ஞாயிறு, 23 ஜூன், 2024

"பால் கேன்களுக்கு 12% ஜிஎஸ்டி" - நிர்மலா சீதாராமன் கொடுத்த முதல் பரிசு!

 மின்னம்பலம் - Selvam :  அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 22) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மீண்டும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றிருக்கிறார்.
2024 – 25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து மாநில நிதியமைச்சர்களிடமும் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 22) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.



ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “எஃகு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியாக 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

ரயில் நடைமேடை டிக்கெட் விற்பனை, காத்திருப்பு அறை, பேட்டரி மூலம் இயக்கப்படு கார் சேவை போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஐடி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவங்களுக்கு வெளியே உள்ள மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுகிறது. பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே ஜிஎஸ்டியின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
செல்வம்

கருத்துகள் இல்லை: