புதன், 8 ஆகஸ்ட், 2018

கலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என்ன? திமுக தரப்பு வாதம் .. தமிழக அரசு மீண்டும் பல்டி

Loved one should be buried along with the mentor: DMK lawyers tamil.oneindia.com -veerakumaran.: சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வழங்க கோரிய வழக்கில், நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் திமுக தரப்பு கடுமையான வாதங்களை முன் வைத்தது.
இன்று காலை 8 மணி முதல் நடைபெறும் வழக்கில், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், திராவிட தலைவர்களுக்கு மெரினாவில் இடம் கொடுப்பதுதான் வழக்கம். காந்திமண்டபம் அருகே கருணாநிதிக்கு கொடுப்பது சித்தாந்த அடிப்படையில் சரியாக இருக்காது. எனது வாழ்க்கையும், ஆன்மாவும் கருணாநிதி என அண்ணா கூறுவது வழக்கம். எனவே, காந்தி மண்டபம் அருகே கருணாநிதிக்கு இடம் தருவது 'டீசன்ட்' இறுதி சடங்காக இருக்காது. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சட்டப்பிரிவு 21ன்கீழ் 'டீசன்ட்' இறுதிசடங்குக்கான உரிமையுள்ளது.
ராஜாஜி, காமராஜரின் சித்தாந்தம் வேறு, கருணாநிதியின் சித்தாந்தம் வேறு. சித்தாந்த நிலையில் வேறுபாடு கொண்ட தலைவர்களை ஒரே நிலையில் ஒப்பிட கூடாது. பதவியில் உள்ளவர்களுக்கு மட்டுமே மெரீனாவில் அடக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை.
கடலோர ஆணைய விதிப்படி கட்டடம் கட்டத்தான் அனுமதி வேண்டும். அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய மாநகராட்சி விதியில் இடம் உண்டு.
ஜெயலலிதா இறந்தபோது கடலோரத்தில் அடக்கம் செய்ய தடையில்லை என அரசே கூறியுள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்துக்கு மத்திய அரசு அனுமதி தேவையில்லை. வழக்குகள் தான் சிக்கல் என அரசு கூறியது. ஆனால் வழக்கு தொடுத்தவர்களே வாபஸ் பெற்றுள்ளனர், ஆட்சேபனை இல்லை எனவும் கூறிவிட்டனர்.

அண்ணா சமாதியில் கருணாநிதிக்கு இடமில்லை என்பது மக்கள் மனதை புண்படுத்தும் செயல். 7 கோடி தமிழக மக்களில் 1 கோடி பேர் திமுகவினர். அவர்களை காயப்படுத்தும் செயல். அண்ணா நினைவிடப் பகுதி அடக்கம் செய்யும் இடமாக 1988ல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதில் கருணாநிதிக்கு இடம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது.
இவ்வாறு அவர் வாதிட்டார். திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வீர கதிரவனும், வில்சன் கூறிய வாதத்தை விரிபடுத்தி வாதிட்டார்.
ஜெயலலிதா நினைவிட விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்று அப்போது அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கருத்துகள் இல்லை: