன்பாட்டுக்கு ஒத்து வந்திருந்தால் இது நடந்திருக்காது. இறுதிப் போரில் நடந்தவை தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் எல்லாமே கால தாமதமாகி விட்டது.

மே 10ம் தேதி வன்னிக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 400 அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நான் அரசியல் பிரிவு தலைவர் நடேசனுடன் பேசினேன். ஆனால், ராணுவத் தாக்குதலை தடுக்க முடியும், 3வது தரப்பின் மூலமாக சமரசம் பேச முடியும் என அவர்கள் நம்பினர்.

நாங்களும் கூட பலருடன் பேசினோம். பல அமைப்புகளுடன் பேசினோம். ஐ.நாவுடன் கூட பேசினோம். சில ஏற்பாடுகளை செய்ய முயற்சித்தோம். ஆனால் எல்லாமே தோல்வியல் முடிந்தன. இது பிரபாகரன் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தாமதத்தால் ஏற்பட்டது. விரைந்து செயல்பட அவர் தவறி விட்டார்.

புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதியைப் பெற்று மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த நீங்கள் சமீபத்தில் ஒரு என்ஜிஓ அமைப்பை உருவாக்கினீர்கள். அதற்கு என்ன பலன் கிடைத்துள்ளது?

வடக்கு-கிழக்கு மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சிக் கழகம் என்பது அதன் பெயர். இப்பிராந்தியத்தில் மறு சீரமைப்பு, புதுக் கட்டமைப்பு மற்றும் மறு குடியேற்ற நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இந்த அமைப்பு தயாராக உள்ளது.

இதன் தலைமை அலுவலகம், வவுனியா, வைரவபுதியன்குளத்தில் அமைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக இது பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. எங்களது மக்கள் குறிப்பாக குழந்தைகள் நலன் குறித்து நாங்கள் பெரிதும் அக்கறை காட்டுகிறோம்.

இந்தப் போரினால் மக்கள் பெரும் சோர்வடைந்து விட்டனர். எனவே அந்த பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும். அதில் எந்தவித அரசியலும் கலக்காமல், மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே மேலோங்கி நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

ஒரு டாலரிலிருந்து எத்தனை டாலர் வரை வேண்டுமானாலும் நிதியாகத் தாருங்கள் என்று புலம் பெயர்ந்த தமிழர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மாதாந்திர அடிப்படையில் இந்த நிதியை அவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த நிதி வசூலை மேற்கொள்வதற்கு வசதியாக சமீபத்தில் வவுனியாவில் உள்ள கமர்ஷியல் வங்கியில் ஒரு கணக்கையும் தொடங்கியுள்ளோம். (கணக்கு எண்ணையும் சொல்கிறார்).

எங்களது இமெயில் முகவரி- info@nerdo.lk/ www.nerdo.lk

மறு சீரமைப்பு, மறு கட்டுமான நடவடிக்கைகளில் உங்களுக்கு திருப்தி உள்ளதா?

நான் எதிர்பார்த்ததை விட இப்போது நிலைமை நன்றாகவே உள்ளது. மக்கள் நம்பிக்கையை கட்டமைப்பதில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றாலும் கூட, இந்த அரசு இதுவரை செய்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.

அரசையும், ஐ.நா. அமைப்புகளையும், என்ஜிஓக்களையும் தங்களது தேவைகளுக்காக தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை விரைவாக செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

சமீபத்தில் நான் வடக்குக்குச் சென்றிருந்தபோது, பல நூறு மாணவர்களுக்கு தேர்வு எழுதக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பரீட்சை எழுத முடியுமா என்ற சந்தேகத்தில் அவர்கள் இருந்தனர்.

ஆனால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் அது சாத்தியமாயிற்று. அதை அவர்களும் உணர்ந்துள்ளனர். எங்களுக்கு உதவ வாருங்கள் என்று தமிழ் மக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

சமீபத்தில் இரண்டு பள்ளிகளின் முதல்வர்கள் எங்களிடமிருந்து நிதியைப் பெற்று தமது பள்ளியின் ஏழை மாணவர்கள் தேர்வெழுதவும், கல்விக் கட்டணத்தை செலுத்தவும் உதவியுள்ளனர்.

இப்போது போர் முடிந்து விட்டது. எனவே வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். சமீபத்தில் கூட நாங்கள் வவுனியாவில் உள்ள சுந்தரலிங்கம் தமிழ் மகா வித்தியாலயாவுக்கு ரூ. 50,000 நிதியளித்தோம்.

அதிபர் ராஜபக்சே அரசுடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா?

பல்வேறு சமுதாய மக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்கி, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிபர் ராஜபக்சே சீரிய வழியில் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே உள்ளன.

போர் முடிந்த ஒரு வருட காலத்திற்குள், போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். முன்னாள் போராளிகள் பலருக்கு மறு வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச சமுதாயமும் கூட இலங்கை அரசின் முயற்சிகளுக்கு பெரும் துணையாக உள்ளது.

இவையெல்லாம் அதிபர் ராஜபக்சேவின் திறமையான நிர்வாகத்தால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அவரது அரசியல் தலைமையால்தான் இதை சாதிக்க முடிந்துள்ளது.

எனவே நடப்பு நிலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் உணர முனவர வேண்டும். விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையை நிலையை அவர்கள் அனுமானிக்க வேண்டும். புதிய சவால்களை சந்திக்க அவர்கள் தயாராக வேண்டும்.

கடந்த காலத்தில் நடந்ததை நினைத்துக் கொண்டு இப்போதும் அதே நினைவிலேயே நாம் இருக்கக் கூடாது. மறுசீரமைப்பு நடவடிக்கைளில் அனைவரும் இணைந்து தோள் கொடுக்க வேண்டும்.

மீடியாக்களும் விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையந நிலையைப் புரிந்து கொண்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட முன்வர வேண்டும். எதிர்மறையாக எழுதுவதால் எந்தப் பயனும் எமது மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. எது பொருத்தமானதோ அதையே செய்ய வேண்டும்.

அமைதியை நிரந்தரப்படுத்துவதிலும், வளர்ச்சியிலும் மட்டுமே மீடியாக்கள் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

எப்போது முதன் முதலில் இலங்கையை விட்டு வெளியேறினீர்கள். அதன் பிறகு கடைசியாக இலங்கைக்கு எப்போது வந்தீர்கள்.?

1980ம் ஆண்டு பிரபாகரனுடன் நான் இந்தியாவுக்கு தப்பி ஓடினேன். என்னை ராணுவம் கைது செய்வதற்காக தேடியது. ராணுவத்தின் நடவடிக்கை தீவிரமாக இருந்ததால் நான் இலங்கை திரும்பவில்லை. அப்போது ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வந்த காரணத்தால், நாங்கள் ஒரு படகின் மூலம், வல்வெட்டித்துறையிலிருந்து இந்தியாவுக்கு சென்றோம்.

டியூஎல்எப் தலைவர் அமிர்தலிங்கம்தான் 70களில் என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது 1976 என்று நினைக்கிறேன். அப்போது டெலோ மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு அமைப்புகள்தான் பெரிதான அமைப்புகளாக இருந்தன.

நான் யாழ்ப்பாணம் மகாராஜா கல்லூரியில் படித்தேன். பின்னர் எமது உரிமைகளுக்காகப் போராடுவதற்காக படிப்பை விட்டு விட்டேன். எங்களது உரிமைகளை தொடர்ந்து வந்த அரசுகள் புறக்கணித்ததாக நாங்கள் கருதியதால் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இன்று எங்கள் முன்பு வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிலும் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இந்த அமைதி நிரந்தரமாக வேண்டும் என கருதுகிறோம்.

யாழ்ப்பாணம் மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்ததற்குப் பின்னர் அமைப்பின் அரசியல், ராணுவ கொள்கையாளர்கள், பிரபாகரனை அமைப்பிலிருந்து நீக்கினர். அவர் என்னிடம் வந்தார். அப்போது நான் சாதாரண மாணவன்தான். எனது அறையில் நான் பிரபாகரனுக்கு இடம் கொடுத்தேன். அவரைக் கொல்ல பலரும் முயன்றனர். டெலோ தலைவர் தங்கதுரையும் ஒருவர்.

(கேபி அளித்த இந்த ராணுவ முகாம் பேட்டி நாளை தொடரும்...)

கேபியை மன்னிக்க சட்டத்தில் இடமுண்டு-இலங்கை அரசு:

இதற்கிடையே, இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லா கேபி குறித்துக் கூறுகையில்,

எந்தவொரு குற்றவாளியையும் அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதிவிலக்கானவரல்ல.

இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும், சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என்றார் அவர்.

வியாழன், 29 ஜூலை, 2010

புதிய பறவை 46 வருடங்களுக்கு பிறகும் House full

சிவாஜி, சரோஜாதேவி ஜோடியாக நடித்து 1964-ல் ரிலீசான படம் புதிய பறவை. கடந்த வெள்ளியன்று சிவாஜியின் 9-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டபோது இப்படத்தை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிட்டனர். இதையொட்டி தியேட்டரை சிவாஜி ரசிகர்கள் கொடி, தோரணங்களால் அலங்கரித்தனர். 40 அடி உயர கட் அவுட்டும் நிறுவினர்.
படத்தை பார்க்க சிவாஜி ரசிகர்கள் குடும்பத்தோடு வந்தனர். முதல் இரு நாட்கள் டிக்கெட் கிடைக்காமல் பலர் திரும்பி சென்றனர். ஞாயிற்றுக்கிழமை 80 ரூபாய் டிக்கெட் ரூ.150-க்கு பிளாக்கில் விற்கப்பட்டதாக படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் கூறினார். தொடர்ந்து 6 நாட்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிறது.
இதுபற்றி சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு கூறும்போது, புதிய பறவை படம் பார்க்க கூட்டம் கூட்டமாய் ரசிகர்கள் நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டு டிக்கெட் கேட்டனர். இதையெல்லாம் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது என்றார். “புதிய பறவை” படம் ரிலீசானபோது சாந்தி தியேட்டரில் இந்திப்படமான “சங்கம்” படம் ஓடிக் கொண்டிருந்தது. எனவே “புதிய பறவை” படம் பாரகன் தியேட்டரில் ரிலீஸ் செய்யப் பட்டது என்றும் அவர் கூறினார்
நிறைய புதுப்படங்கள் ரிலீசான ஓரிரு நாளிலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்படும் இக்கால கட்டத்தில் 46 வருடங்களுக்கு பிறகும் சிவாஜி படம் பார்க்க ரசிகர்கள் திரண்டது வியப்பாக இருந்தது என்று தியேட்டர் ஊழியர் ஒருவர் கூறினார்.
சிவாஜியை திரையில் பார்த்து ரசிகர்கள் பூக்களை அள்ளி வீசினார்கள். “எங்கே நிம்மதி”, “சிட்டுக் குருவி”, “ஆஹா மெல்ல நட”, “உன்னை ஒன்று கேட்பேன்” போன்ற இனிமையான பாடல் ஒலித்தபோது ரசிகர்கள் விசில் சத்தம் தியேட்டரை குலுங்க வைத்தது.

அங்காடித் தெரு அஞ்சலி நான்கு படங்களில் ஹீரோயினாக

இயக்குநர் மு.களஞ்சியத்தின் நான்கு படங்களில் அஞ்சலி ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறாராம்.
கற்றது தமிழ்தான் அஞ்சலி நடித்து வெளியான முதல் படம். அதில் அவருக்கு நல்ல நடிகை என்ற அறிமுகம் கிடைத்தது. ஆனால் அங்காடித் தெரு அவரை ஒரு ஸ்டார் நடிகையாக்கியது.

இப்படி இரு படங்களில் அஞ்சலிக்குப் பெயர் கிடைத்தாலும் அவர் முதலில் குட்டுப்பட்டது இயக்குநர் களஞ்சியத்தின் மோதிரக் கையால்தான். கற்றது தமிழ் படத்தில் நடிப்பதற்கு முன்பு அவர் களஞ்சியம் இயக்குவதாக இருந்த சத்தமின்றி முத்தமிடு படத்தில்தான் நடிக்க புக் ஆகியிருந்தார். அவருக்கு சுந்தரி என்ற பெயரையும் சூட்டியிருந்தார் களஞ்சியம்.

இப்படத்தில் தேவயானியின் தம்பியான மயூர் என்பவர் நாயகனாக புக் ஆகியிருந்தார். ஆனால் இந்தப் படம் பின்னர் டிராப் ஆகவே, அஞ்சலி என்ற பெயருடன் கற்றது தமிழ் படத்தில் நடிக்கப் போய் விட்டார்.
இருப்பினும் களஞ்சியம் அடுத்தடுத்து இயக்குவதாக இருந்த வாலிபதேசம், கருங்காலி, என் கனவுதானடி ஆகிய படங்களிலும் அஞ்சலி நாயகியாக புக் ஆகியிருந்தார். களஞ்சியத்தின் மீது இருந்த நம்பிக்கையால் இந்தப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் அஞ்சலி.

தற்போது அஞ்சலிக்கு நல்ல மார்க்கெட் கிடைத்திருப்பதால் கருங்காலி படத்தை முதலில் எடுத்து முடிக்க முடிவு செய்து களம் இறங்கி விட்டார் களஞ்சியம். அத்தோடு நில்லாமல் அதில் அவரே ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளாராம்.

கருங்காலி அஞ்சலியின் மார்க்கெட்டை ஸ்திரப்படுத்துவதோடு, களஞ்சியத்திற்கும் புது வாழ்வு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் களஞ்சியம் தரப்பு உள்ளதாம்.

கண்டெடுக்கப்பட்ட அம்மன் முகக் கலசம் ஆலய நிர்வாகத்திடம

ரூ.10 இலட்சம் சரீர பிணையில் கதிரவெளி ஆலய நிர்வாகத்திடம் அம்மன் சிலை ஒப்படைப்பு


வாகரை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட அம்மன் முகக் கலசம்  நீதிமன்ற உத்தரவின் பேரில்  கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்திடம்10 இலட்சம் ரூபா சரீர  பிணையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெருகல் மலைச்சாரலடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெண்கல அம்மன் கலசத்தை வாகரை பொலிஸார் எடுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் இன்று புதன்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றில் ஒப்படைத்தனர்.

வாழைச்சேனை மாவட்ட நீதிவான் ரி.சரவணராசா முன்னிலையில் சிலையை ஒப்படைத்த போது இச்சிலையினை தங்களது ஆலயத்தில் வைத்து வழிபடுவதற்கு கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகம் நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்தது.
1815 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பொருட்களே தொல்பொருள் ஆய்வுக்குரியவை என கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாக சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

அதேவேளை, அச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் அதை வைப்பதற்கு பாதுகாப்பான இடமல்ல எனவும் இவ்விடயத்தில் தொல்பொருள் திணைக்களமே தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமெனவும் பொலிஸார் கூறினார்.

இது தொடர்பாக ஆராய்ந்த நீதிவான், குறித்த அம்மன் கலசத்தினை கதிரவெளி  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்திடம் 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் வழங்க உத்தரவிட்டார்

தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

:"மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுபற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்' என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவரது, "கேள்வி - பதில்' அறிக்கை:டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறார். அந்த கோரிக்கைகளை மட்டுமல்ல; மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தி வரும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி, தொண்டர்களை உசுப்பிவிட்டு அறிக்கை விட்டு வந்த ஜெயலலிதா, தற்போது மாதத்துக்கு ஒரு முறை, தானே அவற்றில் கலந்து கொள்வது, தேர்தல் நெருங்கி விட்டதைத் தான் காட்டுகிறது.

தினபூமி பத்திரிகை ஆசிரியர் கைது பற்றி, 23ம் தேதி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன. உடனடியாக போலீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, விவரம் கேட்டு விட்டு, என்ன காரணம் இருந்தாலும் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டுமென கூறி, அவர்களும் ஒரு சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். இது என்னுடைய நடைமுறை.பத்திரிகையாளர்களுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விடுத்துள்ள அம்மையாரின் கதை தமிழக மக்களுக்கு மறந்துவிட்டதா, என்ன?

மத்திய அரசு மானியத்தில் தான் ஒரு ரூபாய் அரிசி வழங்கப்படுவதாக இளங்கோவன் பேசியிருக்கிறார். அப்படி என்றால், எல்லா மாநிலங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே.அவசர உதவிக்கான 108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் கூட மத்திய அரசு அளித்து வருவதாகப் பேசியிருக்கிறார். அதுவும் தவறான செய்தி தான். அந்தத் திட்டம், உலக வங்கியிடமிருந்து தேவையான நிதியை தமிழக அரசு கடனாகப் பெற்று, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கி நடத்தப்படுகிற திட்டம். இந்தத் திட்டத்துக்கான நடைமுறை செலவில், ஒரு பகுதியை மட்டும் தான் மத்திய அரசு வழங்குகிறது.

ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டியது, அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி என ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஆமாம். அவர் என்ன செய்து விடுவாரோ என பயந்து கொண்டு தான் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. காமராஜரிடம் அந்த அம்மையாருக்கு அவ்வளவு பக்தி, பாசம். அவரது ஆட்சிக் காலத்தில் காமராஜர் பெயராலும், கக்கன் பெயராலும் அவர் தீட்டிய திட்டங்கள், திறந்து வைத்த பஸ் நிலையங்கள் எத்தனை? சிரிப்பு தான் வருகிறது. காமராஜர், கக்கன் புகழ் பாட தி.மு.க., அரசு நிறைவேற்றிய திட்டங்களை மறந்து விடலாமா; மறதிக் குடுக்கை.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அகம் புறம் படத்தில் மீனாட்சி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம்.

அகம் புறம் படத்தில் மீனாட்சி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். ஆனால் இந்தக் கவர்ச்சி காட்சிகள் திணிக்கப்படவில்லை என்கிறார் இயக்குநர் திருமலை.

தீ நகர் படத்தை இயக்கியவர்தான் திருமலை. இப்போது அகம் புறம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நாயகனாக ஷாமும், நாயகியாக மீனாட்சியும் நடிக்கின்றனர்.

ஆக்ஷன் பரபரப்புடன், கவர்ச்சிக் கலகலப்பும் நீக்கமற நிறைந்திருக்கிறதாம் படத்தில். மீனாட்சி இப்படத்திலும் கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். வித்தியாசமான கதைக் களத்துடன் தீ நகரில் அதிரடியாக புகுந்த திருமலை அகம் புறத்திலும் ஒரு வித்தியாசமான கதையுடன்தான் வருகிறாராம்.

படத்தில் மீனாட்சியின் பங்கு குறித்து திருமலை கூறுகையில்,

ராஜாதிராஜா படத்துக்குப்பின் கிளாமர் வேண்டாம் என முடிவெடுத்திருந்திருந்தார் மீனாட்சி. ஆனால், இந்தக் கதையைக் கேட்டதும் இன்வால்வ் ஆகி விட்டார்.

இதில் கிளாமரும் இருக்கிறது, வித்தியாசமான பாத்திரத்தில் வருகிறார் மீனாட்சி. அவரது வேடம் அனைவரையும் கவரும்.

கவர்ச்சிக் காட்சிகள் இதில் இயல்பாக வரும். எதுவும் திணிக்கப்படவில்லை. நயனதாரா, பில்லாவில் வந்தாரே, அதுபோல என்று கூறலாம் என்றார் திருமலை.

ஆனால் படத்தில் பாலிவுன் காஷ்மீரா ஷா, மேகா ஜான் ஆகியோர் பாடல்களுக்கு செமத்தியான ஆட்டம் போட்டுள்ளனராம். அது போக ஹோட்டல் டான்ஸ் உள்ளிட்ட குஜால் காட்சிகளும் இருக்கிறதாம்.

சுந்தர்.சி. பாபுவின் இசையில் உருவாகி வரும் அகம் புறம், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்குமாம்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரக‌சிய ஆவணங்கள்,அமெரிக்க ???

ஆஃப்கானிஸ்தான் மக்களை தாலிபான் மற்றும் அல் கய்டா பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்க” 2001ஆம் ஆண்டு முதல் தாங்கள் நடத்திவரும் போரில், முழுமையாக ‘உதவி’வரும் பாகிஸ்தானிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் (100 கோடி) டாலர் நிதியுதவி அளித்துவரும் அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தானில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்நாட்டின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.தான் தாலிபான்களுக்கும், அல் கய்டாவிற்கு உதவியிருக்கிறது என்கிற அமெரிக்க (இராணுவ) உளவு அமைப்பு திரட்டிக் கொடுத்த இரகசிய ஆவணங்கள் இன்று உலகின் பார்வைக்கு வெளியாகியிருப்பதில் முகம் வெளிறிப்போய் உள்ளது.

2001ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூ யார்க்கின் இரட்டை கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஆஃப்கானிஸ்தான் மீது (ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசை மிரட்டி தனது நண்பனாக்கிக் கொண்டு) போர் தொடுத்த அமெரிக்காவி்ற்கு, தனது நண்பனுக்கு இரண்டு முகங்கள் உண்டு என்பதை புரிந்துகொண்ட பின்னரும், அவனுடைய பயங்கரவாத முகத்தை உலகின் பார்வைக்கு கொண்டுவராமல், இன்று வரை ‘பாகிஸ்தான் துணையின்றி ஆஃப்கான் போர் சாத்தியமில்லை’ என்று கூறிவருவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை விக்கிலீக் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தொடங்கி, டெல்லியின் மக்கள் அதிகம் புழங்கும் சந்தைகள், அக்சார்தாம் கோயில், மும்பையின் புறநகர் ரெயில்கள், இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் என்று வரிசையாக பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த பின்னரும், தனது பாகிஸ்தான் நண்பனை விடாமல் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, பயங்கரவாத யுத்தத்தை தொடர்ந்துகொண்டிருந்த அமெரிக்கா, மும்பையின் மீது 2008ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தாக்குதலிற்குப் பிறகுதான், ‘தாக்குதலிற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’ என்று ஓரளவிற்கு பேச ஆரம்பித்தது. அமெரிக்காவின் அயலுறவு அமைச்சரிலிருந்து ஒபாமா வரை எல்லோரும் கண்டிக்கும் தொனியில் பேசினாலும், பாகிஸ்தானிற்கு கொடுக்க வேண்டியது எதையும் நிறுத்தவில்லை, ஆயுதங்கள் உட்பட.

பாகிஸ்தானின் அயல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.பற்றி நேரிடையாக இந்தியா குற்றம்சாற்றிய போதெல்லாம், ஏதோ அந்த அமைப்பிற்கும் பாகிஸ்தானின் அரசிற்கும் எந்த சம்மந்தமும் இல்லாததுபோல், ‘குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் பாகி்ஸ்தான் அரசிற்கு இந்தியா ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றுதான் சமாதானம் சொன்னதே தவிர, ஒருமுறை கூட, ஐ.எஸ்.ஐ.தான் பாகிஸ்தான் மண்ணில் இருந்து உருவெடுத்துவந்து இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு உதவுகிறது என்று ஒருபோதும் கூறவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் கூட, இந்தியா வந்திருந்த அமெரிக்க இராணுவக் கூட்டுப்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் மைக் முல்லன், “பாகிஸ்தானை தளமாகக் கொண்டு பயிற்சிபெற்று செயல்படும் லஸ்கர் இ தயிபா பயங்கரவாத இயக்கத்தினர் மும்பையில் நடத்தியதைப் போன்றதொரு தாக்குதலை இந்தியா மீது மீண்டும் நிகழ்த்த உள்ளனர்” என்று கூறியிருந்தார். அதுமட்டமின்றி, லஸ்கர் இயக்கம் சர்வதேச அளவில் ஒரு அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் அரசின், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவின்றி அந்த இயக்கம் எப்படி சர்வதேச அளவில் ஒரு அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது என்பதை விளக்கவில்லை!

பாகிஸ்தானிற்குள் இருந்து இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டுவரும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக எந்த ஒரு கூட்டு நடவடிக்கை குறித்து என்றாவது அமெரிக்கத் தலைவர்கள் பேசியதுண்டா? இந்தியாவும் பாகிஸ்தானும்தான் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆகாத ஒன்றை மட்டும் பேசிவிட்டு, பிறகு இஸ்லாமாபாத்திற்குப் பறந்து செல்கின்றனர். அங்கு சென்று இதையெல்லாம் பேசுவதில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்துக் கொண்டிருப்பதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பாராட்டிப் பேசிவிட்டு ஆஃப்கானிற்கு பறந்து செல்வர். இதுதான் அன்றுமுதல் இன்றுவரை நடைபெற்று வருகிறது.

மங்கள எம்.பி. குறித்த தகவல்களை புலிகளுக்கு வழங்கிய இருவருக்கு 11 வருட கடூழியச் சிறை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவை படுகொலை செய்வதற்கான தகவல்களை புலிகளுக்கு திரட்டிக் கொடுத்தார்கள் என்ற பெயரில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 11 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மங்கள சமரவீர எம்.பி. முன்னர் வெளிவிவகார அமைச்சராகப் பதவிவகித்த காலத்திலேயே அவரைப் படுகொலை செய்வதற்கான புலிகளின் திட்டத்திற்கு மேற்படி குற்றவாளிகள் இருவரும் உதவி புரிந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றவாளிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு மேற்படி கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தொடக்கும்புர கெதர ரணவீர, டீ.எஸ்.ஜி. துஷார ஆகியோரே இவ்வாறு தண்டனை பெற்றவர்களாவர்.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரையிலான ஒருவார காலப் பகுதிக்குள் மேற்படி குற்றவாளிகள் இருவரும் மங்கள சமரவீர எம்.பி.யின் கொழும்பு மற்றும் மாத்தறையிலுள்ள வாசஸ்தலங்கள் உள்ளிட்ட தகவல்களை புலிகள் அமைப்புக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
அத்துடன், மங்கள சமரவீர எம்.பி. தொடர்பிலான தவவல்கள் புலிகள் அமைப்பிடமிருந்து கோரப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்படாமை குறித்தும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

உலகின் முதற்பெண் பிரதமர் சிறிமாவிற்கு ஜனாதிபதியால் சுவர்ணாபிமான அவர்ஜனா பொன்விழா உயர்மரியாதை

உலகின் முதல் பெண்பிரதமர் என்ற அழியாப் புகழ் பெற்ற அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் சுவர்ணாபிமான அவர்ஜனா என்ற பொன்விழா உயர்மரியாதையினை வழங்கி அஞ்சலி செலுத்தினார்.

அலரி மாளிகையில் இன்று (28) மாலை இடம்பெற்ற இவ்விசேட நிகழ்வில் சிறிமாவோ அம்மையாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

19 பேர் மட்டுமே பங்கேற்பு,பாமக ஆர்ப்பாட்டத்தில்

மதுரை: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெறும் 19 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு பாமக சார்பில் இன்று முதல் தொடர் போராட்டம் தொடங்கியது.

ப்லவேறு ஊர்களில் போராட்டங்கள் நடப்பதாக பாமக தரப்பில் கூறினாலும் வட மாவட்டங்களைத் தவிர மற்ற ஊர்களில் ஒரு கூட்டத்தையும் காணோம்.

மதுரையில் மேலமாசி வீதி-வடக்குமாசிவீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞரணி செயலாளர் இளஞ்செழியன் மற்றும் மாவட்ட தலைவர் திருப்பதி உட்பட வெறும் 19 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். ஒரு இருபது பேரைக் கூட முடியாமல் போய் விட்டதா இவர்களுக்கு என்று வேடிக்கை பார்த்தவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

30 ஆண்டுகளாக தனி இடஒதுக்கீடு கேட்டு பல கட்டப் போராட்டங்களை நடத்தியும், சிறைக் கொடுமை, உயிர் தியாகங்கள் செய்தும் அரசு நிறைவேற்றவில்லை என்பது வன்னியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

தமிழக அரசு சமூக நீதி அடிப்படையில் வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் பின் தங்கி இருக்கும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை உடனே அமல் படுத்தவேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிகை விடுக்கிறோம் என்று கோஷம் எழுப்பினர் அந்த 19 பேரும்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஒன்றுகூடி அடுத்த கட்ட

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்கள்

இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் நேற்றையதினம் மீண்டும் கொழும்பில் ஒன்றுகூடி தமிழ் மக்களின் அரசியல் நிலவரம் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
கொழும்பிலுள்ள புளொட் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றது. கடந்த மாதம் 24ம் திகதி தமது ஆரம்ப சந்திப்பினை மேற்கொண்ட தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர் இம்மாதம் 2ம் திகதி இரண்டாவது சந்திப்பில் திட்ட வரைபுகளை மேற்கொள்ளுமுகமாக சகல கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய உப குழுவொன்றினையும் அமைத்திருந்தனர். கடந்த 4ம் திகதி கூடிய தமிழ்க்கட்சிகளின் அரங்க உபகுழுவினர் தயாரித்த திட்ட வரைபுகள் இம்மாதம் 7ம் திகதி கலந்தாலோசிக்கப்பட்டு அதன் நோக்கங்கள் மற்றும் அரசியல் வழிமுறைகள் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் ஒன்றுகூடிய அரங்கத்தினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு பொதுக் களத்தில் பேசி ஒருமித்த கருத்தையும் நிலைப்பாட்டையும் தமிழ் கட்சிகளுக்குள் உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடினர். இதன் முக்கிய அம்சமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இதுதொடர்பாக அழைப்பு விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. நேற்றையதினம் கூடிய ஒன்பது பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு அழைப்பினை விடுவதாக ஏகமனதாக முடிவுமேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்த சந்திப்பினை கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு.சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பில் நடாத்துவதெனவும் இதற்குரிய திகதி ஓகஸ்ட் மாதம் 14ம் திகதி எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நேற்றைய சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி தந்தை செல்வாவின் புதல்வரும் ஒவ்பர் அமைப்பின் இயக்குனருமாகிய திரு. செல்வநாயகம் சந்திரகாசன் மற்றும் பேரின்பநாயகம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் அதன் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான திரு.சந்திரகாந்தன் மற்றும் ஊடகச் செயலாளர் ஆசாத் மௌலானா நாபா ஈபிஆர்எல்எப் சார்பில் அதன் செயலாளர் திரு.தி.சிறிதரன் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சதானந்தம் மற்றும் ஆர்.ராகவன் தமிழ் தேசிய விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் திரு. ஜீ.சுரேந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணி செயலாளர் திரு.நல்லையா குமரகுருபரன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜீ.ராஜ்குமார் மற்றும் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnews

புதன், 28 ஜூலை, 2010

காதல் சொல்ல வந்தேன்,தணிக்கைச் சான்றிதழ் தர ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டு

தமிழக செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் தர லஞ்சம் கேட்டதாக கூறி தணிக்கை வாரிய மண்டல அதிகாரி ராஜேசகரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள 5-வது மாடியில் திரைப்பட தணிக்கைக்கான மண்டல அலுவலகம் உள்ளது. அதில் மண்டல அதிகாரியாக இருந்து வருபவர் ராஜசேகர்.

ஜூன் மாதம் 17ம் தேதி இவர் இப்பொறுப்புக்கு வந்தார். வந்தது முதல் லஞ்சக் கடலில் குதித்துள்ளார். தணிக்கைச் சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் கேட்க ஆரம்பித்தார். இதுகுறித்து திரைத்துறையினர் புலம்பி வந்தனர். ஆனால் நேற்று திடீரென இவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

காதல் சொல்ல வந்தேன் என்று ஒரு படம். இப்படத்தில் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். மேக்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பினர். அப்போது தணிக்கைச் சான்றிதழ் தர ரூ. 1 லட்சம் கேட்டுள்ளார். முதல் கட்டமாக ரூ. 25,000 தருமாறும் தயாரிப்பாளர் ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ஜெயக்குமார் சிபிஐயிடம் புகார் கொடுத்தார். அவர்கள் பொறி வைத்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் ராஜசேகரைப் பிடித்த சிபிஐயின் அலுவலகமும், தணிக்கை அலுவலகம் உள்ள சாஸ்திரி பவனிலேயேதான் உள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே லஞ்சம் தலைவிரித்தாடுவதைக் கேட்டு கொதிப்படைந்த சிபிஐ அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி ராஜசேகரை மடக்கிப் பிடித்து விட்டனர்.

நேற்று மாலை 3 மணி அளவில் படத்தயாரிப்பு நிர்வாகி கோவிந்தராஜ், ராஜசேகரிடம் பணத்தைக் கொடுத்தபோது பிடிபட்டார். கோவிந்தராஜ் ரூ. 10,000 மட்டுமே அப்போது கொடுத்தார்.

பின்னர் ராஜசேகரின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரவு அவரை அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்று துருவித் துருவி விசாரித்தனர்.

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ராஜசேகரின் வீட்டிலும் சோதனை போடப்பட்டது.

எம்.எஸ்.சி விவசாயப் படிப்பை முடித்தவர் ராஜசேகர். தஞ்சையைச் சேர்ந்தவர். இந்திய வனப் பணி (ஐ.எப்.எஸ்) முடித்து விட்டு பஞ்சாப் கேடரில் பணியாற்றி வந்தவர்.

இவரது மனைவி கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தின் திருவள்ளூர் கிளையில் பேராசிரியையாக உள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு இதே சாஸ்திரி பவனில் வைத்து லஞ்சம் வாங்கிக் குவித்த பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் சிக்கினார். தற்போது அதே அலுவலக வளாகத்தில் தணிக்கை அதிகாரி பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை தணிக்கை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக பிடிபட்டதில்லையாம். இதுதான் முதல் முறையாகம்.

அமைச்சர் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கே லஞ்சம் கேட்டதால்தான் தற்போது சிக்கியுள்ளார் தணிக்கை மண்டல அதிகாரி.

சொத்துப் பத்திரங்கள் பறிமுதல்

இந்தநிலையில் ராஜசேகர் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையின்போது பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவரது வீட்டில் விடிய விடிய நடந்தசோதனையின்போது, ராஜசேகரின் பெயரில் நான்கு வங்கி கணக்கு புத்தகமும், அவரது மனைவி யோகலட்சுமி பெயரில் 2 வங்கி கணக்கு புத்தகமும், ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணமும் மற்றும் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

ராஜசேகர் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 28 Jul 2010 8:02 pm
இந்த அமைச்சரு என்ன லஞ்சம் வாங்காம தன் சொத்து சேர்த்து அவரோட பயன் படம் எடுக்கறன...தா ...இவனுங்க என்னவோ யோகியனுங்க மாதிரி அதிகரிங்கள பொறி வெச்சு பிடிக்கரன்கலம். உங்கள மாதிரி அரசியல்வதிங்கதனே இந்த மாதிரி அதிகாரிங்கள மாத்தினது...அதிகரி ஒழுங்க இருந்த அவன தூக்கி எதுக்கும் உபயோகம் இல்லாத போஸ்ட்லே போடுவீங்க...

பதிவு செய்தவர்: திருக்குவளை திருடன்
பதிவு செய்தது: 28 Jul 2010 6:49 pm
எங்களை பிடிக்க முடியாது.

பாகிஸ்தானில் விமான விபத்து : 100 பேர் பலி : துருக்கியில் இருந்து வந்த

இஸ்லாமாபாத்:  துருக்கியில் இருந்து வந்த விமானம் ஒன்று மந்தமான வானில‌ை காரணமாக விபத்தில் சிக்கியது. மலைப்பகுதியில் நடந்த இந்த விபத்தில் சி்க்கி 100 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 45 பேர் விபத்தில் இருந்து உயிருடன் தப்பினர். சிலர் காயத்துடன் மலைப்பகுதியில் உதவியை நாடி நிற்கின்றனர். சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

146  பயணிகள், 6 ஊழியர்கள் உள்பட 152  பேருடன் துருக்கியில் இருந்து பாகிஸ்தான் சென்ற ஏர் ப்ளூ என்ற தனியார் விமானம் விபத்துக்குள்ளானது. கராச்சிக்கும், இஸ்லாமாபாத்துக்கும் இடைபட்ட மர்கலா மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் 45 பேர் உயிருடன் தப்பினர்.  100 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சிறப்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சுணக்கத்துடன் காணப்படுகிறது. விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சதி்ச்செயல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Mohamed - Singapore,இந்தியா
2010-07-28 14:09:33 IST
விமான விபத்து தொடர்ச்சி........மனதை கவலை அளிக்கிறது........
செந்தில் குமார் - கரூர்,இந்தியா
2010-07-28 13:50:57 IST
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு....மரணம் தனியே வந்தால் அழகு.....மொத்தமாய் மரணம் வருவது அழகில்லையே இறைவா.......
ம. ராஜேஸ்வரி - chennai,இந்தியா
2010-07-28 13:38:45 IST
விமான விபத்து பற்றி தெரிந்து மிகவும் வருந்துகிறேன்.திருவண்ணாமலை மாவட்டம் முத்ரசம்பூண்டியின் எதிர்கால தலைவி என்ற முறையில் என் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.....
v.sathees raj - PERIYAKULAM,இந்தியா
2010-07-28 13:28:15 IST
சிவா - India,இந்தியா
2010-07-28 12:48:18 IST
கருகி உதிர்ந்த உயிர்களிலே கனவுகள் எத்தனை இருந்தனவோ வீட்டையும் உறவையும் பிரிந்து சென்று பொருள் ஈட்டி திரும்பிய வேளையிலே பிரிவு மட்டுமே நிலையாகி விட்ட பொள்ளாத சோகத்தை எப்படி மறந்திட இறiவா! விபத்துக்களை நிறுத்திடு இல்லையேல் விபத்து செய்திகள் எம்மை அணுகிடாமல் செய்திடு இறப்பிலும் இனியதை தந்திடு இறைவா! இருப்போருக்கும் இறந்தோருக்கும் அமைதியை தந்தருள்வாய்!...
S.thiyagu - singapore,இந்தியா
2010-07-28 12:42:30 IST
இந்த வருடம் விமானத்தில் எமன் பயணம் செய்வான் போல இருக்குறது . ஆகையால் விமானம் ஏறும் பொது அவர் அவர் குல சாமியிடம் வனங்கி விமானத்தில் பயணம் மேற்கொள்ளவும் .எம் மதமும் சம்மதம் all god same pray first...
naga - chennai,இந்தியா
விபத்தில் இறந்த அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம். மேலும், இது போன்ற அசம்பாவிதம் நடை பெறாமல் இருக்க சிறந்த தொழில் நுட்பம் உருவாக்கப் பட வேண்டும்....
mohanraj - chennai,இந்தியா
இறந்தவர்களின் குடும்பதிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் .அவர்களின் ஆன்மா சாந்தியடைய இந்திய மக்களின் சார்பாக எனது அஞ்சலி .....
பாலசுப்ரமணியன் ராமசாமி - KulamangalamPudukkottai,இந்தியா
2010-07-28 11:56:22 IST
என்னதான் நாம் அறிவியலில் முன்னேறினாலும் நம்மால் சுனாமி, நிலநடுக்கம், பனிமூட்டம் , கடும்புயல் மழையின்மை போன்ற இயற்கை பேரழிவுகளைத் தடுக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம்.... கடவுளே.. இவர்கள் ஆத்மாக்களை சாந்தியடைய செய்யுங்கள்.......

இலங்கை கடற்படையினர தனுஷ்கோடிக்கு பகல் நேரத்திலேயே தடையின்றிபடகில் வந்து செல்லும

ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு பகல் நேரத்திலேயே தடையின்றிபடகில் வந்து செல்லும் இலங்கை கடற்படையினர் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் இலங்கை மீனவர்கள்,படகில் தனுஷ்கோடி வந்து இங்குள்ள கடைகளில் தேவையான பொருட்களை வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தொடர்பாக இங்குள்ளமீனவர்களும் இதுவரை புகார்செய்யவில்லை. இலங்கை மீனவர்களால் பிரச்னை எதுவும் ஏற்படாத நிலையில்,புலனாய்வுத்துறையினரும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தடையேதும்இல்லாததால், இலங்கை மீனவர்கள் தனுஷ்கோடிக்கு வந்து செல்வதும் தொடர்கிறது.
இந்நிலையில், சமீப காலமாக இலங்கை கடற்படையினரும்படகில் தனுஷ்கோடி வருவதுவழக்கமாகிவிட்டது. சில நாட்களுக்கு முன் இலங்கை கடற்படை வீரர்கள் சிலர், ரோந்து செல்லும் கேஸ்போட் மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இந்திய கடல் எல்லை அமைந்துள்ள ஐந்தாம் மணல் திட்டு வரை வந்த இலங்கை கடற்படையினர், தனுஷ்கோடி கடற்கரையில் கரையிறங்கி, இங்குள்ள சிறுகடைகளில் தங்களுக்கு தேவையான பிஸ்கட்,சிகரெட், பீடி, குளிர்பானங்களை வாங்கி கொண்டு, இலங்கை மற்றும் இந்திய பணத்தை கொடுத்து சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் வந்தது குறித்து ஆரம்பத்தில் கவனம் செலுத்தாத மீனவர்கள், கடற்படையினரின் வருகை தொடர்ந்ததால் இவர்களின் ஊடுருவல் குறித்து தகவல் கொடுத்தனர் ."ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினரின் கண்காணிப்பையும் மீறி,பகல் நேரத்திலேயே இந்திய கடல் எல்லை தாண்டி தனுஷ்கோடிக்கு ஆயுதங்களுடன் இலங்கை கடற்படையினர் ஊடுருவியது, எதற்காக அடிக்கடி தனுஷ்கோடிக்கு வந்து செல்கின்றனர் என்பது குறித்து,' மத்திய,மாநில புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ப.raj - chennai,இந்தியா
2010-07-28 08:07:27 IST
எனக்கு ஒரு சந்தேகம் ... இது வரை 500௦௦ க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை கொன்று குவித்துள்ளனர் இலங்கை ராணுவம் மற்றும் மீனவர்கள். இந்திய ராணுவம் இலங்கை மீனவர்கள் எல்லை மீறும் பொது எதாவது துப்பாக்கி சூடு நடத்தி ஒரு இலங்கை மீனவனையவது காயபடுத்தி இருகிறர்களா? இல்லை அவர்கள் எல்லை தாண்டியதே இல்லையா ? அவளவு நல்லவர்களா ? இல்லை நம் கடற்படை சரிய்ல்லையா?...
Aarasan - Chennai,இந்தியா
2010-07-28 07:53:14 IST
எங்கே அந்த நாராயணன், மேனன். இந்திய ராணுவம் என்ன செய்கிறது. தனுஷ்கோடியும் இலங்கையை சேர்ந்தது என்று சோனியா காங்கிரசும், கையாலாகத இந்திய ராணுவமும் முடிவு எடுத்துவிட்டார்கள். அந்த பாதுகாப்பு கைத்தடிகளையும், அசின், பிசின், சரத்குமார் போன்றவர்கையும் வைத்து விழா எடுக்கசொல்லுங்கள்....
பlamu - trichy,இந்தியா
2010-07-28 07:53:01 IST
ithu ஆரம்பm மட்டும் than..inimel than sinkal சீனாவின் சித்து vilayattu ஆரம்பம் தொடர போகுது.m...
சஞ்சீவ் - bangalore,இந்தியா
2010-07-28 07:16:39 IST
தமிழக அரசும், மத்திய அரசும் ... ஒரு சொம்பு அரசை விட்டதோ....
Mohanraj - TaipeiTaiwan,இந்தியா
2010-07-28 07:06:10 IST
Central and State Govt... go to Hell.........
singam - namakkal,இந்தியா
2010-07-28 06:12:13 IST
கேவலம் .....................
V.Subbarao - Singapore,இந்தியா
2010-07-28 06:07:23 IST
இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படையினருக்கு செய்தி கொடுத்து பின் வருகிறர்கள என உறுதி செய்யவும். அவர்கள் பல காலங்கலாக வருவது தெரியாத நிலையில் இந்திய கடல்படையினர் இருப்பின், அவர்களின் கண்காணிப்பில் இப்பகுதி இருப்பின் என்ன பயன் ?...
பாரதி - raleigh,இந்தியா


இப்பொ அசினுக்கு நல்ல பப்ளிசிட்டி.. கரகாட்டக்காரனில் செந்தில் சொல்வது போல ஒரு வெளம்பரம்....
sugadev
கடந்த காலத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் திரையுலகினால் நடத்தப்பட்ட போராட்டங்களை அலட்சியப்படுத்திப் புறக்கணித்த நடிகர்களின் திரைப்படங்கள் புலம்பெயர் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டன. இதன் விளைவாக அத்திரைப்படங்கள் படுதோல்வியைத் தழுவின என்பது அறிந்ததே./// இவங்க நம்மளை விட பயங்கரமான சினிமா பைத்தியங்க போல. வேறென்ன சொல்ல?
albert
போராட்டமா, அமெரிக்காவிலா? சும்மா தமாசு பண்ண கூடாது. ஓடும் படம் ஓடும் கண்டிப்பா. இவங்களால் ஒண்ணும் பண்ண முடியாது, எல்லாம் வெறும் சவடால்.
albert
அட, அசின் போனது அவங்க வேலைய பார்க்க, அதில் என்ன தப்பு? போயி அவங்க அவங்க வேலைய பாருங்கப்பா, இப்படி சும்மா தமாசு பண்ணிகிட்டு இராமல்.
5 hours ago | Report abuse
albert
ஃபெட்னா அப்படின்னு மொத்தமா சொன்னா எப்படி? ஃபெட்னா எனும் பெயரில் எழுதும் புலி ஆதரவாளர்கள்ன்னு சொல்லுங்க.

ஒலுவில் பிரசேத்தில் புதிய கடற்படை முகாம் : முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு.

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், உள்ளூர் மீனவர்களும் தமது எதி்ர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்ஏற்கெனவே தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தற்போது துறைமுகமொன்றும் அமைக்கப்பட்டு வருவதால் இப்பகுதி கேந்திர முக்கியத்துவம் பெற்ற பிரதேசமாக கருதப்படுகின்றது.

சுனாமியினால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட பாடசாலை கட்டிடமொன்றிலேயே கடற் படையினர் முகாமிட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது.

ஆனால் இப்பாடசாலைக் கட்டிடத்தில் மதரசாவும், பாலர் பாடசாலையொன்றும் நடை பெற்று வந்ததாகக் கூறும் ஒலுவில் பெரிய பள்ளிவாசல் தலைவரான அபுபக்கர் லெப்பை இஸ்மாயில் கடற் படையினர் தங்கள் பகுதியில் முகாமிட்டிருப்பது பிரதேசத்தின் இயல்பு நிலைக்கு தடையாக அமையலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.

மீனவர்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டு சுதந்திரமாக தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படக்கூடிய சூழ்நிலை தென்படுவதாகவும் கூறுகின்றார்

ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடித மூலம் அறிவித்துள்ள போதிலும் எவ்வித சாதகமான பதிலும் இது வரை கிடைக்கவில்லை என்கின்றார்.

கடற்படைத் தளபதி இம்முகாமிற்கு வந்திருந்த போது அவரை சந்தித்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறும் பள்ளிவாசல் செயலாளரான அப்துல் ரகீம் கடற்படைத் தளபதி தங்கள் கோரிக்கையை நிராகரித்து அளித்த பதில் ஏமாற்றத்தையும் கவலையையும் தந்ததாக குறிப்பிடுகின்றார்.

ஏற்கெனவே கடற்படை முகாம்கள் அமைந்துள்ள கிராமங்களில் அவ்வப்போது மீனவர்களுக்கும், கடற் படையினருக்குமிடையில் எற்படுகின்ற மோதல்களும் முரண்பாடுகளும் இந்த பிரதேசத்திலு்ம் எதிர்காலத்தில் ஏற்படக் கூடும் என்ற அச்சம் உள்ளுர் மீனவர்களிடம் பொதுவாக நிலவுகின்றது.

அமெரிக்காவில் ஆறு இலங்கையர்கள் கைது

அமெரிக்க எல்லைக் கண்காணிப்புப் போலிசார் ஆறு இலங்கையர்களைக் கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6.40 மணியளவில் செமினோல் அவென்யூவுக்கு அருகில் கவுன்ரி ரோட்டில் தெற்கு நோக்கிச் சென்ற ஆறு ஆண்களே கைதாகியுள்ளனர். இவர்கள் ஆறு பேரும் அணிந்திருந்த காற்சட்டைகள் முழங்கால்வரை ஈரமாக இருந்ததைக் கண்ட போலீசார், இவர்களை படகு ஒன்று கரையில் இறக்கிவிட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் கைது செய்தனர். ஆனால் அவ்விடத்தில் எதுவித படகும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
ஆறு ஆண்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், இவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அமெரிக்கப் போலீஸ் தெரிவித்தது. இவர்களிடம் இலங்கைப் பணமும், அமெரிக்கப் பணமும் இருந்துள்ளது. ஆனால் இவர்கள் ஆங்கிலம் பேசவில்லை என்றும் போலீஸ் குறிப்பிட்டுள்ளது. அவர்களிடம் எதுவித பயணப் பொதிகளோ, கையடக்கத் தொலைபேசிகளோ இருக்கவில்லை. மேலும், இவர்கள் தங்களைப் பற்றிய தகவல் எதையும் இதுவரை விசாரணையாளர்களிடம் தெரிவிக்கவில்லை.