புதன், 8 ஆகஸ்ட், 2018

அண்ணாவிடம் வந்தடைந்தார் அன்புத்தம்பி கலைஞர்

மாலைமலர் :மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா சதுக்கத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. #Karunanidhideath #MarinaBeach #Karunanidhi #DMK #RIPKalaignar


அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தை வந்தடைந்தது. அங்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர், அண்ணா சமாதிக்கு பின்புறம் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது

கருத்துகள் இல்லை: