செவ்வாய், 25 ஜூன், 2024
திங்கள், 24 ஜூன், 2024
சென்னையில் தாய், தம்பியைக் கொலை செய்த 20 வயது இளைஞர்
![]() |
இந்து : சென்னையின் திருவொற்றியூரில், தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்ததற்காக 20 வயது இளைஞர் ஒருவரை சனிக்கிழமையன்று (ஜூன் 22) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவம் இரண்டு நாட்கள் கழித்து தான் வெளிச்சத்திற்கு வந்ததாகவும், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை அறிக்கை கூறுகிறது.
‘தி இந்து’ நாளிதழின் செய்தியின் படி, கல்லூரி மாணவரான அந்த இளைஞர் சரிவர படிக்காததால் பல பாடங்களில் தோல்வியடைந்திருந்தார்.
இது குறித்து இளைஞருக்கும், தாய்க்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்ப பொருளாதாரம் தொடர்பான அழுத்தம் மற்றும் வேறு சில குடும்ப பிரச்னைகள் காரணமாக அவர் இந்தக் கொலைகளில் ஈடுபட்டுள்ளார் என காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு பின்னால் RSS சதி?
Neyveli Ashok : கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு பின்னால் RSS சதி இருக்குமா ?
RSS ரகசிய அறிக்கை 411/RO 30311/RSS CO3 (விடுதலை 26-3-95, இந்துஸ்தான் டைம்ஸ் தொகுப்பு 1 - 1998 ஆகியவற்றில் இதனை காணலாம்) இன் படி தான் இன்று நடக்கும் சம்பவங்கள் எல்லாம் இருக்கிறது போல தெரிகிறது. எப்படி ? முழுமையாக படியுங்கள்.....
பல ஆண்டுகளாக இருக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது,
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்,
- அதை தொடர்ந்து நடந்த கலவரம்,
அதுபோலவே ஓசூர் பகுதியில் நடந்த கலவரம், இப்போது கூட சேலம் பகுதியில் கோவில் உள்ளே விட மாட்டோம் என்ற பிரச்சனை, சென்ற ஆண்டும் இந்தாண்டு போலவே விஷ சாராயம் மரணம் என்று சம்பவங்கள் நடக்கிறது....
மேற்சொன்ன அந்த அறிக்கையில், 34 கட்டளைகள் RSS தனது கணவன்களுக்கு கொடுத்துள்ளது. அதில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் என்றென்றும் ஒன்று சேரக்கூடாத வகையில் எவ்வாறெல்லாம் வேலை செய்யலாம் என்று திட்டங்கள் உள்ளது.
கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் திடீர் மாயம்! தேடும் பணி தீவிரம்!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பட்டாலியன் போலீசார் 7 பேர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 59 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
kallakurichi illicit liquor tamil nadu Kalvarayan hill Police
நாடார்.. கவுண்டர்.. பிராமணர்.. பாஜகவில் சாதி பார்த்து நீக்கம் : திருச்சி சூர்யா குற்றச்சாட்டு!
மின்னம்பலம் - christopher : ”எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?” என்று திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் கடந்த 19ஆம் தேதி நடந்த தமிழக பாஜக மையக் குழு கூட்டத்தில் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
அதேபோல் பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நீட் மறுதேர்வில் 750 மாணவர்கள் ஆப்சென்ட்: தேசிய தேர்வு முகமை!
மாலை மலர் : புதுடெல்லி நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடுமுழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.
இதற்கியே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் நீட் தேர்வில் 1,563 மாணவ, மாணவிகளுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
6 தேர்வு மையத்தில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட குறைவான நேரம் ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஞாயிறு, 23 ஜூன், 2024
Dasvidaniya பார்க்க வாய்ப்பு கிடைப்பவர்கள் பாக்கியசாலிகள்.
![]() |
Dasvidaniya ஓடிக்கொண்டே இருந்தவன் திடீரென்று ஓட்டத்தை
நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானான். அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது அடடே இவ்வளவு காலமாக அவன் ஓடிகொண்டே இருந்திருக்கிறான், வேறு என்னதான் செய்தான்? எல்லாமே செய்தான் ஆனால் அவனுக்காக அவன் எதுவுமே செய்யவில்லை.
இந்த வாழ்வு முடியப்போகிறதே என்று அவன் கவலைப்படுவது ஒரு பெரிய ஜோக்.
![]() |
ஏனென்றால் அவன் இதுவரை வாழவே இல்லை, வெறுமனே ஓடிகொண்டல்லவா இருந்திருக்கிறான்?
வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒருவன் தன்வாழ்வு முடியப்போகிறதே என்று கவலை கொண்டால் அதில் நியாயம் இருக்கும்.ஆனால் இவன்தான் வாழவே இல்லையே இல்லாத வாழ்க்கை இனி இருந்தென்ன போயென்ன?
ஹிந்துஜா மகன் தீமூட்டி தற்கொலை .. காதல் ஜோடியை வேட்டை ஆடிய ஹிந்துஜா குடும்பம் . காட்டி கொடுத்த பிரதமர் நரசிம்மராவ்
ராதா மனோகர் : இன்று சிக்கலில் மாட்டியிருக்கும் ஹிந்துஜா குடும்பத்தின் செல்ல மகன் தனது மனைவியோடு தீமூட்டி தற்கொலை செய்து கொண்ட வரலாறு
இதில் மனைவி தப்பி விட்டார் . ஆனால் மகன் தரம் ஹிந்துஜா உயிரிழந்தார்
இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத ஹிந்துஜா குடும்பம் இந்த காதல் ஜோடிக்கு பெரும் தொல்லை கொடுத்தது
இவர்களின் கழுகு பார்வையில் இருந்து தப்புவதற்கு மொரிசியஸ் ஹோட்டல் ஒன்றில் இரகசியமாக தங்கி இருந்தார்கள் ஹிந்துஜா குடும்ப நண்பரான பிரதமர் நரசிம்ம ராவ் சி பி ஐ மூலம் இதை கண்டிறிந்து ஹிந்துஜாக்களிடம் காட்டி கொடுத்தார்
போலீஸ் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலை சுற்றி வளைத்து
அதை கண்ட ஹிந்துஜா ஜோடி தீமூட்டி தற்கொலைக்கு முயன்றது
இதில் தரம் ஹிந்துஜா இறந்தார் மனைவி நிநோய்ச்கா தப்பி விட்டார்
உகாண்டாவில் இருந்து இடி அமினால் துரத்தப்பட்டு இங்கிலாந்தில் வசித்து வந்த இவர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள்
இவர்களின் சொத்து மதிப்பு 47 பில்லியன் டாலர்களாகும்.
அந்த பழைய செய்தியை வாசியுங்கள்.
indiatoday.in : Hinduja heir Dharam fails to cope with family pressures against his wife, ends life
M. RahmanAmit RoyISSUE DATE: Jun 15, 1992 | UPDATED: Aug 26, 2013 17:05 IST
The housemaster at Westminster School in London called him a 'delightful boy'. A former classmate at the school described him as 'quiet and gentle'.
ஹிந்துஜா குடும்பத்திற்கு (சொத்து 47 பில்லியன் டாலர்) சுவிட்சர்லாந்தில் 4 ஆண்டு சிறை தண்டனை - பணியாளர்களை கொடுமை படுத்தினார்கள்
BBC News தமிழ - இமோஜென் ஃபாக்ஸ் : வீட்டுப் பணியாளர்களை கொடுமைபடுத்திய குற்றத்திற்காக பிரிட்டனில் வசித்து வரும் பணக்கார 'ஹிந்துஜா’ குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
'ஹிந்துஜா’ குடும்பத்தினர் ஜெனிவாவில் உள்ள தங்களுடைய வீட்டில் பணிபுரிய சில பணியாளர்களை இந்தியாவில் இருந்து அழைத்து வந்துள்ளனர்.
பிரகாஷ் ஹிந்துஜா, கமல் ஹிந்துஜா, மற்றும் அவர்களது மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் சட்டவிரோதமாகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது மற்றும் சுரண்டலில் ஈடுபட்டதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
"பால் கேன்களுக்கு 12% ஜிஎஸ்டி" - நிர்மலா சீதாராமன் கொடுத்த முதல் பரிசு!
மின்னம்பலம் - Selvam : அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 22) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மீண்டும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றிருக்கிறார்.
2024 – 25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து மாநில நிதியமைச்சர்களிடமும் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 22) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
சனி, 22 ஜூன், 2024
சவூதி ஹஜ் 1,081 போ்உயிரிழப்பு . இந்தியர்கள் 98 பேர் உட்பட. Hajj pilgrimage deaths exceeds 1,000
ilakkiyainfo.com : ஹஜ் யாத்திரை சென்றவர்கள் 98 இந்தியா்கள் உட்பட மொத்தமாக 1,081 போ் உயிரிழப்பு!:
நடப்பாண்டு ஹச் புனிதப்பயணம் சென்ற இந்தியவர்களில் 98 பேர் இறந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹஜ் புனித யாத்திரை ஜூன் 14-ல் தொடங்கியது. திருநாளைக் கொண்டாடும் வகையில் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் இந்தாண்டு 18 லட்சம் பேர் வரை திரண்டனர்.
இந்தியாவில் இருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரை 98 இந்தியர்கள் பலியானதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 21 ஜூன், 2024
2016 பூரண மதுவிலக்கு அறிவித்தார் கலைஞர் அப்போது திருமா கலைஞரை தோற்கடிக்க சசிகலா நடராஜனின் சூட் கேஸ் அரசியலில்
LR Jagadheesan : 2016 தேர்தலைப்பற்றியெல்லாம் திருமா பேசலாமா?
சிலதை பற்றி சிலர் பேசாமல் இருப்பது அவர்களுக்கு ரொம்பவும் நல்லது.
2016 தேர்தல்பற்றி மநகூ என்கிற கூட்டணியில் இருந்த கட்சிகள் பேசாமல் இருப்பது அந்த கட்சிகளுக்கு நல்லது.
குறிப்பாக அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு. அவர்களின் மிச்சசொச்சமிருக்கும் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள அது உதவும்.
அயோத்திதாசரின் பேரனும் நடமாடும் நவீன அம்பேட்கரும் தமிழ்நாட்டு தலித்துகளின் விடிவெள்ளியுமான தொல் திருமாவளவன் அவர்கள்,
2016 தேர்தலில் கலைஞர் தலைமையிலான திமுக கொடுத்த முழுமையான மதுவிலக்கை நிறைவேற்றவேண்டும் என்று கூறுகிறார். நல்லது.
அந்த 2016 தேர்தலில் தொல் திருமா எங்கே இருந்தார்?
என்ன செய்தார்?
யாரை தோற்கடிக்க யாரை ஆதரித்தார்?
அதுவும் எதற்காக?
இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் 21 உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..!
வெப் துனியா : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.
புலிகளால் நயவஞ்சகமாக கொல்லப்பட்ட 600 போலீசாரின் சாபம் புலிகளை அழித்தது
கருவூர் இஞ்சினியர் : 1989 பிரேமதாசா விடுதலை புலிகள் கூட்டில் கொல்லப்பட்ட சிங்கள குடும்பங்களின் இளைஞர்கள் தான்,
பெரும்பாலும் இலங்கை ராணுவத்தில் சேர்ந்து தமிழருக்கு எதிராக மிக வன்மமாக போரிட்டதாக 2009 க்கு பின்வந்த பல செய்திகள் தெரிவித்தனர்.
போர் முடிந்த பின்பு பல கிராம சிங்களஇளைஞர்கள் யுத்தம் பற்றியும் கொலைகள் பற்றியும் அரசியல்வாதிகளின் பதவிக்காக பல ஆயிரம் தமிழ் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதாக உண்மையான வருத்தத்துடன் தெரிவித்ததாக செய்திகள் வந்தன.
அவற்றை பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் பெரிது படுத்த விரும்பவில்லை
பிரேமதாசாவின் காலத்தில் புலிகளிடம் சரணடைந்த 600 போலீசாரை புலிகள் நயவஞ்சகமாக சுட்டு கொன்றார்கள் .
ராதா மனோகர் : உண்மையில் அந்த 600 போலீசாரும் புலிகளோடு சண்டையிட தயாரானார்கள்
அப்போது புலிகளை நம்பிய பிரேமதாசா அவர்களை சரணடையுமாறும் கேட்டு கொண்டார்
அன்டன் பாலசிங்கத்தின் பேச்சை நம்பி பிரேமதாச செய்த முட்டாள்தனம்
திமுக ஆட்சிக்கு வந்தாலும், திமுகவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டார்கள்.!
Kandasamy Mariyappan : தலைவரே M. K. Stalin ...
திமுகவை அவ்வளவு எளிதாக, நிம்மதியோடு ஆட்சி செய்ய விட மாட்டார்கள்.!
நீங்கள் எண்ணுவது போல், அவ்வளவு எளிதாக மீண்டும் ஆட்சிக்கு வர வைத்துவிட மாட்டார்கள்.!
பொதுமக்களும் நல்ல புரிதலோடு ஆதரவு கரம் நீட்ட மாட்டார்கள்.!
மக்களின் தாகம் தீர்க்க வழி செய்யும், கழகம்.,
கழகத்தை புதைத்து தண்ணீர் தெளிப்பார்கள், மக்கள்.!
மக்களின் பசிக்கு அரிசி வழங்க போராடும், கழகம்.,
கழகத்திற்கு வாய்க்கரிசி போட குறியாக இருப்பார்கள், மக்கள்.!
மக்கள் நிம்மதியாக வாழ வீடு வழங்கும், கழகம்.,
கழகத்தை புதைக்க குழி தோண்டுவார்கள், மக்கள்.!
மக்கள் தன்மானத்துடன் வாழ கல்வியை வழங்கும், கழகம்.,
பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு, துக்ளக், கீதையின் உதவியோடு கழகத்தை சிறையில் வைப்பார்கள், மக்கள்.!
நோயை குணப்படுத்தும் மருந்துகளை வழங்கும், கழகம்.,
கழகத்தை மருத்துவமனையில் படுக்க வைக்க துடிப்பார்கள், மக்கள்.!
சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக இருக்கும், கழகம்.!
கழகம் ஆட்சியில் இருக்கும் போதுதான், உக்கடத்திலிருந்து உரிமைக்காக குண்டுகளை வீசுவார்கள், சிறுபான்மையினர்.!
தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை தீட்டும், கழகம்.,
கழகத்தை ஒழிக்க திட்டமிடுவார்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்.!
பூரண மதுவிலக்கு வேண்டும்! - அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை
tamil.samayam.com - எழிலரசன்.டி : கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை குடித்த 42 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சுமார் 100க்கும் அதிகமானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த சூழலில் கருணாபுரம் பகுதிக்கு இன்று இரவு நேரில் சென்ற விசிக தலைவர் திருமாவளவன்,
அங்கு உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்று குறிப்பிட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் தூங்கிக் கொண்டிருந்த வாலிபருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை! உபி டாக்டர்களின் கொடூரம்
UP Man's Genitals Removed, Sex-Change Surgery Done While He Was Sleeping
Samiran Mishra link: UP -mans-genitals-removed
மாலை மலர் : உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தின் பேரில் அவருடன் சேர்ந்து டாக்டர்கள் மற்றொரு வாலிபரின் பிறப்புறுப்பை நீக்கி பெண்ணாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
பாரதிய கிஷான் யூனியன் (BKU) இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்தியபோது இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மன்சூர்பூரில் உள்ள பெக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரில் இந்த சம்பவம் முஜாஹித் (வயது 20) வயது வாலிபருக்கு நடந்துள்ளது.
இதெல்லாம் தனக்கு ஓம் பிரகாஷ் என்பரால் நடைபெற்றதாக முஜாஹித் தெரிவித்துள்ளார். முஜாஹித்திற்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி வலுக்கட்டாயமாக மருத்துவக் கல்லூரியில் ஓம்பிரகாஷ் சேர்த்துள்ளார்.
வியாழன், 20 ஜூன், 2024
பாடறியேன் படிப்பறியேன் ... பஞ்ச பரம்பரைக்கு அப்புறமா? பஞ்ச பரம்பரை கற்பரமா?
சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் என்ற பாடலின் வரிகளை திட்டமிட்டு திரிபு படுத்தும் முயற்சியை பல பார்ப்பன ஊடகங்கள் அல்லது எழுத்தாளர்கள் முயன்று வருகிறார்கள்!
அந்த பாடலில் உள்ள ஒரு வரி பார்பனர்களை பாடாய் படுத்துகிறது! அந்த வரிகள் :
சஜ்ஜூவம் என்பதும் தைவதம் என்பதும் பஞ்ச பரம்பரை கற்பரம்தான்!
இந்த வரிகள் சாஸ்திரிக சங்கீதம் என்று பார்ப்பனர்களால் உயர்த்தி பிடிக்கப்பட்டு வரும் இசையானது உண்மையில் மண்ணின் மைந்தர்களின் கண்டு பிடிப்பு என்பதை ஒரு வரலாற்று சாசனமாக எழுதிவிட்டார் கவிஞர் வைரமுத்து!
: திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கம் - கைவிட்ட அண்ணாமலை.! காரணம் என்ன தெரியுமா?
tamil.asianetnews.com - Ajmal Khan : அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்து கொண்டு மற்ற பாஜக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வந்த திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு போட்டியாக பாஜக வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அதிமுகவுடன் நாங்கள் தான் பெரிய கட்சி, திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் போட்டி என கூறி வருகின்றனர். தினமும் திமுக மற்றும் அதிமுகவை விமர்சித்து அறிக்கை மற்றும் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா தன் பங்குக்கு திமுகவை விமர்சித்து பதிவு செய்ய தொடங்கினார்.
கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு- 16 பேர் கவலைக்கிடம்!
BBC News தமிழ் : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி , விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 34 பேர் இன்று காலை வரை உயிரிழந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேரும் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு பேரும் இதில் அடங்குவர்.
அடுத்தடுத்து பலர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 16 பேர் கவலைக்கிடம் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பனங்கள்ளு பனஞ்சாராயம் ஏற்றுமதி .. யாழ்ப்பாணத்தில் இருந்து பிரான்ஸ் துபாய் கனடா சீனா...
யாழ்ப்பாணத்தில் இருந்து பனம் கள்ளு பனம் சாராயம் பிரான்ஸ் துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது . பல அரிய செய்திகளை கொண்டிருக்கும் காணொளி
புதன், 19 ஜூன், 2024
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் 9 பேர் உயிரிழப்பு! எஸ்பி சஸ்பெண்ட்.. கலெக்டர் பணியிட மாற்றம்!
tamil.oneindia.com - Nantha Kumar R கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் இறந்துள்ளனர்..
மேலும் 50 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை என்பது அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். சுமார் 50க்கும் அதிகமானவர்கள் திடீரென்று வாந்தி, வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஹஜ் பயணத்தில் 550 பயணிகள் உயிரிழப்பு!
hirunews.lk : இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது 550 பயணிகள் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெப்பமான காலநிலை மற்றும் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலையில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர்கள் பலர் நெரிசல் காரணமாக உடல் நசுங்கி மயக்கமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
அமெரிக்கா்களை மணந்த குடிவரவாளர்கள் அகதிகளுக்குக் குடியுரிமை
தினமணி : வாஷிங்டன்: உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான குடிவரவாளர்கள் அந்த நாட்டவா்களை மணந்திருந்தால் அவா்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் திட்டத்தை அதிபா் ஜோ பைடன் வகுத்துள்ளாா்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலை மனதில் கொண்டே அவா் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள், அமெரிக்கா்களின் கணவா் அல்லது மனைவியாக இருந்தால் அவா்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க இன்னும் சில மாதங்களில் அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் அவா்கள் பிற்காலத்தில் நாட்டின் முழு குடியுரிமையைப் பெற முடியும்.
செவ்வாய், 18 ஜூன், 2024
EVM சரிப்பட்டு வராது.. இந்தியா கூட்டணியுடன் கை கோர்த்த ஜெகன்
மாலை மலர் : உலகப் பணக்காரர் எலான் மஸ்க் EVM வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளம்பியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் EVM மீதான நம்பகத்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்த நிலையில் தேர்தலுக்குப் பின் சற்று தனித்திருந்த இந்த விவாதத்தை எலான் மஸ்க்கின் தற்போதைய கருத்து மீண்டும் கிளறிவிட்டுள்ளது.
மஸ்க்கின் பதிவை மேற்கோள்காட்டி இந்தியாவில் EVM கள் முறைகேடு செய்வதற்கான கருப்பு பேட்டி மாதிரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.




