செவ்வாய், 2 ஜூன், 2020

காட்மேன்’ தொடர்; இயக்குநர் - தயாரிப்பாளர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு

godman-web-serieshindutamil.in : ‘காட்மேன்’ தொடர் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
‘காட்மேன்’ என்ற பெயரில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளங்கோ தயாரிப்பில் இணைய தள தொடர் உருவாக்கப்பட்டுள் ளது. வரும் 12-ம் தேதி பிரபல நிறு வனம் மூலம் ஆன்லைனில் வெளி யிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரின் டிரெய்லர் அண்மையில் வெளி யிடப்பட்டது. அதில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சி கள், வசனங்கள் இடம் பெற்றிருப் பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது மாவோவின் சீனம் அல்ல மாறுபட்ட சீனம்!


மின்னம்பலம் : சாலமன் : : வரலாறு முழுக்க மானுட சமூகங்கள் பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றன. இத்தகைய மாற்றத்துக்குப் பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கின்றன என்றாலும் அதில் கண்டுபிடிப்புகளும் பொருள் உற்பத்தி முறைமையும், பொருள் உற்பத்தியைப் பகிர்தலும் அதன் அடிப்படையில் எழுந்த வர்க்க, சமூக மோதல்களுமே சமூக மாற்றத்துக்கு முக்கிய பங்களிக்கின்றன.ஒவ்வொரு சமூகக் கட்டத்திலும் தனிமனித உறவுகளும் குடும்ப உறவுகளும் சமூக உறவுகளும் அரச உறவுகளும் இத்தகைய காரணிகளாலேயே மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன.
21ஆம் நூற்றாண்டின் அதிகாலைப் பொழுதில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பட்டறைத் தொழிலும் பண்ணை அடிமை முறையும் தங்க காசுகளும் செப்பு காசுகளும் கரைந்து, வளர்ச்சியடைந்த வங்கிகளும் பொருள் உற்பத்தியும் இணைந்து, நிதி மூலதன வடிவம்கொண்டு கண்டம்விட்டு கண்டம் பாயும் காலம் இது.
இக்காலகட்டத்தில் தனிமனிதர்களுக்கு இடையிலான, குடும்பங்களுக்கு இடையிலான, சமூகங்களுக்கு இடையிலான, அரசுகளுக்கு இடையிலான பழைய உறவுகள் புதிய உறவுகளோடு மோதல் கொள்கின்றன. நிதி மூலதன வடிவத்துக்குள்ளேயும் புறத்தேயும் புதிய உறவுகளும் பழைய உறவுகளும் முட்டி மோதுகின்றன. இதன் விளைவாக அரசுகளுக்கிடையிலான அரச போர்களும் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான வர்க்கப் போர்களும் சமூகங்கள், இனங்களுக்கிடையிலான உரிமைப் போர்களும் வெடிக்கின்றன.
புவியெங்கும் இத்தகைய மோதல்கள் இல்லாத தேசங்கள் கிடையாது. இத்தகைய மோதல்களில் முதன்மையான மோதலாக, உலகு தழுவிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய குறிப்பான மோதலாக அமெரிக்க – சீன வர்த்தக மோதல் இப்போது முன்வந்து நிற்கிறது.

கிழக்கு பிள்ளைகள் ..... வடக்கு பிள்ளைகள் ... ஈழப்போராட்டத்தின் மறுபக்கம்

Reginold Rgi : கிழக்கு தாய்மார்களின் பிள்ளைகள் களத்தில் சண்டையிட்டு மடிய வேண்டும் வடக்கு
தாய்மார்களின் பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளில் உல்லாசமாக வாழவேண்டும் என்பது மட்டும் என்ன நியாயம் ?
கருணா செய்த தவறுதான் என்ன சொல்லுங்கள்.
23 வருடம் உங்களுக்காக போராடியது தவறா ?
யாராலும் வெல்ல முடியாத ஆனையிறவு பெரும் தளத்தை கைப்பேற்றியது தவறா?
அன்று வன்னி நிலம் எங்கும் சூழ்ந்து கொண்ட ஜெயசிக்குறு படைகளை தோற்கடித்து புலிகளின் வெற்றிக்கு ஏறுமுகம் காணவைத்தது தவறா? எங்களை மட்டக்களப்பான் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் தானே நடத்தீனிர்கள்?
நாங்கள் அன்று உங்களிடம் என்ன கேட்டோம் கிழக்கு போராளிகளின் உரிமைகள் மறுக்கப்படவே எங்கள் உரிமைகளைதானே கேட்டொம்? எங்களோடு நட்பு ரீதியான உடன் படிக்கைக்கு வந்தால் நாங்கள் புலிகளுடன் இணைந்து செயல்படுவோம் இல்லை என்றால் பிரிந்து செல்கிறோம் என்றோமே?
அதற்கு புலிகள் என்ன செய்தார்கள்?
அடிமை ஒப்பந்தத்தை மீறியதற்காக கிழக்கை நோக்கி பாரிய படை நகர்வை மேற்கொண்டு சொந்த போராளிகளை அல்லவா அன்று கொலை செய்தீர்கள் !

திங்கள், 1 ஜூன், 2020

வடிவேலு : அந்த வீடியோவால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்” -... வீடியோ


நக்கீரன் :வைகை புயல் வடிவேலு என பலராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு. சமீப ஆண்டுகளாக இவர் திரையுலகில் நடிக்கவில்லை என்றாலும் இவரது காமெடிகளை வைத்து உருவாகும் மீம்களின் மூலம் இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கிரார்.
நடிகர் சிங்கமுத்துவும், வடிவேலும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையேயான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனிடையே நடிகர் மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சிங்கமுத்து, வடிவேலு தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் வடிவேலு.

இன்றும் தமிழகத்தில் ஆயிரத்தை தொட்ட கரோனா!! சென்னையில் 15 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு!!

 In Tamil Nadu today, the peak of the corona in Chennai - 15 thousand affected
 நக்கீரன் - கலைமோகன் :  தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக தமிழகத்தில், ஒரே நாளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 1,112 பேர் தமிழகத்திலும், மற்றவர்கள் பிற மாநிலங்களில், பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 14,750 ஆண்கள், 8,732 பெண்கள், 13 திருநங்கைகளுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 10,138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் ஒரேநாளில் 972  பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது.

அமேரிக்கா .. ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம்: போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மியாமி போலீஸார்


some-police-step-out-to-show-support-for-george-floyd-demonstrators
hindutamil.in : அமெரிக்காவில் போலீஸாரின் வன்முறைக்கு ஜார்ஜ் ஃபிளாய்ட் பலியானதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலானது. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.< ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?

BBC : கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இது மேலும் பரவும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இப்போது வரை கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான மருந்து ஏதும் தயாராகவில்லை. ஆனால் இந்த நிலை எப்போது மாறும்?
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது வரும்? ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து உருவாக்கிவிட்டனர். அதை விலங்குகள் மேல் பரிசோதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். அது வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவது தொடங்கும்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குள் ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கிவிட்டாலும் அதன் பிறகு அதை பெருமளவில் தயாரிக்கும் பெரிய பணி இருக்கிறது.
அதாவது அடுத்த ஆண்டு பாதியில்தான் மருந்து தயார் நிலையில் இருக்கும்.
இவை எல்லாம் எதிர்பார்ப்புகள் மட்டுமே. இந்த தடுப்பு மருந்துகளை உருவாக்க புதிய செயல்முறையை பின்பற்றுவதால் அனைத்தும் சரியானதாக செல்லும் எனக் கூற முடியாது. ஏற்கனவே நான்கு வகையான கொரோனா வைரஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் சாதாரண சளியைதான் உருவாக்கும். ஆனால் இவை எதற்கும் தடுப்பு மருந்து இல்லை.
இது எல்லா வயதினரையும் காப்பாற்றுமா? இந்த தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான வாய்ப்பு வயோதிகர்களிடம் குறைவாகவே இருக்கும். இதற்கு தடுப்பு மருந்தை குறை சொல்ல முடியாது. வயோதிகர்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு இந்த மருந்துகளை ஏற்று வினை புரியும் அளவுக்கு வலுவாக இருக்காது.

ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!! காஞ்சி சந்திரசேகரன் ..

thathachariyar.blogspot.com : . ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!
ஸ்திரிகளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா?
ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு இந்து மதம் எங்கே போகிறது ?
ஆலயப்பிரவேச போராட்டத்தை தடுத்த பெண்கள் தாக்கப்பட்டதற்காக அழுத சங்கராச்சாரியார்... பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டதற்கு சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால்?..;
டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.
அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்பகோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது’ உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ (-) இதுதான் தந்தி வாசகம் கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.
நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்கு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றை பார்வையிட எசையனூருக்கு சென்றிருந்தார் மகாபெரியவர்.

இந்திய மாணவர்களின் வெளிநாட்டு கனவை தகர்த்த கொரோனா வைரஸ்


BBC :உலகின் தலை சிறந்த வணிக கல்லூரியில் ஏம்.பி.ஏ படிக்க வேண்டுமென்ற ஆசைக்காக இரண்டு ஆண்டுக்கு முன்னாள் உழைக்கத் தொடங்கினார் 29 வயதான ரௌணக் சிங். 2020 ஜனவரியில் கலிஃபோர்னியாவில் இருக்கும் யூசி பெர்க்லி ஹாஸ் வணிக கல்லூரியில் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றார். பல்கலைக்கழகம் அவரது விண்ணப்பத்துக்கு வலு சேர்க்க சில தகவல்களைக் கேட்டிருந்தது.
"இதனால், ஐந்து வருடமாக பார்த்துக்கொண்டிருந்த நிலையான வேலையை விட்டுவிட்டு ஒரு புதிய மனநல நிறுவனத்தில் ஆலோசகராக வேலைக்கு சேர்ந்தேன்" என்கிறார் சிங்.
"புதிய வேலையில் என்னுடைய சம்பளம் குறைவு. ஆனால் இந்த முடிவை நான் பணத்திற்காக அல்லாமல் என்னுடைய அனுபவத்தில் இது ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் என்பதற்காகவே எடுத்தேன்" என கூறுகிறார் சிங்.
ஒரு வழியாக பெர்க்லி பல்கலைக்கழகத்தில் அவருக்கு சேர்க்கை அளிக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்திலிருந்து அவருடைய படிப்பு தொடங்க இருந்தது.
ஆனால் உலகத்தில் பெரிய மாற்றம் நடந்தது. கோவிட்-19 உலகத் தொற்று உடனடியாக நடக்க இருந்த இந்த எதிர்காலத்தையும் நிச்சயமற்றதாக மாற்றியது.

நேரடி டிஜிட்டல் வெளியீடு: அடுத்த தமிழ் சினிமா தயார்!

மின்னம்பலம் : 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' திரைப்படங்களைத் தொடர்ந்து அட்லீயின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'அந்தகாரம்' திரைப்படமும் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அட்லீயின் தயாரிப்பில் சுசி சித்தார்த் இயக்கியுள்ள திரைப்படம் 'அந்தகாரம்'. அர்ஜுன் தாஸ், வினோத் கிஷண், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அட்லீயுடன் இணைந்து ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமான லாக் டவுன், தமிழ் சினிமாவில் ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை பொது இடங்களில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை தமிழக அரசு அதிரடி உத்தரவு

தினத்தந்தி :  காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பஸ்சில் அனுமதி இல்லை என்றும் பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீனமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம்.
ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கு விலகி கொள்ள வேண்டும். பணியிடங்களில் இந்த செயலியை அனைத்து ஊழியர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம்.

கிழக்கு போராளிகளின் 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர் .. .. மறைக்கப்பட்ட வரலாறு

முன்னரங்கு நிலைகளுக்கு கிழக்கு போராளிகள் அனுப்பப்பட்டு அநியாயமாக பலியிடப்பட்டது வடக்கு தளபதிகளால் கிழக்கு போராளிகள் புறக்கணிக்கபட்டது மட்டக்களப்பான் என...
Reginold  : ஜெயசிக்குறு என்று பெயரிடப்பட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தால்
தாண்டிக்குளம் படைமுகாம் மீதான தாக்குதலை கருணாவின் நேரடி
ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாக
1997 ஒக்டோபர் மாதத்தில் ஏ-9 நெடுஞ்சாலைக்குக் கிழக்குப் பக்கமாக மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியில் கரிப்பட்ட முறிப்பு என்னும் இடத்தை இலங்கை அரசபடையினர் கைப்பற்றினர். அம்முனையில் முன்னேறிய படையினருக்கு வினியோகத் தளமாகச் செயற்பட்ட கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் என்ற கிராமங்களில் அமைந்திருந்த கூட்டுப்படைத்தளம் மீது ஒக்டோபர் மாதத்தின் இறுதிப்பகுதியில் கருணா தலைமையிலான விடுதலைப்புலிகளின் கிழக்கு படையணி வலிந்த தாக்குதலொன்றைத் தொடுத்தனர். தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடம் இலங்கை அரசபடையினரின் முக்கியமான ஆயுத, வெடிபொருட் களஞ்சியமென்பதால் பல மோட்டார் பீரங்கிகளுட்பட நிறைய ஆயுத தளபாடங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். இத்தாக்குதலில் இரு T-55 இரக டாங்கிகள் புலிகளால் அழிக்கப்பட்டன.

ஞாயிறு, 31 மே, 2020

குரு மகன், மருமகன் மீது தாக்குதல்: காடுவெட்டியில் நடந்தது என்ன?


மின்னம்பலம்  :மறைந்த வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், சகோதரி மகன் மதன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு கொடூரமாகத் தாக்கப்பட்டு, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னணியில் இருப்பது பாமகதான் என குருவின் சகோதரி குற்றம்சாட்டினார்.
: இந்த நிலையில் காடுவெட்டி கிராமத்தில் நடந்தது என்ன என்று விசாரித்தோம்.... பாமக நிறுவனர் ராமதாஸும், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவும் நகமும் சதையுமாக இருந்தார்கள். தான் பெற்றெடுக்காத மூத்த மகன் குரு என்று ராமதாஸ் அவர் மீது அன்பைப் பொழிந்தார். நுரையீரல் திசுப்பை நோயால் அவதிப்பட்டு வந்த குரு, அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2018 மே 25ஆம் தேதி உயிரிழந்தார்.

நான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி

 நான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி மாலைமலர் : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் பேருந்து பயணத்திற்கு அனுமதி 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அறிவித்தார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்குக'- திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

 Rs. 12,500 for each family - Resolution at DMK Advisory Meetingnakkheeran.in - கலைமோகன் : திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்றது. காணொலி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் ஒதுக்கீடு,  கரோனா  தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, கொமதேக ஆகிய திமுகவின் தோழமை கட்சிகளும் பங்கு பெற்ற நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு சார்பில் 7,500 ரூபாயும், மாநில அரசு சார்பில் 5000 ரூபாய்  என ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

புலி ஆதரவாளர்களின் விபரீத வரலாற்று பிழை

வளன்பிச்சைவளன் : கடந்த 11 ஆண்டுக ளாக மே மாதம் என்றாலே கலைஞர் மீது புழுதி வாரி தூற்றுவது என்பதை ஒரு சம்பி ரதாயமாக நடைமுறை படுத்தி வந்தனர் போலி தமிழ் தேசியர் கள்.
தமிழீழம் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இடம் பெற வேண்டும் என்று 1980 களில் ஒரு இயக்கமாக நடத்திய வர் கலைஞர் பட்டிதொட்டி எங்கும் ஈழத்தமிழர்களுக்கு தீர்வு தமிழீழமே என இறுதி யிட்டு தமிழகம் எங்கும் முழங்கி யவர் கலைஞர்.
கலைஞர் ஈழத் தமிழ் மக்களுக்காக எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்டவர்கள் புலிகள் அனைத்து இயக்கங்க ளும் புலிகளால் அழிக்கப் பட்ட நிலையில் கலைஞர் ஈழ பிரச்ச னையில் இருந்து ஒதுங்கினார். அப்பாவி ஈழத் தமிழ் மக்கள் கொல்லப் பட்ட போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுத் தார் கலைஞர்.

இனி வருஷத்துக்கு நாலு படம் தான் தியேட்டர்ல ரிலீஸ்.. மீதி எல்லாம் OTT தான்..

cinemapettai.com g -ஸௌந்தர் : தமிழ் சினிமாவில் இனி வரும் காலங்களில்
வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதாகவும், மீதி உள்ள படங்கள் அனைத்துமே OTT நிறுவனங்களுக்கு விற்று விடுவதாகவும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.
OTTதளத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வெளியான திரைப்படம் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள். ஜோதிகா, பார்த்திபன் என பல நட்சத்திரங்கள் அந்த படத்தில் நடித்துள்ளனர். தற்போது வரை இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் அமேசான் நிறுவனத்தில் முதல் நாளே இந்த படத்திற்கு நல்ல லாபம் கிடைத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் இனி சிறு பட்ஜெட் படங்கள் அனைத்துமே OTT தளங்களுக்கு விற்கப் போவதாக தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளார்களாம்.

சிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சிவப்பு வட்டத்தில் உள்ளே இருப்பவர்தான் காடுவெட்டி குருவின் மகனை மோசமாக வெட்டிய கனல் என்பவர்.
தினகரன் : சென்னை: ஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை
திணிப்பை தடுக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி ஒளிபரப்புத் தளங்களில் ஒளிபரப்பாகும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் காட்டப்படுவதில்லை.  விளையாட்டுகள், வெகுமக்கள் ஊடகங்கள், பொதுவெளிகள், கடைகள் ஆகியவற்றில் மறைமுக விளம்பரங்கள் மூலமாக சிறுவர்கள் மீது புகையிலைப் பொருட்கள் திணிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு முடிவு கட்ட வேண்டும்.

பிஎம் கேர் கணக்குகளை வெளியிட முடியாது: பிரதமர் அலுவலகம்!

மின்னம்பலம் : பிஎம் கேர் என்ற பெயரில் பிரதமர் மோடியால், கொரோனா
நிதிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு பொது அமைப்பு அல்ல என்றும், அதன் கணக்கு வழக்குகளை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
The Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund என்ற நிதியமைப்பு கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி என்ற பொது அமைப்பு இருக்கையில் இது எதற்கு என்ற கேள்விகள் எழுந்தன. ஆனாலும் பிஎம் கேர்ஸ் அமைப்புக்கு நிதிகள் குவிந்தன.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், பிஎம் கேர் அமைப்புக்கு வந்துள்ள நிதி பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க பிரதமர் மோடி அலுவலகம் மறுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு 61 லட்சத்தை தாண்டியது; இறப்பு 3.70 லட்சம்

கொரோனாபாதிப்பு உலக அளவில் 61 லட்சத்தை தாண்டியது; இறப்பு 3.70 லட்சம் தினத்தந்தி :  உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரித்து உள்ளது. வாஷிங்டன் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரித்து உள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை 27,34,548 ஆக உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,70,870 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,16,820 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,557 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 300 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால் அங்கு வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 16 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அயோத்தி மண்ணுக்குள் தோண்ட தோண்ட வெளிவரும் புத்தர் சிலைகள் ..

அயோத்தியில் ராமர்  கோயில்ன்னு கூவாம இருந்திருக்கலம் 
பார்பர்  மசூதியையே பேசாம இடிக்காம விட்டிருக்கலாம் .
அது வெறும் இந்து முஸ்லிம் பிரச்சனை என்ற அளவில் மட்டும்தான் இருந்திருக்கும் .
இப்போது மண்ணுக்குள் இருந்து மீண்டுவரும் புத்தர் சிலைகள் வெறும் சிலைகள் அல்ல. அவை வரலாறுகள்!
 இதுகாறும் கட்டி எழுப்பிய இந்து மதத்தின் தொன்மை பற்றிய கட்டு கதைகளை உடைத்து நொறுக்கி கொண்டல்லவா இருக்கிறது
இதை ஆரிய பார்ப்பன ஆதிக்கவாதிகள் சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சுய சிந்தனை உள்ள பலரும் எதிர்பார்த்ததுதான்

Muthu Selvan : அயோத்தியில் புத்தர் படிமங்கள்
அயோத்தியில் வழக்கின் போது தோண்டிப் பார்த்து, இராமன் கோயிலோ இந்துக் கோயிலோ இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகக் கூறியது இராமன் கோயிலை அந்த இடத்தில் கட்டுவதற்கான சதி ஏற்பாடோ என்னும் அய்யம் வலுவாக எழுகிறது.
இன்று, இராமன் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக மண்ணைத் தோண்டபோது அடுத்தடுத்து புத்தர் படிமங்கள் கிடைத்துவருவதைப் பார்க்கும்போது.....

73 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் மட்டுமே ஆண்ட கலைஞர் நிர்மாணித்த நவீன தமிழகம்

சாய் லட்சுமிகாந்த் : ஒரு அரக்கனின் அசுரத்தனமான உழைப்பு🖤❤️
இந்த பிரம்மாண்டத் தொகுப்பு அசத்தல் ரகம்... தொகுத்தவருக்கு பாராட்டுக்கள்...
73 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சராக 20 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த தலைவர் கலைஞர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார்.
மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப் படுத்தினால் ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும்.t;
காற்று,
தண்ணீர்,
உணவு, #உடை,
உறைவிடம்,
மொழி,
மருத்துவம்,
கல்வி,
பாதுகாப்பு,
சாலைவசதி,
மின்சாரம்,
போக்குவரத்து,
உள்கட்டமைப்பு,
தொழிற்சாலை,
தொலைத்தொடர்பு. #தண்ணீர்/
Water 1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்.
2. காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர் கலைஞர்
3. 30க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியது கலைஞர்
4. இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்.
5. கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி, காவிரி - குண்டாறு நதி இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்
6. தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதி இணைப்பு திட்டம்
7. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்
8. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்
9. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்

மாதலா ரங்கா ராவ்.. காலமானார் ... ஆந்திரா ரெட் ஸ்டார் ..


Kampuli Ayubkhan : ஆந்திராவில் போய் நீங்கள் 'ரெட் ஸ்டார்' என்று ஒரு குழந்தையைக் கேட்டாலும் ,
"எவரு..? மாதலா ரங்காராவ்காரு...?" என்று திரும்பக் கேட்கும்.
ஆமாம், எழுபதுகளில் தொடங்கி
எண்பதாம் ஆண்டுகளில் தெலுகு சினிமாவில் என்டிஆர் மிளிர்ந்த காலங்களிலேயேபடத்துக்குப் படம் சிவப்புக்கொடியை ஏந்தி நடித்த 'சிவப்பு நட்சத்திரம்' மாதலா ரங்கா ராவ்.
யுவதரம் கதிலிந்தி - எர்ர மல்லிலு - மரோ குருஷேத்ரம் - விப்ளவ சங்கம் - மஹா பிரஸ்தானம் - பிரஜாசக்தி என்று
வரிசையாக சூப்பர் ஹிட் கொடுத்து, அத்தனை படங்களிலும் செங்கொடியை ஏந்தி - 'எர்ர சினிமா' (சிவப்பு சினிமா) என்று தனியே ஓர் அத்தியாயத்தையே தொடங்கி வைத்தவர் மாதலா.
அவரது 'விப்ளவ சங்கம்' சென்சாரால் தடை செய்யப்பட்டபோது, அதைக் கண்டித்து உரிமைக்குரல் எழுப்பி - சென்னை அண்ணா சாலையில் உண்ணாவிரதம் இருந்தார் மாதலா.
கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம்
அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியை தலையிடச் செய்து அப்படத்தை வெளியிட உதவினார்.

ஆரிய மாயை .. அவங்களுக்குத்தான் சங்கீதம் எழுத்து .... ..வரும்!

Shalin Maria Lawrence : முன்னாடி எல்லாம் netflix இருக்காது braodbaand
இன்டர்நெட் பலர் கிட்ட இருக்காது. நம்மள மாதிரி இணைய வசதி இருக்குறவங்க torrent போட்டு வித விதமா இங்கிலீஷ் படம் பாப்போம்.அதை பத்தி எழுதுறது ,பேசுறதுன்னு பெருசா சீன் போடுவோம்.இந்த உலகமே நம்மள அறிவாளி பிஸ்த்துன்னு நம்பும்.அப்படியே கெத்தா சுத்துவோம்... ஒரு போத...
திடீர்னு இணைய வசதி எல்லாருக்கும் கிடைக்குது... Netflix மாதிரி streaming சர்விஸ் எல்லாம் இந்தியாவுக்கு வருது .கொஞ்ச பேர் மட்டும் பாத்துட்டு இருந்த உலக படமெல்லாம் ஊரே பாக்குது. யாரெல்லாம் ஒன்னும் இல்லன்னு நெனச்சாங்களோ அவங்க எல்லாம் உலக படத்த பத்தி எல்லாம் விவாதிக்க ஆரம்பிக்கிறாங்க.அப்போ நமக்குள்ள ஒரு இனம் தெரியாத ஒரு வெறுப்பு வருது...எரிச்சல் ஆகுது...என்னடா நம்ம பேசுறத கேட்டவன் இப்போ இவன் பேசுறான்,அவன் பேசுறத கேக்க ஒரு நாலு பேரு. நமக்குள்ள பொங்கிட்டு வருது,நமக்கு இவ்வளவு நாள் கிடைச்ச அங்கீகாரம் எல்லாம்?இப்படி கண்டிப்பா பலருக்கு கண்டிப்பா தோனி இருக்கும்.
இப்படி ஒருத்தர் கிட்ட மட்டுமே இருக்குற வளங்கள் இன்னொருதருக்கும் கிடைப்பது தான் ஜனநாயகம்.நமக்கு கிடைச்ச வளம் இன்னொருதருக்கு கிடைக்க கூடாதுன்னு நெனைக்குறது பார்ப்பனியம்.
இந்த மாதிரி பல ஆண்டுகளாக ஒரு சமூகம் மட்டுமே வாய்ப்புகளையும் வளங்களையும் கைப்பற்றி வச்சுக்கிட்டு இருந்தபோது திடீர்னு ஜனநாயகம் வந்து எல்லோருக்கும் எல்லாம் கிடச்சு ,அவங்க முன்னேறி பேச எழுத ஆரம்பிச்சா இவங்களுக்கு வலிக்கும் தானே?எரிச்சல் வரும் தானே?
"இவ்ளோ நாள் நான்தான் அறிவாளின்னு ஊர் சொல்லிச்சே?!!

பெரியார் : தாயை காப்பாற்றுவதை போல நாம் திமுகவை காப்பாற்ற கடமை பட்டுள்ளோம்

சிவசங்கரன் சுந்தரராசன் :கலைஞர் குறித்தும் தி மு க குறித்தும் பெரியார் ! ; திராவிடர் இயக்க அரசியல் பிரிவான தி.மு.க குறித்து கலகக்காரர் தோழர் பெரியாரின் 1967 தொடங்கி 1974 முடிய பெரியாரின் மதிப்பீடுகள்:

*கருணாநிதி அவர்கள் இராசதந்திரம் மிக்கவர். இந்த நாடு சிக்கல் நிறைந்த நாடு. ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகியவற்றை பற்றிக் கவலைப்படாத மக்களுள்ள நாடு. இந்த நாட்டில் மிகச் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் மிக்க அறிவுத் திறன் காரணமாக தீர்த்து வருகிறார். - விடுதலை, 10.02.1971
*யார் ஆள்கிறார்கள் என்பதைவிட எப்படி ஆள்கிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, வகுப்புவாரி உரிமை ஆகிய எனது கொள்கைக்கு ஆதரவாகப் பகுத்தறிவுவாதிகளே (தி.மு.க) ஆட்சிக்கு வந்து, பதவிப் பிரமாணம் கூட இவர்கள் கடவுள் பேரால் செய்யாதது திருப்தி அளிக்கிறது. - விடுதலை, 15.09.1967
* ஜஸ்டிசு கட்சி கவிழ்ந்ததற்குக் காரணம் இன்றைய காங்கிரசார் போலவே தமிழர்கள், பார்ப்பன தாசர்கள் செய்த துரோகம் அல்லாமல் வேறு காரணம் ஒன்றுமில்லையே! இன்னும் சொல்கிறேன் கடுகளவு தமிழர் உணர்ச்சி பற்றுள்ள யாரும் இன்றைய (தி.மு.க) ஆட்சியை கவிழ்க்க நினைக்கவே மாட்டார்கள். - விடுதலை, 18.09.1967
*தாங்கள் பகுத்தறிவுவாதிகள்; கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்; தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதைத் தங்களின் செயல் மூலம் காட்டிக் கொண்டார்கள். எல்லா மந்திரிகளையும் தமிழர்களாக பார்த்துப் போட்டார்கள். உத்தியோகங்களைத் தமிழர்களுக்குக் கொடுத்தார்கள்.