ஞாயிறு, 13 ஜூன், 2021

தமிழ்நாட்டில் புலி பிரசாரம் எப்படி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகிறது?

News7 Tamil on Twitter: "#தேர்தல்போர் நாடாளுமன்றத் தேர்தல் : தமிழகம்,  புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்  ...
சாந்தி நாராயணன்  :; தமிழ்நாட்டில் எட்டும் இடங்களில் மக்களை  கொள்கைவயப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் மல்லாக்க படுத்து கனவு கண்டுகொண்டு ஈழம் புலிகள் பிரபாகரன் என்று திராவிடர் இயக்கங்கள் மறுபடியும் மயங்குகின்றனவோ என்று தோன்றுகிறது.
கோவையும் நெல்லையும் தர்மபுரியும் இன்னும் சாதிய மூர்க்கங்களில் இருந்து வெளியே வரவில்லை.
இவையெல்லாம்.  கவனம் இருக்கிறது தானே
Narayanaperumal Jayaraman  : உண்மை...மீண்டும் தேவையில்லாமல் ஈழத்து பக்கம் வண்டியை திருப்பி, தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ்ஸை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்..
Mugil Bharathi  : அப்பிடியெல்லாம் விட முடியாது, வாங்குனா straightஆ ஈழம்தான்.. அப்புறம் தனித்தமிழ்நாடு, அப்புறம் malaya, burma, cambodia .. கடைசீல லெமூரியா.. அப்புறம் இங்க இருந்து நடந்தே Newzealand போய்ரலாம்...
செல்லபுரம் வள்ளியம்மை : இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் கூட பிரபாகரன் புலிகள் என்பவை தற்போது பேசுபொருள் அல்ல ..
தமிழ்நாட்டில் மட்டும் இது எப்படி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக இன்னும் இருக்கிறது?
இதில் வேறு ஏதோவொரு ரகசிய நோக்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது
தமிழ்நாடு பிரபா புலி மசாலாவுக்கும் ஈழத்தமிழர் உரிமை என்ற சொல்லுக்கும் எந்த தொடர்பும் இல்லை
எனவே இது பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை
இப்போது நடப்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டு அரசியல் பிரச்சனை மட்டுமே!
இது தமிழநாட்டு அரசியல் சிந்தனை பற்றிய விடயம்  
இதை வேறு வேறு கோணங்களில் பேசுவது வீண் விரயமே.
தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறைக்கு தமிழ்நாட்டின் திராவிட வரலாறு ..குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டு  வரலாறு கற்பிக்க படவேண்டும் .
இது ஒன்றுதான் மக்கள் முன் உள்ள ஒரே வழி என்றெண்ணுகிறேன்  
 

கருத்துகள் இல்லை: