திங்கள், 22 ஜூலை, 2024

1983 கறுப்பு யூலை! வரலாறு தெரிந்தவர்கள் வருத்தப்படுகிற நாள்!

May be an image of 4 people and text
May be an image of 3 people

Vettimayilnathan Subramaniyam  :  1983 கறுப்பு யூலை!
வரலாறு தெரிந்தவர்கள் வருத்தப்படுகிற நாள்,
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய நாள்.1983 கறுப்பு யூலை.
இன்று வரை நீதி மறுக்கப்பட்டும் எம் தேசத்தை சர்வதேசத்தின்முன் முதல் முதலாய் கூனிக்குறுகி நிற்க வைத்ததுமான மோசமான படுகொலை மரணங்கள் .  இவை, ஈழவிடுதலைபபோராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்கள்.காலம்காலமாக ஈழ மண்ணில் தமிழினம் வஞ்சிக்கப்படுவதால் அஞ்சியஞ்சியே தமிழினம் வாழ்ந்தபோது, நெஞ்சு நிமிர்த்தி தடுப்பாட்டம் ஆடிய  முதல் போராளிகள், ஈழ விடுதலைப் போராட்டத்தின், முதல்த்தலைவர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின்,தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டி மணி, முன்னணிப்போராளிகள் ஜெகன்,தேவன், நடேசுதாசன் உட்பட 53 அரசியல்கைதிகள் படுகொலையான நாள்,


                1983 கறுப்பு யூலை.
ஈழவிடுதலைப்போராட்டத்தின் முதல்ப்பாகம் முடிவுற்றநாள், எழுச்சியோடும் மலர்ச்சியோடும் களம் காணப் புறப்பட்ட அடலேறுகளான ஒரு இளைய சந்ததியின்,சுதந்திரக்காற்றை சுவாசிக்கத்துடித்த ஒரு சமூகத்தின் ஆசை நிராசையான நாள்1983 கறுப்பு யூலை. ஈழ மக்களின் முதல் கனவு நாயகர்கள்,தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் இராணுவமும்  அறிந்து வைத்திருந்த முதல் தமிழ்போராளியின் பெயர் குட்டிமணி, குட்டிமணியின் பெயர் மட்டுமே தெரிந்த காலமது உருவம் தெரியாது
ஆனால் அவர் பெயர் இலங்கை முழுவதும் கிலியை ஏற்படுத்தியது,அவர்பெயர பலருக்கு  இடியைத்தந்தது சிலருக்கு விடிவைத்தந்து, பத்திரிகைகளுக்கு தலைப்புச்செய்திகளானது,
இந்தப்போராளிகளின் ஒரு புகைப்படம் கிடைக்காதா என்று பத்திரிகைகளும் மக்களும் அரசும் ஏங்கித்தவித்த வேளையது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கைத்தமிழர்கள் பற்றி யாரும் அக்கறை எடுக்காத காலமது திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது திமுக ஆட்சிச்கட்டில் ஏறியது,பெரியார் அண்ணா கலைஞர் போன்றவர்களின் பார்வை ஈழத்தமிழர் பக்கம் விரிந்தது தந்தை செல்வா தளபதி அமிர்
போன்றவர்கள் இவர்களைச் சந்தித்து ஈழத்துயரை விளக்கினர் அதைத்தொடர்ந்து ஈழத்தமிழர்களக்கான ஆதரவு தமிழ் நாட்டில் பெருகியது.அதன்பின் தங்கத்துரை குட்டிமணி
ஆகியோர் திமுகவோடு போராட்டத்தொடர்பை ஏற்படுத்தினர்.இந்தப்போராளிகள் முதலில் யாரென்று தெரியாதபோது இந்தியாவில் கைது செய்ப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்டு அவர்கள் இனம்காணாமல் விடுதலை செய்யப்பட்ட வரலாறும்  உண்டு,
இவர்கள் யாரென்ற தெரிந்தபின் போராளிகளுக்கு தமிழ் நாட்டில் செல்வாக்கு உயர்ந்தது.
நியமன எம்பி முறை வந்தபோது தமிழர் விடுதலைக்கூட்டணியின் நியமன பாராளுமன்ற உறுப்பினராக குட்டிமணி நியமிக்கப்பட்டு அதை உடனடியாக அவர் இராஜினாமா செய்த நிகழ்வும் உண்டு......
இலங்கை தேசம் சுதந்திரமடைந்து முதல் முதலாக சர்வதேசத்தின் முன் கூனிக்குறுகி நின்ற நாட்கள்1983 கறுப்பு யூலை. ,சர்வதேசமெங்கும் பெண்களுக்கான அடக்கு முறைகள் வீடுகளிலிருந்துவெளியுலகம் வரை நிறைந்திருந்தவேளையில்,பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையே மறுக்கப்பட்டவேளயில்,பல ஐரோப்பிய நாடுகளில்க்கூட அலுவலகங்களில் பெண்களை தலைமைத்துவப்பொறுப்புகளில் அனுமதிக்க மறுத்தகாலத்தில் ஒரே வேலை செய்யும்போதுகூடஆணுக்கொரு கூலியும் பெண்ணுக்கொரு சம்பளமும் கொடுக்கப்பட்டவேளையில்,உலகமெங்கும் பெரும்பாலான பெண்களுக்கு அவர்கள் வீடுகளில்க்கூட கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டவேளையில்  உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் உரிமைகள் பாதுகாக்க வெளிப்படுத்த கேட்க போராட ஒரு வாய்ப்புக்கிடைக்காதா என்று தவித்தவேளையில்,
உலகத்திலேயே! முதல் முதலாய் ஒருபெண்ணை பிரதமராய்க்கொண்டு வந்தது இலங்கைதேசம்,  சர்வதேசமே ஆச்சரியத்தில் உறைந்து போனது உலக வரைபடத்தில் இலங்கை எங்கே இருக்கிறது என்று அன்றுதான் உலகமக்கள் தேடத்தொடங்கினர் உலகத்தில் அத்தனை நாட்டினதும் பத்திரிகைகளினதும் தலைப்புச்செய்திகளாய் இலங்கை வரைபடத்தோடு உலகத்தின் முதல் பெண்
பிரதம மந்திரி,திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கே சிரித்தபடியிருந்தார்,உலக மகளிர்கள் அத்தனைபேரும் மகிழ்வின் உச்சிக்கு வந்தனர் எங்களுக்காட உரிமைகள் மறுக்கிறீர்கள் நாட்டையே ஆளும் தகுதி உள்ளவர்கள் என்று திருமதி சிறிமாவோ பண்டார நாயக்கேவின் படத்தை கையில் ஏந்தியபடி உரிமைகேட்டு வீதிக்கு வந்தனர். இலங்கைதேசத்தை கண்டு பிடிப்பதற்காக உலக வரைபடங்கள் கடைகளில் விற்றுத்தீர்ந்தது, இலங்கையின் புகழ் உலகமெங்கும் வியாபித்தது,இலங்கையில் படித்த மக்கள், கற்றறிந்தவர்கள்தான் வாழ்கிறார்கள் என்று என்று உலகம் நம்பியது வலிய வலிய வந்து பல உலக நாடுகள் இலங்கையோடு நட்புப்பாராட்டியது  நம்மைப்பார்த்து இரண்டாவதாக,இந்தியநாடு திருமதி இந்திராகாந்தியையும், 3வதாக,இஸ்ரேல்நாடு திருமதி கோல்டாமேயரையும்,4வதாக
இங்கிலாந்துதேசம் திருமதி மாக்கிறட்தட்சரையும் பிரதமராக்கி அழகு பார்த்தது,அந்தளவுக்கு உலகத்தில் புகழ் மிக்க நாடாக இலங்கைநாடு இருந்த வேளையில் இலங்கைஆட்சிமாற்றத்தைக்கண்டது,
ஐக்கிதேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தது  அவர்களின் ஆட்சியில்  1983 கறுப்பு யூலை, நடக்க காலம் மாறி, சர்வதேசம் அருவருப்போடு இலங்கை நாட்டை பார்த்த காலமது,
சர்வதேசப்பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாய் எழுதிய  அந்த கறுப்பு நாட்கள், ஈழவிடுதலைப்போராட்டத்தின் தொடக்க வீரர்கள் விலங்கிட்ட நிலையில் விலங்குகளுகளுக்கு இரையானார்கள்,CNN:BBC போன்ற தொலைக்காட்சிகள் லைவாக படம்பிடித்துக்காட்டியது, திட்டமிடப்பட்ட இந்தப்படுகொலைகளின் வரலாறு இலங்கையரசை மட்டுமல்ல தமிழர்தரப்பிலும் சிலரைக் கை காட்டிச்செல்கிறது, இந்தத்லைவர்களை சிறையிலிருந்து எப்படியாவது வெளியில்கொண்டுவந்து விடவேண்டும் என்று ஒரு முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்க  எல்லாமே கனவாகிப்போனது,
மனைவி மற்றும் மகனுக்காக இத்தாலி விமானத்தைக்கடத்திய   இலங்கையன்
என்று சர்வதேசம் அறிந்த
சேபால ஏக்க நாயக்கா! 1982 ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டவன்.
இலங்கை குற்றவியல் சட்டத்தில் புதியதொரு சட்டத்தை இயற்ற காரணமாக இருந்தவன்.
சர்வதேச விமானமொன்றைக் கடத்திய முதல்  இலங்கையன். இவன் தலைமையில் இந்தப் படுகொலைகள் நடைபெற்று ஈழ விடுதலைப்போராட்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டது சர்வதேசம் இலங்கையைப்பார்த்து எப்படி வியந்ததோ அந்தளவுக்கு இது படித்த மக்கள் நிறைந்த தேசமல்லடா காட்டு மிராண்டிகள் நிறைந்த நாடு என்று காறித்துப்பியது அந்த அவமானம்
மேலு ம்மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த வராலாற்று நாயகர்களுக்கு நாம்  இருகரம்கூப்பி நன்றி சொல்லி அஞ்சிலி செலுத்துவோம்.

கருத்துகள் இல்லை: