திங்கள், 11 அக்டோபர், 2021

இலங்கை கடல் தொழில் தமிழ் அமைச்சருக்கு பதிலாக ஒரு சிங்கள அமைச்சரை நியமிக்க வேண்டுமாம் . தமிழ் தேசிய கூட்டணி அரசிடம் வேண்டுகோள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக ஒரு தமிழரான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இருப்பது தெரிந்ததே.
ஆனால் இவரது அமைச்சுக்கு ஒரு சிங்களவர் நியமிக்க படவேண்டும் என்று  தமிழ் தேசிய கூட்டணியின் எம்பியான திரு சார்ள்ஸ் நிர்மலநாதன்  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்  
Tamil Mirror தமிழ் மிரர் -எஸ்.றொசேரியன் லெம்பேட் :

சார்ள்ஸ் நிர்மலநாதன் MP

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும்  அரசாங்கமும் மௌனம் காத்து வருவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இதற்கு பிரதான காரணம், இந்தியாவுக்கு பயந்துகொண்டு, அவர்கள் முடிவுகளை எடுக்க தயங்குகிறார்கள் எனவும் கூறினார்.
மேலும், இவ்விடயத்தில் மௌனமாக இருப்பதை விட, டக்ளஸ் தேவானந்தா தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுடன், சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவர் கூறினார்..
மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: