வெள்ளி, 21 ஜூன், 2024

திமுக ஆட்சிக்கு வந்தாலும், திமுகவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டார்கள்.!


 Kandasamy Mariyappan
  :  தலைவரே M. K. Stalin ...
திமுகவை அவ்வளவு எளிதாக, நிம்மதியோடு ஆட்சி செய்ய விட மாட்டார்கள்.!
நீங்கள் எண்ணுவது போல், அவ்வளவு எளிதாக மீண்டும் ஆட்சிக்கு வர வைத்துவிட மாட்டார்கள்.!
பொதுமக்களும் நல்ல புரிதலோடு ஆதரவு கரம் நீட்ட மாட்டார்கள்.!
மக்களின் தாகம் தீர்க்க வழி செய்யும், கழகம்.,
கழகத்தை புதைத்து தண்ணீர் தெளிப்பார்கள், மக்கள்.!
மக்களின் பசிக்கு அரிசி வழங்க போராடும், கழகம்.,
கழகத்திற்கு வாய்க்கரிசி போட குறியாக இருப்பார்கள், மக்கள்.!
மக்கள் நிம்மதியாக வாழ வீடு வழங்கும், கழகம்.,
கழகத்தை புதைக்க குழி தோண்டுவார்கள், மக்கள்.!
மக்கள் தன்மானத்துடன் வாழ கல்வியை வழங்கும், கழகம்.,
பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு, துக்ளக், கீதையின் உதவியோடு கழகத்தை சிறையில் வைப்பார்கள், மக்கள்.!
நோயை குணப்படுத்தும் மருந்துகளை வழங்கும், கழகம்.,
கழகத்தை மருத்துவமனையில் படுக்க வைக்க துடிப்பார்கள், மக்கள்.!
சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக இருக்கும், கழகம்.!
கழகம் ஆட்சியில் இருக்கும் போதுதான், உக்கடத்திலிருந்து உரிமைக்காக குண்டுகளை வீசுவார்கள், சிறுபான்மையினர்.!
தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை தீட்டும், கழகம்.,
கழகத்தை ஒழிக்க திட்டமிடுவார்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்.!
கழக நிர்வாகிகளே, விலை போக தயாராக உள்ளனர்.,
பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து வைத்துள்ள பாஜகவிற்கு சில ஆயிரம் கோடிகளை அள்ளி வீசுவதில் பிரச்சினை இல்லை.!
தமிழ்நாடு குட்டிச்சுவராகவே போனாலும், மக்களின் வாழ்வாதாரம் அழிந்தாலும், பிழைக்க வழியே இல்லாமல் போனாலும்.,
அதிமுகவை ஆட்சியில் உட்கார வைப்பார்களே ஒழிய, திமுகவை ஆட்சியில் உட்கார வைத்துவிட மாட்டார்கள், வலதுசாரிகள்.!
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு 2006-11 ஆட்சி போல் சிறந்த ஆட்சியை கண்டிருக்க முடியாது.!
2010 ஜூன் வரையில், திமுகதான் மீண்டும் ஆட்சியில் அமரப்போகிறது என்ற வயிற்றெரிச்சலில் வாழ்ந்தவர்கள், 2010 அக்டோபர் முதல் வேலையை ஆரம்பித்தனர்.,
2011 மே மாதத்தில் கழகம் எதிர்க்கட்சியாக கூட வர இயலாமல் செய்தனர்.!
2016ல் ஆட்சிக்கு வரும் சூழல் இருந்தது, கழகத்திற்கு.,
ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தனர், வலதுசாரிகள்.!
அவ்வளவு எளிதாக கழகத்தை ஆட்சியில் உட்கார வைத்துவிட மாட்டார்கள்.,
ஆட்சிக்கு வந்தாலும், நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டார்கள்.!
நிம்மதியாக ஆட்சி செய்ய விட்டாலும், மீண்டும் ஆட்சிக்கு வரவிட மாட்டார்கள்.!

கருத்துகள் இல்லை: