![]() |
Kandasamy Mariyappan : இடஒதிக்கீடு நெறிமுறை படுத்தப்பட வேண்டும் என்று நான் கூறியதை பல நண்பர்கள் தவறு என்று கூறுகின்றனர்.!
கண்டிப்பாக அவர்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும்.! அதனால்தான் இவ்வளவு ஆணித்தரமாக மறுக்கின்றனர்.!
ஒருவேளை அவர்கள் கூறுவது போன்று அதனை சரி என்று பார்த்தாலும், எதிர்காலத்தில் இது ஒரு ஆபத்தாகத்தான் இருக்கும் என்பதுதான் எனது பார்வை.!
காரணம் இட ஒதுக்கீடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது.! அதனை நமது அரசுகள் நீட்டித்துக் கொண்டே வந்தது.! இதனால் பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.!
70களுக்கு முன்பு வரையில் அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், மின்துறை, போக்குவரத்து, வங்கி, காப்பீடு, நீதிமன்றம் மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்சாதியினரே பணியில் இருந்தனர்.!
இது எப்படி சாத்தியமானது.!
முன்பே பணியில் இருக்கும் உயர்சாதியை சேர்ந்த ஒருவரது உறவினர்களை அல்லது அவரின் நண்பர்கள் அல்லது நண்பர்களின் உறவினர்களை பணிக்கு அமர்த்துவார். அது ஒரு சங்கிலித் தொடராக இருக்கும்.!
இதனை 70களுக்குப் பிறகு நமது ஆட்சியாளர்கள் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியது மட்டுமல்லாமல் அதனை உறுதி செய்து, வாரியம் மற்றும் TNPSC மூலமாக எல்லா தரப்பு மக்களுக்கும் அந்த பணிகள் கிடைக்க வழி செய்கின்றனர்.!










