வியாழன், 29 ஜூலை, 2010

அங்காடித் தெரு அஞ்சலி நான்கு படங்களில் ஹீரோயினாக

இயக்குநர் மு.களஞ்சியத்தின் நான்கு படங்களில் அஞ்சலி ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறாராம்.
கற்றது தமிழ்தான் அஞ்சலி நடித்து வெளியான முதல் படம். அதில் அவருக்கு நல்ல நடிகை என்ற அறிமுகம் கிடைத்தது. ஆனால் அங்காடித் தெரு அவரை ஒரு ஸ்டார் நடிகையாக்கியது.

இப்படி இரு படங்களில் அஞ்சலிக்குப் பெயர் கிடைத்தாலும் அவர் முதலில் குட்டுப்பட்டது இயக்குநர் களஞ்சியத்தின் மோதிரக் கையால்தான். கற்றது தமிழ் படத்தில் நடிப்பதற்கு முன்பு அவர் களஞ்சியம் இயக்குவதாக இருந்த சத்தமின்றி முத்தமிடு படத்தில்தான் நடிக்க புக் ஆகியிருந்தார். அவருக்கு சுந்தரி என்ற பெயரையும் சூட்டியிருந்தார் களஞ்சியம்.

இப்படத்தில் தேவயானியின் தம்பியான மயூர் என்பவர் நாயகனாக புக் ஆகியிருந்தார். ஆனால் இந்தப் படம் பின்னர் டிராப் ஆகவே, அஞ்சலி என்ற பெயருடன் கற்றது தமிழ் படத்தில் நடிக்கப் போய் விட்டார்.
இருப்பினும் களஞ்சியம் அடுத்தடுத்து இயக்குவதாக இருந்த வாலிபதேசம், கருங்காலி, என் கனவுதானடி ஆகிய படங்களிலும் அஞ்சலி நாயகியாக புக் ஆகியிருந்தார். களஞ்சியத்தின் மீது இருந்த நம்பிக்கையால் இந்தப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் அஞ்சலி.

தற்போது அஞ்சலிக்கு நல்ல மார்க்கெட் கிடைத்திருப்பதால் கருங்காலி படத்தை முதலில் எடுத்து முடிக்க முடிவு செய்து களம் இறங்கி விட்டார் களஞ்சியம். அத்தோடு நில்லாமல் அதில் அவரே ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளாராம்.

கருங்காலி அஞ்சலியின் மார்க்கெட்டை ஸ்திரப்படுத்துவதோடு, களஞ்சியத்திற்கும் புது வாழ்வு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் களஞ்சியம் தரப்பு உள்ளதாம்.

கருத்துகள் இல்லை: