திங்கள், 10 பிப்ரவரி, 2020
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக்கும் மக்களாட்சி!
![]() |
| ராஜன் குறை |
ராஜன் குறை- மின்னம்பலம் :
எந்த
ஒரு நாட்டிலும் சட்டம் ஒழுங்கையோ, பொருள் உற்பத்தி மற்றும் சமூக வாழ்வையோ
ராணுவத்தாலோ, போலீசாலோ மட்டுமே உறுதி செய்துவிட முடியாது. மக்கள் அவர்களாக
விரும்பி சட்டத்துக்குக் கூடியவரை கட்டுப்பட்டு நடந்தால்தான் தேசம் என்ற
கருத்தாக்கம் நிலைபெறும்; சமூக அமைதியும் வளர்ச்சியும் சாத்தியமாகும்.
மக்களின் ஒத்துழைப்புக்கு அவர்கள் மக்களாட்சி நடைமுறைகளை, அரசின்
செயல்பாட்டை, நீதியின் பாரபட்சமற்ற தன்மையை நம்புவது அவசியம். அரசும்,
மக்களாட்சி நடைமுறைகளும் அந்த நம்பகத்தன்மையை இழந்தால் நாடெங்கும்
குற்றச்செயல்களும் கலகங்களும் பெருகும். அடக்குமுறையே ஆட்சிமுறையாகும்.
அதனால், சமூக வாழ்வும் வளர்ச்சியும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். தேசம்
சீரழியும்.இந்தியா இத்தகைய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டிய அரசு நிறுவனங்கள், அமைப்புகள், நீதிமன்றம் ஆகிய அனைத்துமே சந்தேகத்துக்கு உள்ளாகின்றன. வெளிப்படையாகவே மக்கள் அவர்கள் ஐயங்களை உரத்துப் பேசுகிறார்கள். ஊடகங்கள் விவாதிக்கின்றன. இந்த நிலை மெள்ள, மெள்ள கட்டுக்குமீறி சென்று கொண்டுள்ளது. பொதுவான இந்தப் பெருகும் அவநம்பிக்கை சூழலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் என்ற தொழில்நுட்பம் சார்ந்த உபகரணம் சிக்கலை தீவிரப்படுத்துகிறது என்றால் மிகையாகாது.
இன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பு!
மின்னம்பலம் :
அரசாங்க
வேலைகளுக்கான பதவி உயர்வுகளுக்கான இட ஒதுக்கீடு ஓர் அடிப்படை உரிமை அல்ல
என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு இப்போது
நாடு முழுவதும் விவாதமாகியுள்ளது.இட ஒதுக்கீட்டை வழங்க மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும், பொது சேவையில் சில சமூகங்களின் பிரதிநிதித்துவத்தின் தரவு இல்லாமல் மாநிலங்கள் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்ய நிர்பந்திக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
உத்தரகாண்ட் அரசாங்கத்தின் பொதுப்பணித் துறையில் 2012ஆம் ஆண்டு உதவி பொறியாளர் (சிவில்) பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் எஸ்சி / எஸ்டி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
தெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக்கிய ராம் மோகன் ராவ் தீவிரம்!
மின்னம்பலம் :
ஜெயலலிதா
முதல்வராக இருந்தபோது செயலாளராகவும், அரசின் தலைமைச் செயலாளராகவும்
இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராம் மோகன் ராவ் இப்போது வெளிப்படையான அரசியல்
நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்.ஜெயலலிதா இறந்த சில நாட்களிலேயே சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் ஆகியோரது வீடுகளைக் குறிவைத்து மத்திய அரசின் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. ‘அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?’ என்று கேட்ட ராம் மோகன் ராவ் பின்னர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு பின் ஓய்வு பெற்றார்.
போலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. விளையாட்டு பிரிவு சான்றிதழ் சரி இல்லாததால்
தினத்தந்தி : விளையாட்டு பிரிவு சான்றிதழ் சரி இல்லாததால் போலீஸ்
வேலைக்கு தேர்வான 800 பேரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகுதி
நீக்கம் செய்து உள்ளது.
சென்னை,
போலீஸ்துறை, தீயணைப்புத்துறை,
சிறைத்துறை ஆகியவற்றுக்கு காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், ஜெயில்
வார்டர்கள் என 8 ஆயிரத்து 888 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிப்பு
வெளியிட்டு இருந்தது. இதற்காக ஆகஸ்டு 25-ந் தேதியன்று எழுத்துத்தேர்வு
நடந்தது.
3 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். அதில்
வெற்றி பெற்றவர்களுக்கு 15 மையங்களில் உடல் தகுதித்தேர்வு நடந்தது.
இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் விளையாட்டு
பிரிவினருக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. விளையாட்டு பிரிவு
இட ஒதுக்கீட்டின்மூலம் தேர்வான சுமார் 800 பேரை, சான்றிதழ்கள் சரியில்லை
என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகுதி நீக்கம் செய்து
அறிவித்தது.ஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளலாரை வெறும் சடங்கு என்னும் சிமிழுக்குள் அடைக்காதீர்!

Asiriyar K Veeramani : ஆரிய சனாதனங்களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிய வடலூர் வள்ளலாரை வெறும் சடங்கு என்னும் சிமிழுக்குள் அடைக்காதீர்!
இன்று வடலூர் இராமலிங்க அடிகளார் நாள்.
வடலூரில் வாழ்ந்து இறுதிக் காலத்தில் ஜாதி, மதம், மூடச் சடங்குகள் - இவைகளை வெறுத்து - தெளிவடைந்த நிலையில், ஆரியப் பண்பாட்டை எதிர்த்து, அதன் அடிக்கட்டுமானம் எத்தகைய அறிவுக்கு ஒவ்வாத - மக்களை மதம், ஜாதி என்று பிளவுபடுத்தும் ஹிந்து மதம் - சனாதனம், வேத மதம் என்று பேதம் பரப்பிய நிலைகளைக் கண்டித்து ஆறாம் திருமுறை என்ற அருட்பாவின் பகுதியில் தாம் உணர்ந்தவைகளை ஓதினார்.
அதன் காரணமாகவே வடலூரார் வள்ளலார் - இறுதி முடிவு மர்மமானதாகவே ஆரியச் சூழ்ச்சியினால் அமைந்தது.
சோதியில் கலந்தார் என்பது உண்மையா?
சோதியில் கலந்தார் என்று கூறிமுடித்து, அவரை வெறும் சடங்கு, ஆச்சார நிகழ்வுகளுக்கு உரியவராகவே ஆக்கி விட்டனர்.
ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் .. முதல்வர் எடப்பாடி சந்திப்பு ... என்னதான் நடக்கிறது?
Aburayan Dmk :
முந்தாநாள் செய்திசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்தாண்டு அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு கொள்கை ரீதியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ₹50 ஆயிரம் கோடி முதலீட்டில் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி தலைமையில் நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணை தலைவர் ராபின் முகோபத்யாய் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இன்றைய செய்தி
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி தராது. மேலும் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் - முதல்வர் பழனிசாமி
படம் : ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணை தலைவர் ராபின் முகோபத்யாய் ஆகியோருடன் எடப்பாடி

வயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் செய்யலாம்.. தப்பில்லை.. பாக். கோர்ட் ஷாக் தீர்ப்பு
https://www.albawaba.com/node/new-pakistan-law-allows-men-marry-underage-girls-sparks-outrage By Hemavandhana - tamil.oneindia.com :
இஸ்லாமாபாத்: "பொண்ணு வயசுக்கு வந்தாச்சு இல்லே.. அப்ப கடத்திட்டு போய்
தாலி கட்டறது ஒன்னும் தப்பு இல்லை" என்று பாகிஸ்தான் கோர்ட்
தீர்ப்பு சொல்லி உள்ளது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது..
தீர்ப்பு சொல்லி உள்ளது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது..
14 வயது
சிறுமியின் கட்டாய திருமணத்தை அங்கீகரித்து பாகிஸ்தான் கோர்ட் இவ்வாறு
தீர்ப்பு சொல்லி உள்ளது!
14 வயது சிறுமி.. கிறிஸ்துவ மதத்தை
சேர்ந்தவர்.. ஹுமா என்பது இந்த பெண்ணின் பெயர்!
கடந்த வருடம் அக்டோபா் மாதம் இந்த பெண்ணை சிலர் கடத்தி விட்டதாக, அவரது
பெற்றோர் யூனிஸ் - நகீனா மஸை தம்பதி குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும்,
ஹுமாவை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதுடன், அப்துல் ஜாபா் என்பவருக்கு
வலுக்கட்டாயமாக மகளை கல்யாணம் செய்து வைத்ததாகவும் பெற்றோர் புகார்
தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடா்பாக சிந்து ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.. அந்த வழக்கை
கோர்ட் விசாரித்தது.. அப்போது நீதிபதிகள் சொன்னதாவது, "ஹுமாவுக்கு திருமண
வயது வரவில்லைதான்.. ஆனால் அவர் வயசுக்கு வந்தாச்சு அல்லவா?
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020
சங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்துத்வா பிரசாரகர் ரஜினி

சாவித்திரி கண்ணன் :
எல்லோரும்
நினைப்பது போல பாஜகவும்,இந்துத்துவ
சக்திகளும் ரஜினியை பின்னிருந்து இயக்குவது என்பது ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மையப்படுத்தி மட்டுமல்ல!
உண்மையில் ரஜினி அரசியல் மைய நீரோட்டத்தில் நேரடியாக இல்லாவிட்டாலும் கூட மறைமுக இந்துத்துவ ஆதரவாளராக இருபதாண்டுகளுக்கும் மேலாக களத்தில் இயங்கி கொண்டு தான் உள்ளார்!
அவரது பாபா படமே பகிரங்கமாக இந்துத்துவ அரசியலை ஆதரித்து எடுக்கப்பட்ட படம் தான்!
அதுவும் எந்த காலகட்டத்தில் அந்தப் படம் வந்தது என்பதும் கவனத்திற்குரியது. மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு ஆண்டு கொண்டிந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது....!
தீடிரென்று ஒரு நாள் ரஜினி கலைஞரை வீடு தேடிச் சென்று சந்தித்தார். எதற்காக அவர் கலைஞரை சந்தித்தார் என்று பத்திரிகையாளர்கள் பலவாறாக யூகித்தும் சரியான விடை கிடைக்கவில்லை.
ஆனால்,ஒருசில நாட்களில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞரே அதனைச் சொன்னார்.
காவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலம் - சந்தேகம் எழுப்பும் செயற்பாட்டாளர்கள்
மு. நியாஸ் அகமது - பிபிசி தமிழ் :
சர்ச்சை மிகுந்த திட்டமாக அறியப்பட்ட
ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் காவிரி டெல்டா பகுதியில்
செயல்படுத்தப்படமாட்டாது என்றும் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்
மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சேலத்தில்
அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில்
கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த அறிவிப்புக்கு தாங்கள்தான் காரணம்
எனப் பல அமைப்புகள் உரிமை கோரியும் உள்ளன. ஆனால், அதே நேரம் இந்த அறிவிப்பு
குறித்து சந்தேகங்களையும் எழுப்புகின்றனர் செயற்பாட்டாளர்கள்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், "இந்த அறிவிப்புக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டால் மகிழ்ச்சிதான். ஆனால், எங்களுக்கு சில சந்தேகங்களும் இருக்கிறது," என்கிறார். சந்தேகம் மற்றும் அச்சம்.. அவர், " கடந்தாண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றார் அல்லவா? அப்போது ஒரு பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. அதன்படி அவர்கள் 50 ஆயிரம் கோடி வரை இங்கு முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன்படி அவர்கள் கடலூர் மாவட்டத்தில் ஒரு பெட்ரோல் கெமிக்கல் வளாகத்தை அமைக்கப் போகிறார்கள். இதுதான் எங்களுக்கு சந்தேகத்தையும், அச்சத்தையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது," என்கிறார்.

அதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர் எடப்பாடி சந்திப்பின் ரகசியம்?
ரஜினி ஏப்ரலில் புதிய கட்சி- மக்களை சந்திக்க ரஜினி தயார் ... இந்த முறை நிச்சயமாம்!
மாலைமலர் :
வருகிற ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியை
தொடங்கி பொதுமக்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த தயார் ஆகிறார். 8 ஊர்களில்
மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் வருகை யை அறிவித்தார்.தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன.
ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 ஆண்டுகள் முழுமையாக கடந்த நிலையில் இன்னும் கட்சி அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் இந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளில் பரபரப்புகளை ஏற்படுத்தியே வருகிறார்.
A.R. முருகதாஸை கிழித்த T.R! வீடியோ
மின்னம்பலம் :
ரஜினிகாந்த்
நடித்து வெளிவந்த தர்பார் திரைப்படத்தால் ஏற்பட்ட இழப்பிற்கு, நஷ்ட ஈடு
கேட்டு விநியோகஸ்தர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தலைவரான டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று(பிப்ரவரி 9) மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் உரையாற்றும் போது, “லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டத்தை சந்தித்ததாக விநியோகஸ்தர்கள் பல்வேறு சங்கங்களிலும் புகார் அளித்து வருகின்றனர். அதே புகாரை எங்கள் சங்கத்திலும் அளித்திருந்தனர். விநியோகஸ்தர்கள் விளக்கில் விட்டில் பூச்சி விழுவதை போல் விழுந்துவிட்டார்கள். தர்பார் படத்தை அதிக விலைக்கு வாங்கி இருக்கக் கூடாது.

சீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ்சை பெருவுடையார் கோயில் தரிசனம்

மாலைமலர்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வழிபட்டதற்கு நடிகை விஜயலட்சுமி கண்டனம்
தெரிவித்துள்ளார்.
சென்னை:நாம் தமிழர் கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான புகாரை அளித்தவர் ‘பிரண்ட்ஸ்’ பட நடிகை விஜயலட்சுமி.
தன்னுடன் பழகிவிட்டு ஏமாற்றியதாக விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்கும் போடப்பட்டது.
இந்த நிலையில் அவர் சிமானை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடவுள்களை விமர்சனம் செய்துவிட்டு இப்போது பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று சீமான் வழிபட்டது வடிவேலு காமெடியை விட பெரிய காமெடி என்று கூறியுள்ளார்.
விஜயலட்சுமி வீடியோவில் பேசி இருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அவருக்கு லிங்கத்தின் முன்னால் மரியாதை செய்வது போன்ற வீடியோவை நான் பார்த்தேன். இதைவிட அசிங்கம் வேறு எதுவும் இருக்க முடியாது.
டெல்லி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி? . தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? அதிர்ச்சி அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால்!
tamil.oneindia.com : டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் மொத்த சதவிகிதம் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் மொத்த சதவிகிதம் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது என்று டெல்லி தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.வரும் 11ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் மொத்த சதவிகிதம் குறித்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலைதான் அறிவிக்கப்பட்டது. இந்த தாமதம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், எனக்கு பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஏன் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
தேர்தல் முடிந்து பல மணி நேரம் ஆகிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். இவரின் இந்த டிவிட் டெல்லி தேர்தல் களத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரின் கருத்துக்கு பின்பே டெல்லி தேர்தல் ஆணையம் இறுதி வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டது.

விப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்ஜித்த மாநிலங்களவை உறுப்பினர்

BBC: விப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்ஜித்த மாநிலங்களவை உறுப்பினர் – யார் இவர்? பேசியவை என்ன? – 5 தகவல்கள்">விப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்ஜித்த மாநிலங்களவை உறுப்பினர் – யார் இவர்? பேசியவை என்ன? – 5 தகவல்கள்
கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை விப்லவ் தாக்கூராகதான் இருக்கும்.சரி யார் இந்த விப்லவ்?விப்லவ் தாக்கூர் – 76 வயதான இந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். 1943 அக்டோபர் மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் பிறந்தார். அரசியலில் முதுகலை வரை படித்துள்ளார். இவரது பெற்றோர் சுதந்திரப் போராட்ட வீரர்கள்.
ரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகேடு: 14 தமிழக போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தினத்தந்தி : தமிழக காவல் துறைக்கு ரூ.84 கோடிக்கு வாக்கி-டாக்கி
உள்ளிட்ட கருவிகள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக 14 போலீஸ்
அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சென்னை,
2017-18-ம் ஆண்டுக் கான தமிழக அரசின் பட்ஜெட்டில் போலீஸ்துறையை நவீனமயமாக்க ரூ.47 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த
நிதி மூலம் தமிழக காவல்துறைக்கு 10 ஆயிரம் ‘வாக்கி-டாக்கி’ உள்ளிட்ட
கருவிகள் வாங்குவதற்கு போலீஸ்துறையில் இயங்கும் தொழில்நுட்ப பிரிவு முடிவு
செய்தது.ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மாறாக ரூ.83 கோடியே 45 லட்சம் ‘டெண்டர்’ ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், 10 ஆயிரம் கருவிகளுக்கு பதில் 4 ஆயிரம் கருவிகள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூறினார்களாம்
tamil.oneindia.com : சென்னை: பாஜகவில் இணைய தம்மிடம் பேசினார்கள்.. நிறைய செய்வதாகவும்
வாக்குறுதி அளித்தனர் என இயக்குநர் பாரதிராஜா பரபரப்பு தகவல்களை
வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு பல்வேறு பிரபலங்களை வளைத்துப் போட்டுக்
கொண்டிருக்கிறது.
திரைத்துறை பிரபலங்களை இழுப்பதை தொடர் நடவடிக்கையாக பாஜக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாரதிராஜா கூறியதாவது: தமிழகத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆனால் கர்நாடகா, கேரளாவில் அந்த மண்ணின் மக்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் நிச்சயம் ஜெயித்துவிடலாம்.;
கை நீட்ட சொல்லும் அரசியல் ஆனால் தமிழர்கள் ஒன்று சேரும் போது யார் தலைவர் என நினைக்கிறார்கள்.. அதேபோல் எல்லோரும் முன்னால் நிற்க வேண்டும் என விரும்புகின்றனர்.
பாதரசம் போல் இருக்கும் தமிழர்களை ஒன்று சேர்ப்பதும் கஷ்டமான ஒன்று. நான் இதுவரை அரசியல் கட்சி தொடங்கலாம் என நினைத்தது இல்லை. ஏனெனில் அரசியல் என்றாலே கை நீட்டத்தான் வேண்டும். அதிகாரம், அரசியல் இதுவரை நல்ல கலைஞனாக இருந்துவிட்டேன். போகும் போது நல்ல கலைஞன் போகிறான் என சொல்ல வேண்டும். கரப்டெட் போகிறான் என சொல்லக் கூடாது. அதிகாரங்கள் நம்மை அச்சுறுத்தும் போது நமக்கு இயல்பாகவே கோபம் வரும்.. அதனால்தா ஏன் அந்த அதிகாரத்தைக் கையில் எடுக்கக் கூடாது என சிந்திக்கிறார்கள்.

கொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழப்பு
`ராம் பிரசாத்
- விகடன் : லீ... நீங்கள்தான் எங்கள் ஹீரோ!’ -கொரோனா வைரஸைக் கண்டறிந்த
சீன மருத்துவருக்கு நேர்ந்த கதி
கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை முதலில் கண்டறிந்த சீன மருத்துவர், நோயின் தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் (Li Wenliang) கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார். சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் லீ வெண்லியாங் பணியாற்றிவந்துள்ளார். அவரிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், தீராத காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடல் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முதலில், இது கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது அவருக்குத் தெரியவில்லை. புதிய வகையான காய்ச்சல் என்பதை மட்டும் உறுதிசெய்துகொண்டார்.
2003-ம் ஆண்டு, உலக நாடுகளை அச்சுறுத்திய சார்ஸ் (SARS) வைரஸ் போன்றது என நினைத்துள்ளார். இதுதொடர்பாக, அவரது நட்பு வட்டத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு, டிசம்பர் 30-ம் தேதி WECHAT மூலம் இதுகுறித்த தகவல்களை அனுப்பியுள்ளார். நோயாளிகளைக் கையாளும்போது பாதுகாப்புக்காக மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள் என நண்பர்களை அறிவுறுத்தியுள்ளார்.

‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘.. ரஜினி அண்டு குருமூர்த்தி கேங் பின்னணி?
- ஜூனியர் விகடன் : ‘‘ஏன் இந்தத் திடீர் ரெய்டு?’’‘‘ரஜினிதான் காரணம் என்கின்றனர். `தர்பார்’ படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சில விநியோகஸ்தர்கள் தரப்பில் போர்க்கொடி உயர்த்தப்பட்டது. ரஜினியை நேரில் சந்தித்து நஷ்டஈடு பெறவும் முடிவெடுக்கப்பட்டது. மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த விநியோகஸ்தர்களைத் தூண்டிவிட்டதே, அவர்களுக்கு ஃபைனான்ஸ் செய்த அன்புச்செழியன்தான் என்று கூறப்படுகிறது.’’
‘‘ஓஹோ...’’
‘‘இதுகுறித்து பிரபல ஆடிட்டரிடம் ரஜினி விவாதித்ததாகவும் கூறப்படு கிறது.
ரஜினிக்குத் தெம்பூட்டிய அந்த ஆடிட்டர், டெல்லிக்கும் தகவலை பாஸ்
செய்துவிட்டாராம். இதன் பிறகே ரஜினியைச் சீண்டிய அன்புமீது வருமானவரித்
துறை பாய்ந்ததாம். சமீபத்தில் ரஜினியின் பெரியார் பற்றிய பேச்சுக்கு
ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தனர். `அப்படிப் பேசக் கூடாது’ என்று அவர்களுக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம்.’’
ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தனர். `அப்படிப் பேசக் கூடாது’ என்று அவர்களுக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம்.’’
சனி, 8 பிப்ரவரி, 2020
டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவு ... உங்களுக்கு மனதை உறுத்தி இருக்க வேண்டும்.

சிவசங்கர் எஸ்.எஸ் :
மாண்புமிகு அமைச்சர் (டாக்டர்) விஜயபாஸ்கர்,உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இந்நேரம் பதவி விலகி இருப்பீர்கள். ஆனால் வாய்ப்பே இல்லை.
டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவு உங்களுக்கு மனதை உறுத்தி இருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி வகையறாவான உங்களுக்கு அதெல்லாம் உறுத்தவே உறுத்தாது.
நாடு எக்கேடு கெட்டால்
என்ன, நாட்டு மக்கள் எப்படி சீரழிந்தால் என்ன, என் கல்லா தான் முக்கியம் என
ஆட்சியை நடத்தும் கல்லாபெட்டி பழனிசாமியின் கம்பெனி தானே நீங்கள்...
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, டாக்டர் லட்சுமி நரசிம்மன் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் வழி நடத்தினார். அதற்கு அவரைப் பழி வாங்கினீர்கள். ராமநாதபுரத்திற்கு மாற்றல் செய்தீர்கள். அவர் அசரவில்லை. தனக்காக கவலைப்படவில்லை. தன்னோடு போராடியவர்களுக்கும் மாறுதல் வந்தது தான் அவருக்கு வருத்தம் தந்தது.
சங்கத்து நிர்வாகிகள் மாறுதல் செய்யப்படுவது அரசியல் வழக்கம் என்பது அவரும் அறிவார். ஆனால் அதைத் தாண்டி 200க்கு மேற்பட்டோர் மாறுதல் செய்யப்பட்டது தான் அவருக்கு மன அழுத்தம் வர காரணம். தன்னால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்களோ என்ற வருத்தம் தான் அது.

காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
தினகரன் :
சென்னை: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து
அளிக்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து
செய்தபின்னர், காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவர்கள், பிரிவினைவாத
தலைவா்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர்
ஃபரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தற்போது முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி
ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கு
எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளனர். இந்த
நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை அடக்குமுறை சட்டமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல்- எந்தக் கேள்வியும் கேட்காமல் முன்னாள் முதல்வர்களையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பது, ஜனநாயகத்திற்கு கைவிலங்கும் கால்விலங்கும் போடும் கொடுமையான நிகழ்வு ஆகும்.

சினிமா வாய்ப்புக்காக - லீக்கானது ரகசிய ஆடியோ!
வெப்துனியா : பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்
பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து
தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன்
கூறியிருந்தார். தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக
சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சனம்
ஷெட்டி.
இதையடுத்து பேட்டி ஒன்றில் இது குறித்து
கூறிய தர்ஷன்..... " ஆம் எங்கள் இருவரும் நிச்சயம் நடந்தது உண்மை தான்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என
முடிவெடுத்திருந்தேன். ஆனால், நான் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது பிகினி
உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.
2 கோடியை தாண்டிய கையெழுத்து: ஸ்டாலின்
மின்னம்பலம் : சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டோர் குறித்த தகவலை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கியது. சிஏஏவின் பாதிப்புகளை விளக்கி ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் கையெழுத்து பெறப்பட்டு வந்தது. இந்த கையெழுத்துக்கள் அனைத்தும் திமுக கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

7 பேரும் விரைவில் விடுதலை! மத்திய அரசிடம் ஆலோசிக்கும் கவர்னர் மாளிகை!
nakkheeran.in - இரா. இளையசெல்வன் :
சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி
உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் சுதந்திரமாக முடிவு
செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்
செய்திருப்பதால் அவர்களின் விடுதலையில் வெளிச்சம் உருவாகியிருக்கிறது.
மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கும் நிலையில் விடுதலை
விவகாரத்தில் முக்கிய ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார் தமிழக ஆளுநர்
பன்வாரிலால் புரோஹித்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)