புதன், 8 ஆகஸ்ட், 2018

கண்ணீர் கடலில் இறுதிப் பயணம்! அண்ணா சாலை வழியாக ,,

கண்ணீர் கடலில் இறுதிப் பயணம்!
மின்னம்பலம் :அண்ணாவின் அருகில் துயில்கொள்வதற்காக திமுக தலைவர் கலைஞரின் இறுதிப் பயணம் அண்ணா சாலை வழியாகவே சென்று அண்ணா சதுக்கத்தை அடைந்தது.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக் குறைவால் நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். ராஜாஜி அரங்கத்தில் இன்று (ஆகஸ்ட் 8) அதிகாலை வைக்கப்பட்ட கலைஞரின் உடலுக்கு தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்க, சற்று தொலைவிலிருந்து தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்திவந்தனர்.
கலைஞரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காக காவல் தடுப்புகளை தகர்த்த தொண்டர்கள், படிகள் மேலேறிச் சென்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாததாலும், இதனால் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவது தாமதமானதாலும் குறித்த நேரத்தில் இறுதி ஊர்வலம் புறப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

அண்ணாவிடம் வந்தடைந்தார் அன்புத்தம்பி கலைஞர்

மாலைமலர் :மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா சதுக்கத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. #Karunanidhideath #MarinaBeach #Karunanidhi #DMK #RIPKalaignar


அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

மெரீனாவில் கலைஞர் .. நீதிமன்றம் அனுமதி .. இட ஒதுக்கீட்டுக்காக இன்றுவரை போராடும் கலைஞர்

BBC :"உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, இறந்தபின்னும் தலைவர்
வெற்றிபெற்றுள்ளார்," என் திமுக தொண்டர்களிடையே துரைமுருகன் பேச்சு.

10.45: தீர்ப்பு வெளியான செய்தி கேட்டு ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் அருகே இருந்த மு.க.ஸ்டாலின் கண் கலங்கினார். 10.43: கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
அண்ணா சமாதி வளாகத்தில் இடம் கோரி திமுக நேற்று இரவு வழக்கு தொடுத்திருந்தது.
10.28: நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் தீர்ப்பு எழுதத் தொடங்கினார்கள்.
 10.26: தமிழக அரசு மற்றும் திமுக ஆகிய இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தன.
 10.21: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோதி சென்னை வருகை.
10.18: மக்களின் உணர்வுகள் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது. கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதித்தால், நினைவிடம் அமைக்கவும் அனுமதி கேட்பார்கள் என அரசு தரப்பில் வாதம்.
 10.17: "எங்கள் அத்தனை குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வந்தவர் கருணாநிதி. நான் அவர் மீது நிறைய பாசம் வைத்திருந்தேன். அவரும் என் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது," என் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
 10.14: "அரசியல், கலை, இலக்கியம் என இந்திய அளவில் கலைஞர் அளவுக்கு பன்முகத்தன்மை கொண்டவர்கள் யாருமில்லை," என கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.
 10.11: இந்த மனு மீது உடனடியாக தீர்ப்பு வழங்கக்கூடாது என தமிழக அரசு தரப்பு நீதிபதிகளிடம் கோரிக்கை. தற்போது தீர்ப்பு வழங்காமல் அடுத்த வாரம் வழங்கலாமா என நீதிபதிகள் கேள்வி.
 10.10: அடக்கம் செய்ய நிலம் ஒதுக்கும்படி கோர யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என அரசுத் தரப்பு வாதம்.

ஏகாதசியில் காலமானார் துவாதசியில் ... கடவுளே வீடு தேடி வந்த கலைஞர் கருணாநிதி .. ஆத்திகர்களும் போற்றும்..

tamil.oneindia.com -rajendra-prasath.: சென்னை: கடவுள்
மறுப்பாளரான கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், நாத்திகரை கடவுளே பின் தொடருகிறாரோ என்ற வியப்பைத் தான் ஏற்படுத்துகிறது.
கடவுளை தினமும் தொழுது, தவமாய் தவம் இருந்தால் கூட சிலருக்கு வரங்கள் கிடைப்பதில்லை. ஆனால், ஆன்மீகத்தை நம்பாமல் விலகிச் செல்லும் கடவுள் மறுப்பாளர்களின் வாழ்க்கையில் பல ஆச்சர்யமான அதிசயங்கள் நடப்பதை நாம் கேள்விப் பட்டிருப்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் திமுக தலைவர் கருணாநிதி.


இதோ அவர் வாழ்வில் நடந்த சில வியப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள்..
ஏகாதேசி அன்று மரணம் கிடைத்தால் மோட்சம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதற்காக பலரும் இறைவனிடம் வரம் கேட்டுக் காத்திருக்கின்றனர். ஆனால், ஆத்திகர்கள் பலருக்கு கிடைக்காத இந்த வரம், நாத்திகரான கருணாநிதிக்கு கிடைத்துள்ளது. ஆம், அவர் உயிர் பிரிந்த தினமான நேற்று ஏகாதசி. துவாதசி தினமான இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இதனால் மறுமை கிடையாது.சொர்க்கம்தான் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.இப்படிப்பட்ட மகா புண்ணிய மரணம் அன்றாடம் கடவுளை வழிபடும் ஆஸ்திகர்களுக்கே கிடைத்ததில்லை' என்பதே அவர்களது கருத்து.

தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி

07-08-2018
லைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது.
காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.
 
தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.
 
“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.
 
“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை. “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது.
அந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.

கலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என்ன? திமுக தரப்பு வாதம் .. தமிழக அரசு மீண்டும் பல்டி

Loved one should be buried along with the mentor: DMK lawyers tamil.oneindia.com -veerakumaran.: சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வழங்க கோரிய வழக்கில், நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் திமுக தரப்பு கடுமையான வாதங்களை முன் வைத்தது.
இன்று காலை 8 மணி முதல் நடைபெறும் வழக்கில், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், திராவிட தலைவர்களுக்கு மெரினாவில் இடம் கொடுப்பதுதான் வழக்கம். காந்திமண்டபம் அருகே கருணாநிதிக்கு கொடுப்பது சித்தாந்த அடிப்படையில் சரியாக இருக்காது. எனது வாழ்க்கையும், ஆன்மாவும் கருணாநிதி என அண்ணா கூறுவது வழக்கம். எனவே, காந்தி மண்டபம் அருகே கருணாநிதிக்கு இடம் தருவது 'டீசன்ட்' இறுதி சடங்காக இருக்காது. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சட்டப்பிரிவு 21ன்கீழ் 'டீசன்ட்' இறுதிசடங்குக்கான உரிமையுள்ளது.
ராஜாஜி, காமராஜரின் சித்தாந்தம் வேறு, கருணாநிதியின் சித்தாந்தம் வேறு. சித்தாந்த நிலையில் வேறுபாடு கொண்ட தலைவர்களை ஒரே நிலையில் ஒப்பிட கூடாது. பதவியில் உள்ளவர்களுக்கு மட்டுமே மெரீனாவில் அடக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை.
கடலோர ஆணைய விதிப்படி கட்டடம் கட்டத்தான் அனுமதி வேண்டும். அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய மாநகராட்சி விதியில் இடம் உண்டு.
ஜெயலலிதா இறந்தபோது கடலோரத்தில் அடக்கம் செய்ய தடையில்லை என அரசே கூறியுள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்துக்கு மத்திய அரசு அனுமதி தேவையில்லை. வழக்குகள் தான் சிக்கல் என அரசு கூறியது. ஆனால் வழக்கு தொடுத்தவர்களே வாபஸ் பெற்றுள்ளனர், ஆட்சேபனை இல்லை எனவும் கூறிவிட்டனர்.

மெரினாவில் தடை கோரும் வழக்குகள் தள்ளுபடி ,, திமுக விவாதம் தொடங்கியது

தினத்தந்தி  : இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மதியம் திமுக தலைவர்கள் முதல்-அமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதிக்கு நினைவிடம் வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். பார்ப்போம் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார், முழுமையான பதிலை அவர் இன்னும் தரவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.

கலைஞரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீண்டிய பார்ப்பன பாம்புகள்

ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வந்த ஜாதீய சிறுமை விலங்குகளை
உடைத்து எறிந்ததில் இந்த சிறுவனின் பங்கு என்ன சாதரணமானதா?
இவனை மேலங்கி அணியாதே என்றது ஒரு பள்ளிக்கூடம்.
உனக்கு இங்கே இடமில்லை என்றது இன்னொரு பள்ளிக்கூடம் .. போராடினான்,... வென்றான் ..
அவனே பின்பு கால ஓட்டத்தின் ஒரு நூறு ஆண்டுகள் எனற பள்ளிக்கூடமும் ஆனான் .
கோவில் கருவறைகளில்தான் ராஜ்ஜியங்களே சட்டங்களை சரி பார்த்தன!
மேல்படிப்பு படிக்கும் உரிமைகளும் அவர்களுக்கேதான்
இந்த பார்ப்பனீய அடிமை யுகத்தை உடைத்தெறிய புறப்பட்ட பெரியாரின் பிள்ளையானான் இந்த் சிறுவன் .
வெட்டி வா கருணா நிதி என்று பெரியாரும் அண்ணாவும் கூறினால் கட்டி வரும் தம்பியானான் இந்த சிறுவன்.
ஆட்சி அதிகாரம் கிடைக்கு முன்பே தமிழகத்தின் காட்சிகளை மாற்றிய பெரியார் பாசறையில் பேரறிஞர் அண்ணாவின் வீரத்தளபதியானான் இந்த சிறுவன்.
இவன் இருக்கிறான் என்ற தைரியத்தில்தானோ ஓராண்டு ஆட்சியிலேயே உறங்க போய்விட்டார் அண்ணா.
கல்வியில் ஆதிக்க ஜாதியின் அடிமடியிலேயே கைவைத்தான்!
பார்ப்பனீயத்தின் கோட்டையான ஆணாதிக்க வாதிகளின் சொத்துரிமை கோட்பாட்டை தகர்த்து பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தான்.
கோவில் கருவறைகளில் கோலோச்சி கொண்டிருந்த பார்ப்பனீயம் வரலாற்றில் நினைத்தும் பார்த்திராத வெடியோசை இவன் வாயில் இருந்துதான் வந்தது ..
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்!
என்ன துணிவு இவனுக்கு என்று நெஞ்செல்லாம் வஞ்சம் பொங்க அடிபட்ட நாகம் போலானது பார்ப்பனீயம்!
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீண்டி கொண்டே இருந்தது.!

கிரிஜாவும் குருமுர்த்தியும் அடாவடி ..மெரீனா அரசு மறுப்பு...தொண்டர்கள் கொதிப்பு!

கலைஞரின் உடல் மெரீனாவில் அடக்கம் செய்யப்பட கூடாது  என்று குருமூர்த்தி டுவீட்டரில் தெரிவித்துள்ளான்
மின்னம்பலம்: திமுக தலைவர் கலைஞர் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம்
ஒதுக்க தமிழக அரசு மறுத்துள்ள நிலையில், திமுக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். இதுபற்றி முதல்வருக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து இன்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்டோரும் திமுக முக்கிய நிர்வாகிகளும் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து கலைஞர்: முரண்டு பிடிக்கும் முதல்வர் என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு கலைஞர் காலமான தகவலை காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வாசலில் இன்று இரவு 7.30 மணியளவில் பேட்டியளித்த துரைமுருகன், “திமுக தலைவர் கலைஞரை அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த முழுமையான பதிலும் வரவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

எமெர்ஜென்சிக்கு எதிராக எழுந்து நின்ற கலைஞர் .... 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் ஆண்டு

Shalin Maria Lawrence : 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தன்
ஆட்சி கலையக்கூடாதென்று எமெர்ஜென்சியை கொண்டுவருகிறார் .அன்றைய முதல்வர் கலைஞருக்கு இரண்டு செய்தி வருகிறது .
ஒன்று "எமெர்ஜென்சியை ஆதரிக்க வற்புறுத்தவில்லை ,ஆனால் நீங்கள் வெளிப்படையாக எதிர்க்க கூடாது "
இன்னொன்று "ஜெயப்ரகாஷ் நாராயணனோடும் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றியின் மீது வழக்கு தொடர்ந்த நரேனோடும் கூட்டு வைத்திருக்கும் காமராஜரை கைது செய்ய வேண்டும் "
கலைஞர் காமராஜரை அவ்வாறு இல்லத்தில் சந்தித்து தான் ராஜினாமா செய்து விடுவதாக சொல்லுகிறார் .காமராஜர் கலைஞர் தடுக்கிறார் .கலைஞர் காமராஜரை கைது செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறுகிறார் .திமுக எமெர்ஜெண்சிக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறது .
ஜனவரி 31 ,1976 திமுக ஆட்சி கலைக்க படுகிறது .
கலைஞர் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார் .

எமெர்ஜென்ஸியால் காமராஜர் மனம் உடைகிறார் .
"எல்லாம் போச்சு ,என் தப்பு " எமெர்ஜெண்சி அறிவிக்கப்பட்டதும் காமராஜர் சொன்ன வார்த்தைகள் .
அக்டோபர் 2 ,1975 .காமராஜர் மாரடைப்பால் உயிர் விடுகிறார் .
அதிக நாள் கழித்து எம்ஜியாரும் கலைஞரும் ஒரே காரில் இறுதி சடங்கிற்கு செல்லுகின்றனர்.
காமராஜருக்கென்று கன்னியாகுமரியில் மணிமண்டபம் கட்டியது திராவிட கலைஞர் .
காமராஜரின் பிறந்தநாளை "கல்வி வளர்ச்சி" நாளாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொண்டது திராவிட கலைஞர் .
ஆக அரசியல் வரலாறு தெரியாத முட்டாள்கள் இந்த நேரத்தில் காமராஜர் VS கலைஞர் அரசியல் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள படுகிறார்கள்

சென்னை .. தாறுமாறாக ஓடிய கார். இருவர் உயிரிழப்பு

தாறுமாறாக ஓடிய கார்: 2 பேர் பலி!மின்னம்பலம் :சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இரண்டு பேர் பலியாகினர்.
சென்னை துரைப்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் பென்ரீகன். சென்னை உயர் நீதிமன்றத்தில், இவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி இந்திரா பானர்ஜியை வழியனுப்பும் விழா நேற்று (ஆகஸ்ட் 6) உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பென்ரீகன், நேற்று மாலை 4.30 மணியளவில் சாந்தோம் வழியாக அடையாறு செல்லும் சாலையில் தனது காரை ஓட்டிவந்தார். திடீரென இவரது கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற மற்றொரு கார், ஒரு சரக்கு ஆட்டோ மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

கலைஞர் காலமானார் ... மாலை 6.10 க்கு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார் !

நாளை அரசுவிடுமுறை .. ஏழு நாட்கள் துக்கம் அனுசரிப்பு



BBC :  திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார்.
காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1924 ஜூன் 3-ஆம் நாள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் பிறந்த அவருக்கு வயது 94. சமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, அவரது கோபாலபுரம் வீட்டிலேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
அவரது உடல்நிலை மோசமானதால் ஜூலை 27 நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். முதுமையால் உண்டான உடல் நலக் குறைவால் சுமார் இரண்டு ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருந்து கருணாநிதி விலகி இருந்தார். அதனால் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக 2017இல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

1969இல் சி.என்.அண்ணாதுரை மறைவிற்கு பிறகு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அவர் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்துள்ளார்.

மெரினாவில் நினைவிடம் அமைக்கத் தடை கோரும் மனு தள்ளுபடி .. உயர் நீதிமன்றம்

THE HINDU TAMIL : மெரினா கடற்கரையில் உடல்களை அடக்கம் செய்து நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றதால் வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வி.காந்திமதி, இவர் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் இறந்தவர்களின் உடலை பொது இடத்தில், குறிப்பாக மெரினா கடற்கரையில் அனுமதி பெற்றோ, பெறாமலோ புதைப்பது, எரிப்பது கூடாது என்று உத்தரவிடக் கோரியிருந்தார்.
அவரது பொதுநல மனுவில், “மெரினா கடற்கரை தற்போது சுடுகாடாக மாறி வருவதால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். குடியிருப்புப் பகுதிகளிலும், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள மெரினா கடற்கரையில் உடல்களைப் புதைப்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்துகிறது.

எங்களால் எந்தவித சிக்கலும் வராது!' - ஸ்டாலினிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி

`எங்களால் எந்தவித சிக்கலும் வராது!' - ஸ்டாலினிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிசாமிவிகடன் - ஆ.விஜயானந்த் : தொடக்கத்தில் செயல் தலைவரின் கோரிக்கை குறித்து தீவிரமாக யோசித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர், சம்மதம் தெரிவித்துவிட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விளக்கியிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். `உடல்நிலை குறித்து முதல்வரிடம் தெரிவித்துவிட்டுச் சில கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார் ஸ்டாலின். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் சம்மதம் தெரிவித்துவிட்டார்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
கருணாநிதி உடல்நிலை, நிதின் கட்கரி வருகைசென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் கலைஞர் . நேற்று மாலை அவரின் உடல்நிலை குறித்து வெளியான அறிக்கையில், 24 மணி நேர கெடுவை விதித்திருந்தது மருத்துவமனை நிர்வாகம். நேற்று இரவிலிருந்தே கேள்வி குறியாக இருந்த கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. 'கலைஞர் அய்யா... அறிவாலயம் போகலாமா' எனத் தொண்டர்கள் முழக்கமிட்டுக்கொண்டே இருக்கின்றனர். கருணாநிதியின் உடல் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், மிகுந்த கவலையில் இருக்கின்றனர் குடும்ப உறுப்பினர்கள். இதன் தொடர்ச்சியாக மருத்துவர்களின் ஆலோசனைபடி, சில முக்கிய முடிவுகளையும் அவர்கள் எடுத்துள்ளனர்.

சென்னையில் பதட்டம் ,,,, அலுவலகங்கள் கடைகள் மூடப்படுகின்றன .. பணியாளர்கள் அவசரமாக வீடு திருப்புகிறார்கள்

Worst Traffic hits in Chennai amidst Karunanidhi health gets a decline tamiloneindia : கலைஞர்  உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அவர் உடல்நிலை கவலைக்கிடமாகவும் நிலையற்றும் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் சென்னையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. பல அலுவலகங்கள், கடைகள் சீக்கிரமே மூடப்பட்டுள்ளது. அலுவலகங்கள் விரைவாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பணியாளர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் வீடு திரும்புகிறார்கள்.
இதனால் சென்னையில் கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், வண்டலூர், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர், டி நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், மீனம்பாக்கம், எக்மோர் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு திரை அரங்குகள் மூடப்படுவதாக தெரிகிறது .
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்கள் கூகுளில் காட்டப்பட்டுள்ளது.

மெரீனா ....ஸ்டாலின் கோரிக்கை - முரண்டு பிடிக்கும் மூத்த அமைச்சர்கள்!

annaநக்கீரன் : சி.ஜீவா பாரதி ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலிவடைந்து போய் உள்ளார்.   அதிலும் கடந்த சில தினங்களாக உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கட்சி பேதமின்றி அனைத்துக்கட்சி தலைவர்களும் காவேரி மருத்துவமனை வந்து நலம் விசாரித்து சென்றனர்.  இந்நிலையில் கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிவித்துள்ள நிலையில்,  அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

கலைஞர் உடல்நிலை மிகவும் கவலைக்கு இடம்,,, தமிழகமெங்கும் பதட்டமான சூழ்நிலை. ..பாதுகாப்பு தீவிரம் ..

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - காவேரி மருத்துவமனை புதிய அறிக்கைமாலைமலர் :திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. #KarunanidhiHealth #Karunanidhi #DMK சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நி
லையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.< இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக தொலைக்காட்சிகள் மோடியை சந்தித்தது ஏன்? அதை ஏன் இருட்டடிப்பு ? விலை போய்விட்டனர்

மோடியின் மன் கி பாத் – செட்டப்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் வேலை நீக்கம் !
வினவு : ராஜினாமா செய்த பத்திரிகையாளர்கள்: (இடமிருந்து) மிலிந்த் கொண்டேகர், புன்ய பிரசுன் பாஜ்பாய் மற்றும் அபிசார் சர்மா. மிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி ஊடக முதலாளிகளும், பத்திரிகையாளர்களும் நரேந்திர மோடியுடன் ஒரு ரகசிய சந்திப்பை நிகழ்த்திவிட்டு திரும்பியிருக்கின்றனர்.
‘முதல்வர், ஆளுநர், பிரதமர் போன்றோரை பத்திரிகையாளர்கள் இப்படி சந்திப்பது நடைமுறையில் இருப்பதுதான். சமீபத்தில் கூட தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சில பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அது ஒன்றும் பிரஸ் மீட் அல்ல. அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புதான். பிரதமர் உடனான சந்திப்பும் அத்தகையதே’ என்று டெல்லி சென்று வந்த பத்திரிகையாளர்கள் சொல்லி வருகின்றனர்.
இது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு என்றால், புகைப்படங்கள் வெளியானது எப்படி? அதிகாரப்பூர்வமான சந்திப்பு என்றால், புகைப்படங்களை பிரதமர் அலுவலக அமைச்சகம் வெளியிடாமல், பா.ஜ.க-வினர் வழியாக ரகசியமாக பகிரப்படுவது எதனால்? மேலும், பிரதமருடன் பத்திரிகையாளர்கள் ‘அதிகாரப்பூர்வமற்ற’ வகையில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ட்விட்டரில் யாராவது தங்களை பாராட்டினால் கூட அதை பகிர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ் பத்திரிகையாளர்கள், பிரதமரை சந்தித்ததைப் பற்றி ஏன் ஒரு வரி கூட எழுதவில்லை? ஏன் ஒரு புகைப்படத்தைக் கூட வெளியிடவில்லை?

தமிழக அரசு மருத்துவமனைகளில் 3 இலட்சத்துக்குக் குறையாத பிரசவங்கள் ஆண்டுதோறும்

Ravishankar Ayyakkannu : தமிழ்நாட்டில் அரசு மருத்துவம் இலவசம் என்று
சொன்னால், அது ஏதோ ஒப்புக்குச் சப்பாய் பிழைக்க வழியில்லாத நான்கு பேர் சிகிச்சை பெறும் இடம் என்று நினைக்கிறார்கள். இணைத்துள்ள படங்களில் உள்ள தரவுகளைப் பாருங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 3 இலட்சத்துக்குக் குறையாத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன.
மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகள் முதற்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை 70,000+ படுக்கைகள் உள்நோயாளிகளுக்கு என்று இருக்கின்றன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறுக்கான சிறப்பு மையங்கள், மாவட்ட/வட்ட அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என்று அனைத்தையும் கூட்டினால், அண்மைய ஆண்டுகளில் ஏறத்தாழ 8 இலட்சம் பிரசவங்கள் வரை கூட நிகழ்ந்துள்ளன. இது, தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகள் உட்பட நடக்கும் மொத்த பிரசவங்களில் 72%.
ஒவ்வொரு ஆண்டும் 16 கோடிக்கு மேற்பட்ட வெளி நோயாளிகளைக் கவனிக்கிறார்கள். இது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆண்டுக்கு இரண்டு முறைக்கு மேல் அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு ஈடாகும்.
மறக்காதீர்கள். இச்சிகிச்சை முற்றிலும் இலவசம். டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தாய்க்கும் 18,000 ரூபாய் வேறு கொடுப்பார்கள்.

எடப்பாடி தகராறு செய்கிறாரா? நிதின் கத்காரி சென்னையில்தான் ..

மின்னம்பலம் : திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக நேற்று (ஆகஸ்டு 6) காவேரி மருத்துவமனை வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சென்னையில்தான் இருக்கிறார்.
பிரதமரிடம் இருந்து கிடைத்த சில அறிவுறுத்தல்கள் காரணமாகவே அவர் சென்னையில் இருப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. நேற்று (ஆகஸ்டு 6) டிஜிட்டல் திண்ணை பகுதியில் ‘ திமுக வைத்த சில வேண்டுகோள்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி எதிர்வாதம் செய்வதாகவும், ஆனால் பிரதமர் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தோம். அது தொடர்பாகவே நிதின் கட்கரியின் சென்னை பயணம் இருக்கிறது என்கிறார்கள்.
“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. இந்தியாவிலேயே எட்டு வழிச் சாலை மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து தமிழகத்துக்கு கிடைப்பதற்கு இந்த நட்பும் புரிந்துணர்வும் கூட காரணம். அதனால்தான் எடப்பாடி பழனிசாமியிடம் சில விஷயங்களைப் பேசுவதற்காக கட்கரி அனுப்பப் பட்டிருக்கிறார்.

காவேரியில் உச்சகட்ட பரபரப்பு!

காவேரியில் உச்சகட்ட பரபரப்பு!    மின்னம்பலம்: திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, நேற்று மதியம் முதலே அவர் சிகிச்சை பெற்று வரும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.
மாலை 6.30 மணியளவில் அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனையும், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல்நிலை வழங்கும் ஒத்துழைப்பைப் பொறுத்தே கணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
அறிக்கை வெளியிட்ட சற்று நேரத்திலேயே திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் எனப் பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

ஐ ஜி பொன் மாணிக்கவேல் ஆர் எஸ் எஸ் அடியாள்? அறநிலைய துறையை அபேஸ் பண்ண அவாள் சதி,,

விகடன் -இ.லோகேஷ்வரி -  கே.ஜெரோம் :
அறநிலையத்துறை 33 கோயில்களில் நடைபெற்ற களவுகளில் காணாமல் போன 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என்று காவல்துறையால் முடிக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்தச் சிலைகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று அறநிலையத்துறை சங்கங்களின் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அறநிலையத்துறையின் அனைத்துச் சங்க கூட்டமைப்பின் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் நடந்தது.

பெப்சி கோலா பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விடுவிப்பு

Indra Nooyi,இந்திரா நூயிதினமலர் : புதுடில்லி : பெப்சிகோ நிறுவன சிஇஓ பொறுப்பிலிருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா நூயி(62) விடுவிக்கப்பட்டார். இருப்பினும் 2019ம் ஆண்டு வரை சேர்மன் பொறுப்பில் நூயி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளாக பெப்சிகோ சிஇஓ.,வாக இந்திரா நூயி பொறுப்பு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெப்சிகோ புதிய சிஇஓ.,வாக, தற்போது சேர்மனாக உள்ள ரசமோன் லாகுவார்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அக்., 3ம் தேதி சிஇஓ.,வாக பதவியேற்க உள்ளார்.

கனடாவில் கொலை ஆயுதங்களுடன் ஈழத்தமிழர் கைது..

சுஜன் பாலசுப்ரமணியம் என்ற 19 வயது தமிழ் இளைஞன் மற்றும் Jaspal Bhatti என்ற 22 வயது இளைஞனும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். Two men, identified as Jaspal Bhatti, 22, of Toronto and Sujan Balasubramaniam, 19, also of Toronto were taken into custody.
கனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைதுகனடா  ஸ்காபுரோ பகுதியில் வைத்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி கடத்திய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 20 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து கொகெய்ன் மற்றும் சக்தி வாய்ந்த துப்பாக்கி ஒன்று ஸ்காபுரோ போக்குவரத்து நிறுத்தத்தில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
 McCowan Avenue பகுதியில் 401 நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்திய போது பொலிஸார் இதனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வாகனத்தில் இருந்து கொகோயின், மரிஜுவானா, சிசிலோபின் காளான்கள் மற்றும் மூன்று பத்திரிகைகளும் வெடிமருந்துகளும் கொண்ட SKS 7.62mm துப்பாக்கியும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கனடா சவூதி முறுகல் நிலை... கனடா தூதர் சவுதியை விட்டு வெளியேறினார்

தினத்தந்தி :: சவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
 சவுதி-அமெரிக்க பெண்கள் உரிமைகள் பிரச்சாரகர் சமர் பேடாவி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து  கனடாவின் வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சவுதி அரேபிய அரசு காரணமின்றி பொதுமக்களை கைது செய்வதும், பெண்களின் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்து மிரட்டுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் கனடா அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது எனவும், சவுதி அரேபிய அரசு உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மனித உரிமை போராளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது.