ஞாயிறு, 21 ஜூலை, 2024

கருத்தியல் தீட்டுவாதம் பூணூலில்தான் பிறக்கிறது

ராதா மனோகர்:  கருத்தியல் தூய்மைவாதம் என்ற சொல் மேலோட்டமாக பார்த்தால் சரியான கருத்தை உணர்த்துவது போல தோன்றும்.
ஆனால் இந்த சொல்  ஒரு கருத்தியல் திரிபுக்கு இடம் கொடுக்கிறது.
எதிலும் நேர்மை தூய்மை உண்மை நல்லதுதானே எனவே கருத்தியல் தூய்மைவாதம் நல்லதுதானே என்று பலர் அப்பாவித்தனமாக கருதுகிறார்கள்.
நாம் தூய்மையானவர் ஏனையோர் தூய்மை அற்றவர்கள்,
அதாவது தீட்டுக்கு உரியவர்கள் என்ற உள்ளர்த்தம் தொனிக்கிறது.
எனவே உண்மையில் இந்த கருத்தியல் தூய்மைவாதம் என்ற சொல்லின்  சரியான அர்த்தத்தை கொடுக்க கூடிய சொல் கருத்தியல் தீட்டுவாதம்  என்பதுதான்!
உதாரணமாக திராவிடம் என்றால் ஜாதி அற்றவர்கள் என்று நாம் கூறும்போது ஜாதி ஒழிந்து விட்டதா என்று கேள்வி கேட்டு இன்னும் ஜாதி ஒழியவில்லைதானே எனவே திராவிட கருத்தியல் பொய் என்று நிறுவ முயல்வார்கள்
இதைத்தான்  கருத்தியல் தூய்மைவாதம் என்று சொல்கிறார்கள். .
உண்மையில் இது ஒரு கருத்தியல்  தீட்டுவாதம் அல்லவா?


இதை கருத்தியல்  தூய்மைவாதம் என்று எப்படி கூறமுடியும்?
இது எப்படியும் திராவிட கருத்தியல் மீது சேறு பூசவேண்டும் என்ற நோக்கத்தோடு கேட்கப்படும் கேள்விதான்!

அதாவது திராவிட கருத்தியல்  மீது ஆரிய ஆதிக்க மனோநிலையில் உள்ளவர்களின் வார்த்தை விளையாட்டு.
இது  கருத்தியல் தீட்டுவாதம் என்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்?

கருத்துகள் இல்லை: