மின்னம்பலம் :
தேர்தல்
நடத்தை விதிகளை மீறியதற்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு உத்தரப்
பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர்
மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை ஏப்ரல் 16ஆம்
தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. யோகி ஆதித்யநாத்துக்கு 72 மணி
நேரமும், மாயாவதிக்கு 48 மணி நேரமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முறையற்ற பிரச்சாரத்தால் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இருவரது சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக ஏப்ரல் 11ஆம் தேதியன்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், இஸ்லாமியர்களால் மிகவும் மதிக்கப்படும் அலிக்கும், இந்துக் கடவுளான ஹனுமனுக்கும் நடைபெறும் போட்டிதான் மக்களவைத் தேர்தல் என்று யோகி ஆதித்யநாத் பேசினார். ஹனுமன் மீது பாஜகவுக்கு நம்பிக்கையிருப்பதால் தேர்தலில் வெற்றிபெறுவோம் எனவும் யோகி ஆதித்யநாத் பேசினார். இதைக் காரணமாக காட்டி தேர்தல் ஆணையம் அவர் பரப்புரை நடத்த தடை விதித்துள்ளது.
தேர்தல்
நடத்தை விதிகளை மீறியதற்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு உத்தரப்
பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர்
மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை ஏப்ரல் 16ஆம்
தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. யோகி ஆதித்யநாத்துக்கு 72 மணி
நேரமும், மாயாவதிக்கு 48 மணி நேரமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.முறையற்ற பிரச்சாரத்தால் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.