கருவூர் இஞ்சினியர் : 1989 பிரேமதாசா விடுதலை புலிகள் கூட்டில் கொல்லப்பட்ட சிங்கள குடும்பங்களின் இளைஞர்கள் தான்,
பெரும்பாலும் இலங்கை ராணுவத்தில் சேர்ந்து தமிழருக்கு எதிராக மிக வன்மமாக போரிட்டதாக 2009 க்கு பின்வந்த பல செய்திகள் தெரிவித்தனர்.
போர் முடிந்த பின்பு பல கிராம சிங்களஇளைஞர்கள் யுத்தம் பற்றியும் கொலைகள் பற்றியும் அரசியல்வாதிகளின் பதவிக்காக பல ஆயிரம் தமிழ் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதாக உண்மையான வருத்தத்துடன் தெரிவித்ததாக செய்திகள் வந்தன.
அவற்றை பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் பெரிது படுத்த விரும்பவில்லை
பிரேமதாசாவின் காலத்தில் புலிகளிடம் சரணடைந்த 600 போலீசாரை புலிகள் நயவஞ்சகமாக சுட்டு கொன்றார்கள் .
ராதா மனோகர் : உண்மையில் அந்த 600 போலீசாரும் புலிகளோடு சண்டையிட தயாரானார்கள்
அப்போது புலிகளை நம்பிய பிரேமதாசா அவர்களை சரணடையுமாறும் கேட்டு கொண்டார்
அன்டன் பாலசிங்கத்தின் பேச்சை நம்பி பிரேமதாச செய்த முட்டாள்தனம்
அந்த சம்பவம்தான் புலிகள் பற்றி சிங்கள மக்கள் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க காரணமானது என்று பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
அதாவது இவர்கள் அழித்து ஒழிக்கப்படவேண்டிய தீய சக்தி . எந்த கருணையும் இவர்கள் மீது காட்ட கூடாது
வாய்ப்பு கிடைத்தால் இவர்கள் நம்மை கொன்று விடுவார்கள் என்று ஒட்டு மொத்த சிங்கள மக்களும் உறுதி எடுத்து கொள்ள இது பெரும் காரணியாக அமைந்தது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக