
இந்நிலையில் தனது சகோதரன் விவகாரத்தால் அவர் போலீசாரால் கைதாகும் நிலையில் இருக்கிறார்.
ஆம்னியின் தம்பி சீனிவாஸுக்கும் (35), நெல்லூரை சேர்ந்த லீலாவதி (31) என்ற பெண்ணுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரீத்தி (11) என்ற மகள் உள்ளார். சென்னையில் வசித்து வருகின்றனர்.திருமணத்தின் போது லீலாவதியின் பெற்றோர் 7 லட்சம் ரொக்கம், 45 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சில ஆண்டுகளாக குடிப் பழக்கத்துக்கு அடிமையான சீனிவாஸ், லீலாவதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனால் வேதனை அடைந்த லீலாவதி, நெல்லூர் போலீசில் நேற்று புகார் செய்தார்.
’’எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார். எனது தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்கிறார்.
இதற்கு அவருடைய தாய் சரோஜாவும், நாத்தனார் நடிகை ஆம்னியும் உடந்தையாக உள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், சென்னையில் இருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இது குறித்து சென்னை போலீசிலும் புகார் செய்துள்ளேன்’’என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆம்னி உட்பட 3 பேர் மீதும் நெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சீனிவாசை நேற்று கைது செய்தனர். ஆம்னி, சரோஜாவை விரைவில் கைது செய்வோம் என போலீசார் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக