புதன், 13 அக்டோபர், 2021

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

 நக்கீரன் : இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்மோகன் சிங், கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயதாகிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்- 1,145 இடங்களில் வென்று தி.மு.க. இமாலய சாதனை

May be an image of text that says 'புதிய ஊரக உள்ளாட்சித் தேர்தல் தலைமுறை 2021 ண் ன உடனுக்குடன் மாவட்ட கவுன்சிலர்கள் 140/140 முன்னிலை நிலவரம் நேரம் 09.10AM திமுக 139 அதிமுக MET EN 1 அமமுக மநீம நாம் தமிழர் கட்சி பாமக தேமுதிக S பிற Follow 13|10/2021 www.puthiyathalaimurai.com'

 மாலைமலர் :  மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் தி.மு.க. கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க. 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
சென்னை:  மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த 6-ந்தேதியும், 9-ந்தேதியும் 2 கட்டங்களாக தேர்தல்கள் நடந்தன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.
இதன் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அனைத்து மாவட்ட ஊராட்சிகளிலும், ஒன்றிய ஊராட்சிகளும் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து இது நீடித்தது.
மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 138 இடங்களை கைப்பற்றி உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தில் அ.தி.மு.க. வென்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது. இதே போல் வேலூர் மாவட்டத்திலும் மொத்தம் உள்ள 14 இடங்களையும், ராணிப்பேட்டையில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், கள்ளக்குறிச்சியில் மொத்தம் உள்ள 19 இடங்களையும், திருப்பத்தூரில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், நெல்லையில் மொத்தம் உள்ள 12 இடங்களையும், தென்காசியில் மொத்தம் உள்ள 14 இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 

உள்நாட்டு விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்

latest tamil news

தினமலர் : புதுடில்லி: கோவிட் காரணமாக உள்நாட்டு விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன. வரும் 18ம் தேதி முதல் வழக்கம் போல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச்சில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அனைத்து விமான சேவைகளும், மார்ச், 23லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன.
பின், வைரஸ் பாதிப்புகள் குறைந்ததை தொடர்ந்து, மே மாதம், உள்நாட்டு பயணியர் விமான சேவைகள் மட்டும் குறைந்தளவு கட்டுப்பாடுகளுடன் துவங்கப்பட்டன.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.. வெண்ணிற ஆடை தங்கப்பதக்கம்,,

 தினகரன் : வெண்ணிற ஆடை தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்
சென்னை: தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். 1965-ல் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார்  ஸ்ரீகாந்த். சிவாஜி, கணேசன், முத்துராமநம் ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த்.

எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை - சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி

பிரீதம் ஜுகல்கர், சமந்தா

cinema.maalaimalar.com  : நாகசைதன்யா ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் பிரீதம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.
எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை - சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று டோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது.
இதையடுத்து பிரீதம் ஜுகல்கருடன் நடிகை சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

கொலை வழக்கில் சரண் அடைந்த திமுக எம்பி ரமேஷ்: சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனு

DMK MP Ramesh seeks 1st class jail cell, சிறையில் முதல் வகுப்பு கேட்கும் திமுக எம்பி ரமேஷ், கொலை வழக்கில் சரணடைந்த திமுக எம்பி ரமேஷ், திமுக, கடலூர், முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கொலை, DMK MP Ramesh, cuddalore sub jail, DMK MP Ramesh booked murder surrenders, cashew nut unit worker murder, Panruti

tamil.indianexpress.com : கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் முந்திரி பருப்பு தொழிலாளியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் அக்டோப்ர் 11ம் தேதி காலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பண்ருட்டி நீதித்துறை நடுவர் ஆர் கற்பகவள்ளி சரணடைந்த கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேஷை அக்டோபர் 13ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கோவிட்-19 சோதனைக்கு நடத்தப்பட்ட பிறகு ரமேஷ் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். திமுக எம்.பி ரமேஷின் வழக்கறிஞர் கே.சிவராஜ் கடலூர் மத்திய சிறையில் உள்ள எம்.பி.க்கு சிறையில் முதல் வகுப்பு அறையை அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். கோவிட்-19 பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்தால் ரமேஷ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) சிறையில் முதல் வகுப்பு அறைக்கு மாற்றப்படுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சிக்கு தடைவிதிக்க கோரிக்கை வைத்த காங்கிரஸ் congress demand to ban nam tamilar party

congress demand to ban nam tamilar party

tamil.asianetnews.com - manimegalai a காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஈழத்தமிழர்கள் இன அழிப்பு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ்தான் முக்கிய காரணம் என கட்சி தொடங்கிய நாளில் இருந்தே சீமான் முழங்கி வருகிறார். அவரது தம்பிகளும் எப்போதும் காங்கிரஸ்-க்கு எதிராக அனலை கக்கி வருகின்றனர். சீமான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது பதில் கொடுத்தாலும், அவரை பெரிதாக எதிர்த்தது கிடையாது.

9 மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றிய தி.மு.க... சொல்லி அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 கலைஞர் செய்திகள் : தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
அதேபோல் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் இதுவரை 121 இடங்களில் தி.மு.க கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் 1,380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க கூட்டணி 392 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 10 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அதேபோல் செங்கல்பட்டில் 16ல் 11 இடத்திலும், வேலூரில் 14ல் 11 இடத்திலும் முன்னிலையில் உள்ளனர்.
ராணிப்பேட்டையில் 13ல் 10 இடத்திலும், திருப்பத்தூரில் 13ல் 11 இடத்திலும், விழுப்புரத்தில் 28ல் 26 இடங்களிலும், கள்ளக்குறிச்சியில் 19ல் 18 இடங்களிலும், திருநெல்வேலியில் 12ல் 9 இடங்களிலும், தென்காசியில் 14க்கு 14 இடத்திலும் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

சாட்டை' துரைமுருகன் கைது; அரசியல் காழ்ப்புணர்ச்சி - பழிவாங்கும் போக்கு: நாம் தமிழர் கட்சி கண்டனம்

ntk-condemns-dmk-government

.hindutamil.in/  : 'சாட்டை' துரைமுருகனைக் கைது செய்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் மலைகளை உடைத்து கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவும், தமிழக அரசு இயற்கை வளங்களைக் காக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் யூடியூபர் சாட்டை துரைமுருகன் பேசும்போது, கேரள முதல்வர் பினராயி விஜயனையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பேசியதோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து உள்நோக்கத்துடன் அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர்..? ஜெயகுமாரின் பதில்!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  அதிமுக பொன்விழா ஆண்டு வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று (11.10.2021) காலை 10 மணியளவில் தொடங்கி 2 மணிநேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளான ஜெயகுமார், சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்விழா கொண்டாட்டம் தவிர, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பது குறித்தும், அதிமுகவின் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் : சென்னை மாநகராட்சி

 கலைஞர் செய்திகள்  : குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலக்கை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டு, ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பருவமழைக் காலத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகராட்சி, மழைக்காலத்தை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இந்நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலக்கை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டு, ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,070 கி.மீ. நீளமுள்ள 9,224 மழைநீர் வடிகால்கள் மற்றும் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

”பலாலி – மீனம்பாகம் விமானசேவையு விரைவில்.. இந்திய துணை தூதர் அ .நடராஜன் பேட்டி

 Nadarajah Kuruparan  :  “வட கிழக்கு மாகாணங்களில், மூன்றாவது பங்காளர்களின் தேவையும் இல்லை, அதனை இந்தியா விரும்பவும் இல்லை”
”13ஆவது திருத்தம் குறித்து, இந்தியா மீண்டும் ஆழமாக வலியுறுத்தி உள்ளது.”
”இலங்கை எந்த நாடுகளுடனும் உறவைப் பேண முடியும். அது ஒரு சுதந்திர நாடு. அனால் இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க முடியாது.”
”யாழ் கலாசார மையம் விரைவில் திறக்கப்படும் என நம்புகிறேன்.”
”பலாலி  – மீனம்பாகம் விமானசேவையும் விரைவில் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.”
”இலங்கையில் இந்தியா பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.”
”இலங்கையில் வாழும்  இந்திய வம்சாவழி மக்கள் குறித்தும் இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளது.”

திங்கள், 11 அக்டோபர், 2021

சிங்கள மக்களின் மரபணுக்கள் 69.86% +/- 0.61 தென்னிந்திய தமிழர்களிடம் பொருந்தி உள்ளது

செல்லபுரம் வள்ளியம்மை :  இலங்கை தமிழர்களின்மரபணுக்கள் (  ஜீன்கள்)  சிங்கள மக்களின் மரபணுகளோடு   55.20% +/- 9.47 வீதம் பொருந்தி உள்ளது  
இலங்கையில் உள்ள சிங்கள  மக்களின் மரபணுக்கள்  69.86% +/- 0.61 தென்னிந்திய தமிழர்களிடம் பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள தமிழர்களின் மரபணுக்கள்  16.63% +/- 8.73 தென்னிந்திய தமிழர்களோடு பொருந்தி உள்ளது
ஆச்சரியமான ஒரு விடயம்  இலங்கை தமிழர்களை விட சிங்கள மக்களின் மரபணுக்கள்   தமிழ்நாடு தமிழர்களோடு அதிக அளவில் பொருந்தி உள்ளது
மேலும் சிங்கள மக்களின் மரபணுக்கள்  25.41% +/- 0.51 வீதம் வங்காள மக்களோடு பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள சிங்கள மக்களும் தமிழ் மக்களும் 55%.மரபணுக்கள்  பொருந்தி உள்ளது

 The  Sinhalese had the greatest contribution from South Indian Tamils (69.86% +/- 0.61),
Sri Lankan Tamils to have a greater contribution from the Sinhalese of Sri Lanka (55.20% +/- 9.47)
While the Sri Lankan Tamil are closely related to the Sinhalese who are closely related to Indian
followed by Bengalis from the East India (25.41% +/- 0.51). With both the Sri Lankan Tamils and Sinhalese in the island sharing a common gene pool of 55%.
They are farthest from the indigenous Veddahs.[1] This close relationship between the Sri Lankan Tamils and Sinhalese makes sense, as the two populations have been close to each other historically, linguistically, and culturally for over 2000 years.

இலங்கை கடல் தொழில் தமிழ் அமைச்சருக்கு பதிலாக ஒரு சிங்கள அமைச்சரை நியமிக்க வேண்டுமாம் . தமிழ் தேசிய கூட்டணி அரசிடம் வேண்டுகோள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக ஒரு தமிழரான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இருப்பது தெரிந்ததே.
ஆனால் இவரது அமைச்சுக்கு ஒரு சிங்களவர் நியமிக்க படவேண்டும் என்று  தமிழ் தேசிய கூட்டணியின் எம்பியான திரு சார்ள்ஸ் நிர்மலநாதன்  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்  
Tamil Mirror தமிழ் மிரர் -எஸ்.றொசேரியன் லெம்பேட் :

சார்ள்ஸ் நிர்மலநாதன் MP

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும்  அரசாங்கமும் மௌனம் காத்து வருவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இதற்கு பிரதான காரணம், இந்தியாவுக்கு பயந்துகொண்டு, அவர்கள் முடிவுகளை எடுக்க தயங்குகிறார்கள் எனவும் கூறினார்.
மேலும், இவ்விடயத்தில் மௌனமாக இருப்பதை விட, டக்ளஸ் தேவானந்தா தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுடன், சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவர் கூறினார்..
மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்

மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

BBC :  மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நெடுமுடிவேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இவர் மலையாள பட உலகில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மூத்த நடிகர் நெடுமுடி வேணு. இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால். கேரளாவை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை நடந்து வந்தது. அதில் இருந்து மீண்டு வந்தவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று பிற்பகலில் காலமானார்.
தமிழில், 'அந்நியன்', 'பொய் சொல்ல போறோம்', 'இந்தியன்', 'சர்வம் தாளமயம்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக 'நவரசா' இணையத்தொடரில் தமிழில் நடித்திருப்பார்.
மேலும், மலையாள முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் அவருடைய இறப்புக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கொலை வழக்கில் திமுக MP ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்; 2 நாள் நீதிமன்றக் காவல்

கொலை வழக்கில் திமுக MP ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்; 2 நாள் நீதிமன்றக் காவல்

zeenews.india.com : சென்னை: முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆளும்கட்சியான திமுகவின் எம்.பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
தொழிற்சாலை பணியாளர் கொலை தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலையில் பணிபுரியும் நடராஜ், சுந்தர், வினோத், கந்தவேல், அல்லா பிச்சை என மொத்தம் 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 பேரை கைது செய்திருந்தனர்.

என் மீதும், எனது ஆட்சி மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது - இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச வேதனை

 மாலைமலர் : புதிய அரசியல் அமைப்பு, புதிய தேர்தல் முறை அடுத்த வருடத்துக்குள் உருவாக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பு:  : இலங்கையின் 72-வது ராணுவ தினவிழா அனுராதபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலந்து கொண்டார்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். இதனால் நாட்டை முடக்குதல், பல்வேறு தடைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்காக நான் நியாயம் கூறப்போவது இல்லை. ஆனாலும் இதை முறியடித்து வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செல்கிறோம்.

தாய்வான் .. சீனாவுடன் மோதும் சின்னஞ்சிறு தீவு! ஜனநாயக சீன வரலாறு தெரியுமா?

 BBC : சீனாவுடன் தைவானின் மறு இணைப்பு நிச்சயம் நடக்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசிய மறுநாளே தைவான் அதிபர் த்சை இங்-வன் தெரிவித்துள்ளார்.
“நாம் அதிகம் சாதிக்க, சாதிக்க சீனாவிடம் இருந்து வரும் அழுத்தம் அதிகமாகும்,” என்று ஞாயிறன்று நடந்த தைவானின் தேசிய தின உரையில் அவர் பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தைவானில் சீ னாவின் ராணுவ நடவடிக்கை அதிகரித்திருப்பது உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தைவானை தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியாகவே சீனா இன்றுவரை பார்க்கிறது. மீண்டும் தன்னுடன் இணையும், அல்லது இணைந்திருக்கும் பிராந்தியமாகவும் கருதுகிறது.
ஆனால் இதை பெரும்பகுதி தைவானிய மக்கள் ஒப்புக் கொள்வதில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இறையாண்மை கொண்ட ஒரு தேசத்தில் வாழ்ந்து வருவதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

சாட்டை துரைமுருகன் கைது .. 25 ஆம் தேதிவரை நாங்குநேரி கிளைச் சிறையில் அடைப்பு .

May be an image of 1 person and standing

 மின்னம்பலம் : முதல்வர் மீது அவதூறு: நாம் தமிழர் பிரமுகர் கைது?
நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன் நேற்று (அக்டோபர் 10) கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வருகின்றன.
கன்னியாகுமரியில் நேற்று அக்டோபர் 10ஆம் தேதி , குமரியில் இருந்து இயற்கை வளங்கள் கேரளத்துக்குக் கடத்தப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.
இதில் பேசிய சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறப்பு பற்றி இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். ஏற்கனவே மணல் கடத்தல் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சித்துப் பேசியதற்காக கரூர் மாவட்ட திமுக சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார் சாட்டை துரைமுருகன்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் தாக்கி இழிவுபடுத்திப் பேசியதற்காக துரைமுருகன் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் நேற்றே திமுகவினரால் புகார்கள் அளிக்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்..உடலில் துப்பாக்கிக் குண்டு கண்டெடுப்பு

 Vigneshkumar  -  Oneindia Tamil News  :  சென்னை: கடந்த 4ஆம் தேதி காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த விற்பனையாளர் உடலில் துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த துளசிதாஸ் (வயது 43) மற்றும் ராம் (42) ஆகியோர் ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தனர்.
கடந்த 4ஆம் தேதி இவர்கள் வழக்கம்போல் விற்பனை நேரம் முடிந்தவுடன் கடையைப் பூட்டிவிட்டுக் கிளம்பியுள்ளனர். தாக்குதல் தாக்குதல் கடையின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுக்க இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துளசிதாசை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கினர். மறைத்து வைத்திருந்த கத்தியால் துளசிதாஸை குத்தினர்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

அரசை விமர்சனம் செய்யுங்கள் .. ஆனால் சிறிய பிரச்சினைகளை எழுதி, பெரிய வளர்ச்சிகளை மறைக்க வேண்டாம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“சிறிய பிரச்சினைகளை எழுதி, பெரிய வளர்ச்சிகளை மறைக்க வேண்டாம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கலைஞர் செய்திகள் : “அரசை பாராட்டி எழுத சொல்லவில்லை. விமர்சனம் செய்யுங்கள், மனதார ஏற்போம். சிறிய பிரச்சினைகளை எழுதி, பெரிய வளர்ச்சிகளை மறைக்க வேண்டாம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
“டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழின் வார தொகுப்பு ஆக பொருளாதாரம், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'மெர்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ்(Merchants of madras)” திங்கட்கிழமை தோறும் ஒவ்வொரு வாரமும் வெளிவர உள்ளது.

U.P லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது.

  Rayar A -   Oneindia Tamil  :  லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் இன்று கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அங்கு காரில் வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்ததாக கூறப்படுகிறது. இதன்பின்னர் விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் பெரும் மோதல் மூண்டது.

லக்னோ மும்பை ஓடும் ரயிலில் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு.. தடுக்க முயன்றவர்களுக்கு வெட்டு... கொள்ளையர்கள் அட்டூழியம்

 Vignesh Selvaraj  - கலைஞர் செய்திகள்  :     ஓடும் ரயிலில் கொள்ளையடித்த 8 பேர் கொண்ட கும்பல், இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. குறிப்பாக வட மாநிலங்களில் நாள்தோறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறி வருவது பெண்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது.
மும்பை நோக்கிச் சென்ற ரயிலில், எட்டு பேர் கொண்ட கொள்ளை கும்பல் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான நான்கு பேரை போலிஸார் தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை நோக்கி புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது லகத்புரி நகருக்கு அருகே ஏ.சி பெட்டியில் ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஏறியது.

நள்ளிரவில் பொன்னார் கைது! திமுக எம்.பி ஞானதிரவியம் மீது கொலை வழக்கு பதிய கோரிகை

திமுக எம்.பி மீது வழக்கு பதிய வேண்டும்: நள்ளிரவில் பொன்னார் கைது!

மின்னம்பலம் : நெல்லை மக்களவை தொகுதி திமுக எம்.பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் நேற்று (அக்டோபர் 9) நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட நாளான 9ஆம் தேதிக்கு முதல் நாள் 8ஆம் தேதி நெல்லை மாவட்டம் வள்ளியூர் வட்டாரத்தில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் பாஜக வட்டாரத் தலைவர் பாஸ்கர் என்பவர் தன்னை திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் திமுகவினர் தாக்கியதாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதையடுத்து பாஸ்கரை தாக்கிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: பச்சிளம் குழந்தை மீட்பு - கண்ணீர் மல்க காலில் விழுந்து நன்றி தெரிவித்த பெற்றோர்

  puthiyathalaimurai.com  -  sharpana :  தஞ்சாவூர் மாவட்டம் பர்மா காலனியை சேர்ந்த குணசேகரனின் மனைவி ராஜலட்சுமிக்கு ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும் - சேயும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாய்க்கு உதவி செய்வது போல் நடித்த ஒரு பெண், நேற்று காலை குழந்தையை கட்டைப் பையில் போட்டுக்கொண்டு கடத்திச் சென்றுள்ளார். இதுதொடர்பான புகாரை அடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வழி நெடுகிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் பட்டுக்கோட்டையில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
விசாரணையில் குழந்தையை கடத்தியவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜி என்பதும், மூன்றாவது கணவரிடம் குழந்தையை காட்டி, அவரது சொத்துக்களை பெறுவதற்காக கடத்தியதும் தெரியவந்தது. குழந்தையை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கண்ணீர் மல்க குழந்தையை பெற்றுக்கொண்ட பெற்றோர், காவல்துறையினரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.