தற்போதைய ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக போட்டி இடுவார் என்று அறிவிப்புக்கள் வெளியாகி உள்ளது
இவர் மிகப்பெரும்பான்மையான வாக்குகளால் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர் என்று பல கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன
இத்தேர்தலில் மேலும் பல வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்
ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் சில தமிழ் கட்சிகளும் முயல்கின்றன ..
சில வாக்குகளை பிரித்து தங்கள் பலத்தை காட்டவேண்டும் என்று இவர்கள் கூறினாலும் உண்மை நோக்கம் வேறு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக