tamil.oneindia.com - NeelakandanS :
சென்னை:
நாடு முழுவதும் கடும் கோடை வெயில் வாட்டும் நிலையில், தமிழகத்தின் தலைநகர்
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது மக்களை கலங்க
வைத்துள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக பொய்த்த மழையின் காரணமாக, நடப்பாண்டில் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் என்றில்லாமல் சென்னை சுற்றுவட்டார பகுதிகளிலும் இதே நிலை தான். இதுவரை குடிநீர் தட்டுப்பாடு இல்லை என கூறிய சென்னை புறநகர் பகுதிகளில் கூட, தற்போது சிறிது சிறிதாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட துவங்கியுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள மறைமலைநகரில் நீரைப் பெற 900 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டியுள்ளது என தொழிலாளர்கள் கூறியுள்ளனர். புறநகர் பகுதியிலேயே இந்த நிலை என்றால் சென்னை நகரப் பகுதியை பற்றி சொல்லவா வேண்டும் நகரின் பல முக்கிய பகுதிகளில் நீர்மட்டம் சுமார் 800 அடி ஆழம் வரை கீழிறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.




















