திங்கள், 1 ஜூன், 2020

கிழக்கு போராளிகளின் 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர் .. .. மறைக்கப்பட்ட வரலாறு

முன்னரங்கு நிலைகளுக்கு கிழக்கு போராளிகள் அனுப்பப்பட்டு அநியாயமாக பலியிடப்பட்டது வடக்கு தளபதிகளால் கிழக்கு போராளிகள் புறக்கணிக்கபட்டது மட்டக்களப்பான் என...
Reginold  : ஜெயசிக்குறு என்று பெயரிடப்பட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தால்
தாண்டிக்குளம் படைமுகாம் மீதான தாக்குதலை கருணாவின் நேரடி
ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாக
1997 ஒக்டோபர் மாதத்தில் ஏ-9 நெடுஞ்சாலைக்குக் கிழக்குப் பக்கமாக மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியில் கரிப்பட்ட முறிப்பு என்னும் இடத்தை இலங்கை அரசபடையினர் கைப்பற்றினர். அம்முனையில் முன்னேறிய படையினருக்கு வினியோகத் தளமாகச் செயற்பட்ட கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் என்ற கிராமங்களில் அமைந்திருந்த கூட்டுப்படைத்தளம் மீது ஒக்டோபர் மாதத்தின் இறுதிப்பகுதியில் கருணா தலைமையிலான விடுதலைப்புலிகளின் கிழக்கு படையணி வலிந்த தாக்குதலொன்றைத் தொடுத்தனர். தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடம் இலங்கை அரசபடையினரின் முக்கியமான ஆயுத, வெடிபொருட் களஞ்சியமென்பதால் பல மோட்டார் பீரங்கிகளுட்பட நிறைய ஆயுத தளபாடங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். இத்தாக்குதலில் இரு T-55 இரக டாங்கிகள் புலிகளால் அழிக்கப்பட்டன.

 இத்தாக்குதலை களத்தில் நேரடியாக வழிநடத்திய கிழக்கு படையணிகளின் தளபதியான லெப்.கேணல் சந்திரகாந்தன் களத்திலேயே கொல்லப்பட்டார். கிழக்கு மாகாணத்திலிருந்து ஜெயசிக்குறுவை எதிர்கொள்ளும் சமருக்காக வன்னிக்கு வருகைதந்திருந்த அணியிலிருந்த சந்திரகாந்தன் 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்' என்று புலிகளால் கெளரவிக்கப்பட்டார் இவ்வாறாக கருணா தலைமையிலான புலிகளின் எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஸ்ரீலங்கா இராணுவதித்தினர் முதுகெலும்பு உடைபட்டு பின்வாங்கினார்கள்

புலிகளின் வெற்றிக்கு ஏறுமுகம் காண வைத்து சிங்கள இராணுத்தின் முதுகெலும்பை நொறுக்கிய பெருமை தளபதி கேணல் கருணா தலைமையிலான விடுதலை புலிகளின் போராளிகளையே சேரும் ஜெயசிக்குறு இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கிழக்கு போராளிகளின் வீரசாகசங்களை எழுதுவதென்றால் எழுதி கொண்டே போகலாம் நாங்கள் வன்னி களமுனையில் போராடிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ஒரு சில மனக்கசப்பான சம்பவங்களை குறிப்பிடுவது நல்லது என்று நினைக்கிறேன்

முன்னரங்கு நிலைகளுக்கு கிழக்கு போராளிகள் அனுப்பப்பட்டு அநியாயமாக பலியிடப்பட்டது வடக்கு தளபதிகளால் கிழக்கு போராளிகள் புறக்கணிக்கபட்டது மட்டக்களப்பான் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் எங்களை பார்த்தது இன்னும் ஒன்று ஸ்ரீலங்கா இராணுவத்தின் கைப்பேற்றப்பட்ட உடமைகள் கைப்பேற்றப்பட்ட உணவு பொருட்களை களத்தில் நின்ற கிழக்கு போராளிகள் பகிர்ந்து கொண்டார்கள்

இதை அறிந்த தமிழீழ நிதித்துறை பொறுப்பாளர் கிழக்கு படையணி தளபதிகளில் ஒருவரான அக்கினோவிடம் மட்டக்களப்பான் கள்ளன் கருணா இருக்கின்றன தையிரியம் தான் உங்களுக்கு உங்கள் ஆட்டத்தை ஒருநாள் அடக்க வேண்டும் என்று கடுமையான தொனியில் இருந்தது தமிழேந்தியின் கருத்து இது எப்படியோ கருணா அம்மானின் காதுகளுக்கு சென்றது தமிழேந்தியுடன் முரண்பட்ட கருணா நீங்கள் எப்படி எங்கள் போராளிகளை கள்வர் என்று சொல்வீர்கள் என்று கண்டித்தார் சொல்ல போனால் விடுதலை புலிகள் அமைப்புக்குள் பிரதேசவாதமே ஓங்கியிருந்தது என்றே சொல்லலாம் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் கண்களுக்கு தெரியாது இதுகும் கடந்து போகட்டும்
வெற்றி விரர்களாக கிழக்கு நோக்கிய பயணம் பாரிய படையணிகளுடன் வந்த நாங்கள் ஒரு சிறிய படையணியாக மீண்டும் எங்கள் சொந்த ஊரான வீரம் விளைநிலமாம் மட்டக்களப்பு நோக்கிய பயணம் ஓய்வு இல்லாமல் களமுனையில் நீண்டு துவண்டு போன எங்களுக்கு எங்களுடன் வந்த போராளிகளின் இழப்புகள் ஒரு புறம் மனதளவில் உளரீதியாக நலிவடைந்த நிலையில் காணப்பட்ட எங்களுக்கு காடுகள் வழியான பயணம் எங்களுக்கு புத்துணர்ச்சி தந்தது சொந்த ஊருக்கு வந்த நாங்கள் எங்கள் போராளிகளின் இழப்புகள் எங்களை வாட்டி வதைத்து என்றே சொல்லலாம்
அந்நடவடிக்கைப் படையினர் மீது புலிகளால் நடத்தப்பட்ட பெரிய வலிந்த தாக்குதல் இதுவாகும் 10.06.1997 அன்று தாண்டிக்குளம் இராணுவக் கூட்டுப்படைத்தளம் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஓர் இரவும் ஒரு பகலும் நடைபெற்ற தாக்குதலில் முகாம் வெற்றிகொள்ளப்பட்டு மறு இரவு புலியணிகள் பின்வாங்கின இத்தாக்குதலின்போது கரும்புலி அணி ஒன்றும் பங்குபற்றியது அடுத்ததாக
வழிகாட்டலில் மேற்கொண்டது
மேற்கொள்ள பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள முடியாமல் புலிகள் தினறிக்கொண்டிருந்த நேரம் அது அந்த நேரத்தில் கருணா தலைமையிலான கிழக்கு படையணிகளுக்கு நேரடியாக தலைவர் பிரபாகரனிடம் இருந்து அழைப்பு வருகிறது உடனடியாக 3000 போராளிகளுடன் வன்னி களமுனைக்கு வருமாறு கருணா தலைமையில் 3000த்திற்கும் மேற்பட்ட போராளிகள் பெரும் படையணியாக கொழுப்பு பிரதான வீதியை கடந்து காடுகள் வழியாக வன்னி களமுனையை நோக்கிய பயணம் மிக நீண்ட நெடிய பயணம் என்று கூட சொல்லலாம் ஒருவழியாக வன்னிக்கு வந்த எங்களை அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது நாங்களும் ஸ்ரீலங்கா இராணுவத்தோடு சண்டை பிடிக்க ஆவலாக இருந்தோம் மறு நாள் காலை கேணல் கருணா அம்மான் தலைமையில் ஜெயசிக்குறு இராணுவத்துக்கு எதிராக முதல் தாக்குதல் திட்டம் திட்டப்பட்டு கிழக்கு படையணிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் ஜீவன் தலைமையில் ஒரு அணி
விடுதலைப் புலிகள் அமைப்பின் பல வரலாற்று வீரச்சமர்களுக்கும் சரித்திர
வெற்றிகளுக்கும் பின்னால் ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது வரலாற்றின்
கதாநாயகர்கள் கிழக்குப் போராளிகளே விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒவ்வொரு
வெற்றிக்குப் பின்னாலும் இருப்பவர்கள் கிழக்குப் பொராளிகளே சரித்தர
முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை தேடிந்த பெருமை கிழக்குப் போராளிகளையே
சேரும் புலிகள் அமைப்பு வலுவான ஒரு அமைப்பாக இருப்பதற்கு தூண்களாக
இருந்தவர்கள் கிழக்குப் போராளிகளே
கிழக்குப் போராளிகள் வீர வரலாறு படைத்த சரித்திரங்களை எழுதுவதென்றால்
எழுதிக் கொண்டே போகலாம் வரலாற்று வெற்றிகளைப் படைத்த கிழக்கு மண்
ஈன்றெடுத்த போராளிகளின் வரலாறுகள் சாதனைகள் மறைக்கப்படுவது ஒரு
புறமிருக்க தமிழீழமே எமது மூச்சு என்று தமது சொந்தங்கள் பந்தங்கள்
சொத்து சுகங்களை இழந்து போராடப் புறப்பட்ட கிழக்குப் பொராளிகளை வன்னிப்
புலிகள் கொன்றொழித்த வரலாறுகளும் இருக்கின்றன... தொடரும் By . Reginold

கருத்துகள் இல்லை: