![]() |
மின்னம்பலம் - Selvam : பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிர் நீத்த ஓட்டுநர் சேமலையப்பனின் பெற்றோர் மற்றும் மகன்களிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (ஜூலை 26) வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த சேமலையப்பன் (வயது 49) வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஜூலை 24-ஆம் தேதி மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவை திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே பள்ளி வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது சேமலையப்பனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.




