ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

12 நாளாக போராட்டம் ..தமிழ்நாடு பயோமெடிக்கல் வேஸ்ட் ஃபேக்டரி.. தோல்வியாதி குழந்தைகள்.. கே.கே, புதூரில்

சாதிக் : தேர்தல் பரப்புரையில் மூழ்கிக் கிடக்கும் தமிழகமே ஒரு நிமிடம்!
இதோ சாவின் மடியில் ஓர் கிராமம்...
எதிர்காலத்தை முழுவதுமாய் தொலைத்து நிற்கிற குழந்தைகளை பாரீர்..
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகில் இருக்கிற கேகே புதூரில் பெண்கள் இணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 12 நாட்களைக் கடந்த பின்பும் அந்தப் போராட்டம் யாராலும் கண்டு கொள்ளப்படவில்லை.
போராட்ட நோக்கம் தங்களுக்கு கேன்சரையும், தோல் நோயையும், மலட்டுத் தன்மையையும் தரும் bio medical waste எரிப்பு ஆலையை இழுத்து மூட வேண்டும் என்பதுதான்.
ஓட்டுக்காக தமிழகமெங்கும் தெருத்தெருவாக அலையும் நம் அரசியல்வாதிகள் யாரும் அந்த கிராமத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் அடக்குமுறையை தாண்டி தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது...
அந்த ஆலை ஏற்படுத்தும் கொடூரத்தின் சாட்சியாய் ஓர் இரண்டு வயது குழந்தையை அக்கிராம மக்கள் காட்டுகிறார்கள்.
குழந்தையின் உடல் முழுக்க தோல் உரிந்து பரிதாப நிலையில் தவிக்கிறது
அந்த குழந்தை."காலேஜ் கட்டப் போறோம் ன்னு சொல்லி ஏமாத்தி எங்க நிலத்தை பிடுங்கி இப்படி எங்கள் அழிக்கிறாங்களே"என கதறுகிறார் அக்குழந்தையின் தாத்தா..
ஊரில் உள்ள வீடுகள் தோறும் கேன்சர் நோயாளிகள் இருக்கிறார்கள்..
எனவே தங்கள் நிலத்தை மீட்க,பெரு நோய்களிடம் இருந்து தன் எதிர்கால தலைமுறையை காக்க... பெண்கள் களமிறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்... இந்த மகத்தான போராட்டத்தில் அவர்களோடு நாமும் இருப்போம்!!!

கருத்துகள் இல்லை: